Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவராசா- என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் ?

Featured Replies

தவராசா- என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் ?


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை இணைந்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படட்டு வருகின்றனர்.

அந்த நிலையில் இதுவரையில் ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்கள் நடைபெற்று அவர்களை கூட்டமைப்புக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

அதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்த்தலில் கூட்டமைப்பில் ஆசனம் கேட்டு கொடுக்காத நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி சிலந்தி சின்னத்தில் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. அதில் போட்டியிட மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு விட்டதாக அறியமுடிகிறது.

Vithyatharan.jpg

அந்நிலையில் ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சி. தவராசாவையும் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு தீவிர முயற்சிகளில் தமிழரசு கட்சியினர் ஈடுபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

http://globaltamilnews.net/archives/53606

8 hours ago, நவீனன் said:

காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டு விட்டதாக அறியமுடிகிறது.

 

8 hours ago, நவீனன் said:

ஈ.பி.டி.பி கட்சியின் மூத்த உறுப்பினரும் , வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சி. தவராசாவையும் தமிழரசு கட்சியில் இணைத்துக்கொள்வதற்கு

 

தமிழர்களின் உரிமைகளை அடகுவைத்து இலகுவில் விலைபோகக் கூடியவர்கள், கைக்கூலிகளாக தமிழர் உரிமைகளை சீரழிக்கக்கூடியக் கூடியவர்கள் என கடந்தகாலங்களில் பல தடவைகள் நிரூபித்த இருவர் இவர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஜம்ப் லிங்கங்களாய்க்கிடக்கு......தமிழ்நாட்டு அரசியல் காத்து யாழ்ப்பாணப்பக்கமும்  அந்தமாதிரி  வீசுது..:cool:

  • தொடங்கியவர்

வித்தியை தமிழரசு கட்சிக்குள் இணைக்க கூடாது – மாவைக்கு இராபோசன விருந்து கொடுத்து அழுத்தம்

!

Vithyatharan.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்க கூடாது எனவும் , மேயர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஒருவர் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அறிய முடிகிறது.

மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்க தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் , தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவை கோப்பாய் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்கு அழைத்து இராபோசன விருந்து அளித்துள்ளார்.

அதன் பின்னர் வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்க கூடாது. யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்க கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது சார்பில் மேலும் சில தமிழரசு கட்சி உறுப்பினர்களை கூறி அவர்களும் வித்தியாதரன் தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கப்படுவதனை விரும்பவில்லை. அவர்களும் அதற்கு எதிர்ப்பு என தெரிவித்து உள்ளார். இதனால் மாவை சேனாதிராஜா தற்போது கடும் அழுத்தத்தின் மத்தியில் உள்ளதாக அறிய முடிகிறது.

அதேவேளை வித்தியாதரனை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்குவதற்கு வேறு ஒரு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

http://globaltamilnews.net/archives/53791

  • கருத்துக்கள உறவுகள்

வேற யார் சரவணத்தார் ஆக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.