Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்மலா சிறை மீட்பு

Featured Replies

untitled-10.jpg

தெளிவாக பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்

Edited by ஈழவன்85

தெளிவாக பார்வையிட செய்யுங்கள்

  • தொடங்கியவர்

தெளிவாக பார்வையிட செய்யுங்கள்

இங்கே கிளிக் செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிர்மலா தானா, சாத்திரி எழுதிய ரஜனி திரணகமவின் சகோதரி? இப்போது, துரோகக்கும்பல்களோடு சேர்ந்து கொட்டமாடுகின்றார் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிர்மலா தானா, சாத்திரி எழுதிய ரஜனி திரணகமவின் சகோதரி? இப்போது, துரோகக்கும்பல்களோடு சேர்ந்து கொட்டமாடுகின்றார் போலும்.

இவா தான் அவா அவாதான் இவா இவாவும் அவாவும் ஒண்டுதான் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவள் பாவி இப்ப எங்கையப்பா?????

கப்டன். பிரான்சிஸ் ( ராசையா சடாட்சரபவான் )

இலட்சிய வாழ்வு !

தளர்விலா உறுதி !

தலைமைத்துவ விசுவாசம் !

வீரம் ஈகை தியாகம் அர்ப்பணிப்பு !

இதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாக இருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவர்தான் இந்த பிரான்ஸிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவர், கேணல். கிட்டு அண்ணையின் தோழமைக்குரியவர். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவரைக் கருதலாம். மட்டுநகர் மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் 26.05.1960 அன்று இராசையாக்கும் சின்னப்பிள்ளைக்கும் இரண்டாவது மகனாக சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் இவ் வேங்கை பிறந்தது. தனது சிறு வயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவராகவே இருந்தார். இயற்கையாகவே தமிழ் பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட இவர் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராய் இருந்தார். இக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு சிறையில் இருந்த இவர் வாழ்கைப் படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாகவும் ஆணிவேராகவும் அத்திவாரமாகவும் பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.

ஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1978 இல் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த மாவீரனின் இயக்க வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியிலும், சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது யாவரும் அறிந்த உண்மை! 1983 இல் பயிற்சிக்கு செல்லும் போராளிகளுக்கு மட்டு-அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரற்றது தனித்துவமானது. இவரது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்து வைக்க ஏதுவாக இருந்தது என்பது மறக்க முடியாதது. 1983 இன் காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளராய் இருந்த நிர்மலா நித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார். 1984 இல் மீண்டும் கப்டன். பிரான்ஸிசும் பசீர் காக்கா அண்ணாவாலும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதை செம்மனே செயல்படுத்தி நிர்மலா நித்தியானந்தனை மீட்டு பொலன்நறுவை வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாக கொண்டு சேர்த்தனர். இந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது. எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1984 இன் காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை கப்டன். பிரான்சிஸின் இயக்க வேலைகள் பரந்திருந்தன. அக்காலப்பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கிட்டண்ணாவை சந்திப்பதுமாக இவர் இயக்கப் பணிகளில் வேகமாக ஈடுபட்டார். கிட்டண்ணாவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழ் மாவட்டத்தில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பை பெற்றார். மேலும் கேணல். கிட்டு அண்ணையின் நம்பிக்கையான தோழமைமிக்க போராளியாகவும் கப்டன். பிரான்சிஸ் செயற்பட்டார். எனவே தமிழ்த் தேசியக் கொள்கையும் ஒற்றுமையும் அந்நாட்களிலேயே இவரது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்ததுதான் அரசியல் பணியில் மட்டுமல்லாது எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன். பிரான்சிஸ் அண்ணனின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பில் 1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத் தாக்குதலான களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத் தாக்குதல் 1985 இல் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல் 1986 இல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STF (Special Task Forces) இனர் மீதான கெரில்லா தாக்குதல் என்பன கப்டன். பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாக இருந்தது.

