Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மண மாக்கட்

Featured Replies

இப்ப எல்லாம் பெண்கள் லவ் பண்ணிக்கிறாங்க அப்புறம் சிம்பிள் ரீசன் சொல்லுவாங்க ஐ டோண்ட் லைக் யூ.. அப்படின்னுட்டு எந்தக் காரணும் இல்லாமல்.. எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அடுத்தவன் கூட ரெஸ்ரோரண்டில திண்டிட்டு இருக்காங்க. இல்ல பப்பில கிளப்பில கை கோர்த்திட்டு ஆடிக்கிறாங்க. வேணாம் நமக்கு இந்தச் சுதந்திரம். நம்ம தமிழர்களுக்கு என்று வாழ்வியல் விழுமியம் இருக்கு. அதை தெரியவும் காக்கும் படி வாழவும் விளைவோம்..! என்பதுதான் நாம் வலியுறுத்துவது.

என்ன நெடுக்க்ஸ் பெண்கள் மேல உங்களுக்கு உந்த தள்ளாத வயதில இவ்வளவு வெறுப்பு. ஏதோ ஆண்க்கள் எல்லாம் உத்தமர்கள் போலவும் எல்லா பிரச்சினைக்கும் பெண்கள்தான் காரணம் போலவும் கூறுகிறீர்கள். எப்பவுமே பிரச்சினை பண்ணுறது ஆண்க்கள்தான் அவைக்கு ஈகோ பிரப்பிளம் நான் ஆண் என்னவும் செய்யலாம் பெண்தான் அனுசரிச்சுப் போகணும் என்ட மனநிலை அதாலதான் இப்படி பெண்களை குற்றம் சாட்டியே ஆண்க்கள் காலத்தை கழிக்கிறார்கள்.

நெடுக்கால போவான்

10. பெண்கள் மத்தியில் சமூக ஒழுக்கமற்ற நிலை உயர்வடைதல். இதன் மூலம் ஆண்களும் சமூகம் ஒழுக்கமற்ற நிலைக்கு இட்டுவரப்படுதல்...!

:lol: ஆமா பெண்களால தான் ஆண் சமூகம் ஒழுக்கமற்றதா இருக்கா? :lol:

மறுபடியும் ஜோக் அடிக்கிறீர்களே? நீங்கள் புலம் பெயர் நாட்டையும் சரி..தாயகத்தையும் சரி இன்னும் சரியாக அவதானிக்கவில்லை போல.....

அனிதா

என்னும் கொஞ்ச நாளில் சொல்லுங்க புலத்தில் உள்ள ஆக்களைப் பார்த்துத்தான் தாயகத்தில் உள்ளவர்கள் பழகினவை எண்டு...!

நெடுக்கால போவான்

இந்தக் மனித மனக் கட்டுப்பாடுகள் அற்ற நரகங்களை நாகரிகம் என்று தாயகத்துக்கு ஏற்றுமதி செய்ய நினைச்சீங்க.. அது ரெம்பவே நம்மை சீண்டிற விசயமாகிடும்..! ஜாக்கிரதை. இப்பவே போனது.. நல்ல காலம் இந்த சமருக்க பாதை திறக்கான் ஆமிக்காரன் சோ.. இரண்டு பக்கத்தால சீரழி இருந்தது இப்ப ஒரு பக்கத்தாலதான் என்று அமைதிப்பட முடியுது. உந்தக் கூத்துக்களோட வன்னிக்கு தாராளமாப் போயிட்டு வாங்க. மிச்சம் அவங்க பாத்துக்குவாங்க..!

:) அனி கொஞ்ச நாள் இல்லை..கொஞ்ச நேரத்துல எங்களுக்கு எச்சரிக்கை பண்றார் தாத்தா...நாம போய் நம்மூரு ஆக்களை கெடுக்க வேணாமாம்..!! :(

.................

