Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!!

Featured Replies

  • வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!!
வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை  மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!!
 
 

வவுனியா பழைய பேருந்து நிலை­யத்தை மூடு­மாறு வடக்கு முத­ல­மைச்­சர் உத்­த­ர­வு!!

 

வவு­னியா நக­ரத்­தில் உள்ள பேருந்து நிலை­யம் இன்று நள்­ளி­ரவு முதல் மூடப்­ப­டு­கின்­றது என்று அறி­வித்­துள்­ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

வவு­னி­யா­வில் புதிய பேருந்து நிலை­யம் அமைக்­கப்­பட்­டுத் திறக்­கப்­பட்ட பின்­னர் பேருந்து நிலை­யம் தொடர்­பான பிரச்­சினை பூதா­க­ர­மா­னது. தனி­யார் பேருந்து போக்­கு­வ­ரத்­துத் தரப்­பி­ன­ருக்­கும், இ.போ.ச. பேருந்­துத் தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் இந்த விட­யத்­தில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. புதிய பேருந்து நிலை­யத்­தில் பேருந்­துச் சேவை­களை நடத்த எடுக்­கப்­பட்ட முயற்­சி­கள் பய­னிக்­க­வில்லை.

இந்த விட­யம் தொடர்­பாக நேற்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தலை­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

வவு­னியா நகர சபைச் செய­லர், மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர், வவு­னியா மாவட்ட தலை­மைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி, தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத் தலை­வர், செய­லா­ளர், இ.போ.சபை­யின் வட­க்கு மாகாண ஆணை­யா­ளர், வவு­னியா சாலை­யின் முகா­மை­யா­ளர் எனப் பல தரப்­புக்­கள் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கு­கொண்­டன.

கலந்­து­ரை­யா­ட­லின் முடி­வில் வவு­னியா நகர சபைச் செய­லா­ள­ருக்கு இந்த உத்­த­ரவை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பிறப்­பித்­தார். நகர சபைச் செய­லா­ள­ரின் நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பொலி­ஸார் துணை நிற்க வேண்­டும் என்­றும் முத­ல­மைச்­சர் பணித்­தார்.

“வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் உத்­த­ர­வுப்­படி இன்று இரவு 12 மணி முதல் இ.போ.ச. பேருந்­து­கள் அனைத்­தும் புதிய பேருந்து நிலை­யத்­துக்­குச் செல்ல வேண்­டும். அதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்­போம்.”- என்று வவு­னியா நகர சபைச் செய­லா­ளர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/59222.html

  • முதல்­வரின் முடி­வுக்­கு எதிர்ப்­பு- இ.போ.ச. ஊழியர்கள் போராட்­டத்தில்!
முதல்­வரின் முடி­வுக்­கு எதிர்ப்­பு-  இ.போ.ச. ஊழியர்கள் போராட்­டத்தில்!
 
 

முதல்­வரின் முடி­வுக்­கு எதிர்ப்­பு- இ.போ.ச. ஊழியர்கள் போராட்­டத்தில்!

 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தன்­னிச்­சை­யான முடி­வு­களை எடுக்­கி­றார் என்று தெரி­வித்து இலங்­கைப்பக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வட பிராந்­திய ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தி­னர் நாளை திங்­கட்­கி­ழமை முதல் கால­வ­ரை­ய­றை­யற்ற பணிப்­பு­றக்­கணிப்­பில் ஈடு­ப­ட­வுள்­ள­னர்.

அந்­தத் தொழிற்­சங்­கத்­தின் செய­லா­ளர் க.அருள்­பி­ர­கா­சம் இத­னைத் தெரி­வித்­தார்.

“வவு­னியா புதிய பேருந்து நிலை­யப் பிரச்­சினை தொடர்­பில் வட­பி­ராந்­தி­யப் போக்­கு­வ­ரத்­துச் சபை ஊழி­யர்­கள் 6 பேர் வவு­னியா நீத­வான் நீதி­மன்­றில் கடந்த 27ஆம் திகதி முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இந்த விவ­கா­ரம் தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­டன் பேசி உரிய தீர்­வைப் பெற்று மன்­றுக்கு எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி அறி­விக்க வேண்­டும் என்று வட­பி­ராந்­திய ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­துக்கு நீதி­மன்று உத்­த­ர­விட்­டது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நேற்­றுக் கூட்­டம் ஒன்­றுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தார். இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை அதி­கா­ரி­கள், தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­குழு அதி­கா­ரி­கள், வடக்கு மாகாண மாவட்ட ரீதி­யான தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் ஆகி­யோர் அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். அழைப்­புப் கிடைக்­கா­த­போ­தும் போக்­கு­வ­ரத்­துச் சபை அதி­கா­ரி­க­ளு­டன் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் தலை­வர் மற்­றும் செய­லா­ளர் பங்­கேற்­ற­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் தன்­னிச்­சை­யா­க­வும், அதி­கார அதட்­டல் போக்­கை­யும் கடைப்­பி­டித்­தார். வவு­னியா பேருந்து நிலைய விவ­கா­ரத்­தில் தொழிற்­சங்­கத்­துக்கு இட­மில்லை என்­றும் குறிப்­பிட்­டார். முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கவே வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் சுமார் 2 ஆயி­ரம் ஊழி­யர்­க­ளும் நாளை போராட்­டத்­தில் குதிக்­கின்­ற­னர். இதற்கு அனை­வ­ரின் ஒத்­து­ழைப்­பும் தேவை”- என்று அருள்­பி­ர­கா­சம் தெரி­வித்­தார்.