பிரான்சிஸ் அண்ணனின் இந்த இயக்க வளர்ச்சியையும், மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் லெப்.கேணல் குமரப்பா அண்ணனிடம் இருந்து புதிதாக பொறுப்பேற்ற துரோகி கருணாவால் பொறுக்க முடியவில்லை. இக் கூரிய புத்திகூர்மை கொண்ட பிரான்சிஸ் அண்ணனின் இயக்க வளர்ச்சியையும், சக போராளிகளிடத்திலும், மக்களிடத்திலும் இவருக்கு இருந்த மதிப்பையும் எப்படி தகர்த்தெறியலாம்! அதற்கு என்ன வழிவகை என கருணா என்ற கயவன் கணக்கிட்டான். அது மட்டுமல்லாது பிரான்சிஸ் அண்ணனுக்கு அருணா (முன்னாள் மட் ஃ அம்பாறை மாவட்ட தளபதி) அண்ணனால் கொடுக்கப்பட்ட STAR Pistol ஐயும் எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்

1987 இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலை செய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சூழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல. ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப் பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப் போவது எதிரிகளும் அரசியல்வாதிகளுமே என கப்டன். பிரான்சிஸ் அத் திட்டத்தை எதிர்த்தார். இதனால் கருணாவுக்கும் பிரான்சிஸ் அண்ணனுக்கும் கருத்து முரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் அண்ணன் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார். தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை. எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது. அதே போல் செய்யும்படி பிரான்சிஸ் அண்ணனுக்கு கூறினார். இதையே செய்யுமாறு தலைவரால் கருணாக்கு கட்டளையிடப்பட்டது

இதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது நடவடிக்கை புஸ்வானம் ஆனதையிட்டு பிரான்சிஸ் அண்ணனுடன் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. அவர் பீங்கானோடு வெட்டி ஒழுங்காக நடக்க முடியாத தருணம் பார்த்து தனது குள்ள நரிப் புத்தியை பயன்படுத்தி பல காரணங்கள் கூறி அந்த STAR PISTOL ஐ மிகவும் கபடத்தனமாக பறித்தெடுத்தான். அதற்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை. அத்துடன் பிரான்சிஸ் அண்ணனுடன் துணைக்கு நின்ற போராளிகளுக்கு ரூபாய் 1000.00 கொடுக்கப்பட்டு நிலமை மோசமாய் இருப்பதால் ஊரில் நிற்காமல் கொழும்புக்கு செல்லுங்கள் என்றும் அறிவுரை கூறப்பட்டது. 1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸ் அண்ணனின் சொந்த ஊரில் தேசத் துரோகிகளாலும் I.P.K.F (Indian People Killing Forces) ஆலும் இவர் காயம் பட்டு இருப்பது தெரிந்து சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் அண்ணன் வீடொன்றின் புகைக்கூட்டில் ஏறி மறைந்து கொண்டார். ஆனால் காலில் இருந்து பீறிட்ட குருதி இவரை எதிரிக்குக் காட்டிக்கொடுத்து விட்டது. அந்நிலையில் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச் சுடுவதற்கு கூட பிஸ்டல் இல்லாத நிலையில் எமது இயக்க மரபுக்கு அமைய சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து, நடை பயின்ற மண்ணிலேயே வீரச்சாவடைந்தான். அந்த மண்ணும் பெருமையுடன் தான் ஈன்ற அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.