ஆரம்பத்தில் குழப்பங்கள் இங்க நடக்குது..ஊரில கலாச்சாரம் கட்டுமானமா இருக்கு என்றீர்கள். (இல்லை என்று நானும் சொல்லவில்லை..ஆனால் இங்கு வெளிக்கொணரப்படுவதால தான் நீங்க புள்ளி விவரம் தரும் நிலைமையில் இருக்கு..ஊரில எல்லாம் மூடி மறைச்சு கட்டி குடுத்துடுவாங்க.......)

பிறகு அட்யஸ்ட் பண்ணி வாழணும்,அர்ப்பணிக்கணும் என்றீர்கள்....அப்பா, அம்மாவை போல..நல்லொரு ஒப்பீடு!!

இங்கயும் வாழீனம் தான் அட்யஸ்ட் பண்ணிக்கிட்டு...எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா..ஊரில் நல்ல மாதிரி வசதியானவா. திருமணம் என்று இங்குள்ளவரை கட்டி வைச்சாங்க. இங்கு வந்து நேரில் பார்க்க தான் தெரியும் அவருக்கு மொட்டை என்று. (முன்னுக்கு கொஞ்ச முடி..இப்போ அதுவும் இல்லை) போட்டோவிலோ..டெலிபோனிலோ தெரியாதே...அதை விட அவர் சொல்லவில்லை! இப்படி உருவத்தையே மறைச்சவர் உள்ளத்தை ஓப்பினா வைச்சிருப்பாரா?? வாழ்க்கையில் சுறுசுறுப்பாகா இருக்கணும்..அப்போ தான் முன்னேறலாம்..அவர் வேலைக்கு போவதை தவிர வெறொன்றும் தெரியா! அப்படியே இருப்பார். பிள்ளைகளில் இருந்து...கிச்சின் வரை அந்த அக்கா தான்..எல்லாமே அவா தான்! உண்மையை சொன்னால் ஒரு கார் லைசன்ஸ் கூட இல்லை அவரிடம் அப்படியானவர்.

இப்படியானவரோட அட்யஸ்ட் பண்ணி வாழ்றா..இப்பிடி எத்தனை ஆண்கள் வாழுவாங்க?? விட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க...பெற்றோருக்கு தெரிஞ்சும் ஆ..பொணு அட்யஸ்ட் பண்ணு என்பாங்க..ஆண் என்றால்..அவனுக்கென்ன தலல விதியா என்பாங்க....

புள்ளி விவரம் சொன்ன உடனே எல்லாம் சரி என்றில்லை.. யதார்த்தை பார்க்கணும்...யதார்த்த வாழ்வில இப்படி எத்தனையோ பெண்கள் வாழீனம்...

இப்படி பெண்களும் இருக்க..சில பெண்கள் செய்யும் சரியில்லாத விடயங்களை புள்ளி விவரம் காட்டுகிறீர்கள்..அதுசரி எப்போ நீங்கள் பெண்களை பெண்களா கதைக்குறீர்கள்..?

ஆனாலும் ஒரு விடயம் தெரியுமா...

உண்மையாக நித்திரை கொள்பவரை எழுப்பலாமாம்.......

நித்திரை போல நடிப்பவரை எழுப்பவே ஏலாதாம்....................................!!!! :lol:

:lol: ;) சகி அது எண்டால் உண்மைதான்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கே உங்க கதை.. ஆணுக்கு தலை மொட்டை என்றா பிறாப்பிளமாம்..

ஆணுக்கு கார் லைசனஸ் இல்லைன்னா பிறாப்பிளமாம்

ஆணுக்கு வேலைக்குப் போறதை விட வேற வேலை தெரியான்னா பிறாப்பிளமாம்..

ஆனா பெண்கள்...

தலைல கால்வாசி கீரப்பிடி அளவில ஒரு தலை மயிர்...

ஸ்போட்ஸ் காரில ஏறி கறுப்புப் புகை தள்ள ஓட்டம்....

வேலைக்குப் போயிட்டு சுப்பர் மாக்கட்டில சிகரட்டும் வாங்கி அடிச்சுக்கிட்டு வைன் போத்தலோட வந்தாக்கா..

