Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்­கையை இனி பிரிக்­கவே முடி­யாது

Featured Replies

இலங்­கையை இனி பிரிக்­கவே முடி­யாது

 
இலங்­கையை இனி பிரிக்­கவே முடி­யாது

 

1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு அர­ச­மைப்­பில் கூறப்­பட்­டுள்ள இறை­யாண்­மையை விட­வும் புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் அத­னைப் பல­மாக்­கும் வகை­யில் முன்­மொ­ழி­வு­ கள் உள்­ளன.

அதா­வது இலங்கை என்­பது பிரிக்க முடி­யா­த­தும், பிள­வு­ ப­டுத்த முடி­யா­த­து­மா­ன­தொரு நாடா­கும். இலங்­கை­யின் ஒரு பகு­தியை தனி­நா­டாகப் பிர­க­டனப்­ப­டுத்த முடி­யாது என­வும் தெளி­வாக முன்­மொ­ழியப் பட்டது.

நாடு பிள­வ­டைந்து விடும், பிரி­வ­டைந்து விடும் என்று கூறு­வது பொருத்­த­மற்­ற­தா­கும்.

இவ்­வாறு புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார்.

அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டாது என்றோ பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டாது என்றோ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் கூறி­யி­ருக்­க­வில்லை.

புதிய அர­சின் நூறு நாள்­க­ளுக்­குள் பொது வாக்­கெ­டுப்­பொன்­றுக்­குச் செல்­லும் வகை­யில் எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­டாது என்றே அரச தலை­வர் மைத்­திரி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

2015ஆம் ஆண்டு பொது வேட்­பா­ளராக தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்­கி­ய­
போது இந்த நாட்­டிற்கு பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­னார்.

நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழித்­தல், புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­தல் என்­பன அவற்­றில் மிக முக்­கி­ய­மா­ன­வை­யா­கும்.

இருப்­பி­னும் எமக்கு நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இருக்­க­வில்லை. அத­னா­லேயே 18ஆவது திருத்­தச் சட்­டத்­தினை நீக்­கும் வகை­யில் 19ஆவது திருத்­தச் சட்­டத்­தி­னைக் கொண்டு வந்து சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தோம்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­கார முறை­மையை முழு­மை­யாக ஒழிப்­ப­தாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் தெளி­வா­கக் குறிப்­பிட்­டுள்­ளார். தலதா மாளி­கை­யில் அவர் அவ்­வாறு கருத்தை முன்­வைத்­தி­ருந்­தமை முக்­கி­ய­மா­ன­தொன்­றா­கும்.

நிறை­வேற்று அதி­கார முறை­மையை நிச்­ச­ய­மாக மைத்­திரி ஒழிப்­பார் என்று நம்­பு­கின்­றோம்.
2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்ற தேர்­த­லில் ஐக்­கிய தேசிய முன்­னணி, மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­க­ளின் தேர்­தல் அறிக்­கை­யில் முதன்­மை­யான கருப்­பொ­ரு­ளாக புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­டும் என்­பதே இருந்­தது.

தற்­போது புதிய அர­ச­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வருக்­கின்­றோம்.
அந்­தச் செயற்­பாட்­டினை முன்­கொண்டு செல்ல முனை­கின்­ற­போது அதற்கு எதி­ராக பொய்­யான பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்து நாட்­டில் பிர­ள­யத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்­கள்.

ஏக்­கிய ராஜ்­ஜிய என்­றால் தமி­ழில் ஒரு­மித்த நாடா­கும். இத்­தனை கால­மும் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பது தமி­ழில் ஒற்றை ஆட்சி என்றே கூறப்­பட்­டது. தற்­போ­து­தான் இலங்கை என்­பது ஒரு நாடு என்­பது சிங்­கள மொழி­யி­லும் தமிழ் மொழி­யி­லும் கூறப்­பட்­டுள்­ளது.

2000ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்­டி­ருந்த தீர்­வுக்­கான சட்­ட­வ­ரை­வில் இலங்கை என்­பது பிராந்­தி­யங்­க­ளின் ஒன்­றி­யம் என்றே வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­த­கைய தீர்­வுத்­திட்­டங்­களை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தய­ராக இருந்­த­வர்­களே புதிய அர­ச­மைப்பை இன்று எதிர்க்­கின்­றார்­கள்.

மாகாண சபை­யொன்­றில் அசா­தா­ரண நிலை ஏற்­ப­டும் போதும், கல­வ­ரங்­கள் அல்­லது உறு­திப்­பா­டற்ற நிலமை ஏற்­ப­டும்­போது அதி­கா­ரங்­களை கொழும்பு அர­சின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் புதிய அச­ர­மைப்­பில் காணப்­ப­டு­கின்­றன.

அவ்­வாறு நில­மை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வர­மு­டி­யாத சூழல் ஏற்­ப­டு­மா­யின் மாகாண சபை­யைக் கலைப்­ப­தற்­கான அதி­கா­ர­மும் உள்­ளது.
அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விக்­காது, முப்­பது வருட காலம் கறைப்­ப­டிந்த அனு­ப­வத்­தினை கொண்­டி­ருக்­கும் நாம் தொடர்ந்­தும் இவ்­வாறு முரண்­பாட்­டுக்­குள் இருக்­காது இலங்­கை­யர்­கள் என்ற அடிப்­ப­டை­யில் முன்­னோக்­கிப் பய­ணிப்­ப­தற்­காக ஒன்­றி­ணைய வேண்­டும்-­என்­றார்.

http://newuthayan.com/story/42287.html

  • கருத்துக்கள உறவுகள்

பழுத்த சம்மும் படித்த சும்முமாகக் சேர்ந்து சிங்களவனை அனைத்துல சட்டப்பிடியிலிருந்து மீட்பதோடு, தமிழரது கோவணத்தையும் உருவி அம்மணமாக்கச் சிங்களவனுக்காக எப்படி உழைக்கிறார்கள்! இதில் புதிய இணைப்பாக உ.த.பே . தலைவரும் இணைந்துள்ளமை சிங்களவனுக்குக்  கூடுதல் பலமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

பழுத்த சம்மும் படித்த சும்முமாகக் சேர்ந்து சிங்களவனை அனைத்துல சட்டப்பிடியிலிருந்து மீட்பதோடு, தமிழரது கோவணத்தையும் உருவி அம்மணமாக்கச் சிங்களவனுக்காக எப்படி உழைக்கிறார்கள்! இதில் புதிய இணைப்பாக உ.த.பே . தலைவரும் இணைந்துள்ளமை சிங்களவனுக்குக்  கூடுதல் பலமாகும். 

சிங்களவனுக்குத் தமிழன் பலமாக இருக்கலாம். ஆனால் தமிழனுக்குத் தமிழனே பலவீனமாக இருப்பதைப் புறந்தள்ள முடியாது. :shocked: 

தமிழனுடைய பலம் அழிக்கப்படுவதற்கு இந்தியனோ, சிங்களனோ காரணமல்ல...! தமிழனே காரணம்......!! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.