Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்

Featured Replies

யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர்

 

 

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை சென்­றது. யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினார்.

இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­மையை அடுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் முடி­யாமல் உள்­ளது. அப்­ப­டி­யாயின் இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா?. இவ்­வாறு செயற்­பட்டு எப்­படி நல்­லி­ண­க்கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தலை­மை­யிலும் மனோ கணேசன் தலை­மை­யிலும் நல்­லி­ணக்கம் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் நடக்கும் போது இப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். 

தற்­போது சிறுபான்மை மக்­களை தமது ஆதிக்­கத்தை வளர்த்து வரு­கின்­றனர். நாட்டின் முக்­ கி­ய­மான அமைச்­சுக்கள் பல முஸ்­லிம்­க­ளிடம் உள்­ளது. இவர்­களின் செயற்­றி­றனை பார்த்து சிங்­கள தலை­வர்கள் பாடம் கற்­றுக்­கொள்ள வேண்டும். அத்­துடன் தற்­போது சிறு­பான்மை மக்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வ கட்சி மாநாட்டை நடத்தி அனைத்து கட்சிக ளின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பெற வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/28647

  • தொடங்கியவர்
 
தேர­ரின் பூத­வு­டல் எரிப்பு விவ­கா­ரம் தமிழ்த் தலை­வர்­களை சாடு­கி­றது ஹெல உறு­மய
 
 

தேர­ரின் பூத­வு­டல் எரிப்பு விவ­கா­ரம் தமிழ்த் தலை­வர்­களை சாடு­கி­றது ஹெல உறு­மய

 

ரெலோ அமைப்­பின் தலை­வர் சபா­ரத்­தி­னத்­தின் நினை­வேந்­தல் கொழும்­பில் நடத்­தப்­ப­டும்­போது நாம் யாரும் நீதி­மன்­றம் செல்­ல­வில்லை. நாற்­பது ஆண்­டு­கள் பல்­வேறு சிக்­க­லுக்கு மத்­தி­யி­லும் விடு­தலை புலி­க­ளின் அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யில் வாழ்ந்த தேர­ரின் பூத­வு­ட­லைத் தக­னம் செய்­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யி­டும் இவர்­க­ளது மனோ நிலை எவ்­வ­ளவு கொடி­ய­தாக இருக்­கும் என்­ப­தனை அனை­வ­ரும் சிந்­திக்க வேண்­டும்.

இவ்­வாறு ஜாதிக ஹெல உறு­மய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.நாக­வி­கா­ரை­யின் விகா­ரா­தி­ப­தி­யின் பூத­வு­டல் முற்­ற­வெ­ளி­யில் எரிக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக நீதி­மன்­றில் தடை உத்­த­ரவு பெற்­றுக் கொள்­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டமை தொடர்­பில், ஜாதிக ஹெல உறு­மய அமைப்பு நேற்று வெளி­யிட்ட ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

40 ஆண்­டு­கள் யாழ்ப்­பாண நாக­வி­கா­ரை­யில் பணி­பு­ரிந்த முன்­னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேர­ரைப் பொது இடத்­தில் தக­னம் செய்­வ­தி­னால் சுற்­றா­டல் மாச­டை­வ­தாக கூறி 12 பேர் யாழ்ப்­பாண நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­த­னர். எனி­னும் யாழ்ப்­பாண பொலிஸ் அதி­கா­ரி­க­ளின் தலை­யீட்­டி­னால் மனு நிரா­க­ரிப்­பட்­டது. இந்த விவ­கா­ரத்­தில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ருக்­கும், யாழ். நீதி­வான் சதீஸ்­க­ரன் ஆகி­யோ­ருக்கு நன்றி கூறு­கின்­றோம்.