ஆண்கள் வாங்கோ வாங்கோ என்று தலை முடிய சீவியபடி வரவேற்று தன்ர காரில வீட்டைச் சுற்றி காட்டனும் அப்படியே போட்டிருக்கிற ஒவ்வொரு உடுப்பையும் உருவிட்டு வீட்டு உடுப்பூ போட்டு சாப்பாடும் தீத்திவிட்டால்.. அந்த ஆண் என்ன பொறுப்பான ஆண்...என்று வியப்பாங்க.. போல இருக்கே..!

அப்படியே தலை முடிக்கு கலரும் அடிச்சு... ஏன் விக் ஒன்றும் வாங்கி வைச்சு.. களிம்பும் பூசிட்டு.. கிரடிட்காட் நிறைய பொக்கட் தள்ள பேசும் வைச்சிட்டு.. காதடைக்க கை டெசிபல் சவுண்டில பாட்டும் போட்டு ஒரு பி எம் டபுள் யூவில வந்தாக்கா அவன் ஆண் மகன்..! அப்படியே ரேக் எவே கூட்டிப் போய் நல்ல பிசாவும் ஓடர் கொடுத்து கூலா வாங்கிக் கொடுத்து அப்படியே தோளிலை கையைப் போட்டு அணைச்சுக் கொண்டு கிளப்புக்கு தள்ளிட்டுப் போனா... அவன் ஆண் மகன்..! வந்திட்டாங்கப்பா ஆண்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்க...!

ஏதோ ஊரில இருந்து வரேக்க கார் கூட வந்தவை போலவும்.. சிறீலங்காவின்ர இரண்டாவது தலைநகரத்தில வாழ்ந்தும் ரெயில் பாதைக் கூடப் பார்க்க முடியல்ல. அந்தளவுக்கு போரின் கொடுமை...! இவங்க எண்ணடா என்றா கார் விடனுமாம்..! அவனவன் கார் விடுற புகையை கென்றோல் பண்ண வழி என்ன என்று அலசிக்கொண்டிருக்கிறான்.. இங்க பொண்டுகள்.. கார் விடுற மாப்பிள்ளை வேணுமாம்..! ஏன் பாருங்கோ சைக்கிளில ஓடினா அது நகராதோ..! பொது போக்குவரத்துக்களைப் பாவிச்சா குறைஞ்சிடுவியளோ..!

பொறுங்கோ காபண்டை ஒக்சைட் வைக்கப் போகுது ஆப்பு. ஏற்கனவே பிளைட் டிக்கட்டிக்களுக்கு வரி போட்டாச்சு...! இழை மின் குமிழ்களுக்கு தடை வரப்போகுது. கார் ஓட்டிறதுக்கு கட்டுப்பாடு வரப்போகுது... பாப்பம் என்ன செய்யப் போறியள் என்று..!

ஆக இப்ப பொண்டுகளுக்கு.. நல்ல விக் தலை முடியும்.. காரும்.. வீட்டு வாசாலில நாய் போல நின்று வரவேற்பும் அளிக்கிறவன் எல்லாம் குட் மாப்பிள்ளை... மற்றவன் எல்லாம் கெட்டவன்..!

நாங்க என்றால் சொல்லுவம் தம்பி மொட்டை போடடா.. ரெம்ப வசதி.. கார் ஓடாதையப்பு பொதுப்போக்குவரத்தைப் பாவி.. சூழலைப் பாதுகாக்க்க உன்னால் ஆனதை செய்யுறா என்ற திருப்தியோட உன்ர சந்ததிக்கு நீயே பாதுகாப்பை வழங்கிறது போல. மட்டுமில்லாம நடையோ சைக்கிளோ.. நல்ல உடற்பயிற்சி.. இப்ப 1 - 5 வயசுப் பிள்ளைக்கே நீரிழிவு நோய்.. மிச்சம் பெண்களுக்கு கொழுப்பு மித்திட்டு... நீ அப்படிஆகிடாதேடா என்று..!

ஒரு நாளும் கிரடிட் காட் வைச்சிருக்காத. அது உழைப்பை குடிச்சு உன் இரத்ததைக் குடிக்கும்..!