இதே போன்றுதான் கருணா என்னும் கயவனால் 12.04.06 அழிக்கப்பட்ட, பிரான்சிஸ் அண்ணனால் வளர்க்கப்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த லெப்.கேணல். நீலனுக்கும் ஒரு சம்பவம் நடந்தது. சித்திரை மாசம் 1988ம் ஆண்டு நீலன் அவர்கள் இந்தியச் சிப்பாய்களுடன் ஏற்பட்ட எதிர் பாராத மோதலில் தன்னிடம் இருந்த Magnum .38 Revolver ஆல் கப்டன் தர அதிகாரி ஒருத்தனையும் சாதாரண சிப்பாய் ஒருத்தனையும் 3 ரவைகளையே பயன்படுத்தி சுட்டுக் கொன்று விட்டு தானும் குதியில் வெடிப்பட்டு காயமடைகின்றான். இந் நேரத்தில் ஊர் முழுவதும் இந்தியச் சிப்பாய்களும் காட்டிக் கொடுக்கும் துரோகக் கும்பலும் கருணா என்னும் துரோகி கைவிட்டு விட்டான்! ஆனால் ஊர் மக்களோ கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து காப்பது போன்று இருபத்து நான்கு மணிநேரமும் நீலனைக் காக்க தவறவில்லை. நான்கு நாட்களின் பின் கருணாவின் கட்டளையையும் மீறி புலனாய்வுத்துறை - நியூட்டண்ணா தனது சக போராளிகளுடன் வந்து நீலனை காப்பாற்றி தற்போதைய தளபதிகளில் ஒருவரான பிரபாவிடம் மருந்துகட்டி பாதுகாக்க ஒப்படைத்தார். இது போன்று கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸ் அண்ணனின் கைகளில் இருந்திருந்தால், இம் மாவீரன் தன்னை தற்பாதுகாக்க ஏதுவாக இருந்திருக்கும் என ஆரையம்பதியில் படித்தவர் இருந்து பாமரர் வரை பேசிக் கொண்டனர். காரணம் பிரான்சிஸ் அண்ணனுக்கு ஆரையம்பதியில் ஒரு வயது குழந்தை முதல் தொண்ணூறு வயது மூதாட்டி வரை நண்பர்கள்தான். இதனால்தான் இவர் ஆரையம்பதியில் காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் மிக அதிகம்.

எது எப்படியோ! பலகாலம் தனது படிப்பு பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்நலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாக கொண்டு இலட்சிய வேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல் போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவடைந்துவிட்டான். பலகாலமாக மட்டுநகரில் அரசியல் புயலாக வீசியவன் ஓய்ந்து விட்டான். பிரான்சிஸ் அண்ணனின் வீரச்சாவுக்கு பின்னர் 1989ல் இயக்க வேலையின் நிமிர்த்தம் கொழும்பு சென்ற பிரான்சிஸ் அண்ணனுக்கு மூத்த சகோதரர் 2ம் லெப். பவான் (சரவணபவான்) அண்ணன் வீரச்சாவடைந்தார். அவருக்கு உதவிக்குச் சென்ற சில உறவினரும் இச் சம்பவத்தில் காணாமல் போனார்கள். 2ம் லெப். பவான் அண்ணன் ஆரம்பகாலத்தில் இளைஞர் பேரவையின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு சகோதரர்களின் மறைவுடன் அந்தக் குடும்பமும், புகழும் மறைந்து போனது. ஏனெனில் அக்குடும்பத்தின் வாரிசுக்களே இவ்விரு வேங்கைகளுமே இம் மாவீரரது சாவானது எதிரிக்கும் துரோகிகளுக்கும் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயந்தான். ஆனால் கயவன் கருணாவின் நயவஞ்சகமான மனம் பல தடைவ குதூகலத்தால் மத்தளமிட்டதை எவரும் அறிந்திடவோ புரிந்திடவோ சந்தர்ப்பம் இல்லை என்பது உண்மைதான்.

