Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பும் ஆதங்கத்தை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். எப்போதும் கலாசாரத் தேடல், அடையாளச் சிக்கல் அவர்களை அலைக்கழிக்கின்றது. கொதிக்கும் வெயிலில் நிழலைத் தேடுவது போல அவர்களுடைய தேடல் நீடிக்கிறது.

இந்த தேடலுடனேயே இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வேர்விடத் தொடங்கி விட்டார்கள் என்பதும் பதிவு செய் யப்பட வேண்டியதே. தற்போது இலங்கைத்தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் அரசியலில் நுழையத் தொடங்கி உள்ளனர். நோர்வே, டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளில் உறுப்புரிமை பெற்றுள்ளதுடன் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். பல நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்ட நிலையில் அந்தந்த நாடுகளில் தேர்தல்களில் வாக்கு வங்கிகளாகவும் மாறத் தொடங்கி உள்ளனர். பிரான்சில் பாண்டிச்சேரி தமிழர் உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இலங்கைத் தமிழர் இன்னும் அவ்வகை செயல்பாடுகளில் இறங்கவில்லை ஆனால் அரசியல் கட்சிகளில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.

புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து, வளர்ந்து அந்த மொழியையே முதன்மொழியாகக் கொண்டு கல்வியை பெற்ற, சிந்தனா முறைமை கொண்ட ஒரு தமிழ்வழி மூலச் சமூகம் உருப் பெறத் தொடங்கிவிட்டது. இது பின்மொழி அறிவுகொண்ட சமூகமாக (ஆங்கிலம், பிரெஞ், யேர்மன், டச், இத்தாலியன், டெனிஷ், நொஸ்க்,....) அதனை மாற்றியமைத்துள்ளது. ஒரு சமூகத்தில் சில கல்வியாளர்கள் பன்மொழி அறிஞர்களாக விளங்குவர். ஆனால் ஒரு சமூகம் பன்மொழி சமூகமாக அடையாளம் காண்பது அரிதானதொன்றாகும். ஆனால் இலங்ைகத் தமிழ் சமூகத்திற்கு அது வாய்திருக்கின்றது. அத்துடன், தாயகங்களில் கல்வித்திட்டத்தில் சாத்தியபடாத எத்தனையோ துறைசார் கல்வியையும், உயர் கல்வியையும் பயிலும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. பிரான்சின் பள்ளி ஆசிரியர் சமூகமானது இலங்கைத் தமிழ் சமூகத்தை ஆச்சரியத்துடனேயே நோக்குகின்றது. ஏனெனில் உதிரித் தொழிலாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஒரு முதல் தலைமுறையின் சந்ததியினர் வகுப்புகளின் முதல் பத்து மாணவர்களுள் இடம்பெறுகின்றனர் என்பது அவர்களுக்கு ஆச்சரியமளிக்கின்றது.

அத்துடன் பல்தேசியத்தாருடனும், பல்தேசிய கலாசாரத்துடனும் (பல்தேசிய ஆபிரிக்கருடனும், பல்தேசிய லத்தின் அமெரிக்கருடனும், சீன-யப்பானியருடனும்) வாழவும் பழகவும் அவற்றை அறியவும் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது என்பதும் முக்கியமானதாகும். இவை தமிழர் தம் மொழி, கலை -இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கவும் மீள்கட்டமைப்பு செய்யவும், ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு பிரான்சில் வழங்கும் பிரெஞ் மொழியை விட பிரான்சின் குடியேற்ற நாடான கியுபெக்(கனடா)கில் சுத்தமாகவும் செழுமையுடனும் உள்ளதாகவும் கூறுகின்றார்கள். சர்வதேச புகழ் பெற்ற பிரெஞ் பாடகர்களில் பலர் கியுபெக் பிரெஞ்சியர்கள் என்பது கவனிக்கத் தக்கது. இதனால்தான் தாயகங்களில் இருந்து சுற்றுலாவாக வந்து செல்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழரிடையே வெளிப்படும் மொழி, பண்பாட்டு வீரியம் கண்டு வியப்புறுகின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் இச்சமூகத்திற்கு தமிழ் மொழி இணைப்பு மொழியாக மாறி நிற்கின்றது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏனெனில், ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் பலமொழி வலயங்களில் சிதறி வாழ்கின்றனர். இன்று தங்கள் இருப்பை உறுதிப்படுத்தும் குடியுரிமை பெற்ற நிலையில் அச்சகோதரர்களின் குடும்பங்கள் குழந்தைகுட்டிகளாக இணையும்போது தமிழ்தான் இணைப்பு பாத்திரத்தை வகிக்கவேண்டியதாகின்றது. அத்துடன், இங்கு வாழத் தலைப்பட்ட சமூகத்தின் மூத்தோர் தாயகத்தில் வேற்றுமொழி அறிவின்றி வாழ்வதால் பேரக்குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையேயான இணைப்புக்கு தமிழ் தேவையாகின்றது.