தலைல கண்ட களிம்பையும் பூசி மையும் தடவாத. அலேசிக் காரணிகள் -நிறைய இருக்கு..! உந்தப் பொண்டுகள் பகட்டுக்கு பரலோகம் போவாங்க.. நீ உலகத்துக்கும் உனக்கும் நல்லது என்று படுறதைச் செய்..!

அப்படி இல்ல என்று விட்டிட்டு ஓடினா.. சந்தோசமா டைவேர்ஸ் எடப்பு. உலகத்தை புரிஞ்சுக்க முடியாததுகளால உன்னை என்ன தன்னையே புரிஞ்சுக்க முடியாது என்றுதான் சொல்லுவம்..!

ஆணோ பெண்ணோ.. அடுத்தவர் குறையை மிகைப்படுத்த வெளிக்கிட்டா பலது மாறிமாறி வெளி வரும். யாரும் குறையில்லாமல் எல்லா நிறை வோடும் இல்ல..

தலை முடியில்லைன்னா.. விக்கை வேண்டிப் போடுறது.. கார் ஓடமுடியல்லை ஓடிறது. ஏதோ ஏரோப்பிளேன் ஓடி சிக்காக்கோ போறாப்போல எல்லோ கவலைப்படுறியள்..! நாய் கூட விண்வெளிக்குப் போகுது.. பெண்கள் போறாங்க என்று பெருமைப்படுற ஆக்களாச்சே நீங்க...! மனிதன் போனான் என்றா கவனிக்காங்க பெண்கள் போனா தனிய புலம்புறாங்க. ஆக பெண்களே தங்களை மனிதனுக்க அடக்க முடியல்லையா..??!

குறைகளை நிவர்த்தி செய்து வாழுறவன் தான் மனிதன்.

ஒரு ஆணுக்கு தலை முடி.. வேலை.. கார்.. கிரடிட் காட்.. வீடு வளவு.. விசா என்பனதான் அவன் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால்.. நிச்சயம் அது நிலையில்லாத வாழ்வு..!

காரணம்.. தலைமுடி வயது போன எங்களுக்கு போல எல்லாருக்கும் கொட்டும்.. கார் கெட்டு பழுதாகி லோன் கிடைக்கல்ல என்றால் இல்லாமல் போகலாம்.. கிரடிட்காட் ஸ்கோர் இல்லைன்னா கட்டாகிடும்.. வீடு வளவு பூகம்பம் வந்தா இடிஞ்சு கொட்டலாம்.. விசா.. கிரிமினல் செய்தால் ஜெயிலுக்க இல்ல நாட்டை விட்டு ஓட்டிடுவாங்க..! வாழ்க்கையே நிலையில்லாதது.. அதுக்க நிலையில்லாததுகளை வைச்சு வாழ்வைத் தீர்மானிக்கிற பெண்கள் அந்த ஆணுக்கு ஒரு நோய் வந்து உருப்போனா.. பாதியில கைவிட்டிட்டு உருவுள்ள அடுத்தவன் கூட போயிடுவாங்க போல இருக்கே. ரெம்பவே மிருகங்களை விட சீப்பா ஆகிட்டாங்கலா பெண்கள். ஒரு 1% மனிதாபிமானம்.. மனிதம் பகுத்தறிவு இல்லையா இவங்களட்ட..! இவங்க எந்த உலகில இருக்காங்க.. கற்பனை உலகில.. அமெரிக்க முதலாளித்துவ மாயைக்குள்ள சிக்கி இருக்காங்க போல..!

