Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்!

Featured Replies

தமிழீழத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள்!

 

pithuru.jpg
உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கொழும்பிலிருந்து உந்துருளிப் பேரணி ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளது.  தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், பிவித்துரு ஹெல உறுமய இந்தப் பேரணியை ஆரம்பித்துள்ளது. கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான இளைஞர்கள் மத வழிபாட்டுடன் குறித்த பேரணியை ஆரம்பித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “சமஷ்டி ஆட்சி வந்தால் இந்த நாட்டிற்கு என்ன நடக்கும் என்பதன் விளைவுகளை விரிவாக அச்சிட்ட துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக வழங்குகின்றோம். இந்த அரசாங்கம் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்த அரசாங்கத்திலுள்ளவர்கள் அடுத்த பரம்பரையை பற்றி சிந்திப்பதில்லை. வடக்கில் வேறு நாடு என்ற உணர்வில் அவர்கள் இருப்பதால்தான் சர்வேஸ்வரன், விக்னேஸ்வரன் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.  தேசியக் கொடியை நிராகரித்த வட.மாகாண கல்வியமைச்சர், புத்தர் சிலைகளை உடைக்கும் விக்னேஸ்வரன் ஆகியோர் குறைந்த அதிகாரத்தில் இவ்வாறு நடந்து கொள்கின்றவர்கள் அதிக அதிகாரம் வழங்கினால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவே ”புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதற்கெதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். என வலியுறுத்தி உள்ளார்.

pithuru3.jpg

pithuru-1.jpg

http://globaltamilnews.net/archives/51435

  • தொடங்கியவர்

“நாம் கைவிட்டாலும் தமிழீழத்தை கைவிட சிங்கள இனவாதிகளுக்கு விருப்பம் இல்லை!”

pithuru3.jpg

தமிழீழ வரைபடத்துடன் கொழும்பில் சிங்கள இளைஞர்கள் என்ற செய்தி ஊடகங்களில் உலாவுகின்றது. பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்பன்பில சில இளைஞர்களை ஏற்பாடு செய்து இப்படி ஒரு மோட்டார் வண்டி பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். இப்படி ஒரு வரைபத்துடன் தமிழ் மக்கள் எவரும் இந்த நாட்டில் பயணம் ஒன்றை மேற்கொள்ள முடியாது.

ஆனால் தமிழீழமும் தமிழீழ வரைபடமும் சிங்கள இனவாதிகளுக்கு தேவைப்படுகின்றது. தம்முடைய அரசியல் போட்டிக்காகவும் தமது அரசியல் நலன்களுக்காகவும் தமிழீழம் சிங்கள இனவாதிகளுக்கு தேவைப்படுகின்றது. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தமிழீழத்தை கோரவில்லை என்று சத்தியமும் செய்து விட்டது.

வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் மகிந்த ராஜபக்சவும் அவரது சகாக்கள் உதயகம்பன்பில போன்றவர்களும் தமிழீழம் பற்றியே பேசுகின்றனர்.

கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்போது, வடக்கு கிழக்கு மாகாணங்கள் தெற்கைக்காட்டிலும் வேறுபட்ட பெறுபேற்று வரைபடத்தை காட்டியது. மகிந்த ராஜபக்ச காலத்தேர்களிலும் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த தேர்தல் முடிவுகளிலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனியான நிறத்தின் மூலம் தமது தேர்தல் முடிவுகளை வெளிப்படுத்தியிருந்தன.