பிரான்சில் தமிழ்ச் சோலை என்னும் பொதுப்பெயரில் ஏறத்தாழ 50 தமிழ்ப் பள்ளிகள் 3,000 மாணவர்களுடன் இயங்குகின்றன. இதனுடன் இணையாமலும் தனித்தும் வேறு பள்ளிகளும் நடைபெறுகின்றன. தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. அது சர்வதேச அளவிலான தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச அளவிலான பாடத்திட்டதிற்கு அமைய வெளியிடப்படும் பாடப்புத்தகங்களே தமிழ்ச்சோலையில் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் தமிழ்த்திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிரான்சில் 2006ம் ஆண்டுக்கான தமிழ்திறன் தேர்வில் 2,200 பிள்ளைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு ஒரு மிகப்பெரிய மண்டபத்தில் ஒரே நாளில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் தமிழ்த்திறன் தேர்வு உலகளாவிய அளவில் நடத்தப்படுகின்றது.

இதேபோன்று, இன்னொரு நிகழ்வு தமிழர் விளையாட்டு விழா. இதுவும் ஆண்டுதோறும் பாரிசில் நடத்தப்படுகின்றது. ஒன்பதாவது ஆண்டு விளையாட்டு விழாவாக 2006ல் இது இடம்பெற்றது. ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர் வரையில் கலந்து களிகொள்ளும் முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. இதில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன், பாரம்பரிய உணவு, ஆடை அணிதல் என்பவைகளுடன் ஒரு களியாட்ட விழாவாக நடைபெறுகின்றது.

இதைவிட, தமிழர்களிடையேயான விளையாட்டுக் கழகங்கள் மெய்வல்லுநர் போட்டிகள், உதைபந்தாட்டம், கிரிகெட், உள்ளரங்க விளையாட்டுக்கள் என பல்வேறு வகை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துகின்றன.

இந்தப் பின்னணியிலேயே பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் கலை இலக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையான கலை இலக்கிய முன்முயற்சிகள் ஏனைய நாடுகளை விடவும் பிரான்சிலேயே கால்கோளிடப்படுவதுடன் உயிர்ப்பாகவும் இயங்குகின்றன. புலம்பெயர் இலக்கியம் ஈழத்து இலக்கிய நீட்சியாக அல்லது போர் இலக்கியச் சாயலாகவே காணப்படுகின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இலங்கைத்தீவின் போர் அரசியலே புலம்பெயர் வாழ்வின் இயங்கு சக்தியாக இருக்கின்றது. அதனால்தான் போலும் புலம்பெயர் இலக்கிய புனைவிற்கான வடிவத்திலும் ஈழத்தைப்போல் கவிதையே முதன்மையாக உள்ளது. கதை, நாவல், நாடகம் என்பதெல்லாம் கவிதைக்கு பின்னால்தான் நிற்கின்றன. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களான இரண்டு இளம் ஓவியர்களின் ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. இந்த ஆண்டும் இரண்டாவது தடவையாக காமதேனு என்னும் தலைப்பில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆண்டு தொலைவில், பரதேசிகளின் பாடல்கள் என்னும் இரண்டு கவிதை நூல்களும், புலமும் புறமும் என்னும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருந்தன.

எரிமலை, உயிர்நிழல், அலையோசை ஆகிய சஞ்சிகைகளும், ஈழநாடு, ஈழமுரசு(இலவசம்) என்னும் வாரப்பத்திரிகைகளும் இங்கே தற்போது வெளிவருகின்றன. `ரிரிஎன்' என்னும் இருபத்துநான்கு மணிநேர தொலைக்காட்சி பாரிசிலிருந்து ஒளிபரப்பாகின்றது.

