Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!

Featured Replies

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!

 
 

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யின் மீது அர­ச­மைப்­புச் சபை­யாக மாறிய நாடா­ளு­மன்­றத்­தில் நான்கு நாள்­கள் விவா­தம் நிறை­வு­ பெற்­றுள்­ளது. இன்­னும் ஒரு நாள் மீத­மி­ருக்­கின்­றது.

திட்­ட­ மிட்­ட­தற்­கும் மேல­தி­க­மாக இரு நாள்­களை எடுத்­துக்­கொண்டு இந்த விவா­தம் நடை­பெற்­றி­ருக்­கி­றது. விவா­தத்­தில் பேசிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அடிக்­கடி கூட்டு எதி­ரணி சொல்­லும் எல்­லாத் திருத்­தங்­க­ளை­ யும் ஏற்­கி­றோம் ஏற்­கி­றோம் என்­றார்.

இடைக்­கால அறிக்­கை­யில் கூட்டு எதி­ரணி சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட பின்­னி­ணைப்­பைக் கையில் வைத்­துக்­கொண்டு அவர் இதனை மீண்­டும் மீண்­டும் தெரி­வித்­தார்.

வடக்கு -– கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பை மக்­கள்­தான் தீர்­மா­னிக்­க­வேண்­டும் என்­ப­தைத் தவிர, கூட்டு எதி­ர­ணி­யின் எல்லா யோச­னை­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­வ­தாக அவர் அறி­வித்­தார்.

உள்ளூ­ராட்­சித் தேர்­தல் வரு­கின்ற நேரத்­தில் கூட்டு எதி­ர­ணி­யு­டன் முரண்­பட்­டுக்­கொண்டு சிங்­கள பௌத்த தேசி­யத்துக்குத் தீனி போடு­வ­தன் மூலம் மகிந்­த­வைப் பலப்­ப­டுத்­தி­விட வேண்­டாம் என்று கரு­தியே சபை­யில் ரணில் அப்­ப­டிப் பேசி­னார், அது ஒரு இரா­ஜ­தந்­திர நகர்வு என்று சொல்­லக் கூ­டிய அர­சி­யல் அவ­தா­னி­க­ளும் இருக்­கி­றார்­கள்.

70 வீத­மான சிங்­க­ள­வர்­க­ளின் ஆத­ரவு இல்­லா­மல் புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ர­மு­டி­யாது என்­ப­தால் அவர்­க­ளைத் திருப்­திப் ப­டுத்­தும் விதத்­தில் நடந்­து­கொள்­வதே ஆட்­சி­யா­ளர்­க­ளின் முக்­கிய தேவை, அதை மறுக்­க­வும் முடி­யாது என்று அத்­த­கை­ய­வர்­கள் நியா­ய­மும் கற்­பிக்­கி­றார்­கள்.

அது சரி­யான ராஜ­தந்­தி­ரம்­தான், அந்த நியா­யம் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­து­தான் என்று ஒரு வாதத்­துக்கு எடுத்­துக்­கொண்­டால், அந்த ராஜ­தந்­தி­ரத்துக்குப் பதில் ராஜ­தந்­தி­ரத்தை மகிந்த நகர்த்­தி­யி­ருப்­பதை இவர்­கள் எப்­ப­டிச் சமா­ளிக்­கப்­போ­கி­றார்­கள்.

புதிய அர­ச­மைப்பு ஒன்று இப்­போது தேவையே இல்லை, அதற்கு மக்­கள் ஆணை வழங்­க­வும் இல்லை, அதி­கா­ரப் பகிர்­வுக்­கான முயற்­சியை உடன் நிறுத்­தி­விட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திப்­படி தேர்­தல் முறைமை மாற்­றம் மற்­றும் நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­பது ஆகி­ய­வற்றை மட்­டும் செய்­தால் போதும் என்று மகிந்த திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டார்.

அதா­வது மகிந்­த­வுக்­குப் பயந்து பயந்து இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அவ­ரது அணி முன்­வைத்த யோச­னை­களை ஏற்­ப­தாக அறி­வித்த கணத்­தில் அத்­த­கைய அர­ச­மைப்பே வேண்­டாம் என்று நிரா­க­ரித்­து­விட்­டார் மகிந்த.

போதா­த­தற்கு தமி­ழர்­க­ளு­டன் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் தேவை­யில்லை என்று சொல்­லி­விட்­டார்.
70 வீத­மான சிங்­க­ள­வர்­க­ளின் ஆத­ர­வைப் பெறு­வ­து­தான் முக்­கி­யம் என்று புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்த அணி முன்­வைத்த யோச­னை­கள் அனைத்­தை­யும் ஏற்­றுக்­கொண்ட ஆட்­சித் தலை­வர்­கள், அதே 70 வீத மக்­க­ளின் ஆத­ரவு தேடி மகிந்த சொல்­வ­தைப் போல அதி­கா­ரப் பகிர்­வுக்­கான முயற்­சி­யையே கைவி­டு­வார்­களா?