அதுவும் ஈழத்தில இருந்து துன்பங்களில் துவண்ட இவர்களே இப்படின்னா.....??! இங்க உள்ளவை.. சொல்லத் தேவையில்ல..! எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்குங்க. அது இயற்கையாவும் இருக்கும் செயற்கையாகவும் இருக்கும்.. பொறுங்க.. காலந்தான் பதில் சொல்ல வேணும். வெகு விரைவில சொல்லும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கி வைத்த ஆளைக் காணோம்.நீங்க ஆளாளுக்கு அடிபடுறீங்கோ

ஊஹூம்....இது சரி வராது.. :angry:

தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான் எண்டு ஒற்றை காலில நிண்டால்... கால் உளைஞ்சு விழும் போது தான் புரியும்:huh:

ஊரில ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கலியாணத்தைக் கட்டு என்று சொல்லுவினம். அது அநியாயம். இங்க கிரடிட் காட் இருக்கு என்று ஒரு பொய் சொன்னாலே போதுமாமே..! யார் தான் பொய் சொல்லேல்ல உலகில. காதலிக்கும் போது அப்பா அம்மாக்கு மறைச்சு சொல்லாமல் தானே காதலிக்கிறீங்க. 20 வருசம் வளர்த்தவங்களுக்கே பொய் மறைப்புச் செய்யேக்க நீங்கள் உணராத குற்றத்தை உங்களுக்கு இன்னொருத்தர் செய்யுறது எண்டதும் ஏன் தூக்கிப் பிடிக்கிறீங்க. காரணம் நீங்கள் அதைக் குற்றமாக்கி குறிப்பிட்டவரை கழற்றி விடுறதுக்கு அதை வாய்ப்பாக்க முனையுறீங்க என்பதாலதான். நீங்க அப்பா அம்மாவுக்கு மறைச்சதுகளுக்கு பொய் சொன்னதுகளுக்காக அவங்க தண்டிச்சா...?? தினமும் தண்டனை தன் வாழ்வாகவும் கூடும்.

ம்ம் நானும் கேள்விப்பட்டிருக்கன் .. "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தைக் கட்டு"என்றதை , ஏன் இப்படி ஒரு பொய்யான கல்யாணம். இப்படி கல்யாணத்தைக் கட்டுறத்துக்காக ஏன் ஆயிரம் பொய் சொல்லனும்.பிறகு இந்தப் பொய்யால் பின்னுக்கு என்ன நடக்கும் என்ற பயமே கிடையாதா ? . கணவன் மனைவி ஒரே தலைமுறை சார்ந்தவர்கள் என்றதால, அது வாழ்க்கை முழுக்க தொடரப் போற உறவா இருக்கப் போறதால் - மறைக்கிறது ,பொய் சொல்லுறது ரொம்ப தப்பு.! இந்த உறவில் ஒளிவு மறைவுகள் இல்லாமலும், புரிந்துணர்வின் அடிப்படையிலும் தான் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.

அப்படித்தான் காதலர்களுக்குள்ளும் ,எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. அப்பத்தான் 5 வருசம் இல்லை 100 வருசமும் காதலித்துக் கொண்டே இருக்கலாம்...!

என்ன கதைக்கிறீங்க யாரும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டுப் போய் காதலிப்பாங்களா ? காதலிக்கிறதும் தப்பான விசயமில்லையே.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கிடையிலான புரிந்துணர்வு, தலைமுறை இடைவெளி, தமிழ்ச் சமூகச் சூழல் என்றதுகள், காதலுக்கான தனது எதிர்ப்பை பல விதத்தில் வெளிப்படுத்துது. ஒருவன் அல்லது ஒருத்தி தனது துணையை தானே தேர்ந்தெடுக்கும் போது வாற எதிர்ப்புகளை சமாளிக்க,இந்த மாதிரியான விசயங்களை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகினம

Edited by அனிதா

அப்படியே தலை முடிக்கு கலரும் அடிச்சு... ஏன் விக் ஒன்றும் வாங்கி வைச்சு.. களிம்பும் பூசிட்டு.. கிரடிட்காட் நிறைய பொக்கட் தள்ள பேசும் வைச்சிட்டு.. காதடைக்க கை டெசிபல் சவுண்டில பாட்டும் போட்டு ஒரு பி எம் டபுள் யூவில வந்தாக்கா அவன் ஆண் மகன்..! அப்படியே ரேக் எவே கூட்டிப் போய் நல்ல பிசாவும் ஓடர் கொடுத்து கூலா வாங்கிக் கொடுத்து அப்படியே தோளிலை கையைப் போட்டு அணைச்சுக் கொண்டு கிளப்புக்கு தள்ளிட்டுப் போனா... அவன் ஆண் மகன்..! வந்திட்டாங்கப்பா ஆண்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்க...!

