Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

Featured Replies

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி

கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Boulerice தெரிவித்துள்ளார்.

21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் எதிர்வரும், ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளார் என கனேடிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

பிரஞ்சு சரளமாக பேச கூடிய குறித்த மாணவி scolaire de Montréal ஆணையத்தினால் விருதொன்றையும் பெற்றிருக்க வேண்டியவர் என குறிப்பிடப்படுகின்றது.

நாடு கடத்தலுக்கு எதிராக கனேடிய ஊடகங்கள் உட்பட ஐம்பத்திற்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளதாக மாணவியின் தந்தை ரொபர்ட் ராஜரட்ணம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கணிதத்தில் 94 வீத சித்தியை பெற்ற திறமையான இந்த மாணவியின் குடியுரிமை நிலை தொடர்பில் கவனம் செலுத்த அனுமதித்தால் அவரால் கனேடிய சமூகம் பெரிதும் பயன் பெறும் என்று நம்புவதாக scolaire de Montréal ஆணையத்தின் தலைவர் Catherine Harel-Bourdon மாணவிக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

scolaire de Montréal ஆணையத்தின் ஆணையர்கள், புதனன்று அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

லியோனி பவித்ரா மற்றும் அவரது குடும்பத்தின் நாடு கடத்தல் தொடர்பில் கனேடிய பிரதமர் கவனம் செலுத்துவதுடன் ஊடாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக கியூபெக் solidaire இன் அமீர் காடிர் தெரிவித்துள்ளார்.

கியூபெக் ஏற்றுக்கொண்டமை மற்றும் கற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கான சான்றிதழ்களை மாணவி பெற்றுள்ளார். இந்த நிலையில் கல்லூரி அவரை ஏற்றுக் கொண்டாலும் பவித்திரா வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாகத்தில் காணப்படுகின்ற முரண்பாடே இதற்கு காரணம் என Boulerice தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் வழங்கவில்லை என Heurtel அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை மாணவி மற்றும் குடும்பத்தினரின் நாடு கடத்தல் பிரச்சினை ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

http://www.samakalam.com/செய்திகள்/கனடாவில்-இருந்து-நாடு-கட/

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக நாடு கடத்த படுகிறார் என்பதை 
இனி கூகிள் பண்ணிதான் பார்க்கணும்.

செய்தி தயாரிக்க வரிசையாய் வாறன்கள் .........
எல்லாம் முன்பு ஒரு இடத்தில் இருந்து படிச்சு இருப்பாங்களோ ? 

இந்தச்செய்தியை நான் பேஸ்புக்கிலும் பார்த்தேன். முதல்விடயம், இப்படி மாணவியின் படத்தை பிரசுரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டதா. அடுத்தது, நல்லாய் படிக்கும் மாணவி என்றால் நாடு கடத்தக்கூடாது, மொக்குப்பிள்ளை என்றால் நாடு கடத்தலாமா? எதற்காக நாடு கடத்தப்படுகின்றார்? 

உண்மையில் இப்படி யாருக்கு நடந்தாலும் அது மிகவும் மன உளைச்சலை தரும் கவலையான விடயம். ஆனாலும், திறமைசாலியானவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள். இலங்கை சென்றால் மீண்டும் கனடாவுக்கோ, யூகேயுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ கல்வி, தொழில் தகமைகளுடன் சுயமாகவே செல்லலாம். கனடாவைவிட்டுப்போனால் இந்த மாணவிக்கு இனி வாழ்க்கை இல்லையா? எமது ஊடகங்கள் விடயங்களை நல்லாய் மிகைப்படுத்தி எழுதுவதில் வல்லவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கலைஞன் said:

ஊடகம்  தன் வாசகர்சளை ஈர்க்க வேண்டாமா பிறகு அவர்கள் தொழில் படுத்துடுமே 

  • தொடங்கியவர்

நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிப்பு – கனடாவில் இருந்து இலங்கை திரும்பியது ஒரு குடும்பம்:-

canada-ime.jpg
கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த, இலங்கையைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தின், நிரந்தர குடியுரிமைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.கனடாவின் மொன்றியல் பகுதியில் வசித்துவந்த, இந்தத் தமிழ்க் குடும்பத்தினர் நேற்று (3.12.17) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபைக்காக, கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி வந்தவரது குடும்பத்தினர் கடந்த 2012ஆம் ஆண்டு கனடாவில் அரசியல் தஞ்சம் அடைந்திருந்தனர். எனினும் நிரந்தர குடியுரிமை கோரியிருந்த அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதனால் நாடு கடத்தும் இந்த தீர்மானத்தை மீள பரிசீலிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம், அவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை மீள்திருத்தம் செய்யுமாறு கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட,  நாடுகடத்தப்பட்ட குடும்பத் தலைவர்,  ”கனேடிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும், கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம். நாம் இன்னமும் கனடாவை நேசிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/52991

இக் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்று பின் அங்கிருந்து கனடாவுக்குள் குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் இருந்து சுற்றுலா வீசாவினூடாக வந்து இருப்பின் நிரந்தர வதிவிட உரிமை அல்லது அகதி அந்தஸ்து கிடைப்பது அரிதிலும் அரிது

