Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லோரும் பார்த்திருக்க தனித்து தேர் இழுக்க வெளிக்கிட்டு, இறுதி மூச்சுவரை  இழுத்து உயிர் நீத்த என் தலைவனுக்கு செய்த அபிஷேகம் போதும். நீங்கள் உட்பட. நீங்களே முதல் தொடங்குங்கள் அப்பத்தான் அதன் வலி, சுமை, பாதுகாக்க எவ்வளவு பொறுமைவேண்டும் என்பது உங்களுக்கும்  தெரியும். யாராவது செய்தால்  சும்மா இருந்து விமர்சிப்பது பங்கு கேட்டால் மற்றவர் பக்கம் கையை காட்டுவது. இப்பவும் என் நிலைப்பாடு என்ன என்று கேட்க்கிறீர்கள். இதுவே அடுத்தவர் செய்திருந்தால் எப்படி விமர்சித்திருப்பீர்கள்?

  • Replies 56
  • Views 6.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேரரின் தகனமும் நல்லிணக்கமும்

நளினி ரத்னராஜாபெண்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
புத்தமதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

(கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். பிபிசி-யின் கருத்துகள் அல்ல)

இலங்கையில் எந்த இடத்திலும் பிறக்கலாம், வாழலாம் , அனால் மரணித்த பின் புதைப்பதும் அல்லது எரிப்பதும் கொஞ்சம் சிரமமானதும் சிக்கலானதும் கூட என்பதை நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அண்மையில் யாழ்ப்பானத்தில் உள்ள நாக விகாரையின் வணக்கத்துக்குரிய விஹாராதிபதி மீகாகன்ஜன் துறை ஞானரத்த தேரரின் மரணமும் அதை அடுத்து அவரின் பூத உடல் பொது வெளியில் யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யப்பட்டதும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பலையும் இதற்கு நல்ல உதாரணம்.

விஹாரதிபதியான மீகாகன்ஜன்துறை ஞானரத்த தேரர் 1991 யிலுருந்து யாழ்பாணத்தில் இருந்து வருகின்றார். அது மட்டுமல்ல இவர் வடக்கு மாகாணத்தின் தலைமை தேரராகவும் இருந்தார். யாழ்பாணத்தில் இருக்கும் நாக விகாரை முக்கியமான வணக்க ஸ்தலங்களில் ஒன்றாக இலங்கையில் காணப்படுகிறது. வடக்கில் குடி கொண்டிருக்கும் ராணுவத்தின் பிரதான வணக்க ஸ்தலமாகவும் இந்த நாக விகாரை காணப்படுகிறது.

இலங்கை

குறிப்பாக தெற்கில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகர்கள், வெளிநாட்டு உள்நாட்டு யாத்ரிகர்கள் வழிபடும் பிரதான இடம் இந்த நாக விகாரை. யாத்திரிகர்கள் பிரதானமாக இந்த நாக விகாரைக்கும் நைனாதீவில் இருக்கும் நாகபூஷணி அம்மன் கோவிலுக்கும் செல்வது வழக்கம். நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு கௌதம புத்தர் விஜயம் செய்ததாக கூட பௌத்தர்களால் நம்பப்படுகிறது. ஆகவே யாழ்பாணத்தில் பல தசாப்தங்களாக வாழ்ந்த வணக்கத்துக்குரிய ஞானரத்த தேரர் இறந்ததும் அவர் பிறந்த ஊரில் தகனம் செய்யப்படாமல் யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யபட்டார்.

இவ்வாறான மதிப்புக்குரிய மதத்தலைவர்கள் இறந்தால் அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தகனம் செய்யப்படுவது சிங்களவர்களுடைய காலச்சாரத்தில் வழக்காக காணப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது இலகுவாக இருக்கும். பொது இடங்கள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலை மைதானங்கள், சுதந்திர சதுக்கம் போன்ற பொது வெளிகள் இவ்வாறான தகனங்களுக்கு பாவிக்கப்படும். கொழும்பில் இருக்கும் சுதந்திர சதுக்கத்தில் பல பிரபலமான அரசியல் வாதிகள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், மதகுருக்கள், ராணுவஅதிகாரிகள் போன்றோரின் தகனக்கிரிகைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் விஹாராதிபதி இறந்த யாழ்பாணத்தில் மிகவும் சொற்ப அளவில் கூட சாதாரண சிங்கள குடிமக்கள் தற்போது வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத பிணக்காலும் நடந்த போரினாலும் யாழ்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் போர் முடிந்து ஒன்பது வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் அவர்கள் தங்கள் இடங்களுக்கு திரும்பவில்லை என்பதை ஞாபகப்படுத்தல் அவசியம். இவ்வாறு இருக்குமிடத்து விஹாராதிபதி இங்கே பொது மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது மக்களிடையே சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பி உள்ளது.