இச்சம்பவத்தால் பல பேர் வெறுப்படைந்து கருணாமேல் கோபமாயிருந்தாலும் பிரான்சிஸ் அண்ணனுக்கு கருணா செய்த வஞ்சகத் தன்மையை வெளிப்படையாக அந் நாட்களில் விமர்சித்தவர்களில் மேஜர்.அன்ரனியும் ஆரையம்பதியைச் சேர்ந்த றம்போ.பிரசாத்துமாகும். இதனால் இவ்விருவருமே உயிருடன் இல்லை. பிரான்சிஸ் அண்ணன் சாவின் பின்பும் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவருக்கு குழிபறித்த கயவன் கருணா இன்று துரோகியாகிவிட்டான். ஆம் பிரான்சிஸ் அண்ணன் நீங்கள் ஒரு சரித்திர நாயகர். தமிழீழ அரசில் கல்விப் புத்தகங்களில் கூட உங்கள் வரலாறு படியும் என்பது திண்ணம். உங்கள் பாதை வழியே பிறப்பெடுத்த வேங்கைகள் பல. உங்கள் கனவுகள் நிச்சயம் நிறைவேறும். நீங்கள் ஒன்றாகத் தூங்கப் போனால், உங்களுக்கு தூக்கம் வராவிட்டால் மற்றவனையும் தூங்க விடாமல் கதை கதையாய் பேசுவீர்கள். ஆனால் எனக்கு அன்று புரியவில்லை அதன் ஆழம். ஆம் இன்று சிந்திக்க எல்லாமே புரிகிறது. நீங்கள் அடிக்கடி கூறுவது போன்று ' தமிழனுக்கென்றொரு நாடு உண்டோ இவ்வுலகில் " ஆம் உங்கள் கனவு பலிக்கும். தமிழ் ஈழம் என்றொரு நாடு பிறக்கும்.

செட்டிபாளையத்தில் உங்களால் உங்கள் அறிவுரையால் எதிரிகளிடமிருந்து உயிர் தப்பியவன் நான். இதை பிரசுரிப்பதும் எனது கடன்.

பணிவுடன் - பூமிபுத்திரன்

http://www.koddaikallar.com/heroes.html

ராஜினி திராணகம

ராஜினி திராணகமராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமாவார். ராஜினி வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். இவருக்கு நிர்மலா, சுமதி, வாசுகி என்ற மூன்று சகோதரிகள் உள்ளனர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்துக் கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்துக் கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டுக் பெண் குழந்தைகள் பிறந்தனர். (1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார்) பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி வைத்தியராக யாழ்ப்பாண வைத்தியசாலயில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் வைத்தியராக பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ பீடத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைபரிசில் பெற்று உடற் கூறியலில் துரையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தி கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்க்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுத்லைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.[1] 1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும் சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார்.[2] இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை ஆரம்பித்தனர். [3] செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் இனம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப் பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர். [4][5][6]

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%...%AE%95%E0%AE%AE

ஈழப் போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் (எழுதியவர் சி. புஸ்பராசா) அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை

சாத்திரியார்

பாகம் 06

படுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

அப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.

ராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர். இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது.

தான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.

பின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.

இந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.

இதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நோக்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.

இதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார்? பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரி

படம் காட்டுகிறார் நிர்மலா

“No More Tears Sister”

போரின் கொடுரத்தின் மத்தியில் மரணம் தவிர்க்க முடியாததாக இருந்தாலும், நாங்கள் அன்புசெலுத்துபவரை இழக்கின்றபோது அதனை தாங்கிக்கொள்ள முடியாததாகி விடுகிறது. கொல்லப்பட்ட தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை மீள நினைத்து பார்க்கும் ஓரு குடும்பத்தின் கதைதான் “ழே ஆழசந வுநயசள ளுளைவநச”. கனேடிய தேசிய திரைப்பட சபையால் தயாரிக்கப்பட்ட இவ்விபரணப்படம், 1989ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், இனந்தெரியாதவர்களால் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்;ட மருத்துவபீட விரிவுரையாளர் டொக்டர் ராஜினி திரணகம பற்றியது. கடந்த 13ம்திகதி Pயனனiபெவழn லிலுள்ள குசழவெடiநெ ஊடரடி ல் இவ்விபரணத்தை பார்க்கக்கிடைத்தது.

ராஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது குடும்பத்தினர் கூறுவதுபோல திரைப்படம் நகருகிறது. படத்தின் பெரும்பாகத்தை ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலா (நித்தியானந்தன்) ராஜசிங்கம் ஆக்கிரமித்துக் கொள்கிறார். ஆங்காங்கே ராஜினியின் முன்னாள் கணவர் தயாபால திரணகமவும், பிள்ளைகளும் அவரது ஏனைய சகோதரிகளும், பெற்றோரும் கதை கூறுகிறார்கள். இறந்துபோன ராஜினியாக அவரது மகள் சரிகா நடிக்க மற்றயபாத்திரங்களில் பெரும்பாலும் அவரவரே தோன்றுகிறார்கள்.

விவரணம் முழுக்க முழுக்க உண்மையானது என தயாரிப்பாளரும், இது பக்கச்சார்பில்லாமல் சொல்லப்படுகின்ற கதை என அமெரிக்க ர்ரஅயn சுiபாவள றுயவஉh ஐ சேர்ந்த துiஅ சுழளள என்பவரும் கூறியுள்ளனர். இவ்விடயத்தில்தான் இவர்களுடன் எனக்கு உடன்பட முடியாதுள்ளது.

முற்றிலும் மேலைத்தேச பார்வையாளர்களை அதுவும் மனிதவுரிமை ஆர்வலர்களை கவரும் வண்ணம் அழகாகக படமாக்கப்பட்டுள்ள இவ்விவரணத்தில்

இலங்கைத்தீவின் இனமுரண்பாடுகளையும் அதன் தாக்கத்தையும் நிர்மலாவும் அவரது குடும்பமும் எவ்விதம் பார்க்கிறது என கூறப்படுகிறதே தவிர அதன் உண்மைத்தன்மை பற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக இதனையே தீவில் காணப்படும் நடைமுறை யதார்த்தமாகக் காண்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1982ம் ஆண்டு, காயப்பட்ட விடுதலை புலிப்போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்து சிகிசிசையளிக்க உதவினார் என சிறிலங்காப்படையினரால கைது செய்யப்படும்வரை தமிழ்அரசியலில் அறியப்படாத ஒருவராக இருந்த நிர்மலா ஓரு அரசியல் போராட்;டக்காரராக இவ்விவரணத்தில் சித்தரிக்கப்படுகிறார். நிர்மலா தன்னை ர்யசஎயசன பல்கலைக்கழகத்தில் பயின்ற, துயநெ யுரளவiனெ; நாவல்களை படிக்கிற, மத்தியதரவர்க்க, மார்;க்சிய லெனினிச மாவோவிச தத்துவங்களால் ஆகர்சிக்கப்பட்ட முற்போக்கு பெண்ணிலைவாதியாக சுய விமர்சனம் செய்கிறார். மேலைதேச மத்திய வர்க்க பார்வையாளரை மனதில்கொண்டு, தானும் உங்கள் வர்க்கம்தான் என இந்த “முற்போக்குவாதி” சொல்லாமல் சொல்கிறார்.

விடுதலைப்புலி போராளிகள் நிர்மலாவின் விருப்பத்துடன் அவரை சிறை மீட்டு அழைத்து செல்லும்போது தற்காப்புக்காக சயனைற் குப்பிகளை கொடுத்ததை “மரணிக்கவா வெளியில் எடுத்து வரப்படுகிறேன்” என பரிகசிக்கிறார். தங்கள் உயிர்களை பணயம்வைத்துத்தான் அந்த போராளிகள் அவரை சிறைமீடடார்கள் என்பதை நிர்மலாவினால் உணரமுடியாமல் இருக்கிறது. ஓரு வேளை தன்னை போன்ற ஆங்கிலம் படித்த மத்திய வகுப்பினர்களின் உயிரானது, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த போராளிகளை விட முக்கியமானதாக அவருக்கு தெரிந்திருக்கலாம்.

