Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்!

Featured Replies

தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்!

 

தீர்ப்பு எழுதி 14 வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டது -எம்.ஏ. சுமந்திரன்!

தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் யாழ் மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்.....

ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது.

இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது.

இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில்  ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.

அதனை படித்து பார்த்து மக்களிற்கு சொல்ல முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கின்ற ஊடகங்கள் தான் எங்கள் மத்தியில் இருக்கின்றன.112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள்.

சமஸ்டி, ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது, ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எங்களது பின்னனைப்பில் இல்லை.

அனைத்து கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இதைபற்றி பொய் பரப்புரை செய்யப்படுகிறது.

இந்த பொய் பரப்புரையை வைத்துக்கொண்டு ஒரு கட்சி மக்களிடத்தே கோருகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற வாக்காக இந்த உள்ளுராட்சி தேர்தலை பாவியுங்கள் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள்தான் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை கொண்ட கட்சியினர். நாங்கள் சமஸ்ஸ்டியை கோருகின்ற கட்சியினர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒற்றையாட்சி கோட்பாடு கொண்ட கட்சி. சரித்திர பூர்வமாக சமஸ்டி தீர்வை எதிர்த்த கட்சி. இன்று கூறுகிறார்கள் நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுவிட்டோம்.

அதனால் இந்த தேர்தலிலே இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கின்றனர். அவர்களது ஒற்றையாட்சி கொள்கை பொருத்தமற்றது என்றுதான் இந்த இடைக்கால அறிக்கை கூறுகிறது.

2010இல் இரு தேசம் ஒரு நாடு என்றனர் பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர்.பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இதைதான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம்.

சமஸ்டியை பாட்டன், தகப்பன், மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள். இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள்தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர்.

படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம்.படித்தவர்கள் என சொல்பவர்கள் பல தீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை.

இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். ஒருமணித்தியாலயத்தின் பின் சொல்கிறார்கள் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள்.

படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள். அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று பதிநான்கு ஆகியதால் மறதி வந்துவிட்டதா என தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/m-a-sumanthiran-press-meeting-30

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றை ஆட்சிக்கு கூட்டணி இணங்கி விட்டதாக முதன் முதல் கூறியது உங்கள் வாத்தியார் தமிழ் சிங்கள ஆங்கில புலமை பெற்ற முதலமைச்சர் விக்கினேஸ்வரனே.எக்கய ராக்சிய என்றால் ஒற்றை ஆட்சி தான் என்று சிங்களம் புரியாத எமக்கெல்லாம் புரிய வைத்தது அவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த வால்பிடிக்கு எப்பவுமே முதலமைச்சரோடு ஒரு போட்டி. எதிலும் அவரை சீண்டி இழுப்பதிலேயே குறியாய் இருக்குது. 

எல்லாம் தெளிவாய் எழுதப்பட்டிருந்தால் வரலாம் வராமலும் போகலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு என்கின்ற வார்த்தைகளை கூறி ஏன்  சமாளிக்கிறீர்கள்? கறாராய் இப்ப தேர்தல் நெருங்க பல்லவி மாறுது. உங்கட தேர்தல் சித்து விளையாட்டு ஒன்றும் புதிதல்ல. போனமுறை தேர்தலில் எங்கட கையை பலப்படுத்துங்கோ அப்பத்தான் நாங்கள் சர்வதேசத்தோட பேரம்பேச முடியும் என்று அறைகூவினார். வென்றதும் இன்னோரு தேர்தல் வருமென்றதை மறந்து திமிராய் திரிந்தார். இனி மக்களை ஏமாத்த என்ன பொய்யை சொல்வது? சொன்னதையே அப்பு மறந்து போனார். இலகுவாக ஆசுபத்திரியில போய் படுத்து விட்டார். அனுதாப வாக்கை நம்பி. இது மாவை ஒரு எடுபிடி. நீங்கள் தான் அண்ணை முதலமைச்சராய் வரவேண்டியவர் விக்கியர் அதை தட்டிப்பறிச்சுப்போட்டார்  என்று உசுப்பேத்தி விட்டால் போதும். யதார்த்தத்தை புரியாமல் குத்தி முறிவார். பாவம் அவ்வளவு பதவி ஆசை. இந்தப் பதவிக்கு இன்னொரு நரி தன்னைப் பலி குடுக்குது என்பதை கூட சிந்திக்க நேரமில்லாமல் முதலமைச்சரோடு போர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது.

இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது.

 முந்தியொருக்கால் சனத்துக்கு வாசிக்கத்தெரியாது எண்டார்.....

இப்ப பேப்பர்காரங்கள் ரிவிக்காரங்களுக்கு வாசிக்கத்தெரியாது எண்டுறார்......அப்ப எல்லாம் தெரிஞ்சவர் என்னத்துக்கு எட்டுவருசமாய் கிடந்து முக்கிறாராம்? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and text

  • தொடங்கியவர்

 

On 12/30/2017 at 7:40 PM, நவீனன் said:

.112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள்.

On 12/30/2017 at 7:40 PM, நவீனன் said:

ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது.

தமிழில் ஒன்றும் சிங்களத்தில் இன்னொன்றும் ஆங்கிலத்தில் இன்னொன்றும் பொருள்படும்படி எழுதி தமிழினத்தை அழிக்கும் சிங்கள-பௌத்த அரச கொலைகாரர்களுக்கு சும்மந்திரன் கடுமையாத்தான் வக்காலத்து வாங்குகிறார்.

சிங்கள-பௌத்த அரச கொலைகாரர்களிடமிருந்து பலகோடி இலஞ்சம் சும்மந்திரன் பெற்றுள்ளார் என்று தமிழக அரசியல்வாதிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு இன்னமும் ஒருபதிலையும் காணவில்லை.

டக்ளஸ், ஆனந்தசங்கரி வரிசையில் இவரது பயணம் தொடர்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.