ஆனால் சகி சொன்னதை புரிந்து கொள்ளாமல் நீங்க வேற ஏதோ கதைக்கிறீங்கள். தாயகத்தில் இருக்குற பெண்களை இப்படி ஒரு ஆள் ஏமாற்றி கல்யாணம் முடிச்சிருக்கிறார் என்று சொன்னதுக்கு நீங்க ஏதும் ஒழுங்கான பதில் சொனீங்களா? ... அப்படியென்றால் அவர்கள் செய்வது சரி என்று சொல்லுறீங்களா? பழைய போட்டோவைக் காட்டி கல்யாணம் பேசி இருக்கினம் அது சரி என்றியள்... அவருடைய உண்மையான மொட்டைத் தலையை மறைச்சு வேசம் போட்டிருக்கார் அது சரி என்றியள். நல்ல வேலையில் இருக்கிறதாக பொய் சொல்லியிருக்கார் அது சரி எண்டுறீங்க! அதுக்கு உங்க பதில் வேற மாதிரித்தானே இருக்கு, மற்றப்படி இந்த கிரடிட் கார்ட் , பொக்கட் தள்ள பேஸ் வைச்சிட்டு இருக்குறவையைப் பற்றி ஒன்னும் சொல்லயில்லை. முதலில் தப்பாண்டா தப்பை ஒத்துக்கொள்ள வேணும் .. நாங்களும் எல்லா போய்ஸ யும் கூடாது எண்டு சொல்ல இல்லையே.. எங்களுக்கு தெரிந்த நல்ல போய்ஸும் இருக்கினம். எங்க அண்ணாமாரும் கூட அச்சா அண்ணாமர் .... சோ ...... சில பேர் தான் இப்படி ஏமாற்றுக் காராக இருக்கினம் எண்டு சொல்லுறம். ஆனால் நீங்கள் புலத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களே சரியில்லை எண்டுதானே கதைக்கிறீங்கள்... :angry: :D:D

சரி . இவையிண்ட ஒரு பிம் டபுள் யூ க்காகவும் பீசாவுக்காத்தான் ஆண்கூட பெண்கள் பழகுற மாதிரி எல்லா சொல்லுறீங்கள். ஏன் எங்களுக்கு பீசா வாங்கி சாப்பிடத் தெரியாதா என்ன...பிம் டபுள் யூ என்ன பென்சே இப்ப நம்ம ஆக்கள் வச்சிருக்காங்க..... சரி இதெல்லாம் இப்ப யாரு பாத்துக் காதலிக்கிறது. ;) சும்மா சும்மா இந்தப் படங்களில் காட்டுவதைப் பார்த்துக் கொண்டு எல்லாரையும் தப்புக்கணக்கு போடாதீங்க.. நெடுக்கு தாத்தா ! B) ;)

ஊஹூம்....இது சரி வராது.. :angry:

தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் தான் எண்டு ஒற்றை காலில நிண்டால்... கால் உளைஞ்சு விழும் போது தான் புரியும்:rolleyes:

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :rolleyes::D

Edited by அனிதா

இப்ப நீங்க உங்க ப்ரண்ட்ஸ் கூட எங்கயோ எல்லாம் போவீங்க என்னமோ எல்லாம் செய்வீங்க ஏதோ எல்லாம் பேசுவீங்க .... எல்லாத்தையும் வீட்ட வந்து அம்மா கிட்ட சொல்லுவீங்களா? அது உங்களால் முடியவே முடியாது !