புத்தமதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அகவே இந்த தகனக்கிரியைக்கு எதிராக பல காரணங்கள் முன்வைக்கப்பட்டது. அதில் முக்கியமாக இந்த இடம் 1974 இல் கொல்லபட்ட தமிழர்களின் ஞாபகார்த்த இடத்துக்கும் இந்து ஆலயத்துக்கும் அண்மையில் இருப்பதும் பிரதான காரணமாகும். அகவே 12 பேர் உள்ளடங்கிய யாழ்பாணத்தில் வசிக்கும் சட்டத்தரணிகள் குழு மாவட்ட நீதி மன்றத்தில் தேர்ந்தேட்டுக்கபட்ட இடத்தில் தகனம் செய்வதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தது. அவர்கள் இவ்வாறு பொது வெளியில் தகனம் செய்வது சுற்றாடலையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் எனவும் இதற்கான மாநகர சபையின் அனுமதியை பெற்று கொள்ளமால் இருப்பதையும் காரணம் காட்டினர். கூடவே இவ்வாறு தகனம் செய்து விட்டு அவ்விடத்தில் தேரரின் ஞாபகார்த்த சிலை வைக்கப்படலாம், அவ்வாறு வைக்கப்படுமிடத்து இது சிங்கள ஆதிக்கத்தை வடக்கில் நிலை நட்டும் யுக்தி எனவும் கருத்தப்பட்டது.

எது எப்படியாயினும் நீதிபதி தகனம் செய்யவிருந்த இடம் தொல் பொருளாராய்ச்சி திணைக்களத்துக்கு சொந்தமான அரச காணியாக இருப்பதால் அங்கே தகனம் செய்ய முடியும் என அறிவித்தார்.

இங்கே இந்த தகனகிரிகை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்கப்படுவதற்கு பிரதான காரணம் இன்னும் இனப் பிரச்சினை அல்லது தேசியப் பிரச்சனை முடிவுக்கு வராததும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் தீர்வும் கிடைக்காததும், இனங்களுக்கிடையே சரியான புரிந்துணர்வும் இல்லாததும், அதற்கான வினைத்திறனான நடவடிக்கைகள் அரசால் இன்னும் முன் எடுக்கபடாமையும் ,நல்லிணக்கமும் காணப்படாமையும் ஆகும்.

இதனால் மக்கள் குழம்பி இருப்பதும், கிடைத்த கசப்பான அனுபவம் காரணமாக எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைமையும் காணப்படுகிறது என்பது யதார்த்தம். அது மட்டுமல்ல மத குருக்கள்அல்லது மதத்தலைவர்கள் இறந்தால் அவர்களை மயானத்தில் நல்லடக்கம் செய்வதோ அல்லது தகனம் செய்வதோ தான் வழக்கமாக உள்ள நிலையில் தேரரின் தகனம் பொது வெளியில் நடைபெறுவது சிங்களமயப்படுத்தலின் ஒரு பாகமோ என்ற பீதியை தமிழர்களிடையே உருவாக்கி விட்டது.

அதிகப்படியான உயர் ராணுவ அதிகாரிகள், ராணுவம், முப்படைகளின் தளபதி போன்றோரின் பிரசன்னமும் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் ஏதுவான காரணிகளாக அமைந்தது. இதுவே தேரரின் தகனக்கிரிகையை எதிர்ப்பதற்கும் காரணமானது.

சாதரணமாக இவ்வாறு மதகுரு மரணிக்கும் இடத்தில் அந்த கிராம மக்களும் விஹாரையை சேர்ந்தவர்களும் சேர்ந்து பூதவுடலை என்ன செய்வது, எங்கே எரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பார் .