மகிந்­தவை எதிர்க்­கா­மல் இருப்­ப­தன் மூலம்­தான் சிங்­கள மக்­க­ளின் ஆத­ர­வைப் பெற­மு­டி­யும் என்­ப­து­தான் ஆட்­சி­யா­ளர்­க­ளின் இரா­ஜ­தந்­தி­ர­மா­னால் மகிந்­த­வின் இந்த யோச­னை­யை­யும் அவர்­கள் ஏற்­றுத்­தா­னா­க­வேண்­டும். அதைத் தவிர அவர்­க­ளுக்கு வேறு வழி­யில்லை.

இந்த ‘‘வர­லாற்று வாய்ப்பை’’ பெறு­வ­தற்கு முன்­ன­ரான காலா­கா­லத்­தி­லும் இது­வே­தான் நடந்­தது. அதி­கா­ரப் பகிர்வு, தீர்வு என்­ப­வற்றை ஒரு தரப்பு ஆத­ரிக்­கும் மறு தரப்பு எதிர்க்­கும். எதிர்க்­கும் தரப்­பின் மீது பழி­யைச் சுமத்­தி­விட்டு ஆத­ரிக்­கும் தரப்பு தனது முயற்­சி­க­ளைக் கைவிட்டு ஒதுங்­கும்.

மாறி மாறி இது­வே­தான் நடந்­தது. இப்­போ­தும் அது­வே­தான் நடக்­கி­றது என்­றால் தற்­போது கிடைத்­தி­ருப்­பது ‘‘வர­லாற்று வாய்ப்பு’’ என்று அர­ச­மைப்­புச் சபை­யில் உறுப்­பி­னர்­கள் பல­ரும், அனே­க­மாக எல்­லோ­ரும் உரை­யாற்­றி­ய­தன் பொருள்­தான் என்ன?

மீண்­டும் மீண்­டும் குண்­டுச் சட்­டிக்­குள் குதி­ரை­யோ­டு ­வ­தா­கவே இலங்­கை­யின் அர­சி­யல் நக­ரும்­போது புதிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளின் மீது எப்­ப­டித் தமி­ழர்­கள் நம்­பிக்கை வைக்­க­மு­டி­யும்?

http://newuthayan.com/story/43425.html

  • கருத்துக்கள உறவுகள்

முடிவில் இந்த வரலாற்று வாய்ப்பை ஜனநாயகரீதியில் பயன்படுத்த தமிழ் தரப்பு இதய சுத்தியுடனும் முழுமனதுடன் தனது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியது என்ற செய்தியை உலகநாடுகளுக்கு சொல்ல ஒரு வாய்ப்பாக மட்டும்தான் அமையுமேதவிர சிங்கள ஆட்சியாளர்கள்  நாட்டின்ஆட்சி அதிகாரங்களை சிறுபான்மை மக்களுடன் பங்குபோட்டுக்கொள்ள ஒருபோதும் முன்வரமாட்டார்கள். அனைத்து கதவுகளும் மீண்டும் மூடப்படும்போது சர்வதேசநாடுகள் ஒரு திறவுகோலுடன் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vanangaamudi said:

முடிவில் இந்த வரலாற்று வாய்ப்பை ஜனநாயகரீதியில் பயன்படுத்த தமிழ் தரப்பு இதய சுத்தியுடனும் முழுமனதுடன் தனது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியது என்ற செய்தியை உலகநாடுகளுக்கு சொல்ல ஒரு வாய்ப்பாக மட்டும்தான் அமையுமேதவிர சிங்கள ஆட்சியாளர்கள்  நாட்டின்ஆட்சி அதிகாரங்களை சிறுபான்மை மக்களுடன் பங்குபோட்டுக்கொள்ள ஒருபோதும் முன்வரமாட்டார்கள். அனைத்து கதவுகளும் மீண்டும் மூடப்படும்போது சர்வதேசநாடுகள் ஒரு திறவுகோலுடன் வரும்.

அந்தத்திறவுகோலை தமிழர் தரப்பினுடாகவும் தமிழர் தரப்பின்  அரசியல் விருப்பினூடாகவும்  நகர்த்தும் இராயதந்திரமோ முயற்சிகளோ தெரியவில்லையே. காலம் கனியுமபோது அதைக் கையாளும் திறனற்ற மக்கள்மீது அக்கறையற்ற  தலைமைகள் இதனையும் கைவிட்டு நிற்பார்கள்போலவே தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.