அதுவும் ரண்டொரு பெண்களை(சரியில்லாத) எங்கயோ.....? :rolleyes: எப்பிடியோ....? :rolleyes: கண்டு விட்டு...அறிந்து விட்டு...வந்து....யாழில இப்பிடி தொட்ட எல்லாத்துக்கும் பெண்களை இழிவு படுத்தி...யதார்த்தத்துக்கு மாறாக கதைப்பதை அம்மாக்கு சொன்னால்... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நானும் கேள்விப்பட்டிருக்கன் .. "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தைக் கட்டு"என்றதை , ஏன் இப்படி ஒரு பொய்யான கல்யாணம். இப்படி கல்யாணத்தைக் கட்டுறத்துக்காக ஏன் ஆயிரம் பொய் சொல்லனும்.பிறகு இந்தப் பொய்யால் பின்னுக்கு என்ன நடக்கும் என்ற பயமே கிடையாதா ? . கணவன் மனைவி ஒரே தலைமுறை சார்ந்தவர்கள் என்றதால, அது வாழ்க்கை முழுக்க தொடரப் போற உறவா இருக்கப் போறதால் - மறைக்கிறது ,பொய் சொல்லுறது ரொம்ப தப்பு.! இந்த உறவில் ஒளிவு மறைவுகள் இல்லாமலும், புரிந்துணர்வின் அடிப்படையிலும் தான் நம்பிக்கை கட்டியெழுப்பப்படவேண்டும்.

அப்படித்தான் காதலர்களுக்குள்ளும் ,எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது. அப்பத்தான் 5 வருசம் இல்லை 100 வருசமும் காதலித்துக் கொண்டே இருக்கலாம்...!

என்ன கதைக்கிறீங்க யாரும் அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டுப் போய் காதலிப்பாங்களா ? காதலிக்கிறதும் தப்பான விசயமில்லையே.. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கிடையிலான புரிந்துணர்வு, தலைமுறை இடைவெளி, தமிழ்ச் சமூகச் சூழல் என்றதுகள், காதலுக்கான தனது எதிர்ப்பை பல விதத்தில் வெளிப்படுத்துது. ஒருவன் அல்லது ஒருத்தி தனது துணையை தானே தேர்ந்தெடுக்கும் போது வாற எதிர்ப்புகளை சமாளிக்க,இந்த மாதிரியான விசயங்களை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகினம

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க.

சொந்த அனுபவத்தை பொதுவாக ஆக்கக் கூடாது சார்.. :D

மனம் ஒத்த காதலர்களாக/தம்பதிகளாக இருக்காவிட்டால் எங்கும் பிரச்சினைகள் வரும். எந்தவோர் விடயத்தையும் இருவரும் கலந்தாலோசித்து, சரி/பிழைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கும்போது சிக்கல் வராது. ஆனால் இது நடைமுறையில் வரச் சந்தர்ப்பங்கள் குறைவு. :lol:

சமத்துவம், புரிந்துணர்வு,விட்டுக் கொடுததல் இந்த மூண்றும் இல்லாத வரை புலம் என்ன சந்திரனுக்கு போனால் கூட மணவாழ்க்கை நன்றாக இருக்காது, நெடுக்ஸ் நீர் வீன் வாதம் செய்வதை விட்டு விட்டு களத்தில உள்ள என்னப் போல சின்னம் சிறுசுகளிற்க்கு சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்து எப்படி வாழ்வது என்டு சொல்லிக் கொடுத்தா உமக்கு போற காலத்தில புண்ணியமச்சும் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த அனுபவத்தை பொதுவாக ஆக்கக் கூடாது சார்.. :D

மனம் ஒத்த காதலர்களாக/தம்பதிகளாக இருக்காவிட்டால் எங்கும் பிரச்சினைகள் வரும். எந்தவோர் விடயத்தையும் இருவரும் கலந்தாலோசித்து, சரி/பிழைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கும்போது சிக்கல் வராது. ஆனால் இது நடைமுறையில் வரச் சந்தர்ப்பங்கள் குறைவு. :lol:

சொந்த அனுபவம் தான் சார். தினமும் வாழும் சமூகத்தில நடக்கிறத நாமா பார்க்கிற கேட்கிற சொந்த அனுபவம் தான்..! :lol:

என்ன தான் இருந்தாலும் இரண்டாவதா ஒரு கருத்துச் சொன்னீங்களே ரெம்ப அவசியமான கருத்து..! ம்ம்.. உங்களுக்கும் கருத்தெழுத வருகுது நியாயத்தோட.. பாராட்டுக்கள்..! :P

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவம், புரிந்துணர்வு,விட்டுக் கொடுத்தல் இந்த மூண்றும் இல்லாத வரை புலம் என்ன சந்திரனுக்கு போனால் கூட மணவாழ்க்கை நன்றாக இருக்காது, நெடுக்ஸ் நீர் வீன் வாதம் செய்வதை விட்டு விட்டு களத்தில உள்ள என்னப் போல சின்னம் சிறுசுகளிற்க்கு சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுத்து எப்படி வாழ்வது என்டு சொல்லிக் கொடுத்தா உமக்கு போற காலத்தில புண்ணியமச்சும் கிடைக்கும்

சமத்துவம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு.. இந்த நாலும் உணரப்பட வேணும் அதுக்குத்தானே இந்தப் பாடு. அது உணரப்பட்டால் தானே கடைப்பிடிக்கப்படும். இது தான் தான் தனது சுயநலம் என்று வாழ நினைக்கிற போது.. எப்படி இப்படியான உணர்வுகள் எழும்..!

ஆண்கள் தங்கள் தவறுகளை ஏற்கவும் திருத்தவும் முயலேக்க பெண்கள் தாங்கள் தவறு செய்வதில்லை என்று சாதிக்க நிற்கக் கூடாது. தங்கள் பக்க தவறை புரிந்துகொண்டு தவறை உணரவும் திருத்தவும் முனைய வேண்டும். இந்த நிலைக்கு மேலே சொன்ன உணர்வுகள் மனிதருக்க உணரப்பட வேண்டும். இது தவறு செய்வதையே சாதாரணமா கருதிற மனிதர்களட்ட எப்படி..?? சமத்துவம்... புரிந்துணர்வு.. விட்டுக்கொடுப்பு.. மன்னிப்பு போன்ற மனிதப் பண்புகள் வளரும் நிலைக்கும்..! இந்த உணர்வுகளின் தேவை உணர்த்தப்படும் போதே மனிதன் உணர்ந்துக்குவான். இப்ப அப்படியில்லையே.. இந்த உணர்வுகளுக்கு அவசியமில்லாமல் எல்லோ எல்லோரும் வாழப்பழகினம். அதுக்கு சில சாட்டுக்கள் வைச்சிருக்கினம்..! அதைத்தான் தகர்க்க முயற்சிக்கிறம். அதை தகர்த்திட்டாலே ஆண் - பெண் சமத்துவமா தங்கள் நிலைகளை உணர வெளிக்கொடுவதோடு உணர்வுகளையும் சமத்துவமாக்கி அடுத்தவரை ஏமாற்றிறதால அவர் அனுபவிக்கும் வேதனைகளை உணரவும் செய்வர்..! அது எவ்வளவு சாத்தியம் என்பது போற போக்கைப் பார்த்தா கவலைக்கிடமாவே இருக்கு. இங்க என்னடா என்றா சமத்துவ உணர்வுக்கோ புரிந்துணர்வுக்கோ விட்டுக்கொடுப்புக்கோ மன்னிப்புக்கோ சந்தர்ப்பம் அளிக்காம பேசாம நாளுக்கு நாள் ஆளையெல்லோ மாற்றச் சொல்லுறாங்க..! இது என்ன உணர்வுகளை மனிதனுக்குள் விதைக்கிறது.. மிருக உணர்வுகளை மட்டும் தானே. சுயநலத்தை அதிகரிக்கிறது. சுயநலம் மிகுந்துள்ள போது மேற் சொன்ன 4 உணர்வுகளும் நிச்சயம் உணரப்படவும் வெளிப்படவும் வாய்ப்பே இல்லை. அது இல்லாத போது அவர்களிடம் மனிதம் வாழவும் வழியில்லை..! :lol: :P

எழுதிய கருத்தை அழித்து விட்டேன்ப்பா :lol:

Edited by ப்ரியசகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.