தற்போது கலை வெளிப்பாட்டு முயற்சியாக சினிமாவின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்ப உள்ளனர். ஆண்டுதோறும் குறும்பட விழாக்களும் குறும்பட தெரிவுப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன. முழுநீள திரைப்பட முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டில் இரண்டு குறும்பட தெரிவுப்போட்டிகள் நடைபெற்றன. ஒன்று `ரிரிஎன்'தொலைக்காட்சி நிறுவனத்தாலும், மற்றது நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகத்தின் கலாசாரப் பரிவினராலும் நடாத்தப்பட்டன. இப்போட்டிகளில் வகுப்பு, கானல் ஆகியன சிறந்த படங்களாக தெரிவாகின.

அத்துடன், மேலைத்தேய நடனம் என்பதும் ஒரு முக்கிய கலையாக வீச்சுடன் வெளிப்படத் தொடங்கி உள்ளது. அதில் இளைஞர் ஆர்வம் அதிகரித்திருப்பதுடன் அதனை முறையான கல்வியாகவும் கற்கத் தொடங்கி உள்ளனர். இதற்கென ஆண்டுதோறும் பிரான்சில் பனிவெளி ஆடல் என்னும் தலைப்பிலும், சுவிசில் அக்கினி தாண்டவம் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

இலங்கைத் தமிழர்கள் இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேற வேண்டுமென்பதே இலங்கை அரசினதும், பெருந்தேசியவாதிகளிதும் பெரு விருப்பமாக இருந்தது. அதனால் அவர்கள் மறைமுகமாக வெளிநாடு செல்வதை ஊக்குவித்தார்கள். இதனால் இலங்கைத் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சீரழியும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இன்று கால் நூற்றாண்டு கழிந்த நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பு தலைகீழ் மாற்றத்தை கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். எது பலவீனமாக்கும் என்று கருதப்பட்டதோ அதுவே பலமாக மாறி உலகத் தமிழினமாக எட்டுத்திக்கும் மதயானைகளாக நிமிர்ந்து நிற்கின்றது.

கி.பி.அரவிந்தன்

தினக்குரல்

ஐயா பாரிசல் கடந்த வருடம் நடந்த பிள்ளையார் கோவில் தேர் திருவிழாவில் 50ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டார்கள்.பாரிசில் பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் பிள்ளைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் அதிகமாகும்.பாரிசில் வாழுகின்ற ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை 90ஆயிரத்திலிருந்து 1 இலட்சமாகும்.

1998ம் ஆண்டு பாரிசின் வேர்சாய் ; மாவட்டத்தில் பிரெஞ்சை தாய் மொழியாக கொள்ளாத வெளிநாட்டு பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின் படி ஈழத் தமிழ் பிள்ளைகள் பற்றி நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஓன்று கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுகிறார்கள்.

இரண்டு ஆளுமை இல்லை.மூன்று தலைமைத்துவப் பண்பில்லை .நான்கு கூட்டுச் செயற்பாடில்லை என்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.

பிள்ளைகளை அதை செய்யாதே இதை செய்யாதே அதை தொடாதே இதை தொடாதே என்று எதிர்மறையாக(நெகட்டிவ்வாக) போதிப்பது அவர்களது ஆளுமையை சிதைக்கிறது.எப்போதும் தாங்கள் செல்வதைத்தான் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கருத்தை திணிப்பதாலும் அவர்களது நல்ல கருத்துக்களை தட்டிக்கொடுத்து ஊக்குவிக்க மறுப்பதாலும் அவர்கள் தலைமைத்துவ பண்பை இழந்து மற்றவர்கள் சொல்வதை செய்பவர்களாக மாறுகிறார்கள்.

அடுத்து பிள்ளைகள் மத்தியில் போட்டி பொறாமையை உண்டாக்குவது. நன்றாகப்படிக்கும் ஒரு பிள்ளையிடம் கேட்டுப்படி என்று பெற்றோர் சொல்வதில்லை.அவன் படிக்கிறான் நீ ஏன் படிக்கவில்லை என்ற ஒப்பீடும் சாதி மத வேறுபாடுகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் அவர்களது கூட்டுச் செயற்பாட்டுக்கு தடையாக இருக்கிறது.இது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்.