புத்தமதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது ஒரு புறமிருக்க வடக்கில் ராணுவம் சமூக அபிவிருத்தி போன்றவற்றில் பங்கெடுப்பது, விவசாயம் செய்தல் அதை மக்களுக்கு விற்பனை செய்தல், மக்களை விவசாய வேலைக்கமர்த்தி அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், உணவங்களை பெரிய அளவில் அமைத்து வியாபாரம் செய்வது, போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதை போரால் பாதிக்கபட்ட, வாழ்வாதாரத்துக்கு அல்லல்படும் மக்களின் பொருளாதரத்தை தங்கள் கைகளில் எடுப்பதோடு, தமிழ் தேசியத்தை இல்லாதொழிக்க பாவிக்கும் யுக்தியாக மக்களும் சிவில் சமூகமும் , அரசியல்வாதிகளும் பார்க்கின்றனர்.

இவ்வாறாக கடந்த காலங்களிலும் ராணுவத்தின் தலையீடும் பிரசன்னமும் தமிழ் மக்களின் அபிலாசைகளை மழுங்கடிக்கும் பேரினவாத அரசியல் யுக்தியாகவே இருந்ததையும் மறந்து விட முடியாது. அது மட்டுமல்ல வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றி கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போரட்டம் நடத்தும் இந்த காலப்பகுதியில் இவ்வகையான அரசின் செயல்பாடுகள் வருத்தமும் நம்பிக்கை இன்மையையும் மக்களிடையே ஏற்படுத்துகின்றன.

வணக்கத்துக்குரிய தேரரின் தகனக்கிரியையானது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு ஒரு துரும்பாக பாவிக்கப்பட்டிருக்கலாம். நல்லிணக்கம் வேண்டும் என்று பாடுபடும் தமிழர்கள் இந்த தேரரின் தகனக்கிரியை எதிர்த்ததன் மூலம் நல்லிணக்கத்துக்கு தமிழர்கள் தயாரில்லை என்று தெற்கில் வாழும் பெரும்பான்மை சமூகமும் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. இவ்வகையான சம்பவங்களை தங்களுடைய இனவாத கோஷமாக முதலீடாக பேரினவாத அரசியல் வாதிகளும் எடுத்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

தேரரின் தகனக்கிரியைக்கான இடத்தை தேர்வு செய்வது, கிரியையை எங்கே செய்வது என அங்கு வாழும் மக்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி அறிய அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்களுடனும் சிவில் சமூகத்துடனும் , மாநகரசபையுடனும் மற்றும் மாகாண சபையுடனும் கலந்தாலோசித்திருந்தால் அவர்கள் தகுந்த ஆலோசனை வழங்கி சரியான இடத்தை தெரிவு செய்து கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

புத்தமதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அது மாத்திரமல்ல இங்கே பல் சமய குழுக்கள், ஒன்றியங்கள் காணப்படுகின்றன. அவர்களிடமும் ஆலோசனை பெற்று இந்த தகனத்தை செய்திருக்கலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

புலம்பெயர் தேசத்திலும், பல்லினக் காலச்சார வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கும் கொழும்பு போன்ற தலைநகரதிலும் மிகவும் வாகன நெரிசல் உள்ள பகுதிகளிலும், நேரங்களிலும் பல மணித்தியாலங்களுக்கு பொது வீதியில் சமய ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. யாரும் இதை இன மத பேதங்களைக் காட்டி எதிர்ப்பதில்லை. காவல்துறையும் இதற்கு ஒத்துழைகிறது. இது போலவே பொது மயானங்களும் காணப்படுகின்றன . இவ்வாறான சகிப்புத் தன்மை உடைய இன ,சமய காலசார விழுமியங்களையும் சம்பிரதாயங்களையும் மதிக்கும் சமூகம் இலங்கையில் சகல பிரதேங்களிலும் சகல இனங்களுக்கு மத்தியிலும் உருவாக வேண்டும். அவ்வாறு உருவானால்தான் நல்லிணக்கத்தை நோக்கி இலங்கை நகரும்.

http://www.bbc.com/tamil/sri-lanka-42591821

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பொது மக்களை எரிக்கும் சுடலையில் எரித்து இருக்கலாம்.

