Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூழ்ச்சிகளின் தளமாகும் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் உறவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சிகளின் தளமாகும் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லீம் உறவு.

கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன.  

1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லீம்கள் மீது சுமத்தியுள்ளது. இவற்றில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டிய அரசியல் தேவையையும் உணர்ந்து விட்டார்கள். இருந்தும் வடக்கில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு தமிழர்களால் இனச்சுத்திகரிப்பு செய்தமை போன்று கிழக்கில் அரங்கேற்றமுடியவில்லை.இதற்கு கிழக்கில் சிங்களவர்களின் ஆதிக்கம்,முஸ்லீம்களின் அரசியல் சக்திகளுக்கு அப்பால்,கிழக்கு தமிழ்மக்களும் முஸ்லீம் விரோதப் போக்கை கொண்டிருக்காமை முக்கிய காரணமாகும். கிரானில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை பலரும் அரசியலாக்கி குளிர்காய முனைகின்றனர்.

உண்மையில் முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பன இனவாதத்தை முன்நிலைப்படுத்தியே தமது வாக்கு வங்கியை நிரப்பி வருகின்றது.கடந்தகாலங்களில் கருணா மற்றும் பிள்ளையான் ஆயுதக்குழுவாகவும் அமைச்சர்களாகவும் இருந்த போதும் தமிழ்-முஸ்லீம் உறவுகள் ஓரளவு சீராகவே இருந்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் SLMC-TNA கூட்டுடன் ஆட்சியும் நடைபெற்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்னாட்சி உரிமை கொண்ட, தனியான கலாச்சரத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் கொண்ட வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். கலாச்சாரம் பண்பாடு குறித்த வேறுபாடுகள் மேலெழும் போது அவர்கள் மத்தியிலான முரண்பாடுகள் உருவாவது இயல்பானது. இவற்றை ஆழப்படுத்தி அரசியல் இலாபம் சம்பாதித்துக்கொன்றது தற்போது சர்வதேச சக்திகள் கிழக்கில் குடிகொண்டுள்ளது.

1-SLMC-TNA: அண்மைக்காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு நகல் தொடர்பில் இந்தக் கட்சிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.TNA யிற்கு எதிராக வடக்கில் உருவாகியுள்ள மாற்றுத் தரப்பினரின் வளர்ச்சி சிக்கலை உருவாக்கியுள்ளது.அதேநேரம் கிழக்கில் ஹகீமிற்கு எதிராக பல முஸ்லீம் தலமைகளும் முஸ்லீம்களும் பலமாக வளர்வது தலமைத்துவத்திற்கு பாரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. இதன்காரணமாக எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தலை முகம் கொடுக்க இரண்டு கட்சிகளும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.ஆதலால் இரண்டு இனக்களுக்கிடையிலான முருகல் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் உக்கிரமாவது அவசியமாகின்றது.

2-ரணில் மற்றும் மைதிரி தேவை: தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் நாடகத்தில் வெற்றிகண்டுள்ளது.கண்துடைப்புக்காக அரசியலமைப்பு சீர்சிருத்தத்தை வைத்து தமிழ்மக்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு,மறுபுறம் பௌத்த மல்வத்த பீடங்களைத் தூண்டிவிட்டுள்ளது. மட்டக்களப்பில் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் மதுபான நிறுவனம் ரணிலால் தொடங்கப்பட உள்ளது.அதேநேரம் திருகோணமலையை வெளிநாடுகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வாய்மூல உத்தரவாதம் ரணிலால் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவுகளை சீர்குழைப்பதன் மூலம் எதிர்ப்புகளின்றி செயற்படலாம்.தமிழர்கள் என்ற முகத்திரைக்குள் மறைந்து கொள்ளும் இந்த இரண்டு பகுதியினரும் இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ளும் சாமன்யர்கள் அல்ல.