பிரான்ஸில் இருக்கும் எனக்கே தெரியாத பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நன்றி.

திசையெல்லாம் தீந்தமிழோசை

மலரட்டும் மறதமிழ் மான்பு மாநிலமெங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில இவ்வளவு யாழ்ப்பாணத்தாக்கள் இருக்கினமா? நான் நினைச்சன் மலையகம் கொழும்பு இருந்தெல்லாம் சிங்கள ஆக்களும் இருப்பினமெண்டு

சேர்ந்த மக்களும் இருக்கிறார்கள்.இதை விட 2இலட்சம் பாண்டிச்சேரி தமிழர்களும்(பிரான்ஸ் முழுவதும்) இங்கே இருக்கிறார்கள்குட்டி யாழ்ப்பாணம் என்றது தவறு.அது ஒரு குறுகிய பார்வையும் கூட. பாரிசில் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களையும்

குட்டி யாழ்ப்பாணம் என்றது தவறு.அது ஒரு குறுகிய பார்வையும் கூட. பாரிசில் தாயகத்தின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த மக்களும் இருக்கிறார்கள்.இதை விட 2இலட்சம் பாண்டிச்சேரி தமிழர்களும்(பிரான்ஸ் முழுவதும்) இங்கே இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையானதகவலை இணைத்த கந்தப்புவுக்கு நன்றிகள்.

Edited by குமாரசாமி

குட்டி தமிழீழமே இருக்கின்றது என்பது தான் சரியான தலைப்பு.

இது கனடா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் பொருந்தும்.

தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை என்பதால் அரவிந்தன் அவர்களால் தமிழீழம் என்ற சொல் தவிர்க்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

பேட்டி எடுத்த நிருபர் அரவிந்தன் அவர்கள் யாழ் ப்பாணம் என்ற படியால் அதை வைத்தே தலையங்கம் போட்டு விட்டார்கள்

Edited by நேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் முதன்முதலாக ஆண்டுத்தொகுப்பு வெளியீடாக 2006இன் முக்கிய நிகழ்வுகளையும், போக்குகளையும் ஆழமாகவும் விரிவாகவும் அலசும் கட்டுரைகள், நேர்காணல்கள் கொண்ட "தமிழ்க்கொடி" என தொகுப்பாகி ஆழி பதிப்பகத்தால் (சென்னை) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழன் பரவிவாழும் உலகளாவிய வகையில் அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பிலான பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

இதில் கி.பி. அரவிந்தன் அவர்களால் பதியப்பட்ட "எட்டுத்திக்கும் மதயானைகள்" எனும் இவ்வாக்கத்தை தினக்குரல் வார இதழ் மூன்று பகுதிகளாக்கி மீள் பிரசுரம் செய்துள்ளது. தனது பொது வாசக ஈர்ப்புக்காக "பாரீஸில் குட்டி யாழ்ப்பாணம்" எனும் தலைப்பு தினக்குரலால் இடப்பட்டதாகும்.

'எட்டுத் திக்கும் மதயானைகள்' என்ற தனது ஆக்கத்தை கி.பி. அரவிந்தன் அப்பால் தமிழ் இணையத்திலும் இணைத்துள்ளார்.

- இந்த தமிழ்கொடி என்ற தொகுப்பு பல் சுவை ஆவண நூலாக வெளிவந்துள்ளது. ஆனால் புலம்பெயர் தமிழ்க் கலாச்சார விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு இது வரவில்லை. இதுபற்றிய தகவல்கள் காலச்சுவடு இதழில் வெளிவந்துள்ளது.

சொல்றேன்னு வருத்தப் படாதேங்க!

எதுக்கு யாழ்ப்பாணம்னு பேசுறீங்க. ஈழம் ஈழம்ம்னு பேசுங்கோ! என் பிரண்ட் வருத்தப் படுறா?

ஆமாம். யாழ்ப்பாணம், பாண்டிச்சேரியவிட தமிழ், தமிழிலம்னு பேசுங்கோ.தமிழ்தான் நமக்கிடையெ ஆதாரம்

நல்ல ஒரு தகவலை இணைத்த கந்தப்புவுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.