2009 இன் பின் சுற்றுலா வீசாவூடாக கனடாவுக்குள் வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை கேட்கும் பல இலங்கை தமிழர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றது / ஏற்படப்போகின்றது. ஒவ்வொரு வருடமும் கனடாவில் இருந்து தாயகத்தை சென்று பார்த்து விட்டு வரும் எம்மைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலமை சரியில்லை என்று நிரூபிப்பது முடியாமல் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

ஆனால் முகநூலில் ஒரு விளம்பரம் உலா வருகிறது கனடாவில் குடியுரிமை பெற விருப்பமா விண்ணபியுங்கள் என்று வருது கன பேர் ஏமாந்ததாக செய்தி படித்தேன் ஆனால் இன்னும்  அப்படி ஏமாந்தவர்களை இன்னும் காண வில்லை பணத்தை இழந்த காரணத்தினால் சொல்லாமல் இருக்குறார்கள் என தெரியாது 

அந்த விளம்பரத்தில் சிலர் பத்வுகளை மேற் கொண்டதும் அழைப்பு வருவதாகவும் சுய விபரத்தை கேட்பதாகவும் சொன்னார்கள்  

பல லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க காத்திருக்கிறது கனடிய அரசு எனவும் கவர்சிகரமாக உள்ளது 

30 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து கனடாவிற்கு நேர்மையான முறையில் வந்து தொழில் செய்யவும் நிரந்தர குடியுரிமை பெறவும் பல வழிகள் உள்ளன தனி.  Skilled worker எனும் முறையில் வருவதற்கு 347 தொழில்கள் உள்ளன. இதில் ஒன்றிலாவது அனுபவமும் கல்வி தகமைகளும் இருப்பின் விண்ணப்பிக்க முடியும். இதை விட பணம் இருப்பின் இங்கு முதலிடுவதற்கு முடியுமாயினும் வரலாம் (பல சீனர்கள்/ ஹொங்க்கொக் வாசிகள் இதை தெரிவு செய்கின்றனர்)

'உங்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட வீசா பெற்று தருகின்றோம்' என சொல்லி கடை பரப்பி இருக்கும் பல நிறுவனங்கள் செய்வதெல்லாம், விண்ணப்ப படிவங்களை நிரப்பி கொடுப்புது மட்டும் தான். அதிலும் ஆயிரம் பிழைகள் விடுவர். நான் இங்கு 10 வருடங்களுக்கு முன் இப்படியான ஒரு வழியில் தான் குடும்பமாக வந்தனான். விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்ததில் இருந்து நிரப்பி அனுப்பி நேர்முக கேள்விகளுக்கு பதில் சொல்லும் வரை எந்த நிறுவனங்களதும் /ஆட்களினதும் உதவிகளை பெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

நன்றி தகவலுக்கு 

எங்கள் ஊரில் கனடாவில் கோழிப்பண்ணைக்கு ஆட்கள் தேவையென ஒரு சில பொடியங்கள் கிட்ட தட்ட 40 பேருக்கு மேல் காசு கொடுத்தார்கள் போவதற்கு வாங்கினவன் தன்ற வேலையெல்லாம் முடித்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி கொண்டிருக்கிறான் ஒருவன் தன்ற அரச வேலையை எழுதிக்கொடுத்து விட்டு வந்து வேலை இல்லாமல் நிற்கிறான் இதை கேள்விப்பட்டதும் ஒருத்தனிடன் கனடாவிலுள்ள நண்பனை அழைத்து கேட்ட போது அவன் அப்படி ஒன்றும் இல்லை காசை கொடுத்து ஏமாந்திராதீர்கள் என்றான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தனி உதை விட உங்கையே ஒரு கோழிப்பண்ணை தொடங்கினானால் பிச்சுக்கிட்டு போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

தனி உதை விட உங்கையே ஒரு கோழிப்பண்ணை தொடங்கினானால் பிச்சுக்கிட்டு போகும்.

ம்ம் அது விளங்குவதில்லை கனதுகளுக்கு கனடா என்றதுமே( ஐரோப்பிய நாடுகள் ) என்றதுமே வாயை பிளந்துகொண்டு எவ்வளவும்கொடுத்து எந்த வேலைக்கும் போக ஆட்கள் ரெடி இன்னொன்று சொந்தங்கள் வேற அவர அவுஸ் , கனடா லண்டன் பிரான்ஸ் என்று சொல்லி மார்தட்டிக்கொள்கிறார்கள் 

அ ண்மையில்  ஒருவர் இறந்து போனார் பல நாளாக உடல் இருந்தது ஆட்கள் வந்து சேர நாள் எடுத்தது  எல்லோரும் வெளிநாடு பாவம் அவர் இறந்தும் பல காட்சி பொருளாக பெட்டியிலே இருந்தார் சாவு அறிவித்தல் மட்டும்  சொல்லி முடிய பல நேரம் ஆச்சு ஆனால் சாவு வீட்டில் யாரும் போக இல்லை நெருங்கிய சொந்தங்களை தவிர  இப்படி இருக்குது நிலமை  இதுவும் வெளிநாட்டு வாழ்க்கையில் துரதிஸ்ரம் அண்ணtw_cold_sweat: 

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ்,  2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.

sri-lanka-deportation

எனினும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தே, இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கனடிய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2017/12/04/news/27728

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.