3;இந்திய புலனாய்வு;: நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தியப் புலனாய்வின் செயற்பாடுகள் இலங்கையில் குறிப்பாக வடகிழக்கில் அதிகரித்துள்ளது.கிழக்கில் இயங்கும் இந்துமகா அமைப்புகள் மற்றும் சிலஅரசியல் தலமைகள் பல்வேறு சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளனர். பொதுபலசேனவுடன் நெருக்கமாக உறவு கொண்டுள்ளதோடு முஸ்லீம் விரோதப் போக்குகளை கிழக்கில் முன்னெடுக்கின்றனர்.தற்போது வடகிழக்கிற்கு வெளியை பொதுபலசேனவின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு,,கிழக்கில் தமிழ் தரப்புகளால் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முஸ்லீம்களின் றொருளாதாரத்தின் மீதான தாக்குதல் மட்டக்களப்பில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடகால யுத்தத்தில் பல்வேறுஇழப்புகளை தமிழ்தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட போதும் முஸ்லீம்கள் சகிப்புத் தன்மையுடனே கிழக்கில் வாழ்கின்றனர்.

தற்போதைய சுமேந்திரன்,சம்பந்தர்,ரணில் கூட்டணி இந்திய புலனாய்வின் கூலிப்படையாகிவிட்டது.இதன் உச்சகட்ட வெற்றிதான் கடந்தமுறை பாராளுமன்றத்தில் ஹகீமையும்,றிசாத்தையும் சட்ட மசோதாவிற்கு கையுயர்த்த வைத்தது.அரசியலமைப்பு நகலில் வடகிழக்கு இணைப்பு ஆலோசனையை சேர்த்தது.உண்மையில் விலைபோன முஸ்லீம் தலமைகளால் கிழக்கு முஸ்லீம்கள் பாரிய சவாலை எதிர் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்தரப்பு வன்முறைக் கலாச்சாரத்தை மீண்டும் கையில் எடுப்பது அவர்களுக்கே எதிராக விரல்நீட்டும். முப்பது வருடப் போராட்டத்திலிருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் கூட்டம் தவறுகளுக்காக அழுது வடித்துக்கொண்டிராது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்னாட்சி உரிமை கொண்ட, தனியான கலாச்சரத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் கொண்ட வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வட-கிழக்குத் தமிழர்களைப் போன்றும், மலையக மக்களைப் போன்றும் இலங்கை அரச பேரினவாத ஒடுக்கு முறை மற்றும் புலிப் பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனம்.

இரண்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே அமைதிக் காற்றை சுவாசிக்கலாம்.. இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நமது நிம்மதியும்,இருப்பும் கேள்விக்குறியாகும்.இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இன உறவின் சிதைவிற்கு வழிவகுத்தனவேயன்றி வேறு காரணிகளெவையுமில்லை.

ஆகவே கிழக்கில் சகோதரர்களாக வாழ்கின்ற இரண்டு சமூகமும் அரசியலுக்கு அப்பால் பொதுவான இணக்கப்பாட்டைக் காணவேண்டும்.இந்த இருசமூகங்களையும் வைத்து குளிர்காய்கின்ற அரசியல்தலமைகளின் சூழ்ச்சிகளில் இருந்துவிடுபடவேண்டும். ஆகவே தமிழ்-முஸ்லீம் உறவினை பலப்படுத்தவும்,மீளக் கட்டியெழுப்பவும் கல்விமான்கள்,தொன்டுநிறுவனங்கள் மற்றும் சமூகம்சாரந்த பொது அமைப்புகளின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.கிழக்கில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள அரசியல் ஸ்திரத்தன்மை இரண்டு சிறுபான்மையினருக்கும் பொதுவான ஆபத்தாகும்.

FAHMY MOHIDEEN BAWA-UK

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=181851 .

 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில், கண்டி / கொழும்பு அரசியல் வாதி, பாக்கிஸ்தான் வம்சாவழி ரவூப் ஹக்கீம், கிழக்கினை சேர்ந்த ஹிஸ்புல்லா, இன்னுமொரு பாக்கிஸ்தான் வம்சாவழி அதாவுல்லா, வடக்கு றிசாத் போன்றோர், தமிழருக்கு எதிரான ஒரு மினி இனவாதமொன்றினை செயல் படுத்தி தமது அரசியல் நலன்களை தேட முனைவதே இன்றயை அவலம்...