அப்படிப் பார்த்தால் தேர்தல் முடிவுகளிலேயே தமிழீழம் கோரப்படுகின்றது. தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மிக கடுமையான இன அழிப்புப் போரை சந்தித்த பின்னர், தமிழ் மக்கள் காட்டிய தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானவை. அதனை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. அத்துடன் தமிழர்களின் இன பாதுகாப்பும் உரிமைத் தீர்வும் அவசியம் என்பதையும் நடைபெற்ற இந்தப் போரை நிர்பந்தித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள இனவாதிகள் மாத்திரம் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்று கூற முடியாது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காணும் முயற்சிகளில் ஈடுபடும் இலங்கை அரசின் பக்கம் உள்ள சிங்கள இனவாதிகள் சிலரும் இவ்வாறு செயற்படுகிறார்கள். சமஷ்டி தீர்வை சிங்கள தலைவர்கள் அன்று முன்வைத்தபோது, தமிழீழக் கோரிக்கைக்குள் தமிழர்களை தள்ளியவர்கள் சிங்கள இனவாதிகளே. மீண்டும் தமிழீழத் தீர்வை நோக்கி தமிழர்களை, சிங்கள இனவாதிகளே தள்ளுகின்றனர்.

உதயகம்பன்பில போன்றவர்களும் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளும் வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தை இணைக்காது விடுவதும், தமிழர்களின் இறைமை அடிப்படையிலான சுயநிர்ணய ஆட்சியை மறுப்பதும், தமிழ் இனத்தை தொடர்ந்தும் ஒடுக்கி அழிப்பதுமே தமிழீழகத்தை உருவாக்கும். இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை மறைத்து, அரைகுறைவான தீர்வொன்றை திணிப்பதுவே இத் தீவில் தமிழீழகத்தை உருவாக்கும்.

இன ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வை வாழவே தமிழர்கள் தமிழீழத்தை கோரினர். இன்றோ, தமிழர்களை திரும்பத் திரும்ப ஒடுக்கவும் அழிக்கவும் தமிழீழத்தை சிங்கள இனவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

இப்புகைப்படங்களைப் பார்த்தால், உதயகம்பன்பிலவே தமிழீழத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவதுபோல இருக்கின்றது. தமிழ் மக்கள் தமிழீழத்தை கைவிட்டு குறைந்த பட்சமாக தமிழர் மண்ணில் சுயாட்சி கோரினாலும் அதை தமிழீழம் என்று சித்திரிப்பது, தமிழ் மக்கள் தமீழத்தை கைவிட்டாலும் சிங்கள இனவாதிகள் தமது அரசியல் தேவைக்காக, அதைக் கைவிட தயாரில்லை என்ற யதார்த்த நிலமையைத்தான் காட்டுகின்றது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/51467

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் வரைபடம் சிங்கள மக்களின் முதுகில் பயணம் செய்கிறது பல மக்களின் பார்வைக்கு மாவீரர் வாரத்தில் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழருக்கு தீர்வு எதுவும் கொடுக்கக்கூடாது என்று தமிழ் ஈழப்படம் வரைந்த ரி சேர்ட்டுடன் ஊர்வலம் போகின்றார்கள் வெளியில் இருந்து பார்க்கும் (வெளிநாட்டவர்கள்) சிங்களம் தெரியாதவர்கள் நினைப்பார்கள் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்று ...... அதுவும் குறிப்பாக மாவீரர்நாள் நெருங்கும்போது. 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் உக்கிரமாக நடந்த,அவர்கள் அடிவாங்கிய காலத்தில் எப்படி தமிழர் எல்லைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ, அதேபோலவே கொஞ்சம்கூட மாற்றம் இல்லாம, எம்மை அடிச்சா எவனும் கேட்க இல்லை நிலமை தமிழர்களுக்கு ஏற்பட்டபின்னும்....அவர்கள் மாறவில்லை...இன்றும்கூட எதுவுமே தமிழர்களுக்கு கொடுக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள், அவர்கள் மாறவில்லை, மாறபோவதும் இல்ல..!. நாங்கதான் நடுநிலைவாதிகளாக, மனித நேயம், பண்பாளர்களாக மாறிட்டோம், அந்த  மாற்றம் மிகவும் வரவேற்ககூடியது...சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டும்!

  • தொடங்கியவர்

 

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கெதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.