 மைத்திரி ரனில் போகல்லாமாவின்  மனைவி ஆகியோரின் பூதவுடலும்(இறந்த பின்) முத்தவெளியில் தான் எரிக்கப்படும். அநுராதபுரத்தில்  எல்லாளனை  எரித்தது தான் இதற்கான காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 மைத்திரி ரனில் போகல்லாமாவின்  மனைவி ஆகியோரின் பூதவுடலும்(இறந்த பின்) முத்தவெளியில் தான் எரிக்கப்படும். அநுராதபுரத்தில்  எல்லாளனை  எரித்தது தான் இதற்கான காரணம்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Jude said:
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

எனது கேள்வி பிளாடோவை நோக்கியது ........

உணர்வு கெட்ட ஜடங்களுக்கும் மரங்களுக்கும் 
தலை நிமிர்ந்து கிடந்தால் அல்லது வளைஞ்சு கிடந்தால் தான் 
என்ன ஆக போகிறது ??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ


உங்களுக்கும் அது பொருந்தும் என்பதை மறந்து விடாதீர்கள். 

நீங்கள் நியதிக்கு மாறாக கருத்துக்களை பரப்பி மற்றவர்களை உணர்ச்சி ஊட்ட முயல்கிறீர்கள். இவை பலிக்காது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். எக்கருத்துக்கும் பதிலடியை பெற்றுக்கொள்வீர்கள் என்பதை மட்டும் உறுதி படுத்திக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

முற்றவெளியில் விகாரை அமைக்கும் எண்ணமில்லை

 

யாழ்.நாக விகாரையின் முன்னாள் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நாக விகாரையின் தற்போதைய விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்துள்ளார்.

நாக விகாரையின் விகாராதிபதி மடிகே பஞ்ஞாசீக மகா நாயக்க தேரர் இறைபதம் அடைந்ததை தொடர்ந்து அவருடைய உடல் கடந்த 22 ஆம் திகதி முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.நாகவிகாரையில் நடைபெற்றிருந்தது.

முற்றவெளியில் விகாரை அமைக்கும் எண்ணமில்லை

 இதன்போதே ஸ்ரீ விமல தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பாக யாழ்.மாநகர சபையிடம் கேட்டிருந்தோம். அவர்கள் அந்த இடம் தமக்கு சொந்தமானது அல்ல என கூறியதுடன் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியே என சொன்னார்கள். பின்னர் தொல்லியல் திணைக்களத்தை சந்தித்து அனுமதியை பெற்றிருந்தோம்.

தகன கிரியை நிறைவடைந்த பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறினார் இந்து கோவிலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டமையினாலேயே பிரச்சினை எழுந்தது என கூறினார்.

இந்த விடயத்தை முன்னதாகவே கூறியிருந்தால் நாங்கள் கோவில் நிர்வாகத்துடன் பேசியிருப்போம். மேலும் விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய உடல் பொது இடத்திலேயே தகனம் செய்யப்படும் என்பது முதலமைச்சருக்கு தெரியும்.

இதேபோல் தகன கிரியையில் இராணுவம் மற்றும் பொலிஸார் கலந்து கொண்டமை தொடர்பாகவும் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்கள் எழுந்தது. பொதுவாக விகாராதிபதி ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி சடங்கில் பௌத்தர்கள் பலர் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இங்கே பௌத்தர்கள் இல்லை. ஆகவே பௌத்தர்கள் என்ற வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் சிலர் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக நாக விகாரையை இழுத்து இனவாதமாகவும், மதவாதமாகவும் பேசுகிறார்கள். ஆனால் நாக விகாரை இனவாதம், மதவாதம் பரப்பும் இடமல்ல. அது இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் உண்டாக்கும் பாலமாகும்.

அதனை விட பெருமளவில் சமூக சேவைகளை செய்யும் இடமாகவும் உள்ளது. எனவே முற்றவெளி மைதானத்தில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுதூபி அல்லது விகாரை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/There-is-no-intention-of-setting-up-the-Vihara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.