வவு­னி்யா புதிய பேருந்து நிலை­யத்­தில் இருந்து அரச, தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் கடந்த 25ஆம் திகதி முதல் நடை­பெ­ற­வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் கண்­டிப்­பான உத்­த­ர­வைப் பிறப்­பித்­தி­ருந்­தார். தனி­யார், அரச பேருந்து ஊழி­யர்­க­ளி­டையே ஏற்­பட்ட முரண்­பாட்­டால் அது நடக்­க­வில்லை.

தனி­யார் பேருந்து சங்­கத்­தி­னர் முத­ல­மைச்­ச­ரின் உத்­த­ர­வுக்கு அமைய சேவை­கள் நடத்­தத் தயார் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர். அரச பேருந்து சேவை­யி­னர் அதை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

http://newuthayan.com/story/59225.html

  • தொடங்கியவர்

வடக்கு போக்குவரத்துச் சபை நாளைமுதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு!

 

வடக்கு போக்குவரத்துச் சபை நாளைமுதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் நாளை திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்த்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அருளானந்தம் அருட்பிரகாசம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

"முதலமைச்சரால் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு எதிராக அவரால் எடுக்கப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாராம்பரியமிக்க வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அவமதித்தமையைக் கண்டித்தும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

மக்களால் மக்களுக்காக ஒன்றுபட்டு தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர், மக்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது, தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இம்மியும் தளராது அதனை நிறைவேற்றுவேன் என வைராக்கியத்துடன் கூறுவதை நாம் கண்டிக்கின்றோம். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை நாம் நிறுத்தமாட்டோம். அத்துடன், எமக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சாலைகளின் பேருந்துகள் வடக்குக்கான சேவைகளை இடைநிறுத்தி எமக்கு ஒத்தழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்" என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/SLTB-of-northern-dec31

On 12/31/2017 at 12:13 PM, நவீனன் said:

பாராம்பரியமிக்க வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அவமதித்தமையைக் கண்டித்தும் மற்றும் பல கோரிக்கைகளை

வீதி அபிவிருத்தி, குளங்களின் அபிவிருத்தி, மின்சார விநியோக விரிவாக்கம் போன்ற வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் தடை போடுவது தமிழர் சிலரின் (பலரின்?) பிறவிக் குணமாக உள்ளது.

மின்சார விநியோகத்திற்காக கம்பங்களை நடும் போது அதை எங்கள் வீட்டு வேலிப் பக்கமாக நடாமல் எதிர் வீட்டு வேலிப் பக்கமாக நட வேண்டும் என்றும், வீதி அபிவிருத்திக்கு நிலங்களை கையகப்படுத்தும் போது எங்கள் வீட்டுப் பக்கமாக சுவீகரிக்காமல் எதிர் வீட்டுப் பக்கமாக சுவீகரிக்க வேண்டும் என்றும், வீதியோர கால்வாய்களை அமைக்கும் போது எங்கள் வீட்டுப் பக்கமாக அமைக்காமல் எதிர் வீட்டுப் பக்கமாக அமைக்க வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபடும் குறுகிய மனப்பான்மை தமிழர் சிலரின் (பலரின்?)பிறவிக் குணமாக உள்ளது.

இப்போது வடக்கு போக்குவரத்துச் சபை சங்கம் தங்களுக்கு சீதனமாக தரப்பட்ட பாரம்பரிய இடம் என போராடுகின்றனர்.

ஒரு வருடமாக மூடப்பட்டிருக்கும் விசாலமான, வசதிகள் நிறைந்த புதிய பேரூந்து நிலையத்தை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரையும் பணி நீக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது.

வவுனியாவில் மத்திய கடைத் தொகுதிகளுக்குள் நீண்டகாலமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நிலையம் இயங்கிவந்தது. அதேநேரம் தனியார் பேருந்து நிலையங்கள் வீதியோரத்திலேயே இயங்கி வந்தன.

இந்நிலையில், வவுனியா நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பேருந்து நிலையமொன்று அவசியம் என பலதரப்பட்டவர்களாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 195 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையினால் இப்பேருந்து மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

இது கடந்த வருடம் திறக்கப்பட்டாலும், இப்பேருந்து நிலையத்துக்குள் வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சங்கத்தினர் செல்வதற்கு மறுத்து வருவதுடன், பல பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளைக்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து முதலமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அனைத்து பேருந்து சேவைகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்குமாநு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

முதலமைச்சரின் இந்த உத்தரவையடுத்து, நேற்று பழைய பேருந்து நிலையத்திற்கு வாயிற் தடை போடப்பட்டது. இதனால், வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து நிலைய கடை உரிமையாளர்களும் தமது வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பேருந்துகளும் தரிப்பதற்கென மக்களால்தான் ஒரு பொதுவான மத்திய நிலையம் கோரப்பட்டது. இந்நிலையில் புதிய மத்திய நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? இதனால் தமது போக்குவரத்தின்மூலம் பெறப்படும் வருமானம் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கமே, இவர்களைத் தூண்டி விடுகின்றதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

 

http://inioru.com/ஒரு-வருடமாக-வவுனியா-மத்த/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

அனைத்துப் பேருந்துகளும் தரிப்பதற்கென மக்களால்தான் ஒரு பொதுவான மத்திய நிலையம் கோரப்பட்டது. இந்நிலையில் புதிய மத்திய நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? இதனால் தமது போக்குவரத்தின்மூலம் பெறப்படும் வருமானம் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கமே, இவர்களைத் தூண்டி விடுகின்றதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

யார் என்று தெரிஞ்சும் யார் யார்  என்று கேள்வி  கேட்பது  என்ன வென்று சொல்வது ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.