நாட்­டின் தமிழ் அடிப்­ப­டை­வா­தி­க­ளின் தன்­மை­யைப் பிக்­கு­கள் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். யாழ். நாக­வி­காரை விகா­ராதி­ப­தி­யின் பூத­வு­டலை தக­னம் செய்­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­ட­மைக்கு தமிழ் மக்­க­ளும் இந்து மக்­க­ளும் வெட்­கப்­ப­ட­வேண்­டும்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள், நல்­லி­ணக்க மற்­றும் சக­வாழ்வு அமைச்­சர்­கள், சமா­தா­னம் மற்­றும் சக­வாழ்வு தொடர்­பாக தொலை­க்காட்­சி­யில உப­தே­சம் நடத்­தும் சிவில் தலை­வர்­கள் தற்­போது மௌனம் காப்­பது ஏன்? இவ்­வா­றான செயற்­பா­டு­களை கண்­டிப்­ப­தற்­குக்­கூட எவ­ரும் முன்­வ­ர­வில்லை.

தேர­ரின் பூத­வு­ட­லைத் தக­னம் செய்யக் கூடாது என்று நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­வ­தற்கு சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், செல்­வம் அடைக்­க­ல­நா­தன், சிறி­கந்தா ஆகி­யோரே தலைமை வகித்­த­னர்.

ரெலோ அமைப்­பின் தலை­வ­ரான சபா­ரத்­னம் உட்­ப­டப் பலரை நடு­வீ­திக்கு கொண்­டு­வந்து ரயர் போட்டு விடு­தலைப் புலி­கள் இயக்­கத்­தி­னர் தீயிட்டுக் கொளுத்­திய போது சுற்­றா­டல் மாச­டை­வ­தை யாரும் அவ­தா­னிக்­க­வில்­லையா? அப்­போது தமது பாது­காப்பைக் கருத்­திற் கொண்டு பல தமிழ் தலை­வர்­கள் கொழும்­பில் வந்து தஞ்­சம் புகுந்­த­னர். அவர்­க­ளுக்கு இட­து­சாரி தலை­வர்­க­ளும் இரா­ணு­வத்­தி­ன­ருமே பாது­காப்பு வழங்­கி­னர்.

தமிழ்த் தலை­வர்­க­ளான செல்­வ­நா­ய­கம் மற்­றும் அமர்­த­லிங்­கம் ஆகி­யோ­ரின் பூத­வு­டல்­கள் தக­னம் செய்­யப்­பட்­ட­தும் தேர­ரின் பூத­வு­டல் தக­னம் செய்­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்ட கோயில் அரு­கா­மை­யில் உள்ள முற்­ற­வெ­ளி­யி­ லா­கும். பல்­லா­யி­ரக் கணக்­கில் படை­யி­னரை கொலை செய்து விட்டு அவர்­க­ளது பூத­வு­டலை யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு பார்­வை­யி­டு­வ­தற்­காக விடு­தலை புலி­கள் வைத்­த­தும் இந்த பூமி­யி­லா­கும். அப்­ப­டி­யா­யின் அப்­போது சுற்­று­ச்சூ­ழல் பாதிப்பு விளங்­க­வில்­லையா? அப்­போது ஏன் நீதி­மன்­றத்தை நாட­வில்லை -– என்­றார்.

http://newuthayan.com/story/58158.html

  • கருத்துக்கள உறவுகள்

நாசகார தேரருக்கும் கெலஊறுமயவுக்கும்  சிங்கள இனவாதசக்திகளுக்கும்அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பேசுவதற்கான கருவொன்று கிடைத்துள்ளது. இங்கே முற்றவெளியா முனியப்பர் கோவிலா என்பதல்லப் பிரச்சினை. கொழும்பிலே சாவடைந்த பிக்குக்கு ஏன் அவரது சொந்த ஊரிலோ அல்லது தலைமையிடமான கண்டி தலதாவிலோ  செய்யவில்லை. ஒரு ஆக்கிரமிப்புச் சின்னத்தை யாழிலே பராமரித்த ஒருவரை யாழிலே எரிப்பதென்பதும் ஒரு ஆக்கிரமிப்பு மனோபாவமேயன்றி வேறில்லை.  சுற்றுலாவருபவர்கள் வழிபடப் பான்சாலை தேவை. அதைப்பராமரிப்பவர் பாதுகாப்பவர் இறந்தால் எரிக்கத் தமிழரது பொது இடம் தேவை. 

அது சரி மனிதப்பண்பாடற்ற தமிழினத்தைக் கொன்றொழிப்பதைக் கொண்டாடும் இனமொன்றிடமிருந்து தமிழினம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்.   தந்தை செல்வநாயகம் யார்? இந்தத் தேரர் யார்? சிங்களத்திள் காவலாளிக்குத் தமிழரிடத்தில் என்னதேவையிருக்கிறது. 

