Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம்.

Featured Replies

கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம்.

 

thinking.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்ட முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ். நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல் வேறு இடத்தில் தங்கியுள்ளார்.  இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்த மனைவி அவர் அன்றைய தினமும் வராத காரணத்தினால், நேற்று செவ்வாய்க்கிழமை நேராக அவர் பணியாற்றும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

தன் உடமையில் மண்ணெண்ணையும் அந்தப் பெண் கொண்டு சென்றுள்ளார்.  நேராக அதிபரின் (கணவரின்) அலுவலகத்துக்குள் சென்ற அவர், அதிபரைத் தள்ளி வீழ்த்திய பின்னர் தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை கணவர் மேல் ஊற்றிவிட்டு தன் மேலும் ஊற்றியுள்ளார்.

அப்போது அவ் இடத்துக்கு வந்த ஆசிரியர்கள், அதை தடுத்து நிறுத்தி அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தியுள்ளனர். பின்னர் அவ் இடத்துக்கு வந்த பழைய மாணவர்கள் அமைதிப்படுத்தி அனுப்பியுள்ளனர்.   குறித்த அதிபர் 50 வயதுடையவர். அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளார்கள். இருப்பினும் இவர் வேறு வீட்டில் தங்கியிருந்ததால் மனைவி ஆத்திரமடைந்து இந்த செயலை செய்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

http://globaltamilnews.net/archives/49024

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரின்ஸ்பல்ன்ரை மனுசி மண்ணெண்ணை தகரத்தோடை பள்ளிக்கூடத்துக்கே வந்துட்டா எண்டால்.... அதிபருக்கு ஆரோடையோ கனக்சன் இருக்கு....இந்தக்காலத்திலை பழைய மாணவ மணிகளையும் நம்பேலாது கண்டியளோ :cool:

 

வாத்திக்கு என்னத்தை காட்டி வசியம் பண்ணிணாளோ ஆருக்குத்தெரியும். :186_high_heel: :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் இருக்கிறாரா போய்விட்டாரா...???? thinking.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Paanch said:

அதிபர் இருக்கிறாரா போய்விட்டாரா...???? thinking.jpg

யார் வீட்டுக்கு? Bildergebnis für affen gif

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் அதிபர் வேலையில் இல்லை:unsure::)

  • கருத்துக்கள உறவுகள்

தலமை வாத்தியார் நல்லா ஓவர் டைம் வேலை செய்திருக்கிறார் போல கிடக்குது...

Image result for teaching monkey

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யார் வீட்டுக்கு? Bildergebnis für affen gif

எந்தக் கவலையில் இருந்தாலும் கவலைபோக்கிச் சிரிக்க வைப்பதில் குமாரசாமி சுவாமிதான். :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

நடராசன் இந்த கலாச்சாரத்தையும் ...அவித்து விட்டுட்டார் போல கிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.