தான் 6மாதத்துக்கு மேல் இயக்கத்திலிருக்க முடியாமல் போனதற்கு போராளிகளுக்கு அரசியல் போதிப்பதை தலைமைப்பீடம் விரும்பாததை காரணமாக காட்டுகிறார். ஆனால் அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது சுதந்திர வேட்கை (றுடைட வழ குசநநனழஅ) எனும் நூலில் நிர்மலா இயக்கத்தில் இணைந்தது பற்றி குறிப்பிடும்போது போராட்டத்தில் இணைந்து கொண்ட கிராமத்துப் பெண்களுக்கும் நிர்மலாவுக்கும் இருந்த இடைவெளி மலைக்கும் மடுவுக்குமிடையிலானது என எமுதியுள்ளார்.

நிர்மலாவின் குழப்பமான பெண்ணிலை வாதம் அவரது வாழ்வில் மட்டுமல்ல இவ்விவரணத்திலும் பிரதிபலிக்கிறது. தயாபாலவை மணந்திருந்த ராஜினி அதே சமயம் பிரித்தானிய விஞ்ஞானி ஓருவரையும் காதலித்ததாக கூறப்படுகிறது. அதற்கு தயாபால மூலமாகவே நியாயமும் கற்பிக்கப்படுகிறது.

இலஙகைத்தீவின் அரசியல் வரலாற்றில் அறியபடாதவராக (ழேn நுவெவைல) இருக்கும் ராஜினியின் முன்னாள் கணவர் தயாபாலா இலங்கை அரசாலும் ஜே.வி.பியாலும் தேடப்பட்ட புரட்சிவாதியாக காண்பிக்கப்படுகிறார். ஏணஸ்ரோ சே குவெராவை ஒத்த அரசியல் போராட்டவாதியாக சித்தரிக்கபடும் தயாபாலா தனது அரசியலிருந்து வேறுபட்டு போகும் மனைவியை விவாகரத்து புரிந்தார் என விபரிக்கப்படுகிறது. (திரையரங்கில் பார்வையாளராக கலந்து கொண்ட தயாபாலாவிடம் அவரது அரசியல் ஈடுபாடுகள் பற்றி நான் கேட்டபோது, தான் தலை மறைவு அரசியலில் ஈடுபட்டதாகவும் ஐந்து வருடம் சிறையிலிருந்ததாகவும் கூறினாரே தவிர மேற்கொண்டு தனது சித்தாந்தங்கள் பற்றி விபரிக்க முடியாதவராக இருந்தார்.)

தனது தங்கையை கொன்றது டுவுவுநு தான் என அந்த அமைப்பிலிருந்த சிலர் தன்னிடம் கூறியதாக விவரணத்தில் நிர்மலா கூறுகிறார். அதனை அப்படியே கேள்வியின்றி தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர்.

தங்களைப்போன்ற கிறிஸ்;;தவ பராம்பரியம் கொண்ட மத்திய தரவர்க்கத்து புத்தி சீவிகளின் கருத்துக்களை தேசியவாதிகளான அறிவற்ற தமது சமுகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதே இலங்கைத்தீவின் பிரச்சனைகளுக்கான காரணமென நிறுவுவதே நிர்மலாவின் நோக்கமாக இருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வாழும் மக்கள் தங்களிடமிருந்தே மனிதாபிமானத்தை கற்றுகொள்ள வேண்டுமென்று கருதும் மேலை நாட்டு மனிதவுரிமை வாதிகளுக்கு இது ஏற்புடையதாகவே இருக்கும்.

ராஜினியின் கொலை கண்டிக்கப்பட வேண்டியது. அவரது மரணம் குடும்பத்தில் ஏற்படுத்திய வடு ஆறாததுதான் ஆனால் அதில் ஆதாயம் தேட முனைவது ஏற்றுக்கொள்ள முடியாதது. படுகொலை செய்யப்பட்ட தனது தங்கையின் ஆடைகளை களைந்து தனது அம்மணத்தையும் அசிங்கங்களையும் மறைக்க முற்பட்டுள்ளார் நிர்மலா.

தேவபுத்திரன்

நன்றி ஒருபேப்பர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.