முழு தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக செயல் பட்ட, மட்டக்கிளப்பு சுமண தேரரிடம், தமிழ் மக்கள் போகும் அளவுக்கு, இவர்களது அநியாய அரசியல் உள்ளது.

அதை கண்டிக்க வக்கில்லை. இந்திய புலனாய்வு கத்தரிக்காய் கதை சொல்கிறார் லண்டன் பாவா...

தமிழருக்கு தனி நாடு கிடைத்தாலும், முஸ்லிகளுக்கு தனி அலகு கிடைக்காது என்பது இன்றய துரத்திடவசமான உலக யதார்த்தம் என்பதை புரிந்து, தமிழ் பேசும் மக்களாக இணைவோம் என்று சொல்ல முடியவில்லை.

இவர்கள் கோரிக்கைப் படி பார்த்தால், நாடு மொழிவாரியாக அல்ல, மதவாரியாக அல்லவா பிரிக்கப் பட வேண்டும். இஸ்லாமியர்களுக்கு, இந்துக்களுக்கு, பௌத்தர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு..... யப்பா முடியல்ல...

2 hours ago, colomban said:

கிழக்கில் தமிழ் தரப்புகளால் முஸ்லீம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முஸ்லீம்களின் றொருளாதாரத்தின் மீதான தாக்குதல் மட்டக்களப்பில் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடகால யுத்தத்தில் பல்வேறுஇழப்புகளை தமிழ்தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட போதும் முஸ்லீம்கள் சகிப்புத் தன்மையுடனே கிழக்கில் வாழ்கின்றனர்.

தமிழ்ப் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்னாட்சி உரிமை கொண்ட, தனியான கலாச்சரத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் கொண்ட வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வட-கிழக்குத் தமிழர்களைப் போன்றும், மலையக மக்களைப் போன்றும் இலங்கை அரச பேரினவாத ஒடுக்கு முறை மற்றும் புலிப் பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனம்.

இரண்டு மக்களிடையே சமத்துவம், இணக்கப்பாடு, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, மதிப்பளிப்பு போன்றவை இருந்தால் மட்டுமே அமைதிக் காற்றை சுவாசிக்கலாம்.. இதைவிடுத்து இனப்பகை, எதிர்ப்புணர்வு, புறக்கணிப்பு, அடக்குமுறை போன்றவை மேலோங்கி செயற்பட்டால் நமது நிம்மதியும்,இருப்பும் கேள்விக்குறியாகும்.இதற்கு நமது நாடும் சான்றாகவுள்ளது. அரசியல் வாதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இன உறவின் சிதைவிற்கு வழிவகுத்தனவேயன்றி வேறு காரணிகளெவையுமில்லை.

 

தன்னாட்சி உரிமை? அதிகாரம் ?

இலங்கையின் சரித்திரத்திலேயே, முஸ்லீம் ஆட்சி நடந்ததுக்கு சான்றோ, வரலாறோ இல்லை.

சிக்கந்தர் முல்லைத்தீவை ஆண்டார்... ஜாவா கச்சேரி... சாவ கச்சேரி ஆகியது போன்ற புளுடாக்கள் விட்டு பிரயோசனம் இல்லை.

Edited by Nathamuni

முஸ்லிம் தரப்பிலிருந்து வந்திருக்கின்ற ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆக்கம். 
சூழ்ச்சிகளால் நிறைந்த முஸ்லிம் தலைமை தற்போதைய தமிழரின் நிலையை நயவஞ்சகமாக கையாண்டு வருவதன் எதிர்வினை தான் இன்று தமிழ் முஸ்லிம் முறுகலாக முன்வருகிறது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை புலிகள் மாதிரி வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமல்.. தலையில் வைச்சு ஆடினால்.. அதுகள் தொப்பியை பிரட்டிக்கிட்டே இருக்குங்கள். 

ஒன்றும் உருப்படியாக நடந்தேறாது. ஏறப் போவதும் இல்லை. சும்மா தாங்களும் இருக்கம் என்ற விளம்பரம் மட்டும் தான். :rolleyes:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.