ஆக்கிரமிப்பின் இன்னொருவடிவமே இந்தத் தகனநடவடிக்கை என்பதை தமிழனம் நினைவில்வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:
 
 
 
 

 

ரெலோ அமைப்­பின் தலை­வர் சபா­ரத்­தி­னத்­தின் நினை­வேந்­தல் கொழும்­பில் நடத்­தப்­ப­டும்­போது நாம் யாரும் நீதி­மன்­றம் செல்­ல­வில்லை. 

 

 

 

 

ரெலோ அமைப்­பின் தலை­வ­ரான சபா­ரத்­னம் உட்­ப­டப் பலரை நடு­வீ­திக்கு கொண்­டு­வந்து ரயர் போட்டு விடு­தலைப் புலி­கள் இயக்­கத்­தி­னர் தீயிட்டுக் கொளுத்­திய போது சுற்­றா­டல் மாச­டை­வ­தை யாரும் அவ­தா­னிக்­க­வில்­லையா? 

 பல்­லா­யி­ரக் கணக்­கில் படை­யி­னரை கொலை செய்து விட்டு அவர்­க­ளது பூத­வு­டலை யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு பார்­வை­யி­டு­வ­தற்­காக விடு­தலை புலி­கள் வைத்­த­தும் இந்த பூமி­யி­லா­கும். அப்­ப­டி­யா­யின் அப்­போது சுற்­று­ச்சூ­ழல் பாதிப்பு விளங்­க­வில்­லையா? அப்­போது ஏன் நீதி­மன்­றத்தை நாட­வில்லை -– என்­றார்.

http://newuthayan.com/story/58158.html

அதனாலதான் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்களிடமிருந்து தமிழ்மக்களை மீட்கிறோம் என்று போர் செய்தீர்கள்,  அவர்கள் செய்வதையே நீங்களும் செய்வதானால் எதற்கு அவர்களிடம் இருந்து எங்களை மீட்க அநியாயமாக ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களின் உயிர்களை தியாகம் செய்தீர்கள்? எங்களை பயங்கரவாதிகளோடயே வாழவிட்டிருக்கலாமில்ல?

இன்றிருக்கும் தமிழ் தலைமைகள் யாராவது இயற்கை எய்தினால் அவர்களின் உடலை காலிமுக திடலிலோ, அல்லது கண்டி தலதாமாளிகை சுற்று வட்டாரத்திலோ  தகனம் செய்ய நீங்கள் எழுத்துமூல அனுமதி தந்தால் கண்டிப்பாக யாழில் எந்த சிங்களவரினதும் உடலை அடக்கம் செய்ய யாரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்!

அனைவருமே ஒருநாள் இயற்கை எய்தபோகிறவர்கள்தான், இதை எழுதும் நானும்,படிக்கும் அனைவருமே,அதனால் அபசகுனமாக ஒன்றும் கூறவில்லை ...

தேரர் 40 வருஷம் யாழில் வாழ்ந்ததால் இங்கு தகனம் செய்யப்படுகிறார் என்றால், நீங்களே ஒப்புக்கொண்ட புலிகளுக்கு அஞ்சி உங்கள் பாதுகாப்பில்  30 வருஷத்துக்கு அதிகமாக கொழும்பில் வாழ்ந்த தமிழ் தலைவர்களும் இயற்கை எய்தினால் கொழும்பின் மக்கள் நெருக்கமுள்ள ஓரிடத்தில் தகனம் செய்யப்பட அனைத்து உரிமைகளுக்கும் தமிழருக்கு உண்டு ஏற்றுக்கொள்வீர்களா!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பெரிதாக சவுண்டு எங்கடையள் பொத்திக்கொண்டு இருப்பதால் வந்த வினை .

முடிஞ்சா இனி மேலே போகும் புத்த பிக்கு உடலை முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு பக்கத்தில் எரிக்க போறன் சொல்லி பாருமோய்  அதுக்கு பிறகு ஒன்றுபட்ட சொறிலங்கா என்றால் என்னவெண்டு தெரியும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.