Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும் குழப்பத்தையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைப்பு : மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே

Featured Replies

சபையில் கடும் மோதல் : விரட்டி விரட்டி மோதிக்கொண்ட எம்.பிக்கள்

 

சபையில் கடும் மோதல் : விரட்டி விரட்டி மோதிக்கொண்ட எம்.பிக்கள்

பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.
இதனால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையை நிகழ்த்த தயாரான போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது எம்.பிக்கள் சிலர் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -(

http://www.samakalam.com/செய்திகள்/சபையில்-கடும்-மோதல்-விரட/

 
 
 
நாடாளுமன்றில் அமளி; சபை ஒத்திவைப்பு
 

image_7e5242ddd4.jpgஇன்று இடம்பெற்றுவரும் விசேட நாடாளுமன்ற அமர்வின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை அமர்வை 10 நிமிடங்கள் ஒத்திவைக்க, சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் குழப்பமான நிலை தோன்றியது.

இதனையடுத்து, கட்சித் தலைவர்கள் மாநாடொன்றுக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றில்-அமளி-சபை-ஒத்திவைப்பு/175-210113

 

 

 

பெரும் குழப்பத்தையடுத்து பாராளுமன்றம் ஒத்திவைப்பு : மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து, பாராளுமன்றத்தை சபாநாயகர் தற்காலிகமாக ஒத்திவைத்தார். 

மீண்டும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்காக பாராளுமன்றம் கூடும் என, சபாநாயகர் தெரிவித்தார்.

இந்நிலையில், காமினி லெக்குகே மற்றும் மரிக்கார் ஆகியோருக்கிடையில் சண்டை இடம்பெற்றுள்ள நிலையில், மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே. இதையடுத்து காமினி லொக்குகேயின் இருப்பிடத்திற்குச் சென்ற மரிக்கார், காமினி லொக்குகே மீது அடித்து விட்டு பின்கதவால் வெளியேறியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியில் சண்டைணை விலக்குப்பிடித்துக்கொண்டிருந்த காவிந்து ஜெயவர்தன திடீர் மயக்முற்று விழுந்துள்ளார்.

http://www.virakesari.lk/article/29178

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

குழப்பத்தையடுத்து பாராளுமன்றம் 23 வரை ஒத்திவைப்பு

 

 

 

பாராளுமன்றம் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

parliment.jpg

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான அறிக்கையை அடுத்தவாரம் பாராளுமன்றில் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று காலை அறிவித்தார்.

 

சிறப்பு  பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்ற நிலையிலேயே சபாநாயகர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இந்நிலையில், பிணை முறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று சிறப்புரையாற்றினார்.

 

எனினும் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், சபைக்கு மத்தியில் வந்து கோசமிட்டவாறு குழப்பம் விளைவித்தனர்.

 

குழப்பத்தையடுத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்காக சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் விசேட பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகின.

இந்நிலையில் தொடர்ந்து பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிரணியினர் சபை அமர்வை வெளிநடப்புச் செய்தனர்.

 

இதையடுத்து பாராளுமன்றில் லசந்த அழகியவண்ண மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிலையில் பாராளுமன்றில் விவாதம் நடத்துமாறு கோரியோர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ள நிலையில் சபையில் நாம் எவ்வாறு விவாதம் மேற்கொள்வதென லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைப்பதா அறிவித்தார்.

http://www.virakesari.lk/article/29182

  • தொடங்கியவர்

சபையில் உறுப்பினர்கள் கைகலப்பு, வாய்த்தார்க்கம். ஊழல் மோசடி வெளிவந்தது

 

மக்களின் பணம் எப்படி கொள்ளையிடப்பட்டது என்பது தொடர்பான உண்மைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதுடன், இருதரப்பு உறுப்பினர்களும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டதால், காயங்களும் ஏற்பட்டன. ஐ.தே.க உறுப்பினர் மரிகார் மீது, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் காமினி லொக்குகே கடுமையாகத் தாக்கியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

சபையில் உறுப்பினர்கள் கைகலப்பு,  வாய்த்தார்க்கம். ஊழல் மோசடி வெளிவந்தது

நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு, இன்று புதன்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய விடயங்கள் குறித்து கருத்துக் கூறினார்.

ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்காமல் விவாதம் நடத்த முடியாதென கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ்குணவர்த்தன, ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஆகியோர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

மக்கள் பணம் கொள்ளையிடப்பட்டதை ஏற்க முடியாதென்றும் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரும் காரசாரமான தொணியில் வலியுறுத்தினர்.

இவர்களின் கருத்துக்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அறிவித்தார். ஜனாதிபதி அனுப்பிவைத்த கடிதத்தையும் சபாநாயகர் சபையில் வாசித்தார்.

ஆனாலும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 2006ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுக்கும் வரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்மோசடி மற்றும் படுகொலைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரக்கச் சத்தமிட்டனர். சபை நடுவாகச் சென்று கையில் வைத்திருந்த நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திர புத்தகங்களை வீசினர்.

உரையாற்றுவதை குழப்புவதற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சுற்றி காவல் புரிந்தனர். தொடர்ச்சியான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி முடித்தார்.

ஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடி குறித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தற்போது ஏற்க முடியாதெனவும் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பாக பேசுவதற்காகவே நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் ஜே.வி.பி. கூறியது. கூட்டு எதிர்க்கட்சியும் அவ்வாறு தெரிவித்தது.

எதிர்த்தரப்பு, அவ்வாறு கூறியதையும் பொருட்படுத்தாமல், மஹிந்த ராஜபக்ச கள்வன் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கைகளை உயர்த்தியவாறு உரக்கச் சத்தமிட்டார். ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு கூறி கோசம் எழுப்பினர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சைகளை, நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் அமைதியாக பாத்துக்கொண்டிருந்தாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.பி.வி. உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டபோது அமைதியாக இருந்து அவதானித்துக் கொண்டிருந்தனர்.

கூச்சல் குழப்பத்தினால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. பின்னர் சபை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சபாநாயகர் ஒத்திவைத்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

 

https://news.ibctamil.com/ta/politics/In-Parliament

  • தொடங்கியவர்

முறிகள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையால் பாராளுமன்றத்தில் அமளி துமளி

  • கருத்துக்கள உறவுகள்

மரிக்காருக்கு  அடியா?

என்ன நரித்தனங்கள் மைத்திரியின் நரித்தனங்களுக்கு  ஈடுகொடுக்கமுடியாதுள்ளதா??

 

  • தொடங்கியவர்

சமர்க்களமானது சபை : கன்னி அமர்­வி­லேயே உறுப்­பி­னர்கள் கைக­லப்பு தேடித்­தேடி தாக்­கி­ய­தினால் சில­ருக்கு காயம்

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை குறித்த விவா­தத்­தினை நடத்­து­வ­தற்­காக நேற்று பாரா­ளு­மன்றம் கூடி­ய­போது ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் பொது எதி­ரணி உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற  கைகலப்பு மற்றும் மோத­லினால் சபையே சமர்க்­க­ள­மாக மாறி­யது.   

2018ஆம் ஆண்­டுக்­கான கன்னி அமர்­வாக நேற்று நடை­பெற்ற விசேட பாரா­ளு­மன்ற அமர்வில் இரு­ த­ரப்­பி­னரும் மூர்க்­கத்­த­ன­மாக செயற்­பட்­ட­மை­யினால் சபை நட­வ­டிக்­கை­யினை கொண்­டு­செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது. 

சிரேஷ்ட உறுப்­பி­னர்­களின் கோரிக்­கைகள், தடுப்­புக்­க­ளையும் தாண்டி இடம்­பெற்ற மோதல்­களில் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் காய­ம­டைந்­தனர். மேலா­டைகள் கிழிந்த நிலையில் சில உறுப்­பி­னர்­களும், கால­ணி­க­ளின்­றியும் சபைக்குள் சில உறுப்­பி­னர்கள் நட­மா­டி­ய­தையும் அதிர்ச்­சியில் பல உறுப்­பி­னர்கள் உறைந்து நின்­ற­மையும் அவ­தா­னிக்க முடிந்­தது.

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­மு­றிகள் விற்­பனை தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து விவா­திப்­ப­தற்­காக கூட்டு எதிர்க்­கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி ஆகி­ய­வற்றின் கோரிக்­கைக்கு அமை­வாக விசேட பாரா­ளு­மன்ற அமர்வு நேற்று புதன்­கி­ழமை முற்­பகல் 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் ஆரம்­ப­மா­னது.

சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய, பிணை முறிகள் சம்­பந்­த­மான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யா­னது ஒரு­வா­ரத்­திற்குள் பாரா­ளு­மன்­றத்­திற்கு கிடைக்கும் என்­பது உள்­ளிட்ட அறி­விப்­புக்­களை வெ ளியிட்­டதை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கோப்­குழு அறிக்கை தொடர்பில் தமது அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள செயற்­பா­டுகள் தொடர்பில் தனது விசேட கூற்­றினை முன்­வைப்­ப­தற்கு முனைந்தார்.

இத­னை­ய­டுத்து ஆளும், எதிர்த்­த­ரப்­பி­ன­ரி­டையே கடு­மை­யான வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. குறிப்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், எதிர்க்­கட்­சியின் பிர­த­ம­கொ­ற­டாவும் ஜே.வி.பி.தலை­வ­ரு­மான அநு­ர­கு­மரா திஸா­ந­யக்க, கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்றக் குழுவின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், பந்­துல குண­வர்த்­தன, வாசு­தேவ நாய­ணக்­கார உள்­ளிட்­ட­வர்கள் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­திற்கு உடன் சமர்ப்­பிக்­கு­மாறு வலி­யு­றுத்­தல்­களை செய்து தமது வாதங்­களை முன்­வைக்­க­லா­யினர்.

எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிலை­யியற் கட்­ட­ளையின் பிர­காரம் தனக்கு விசேட கூற்­றினை முன்­வைக்க முடியும் என்றும் சபா­நா­யகர் அதற்­கான அனு­ம­தி­யையும் உறு­தி­மொ­ழி­யையும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுத்த தீர்­மா­னத்­திற்கு அமை­வாக வழங்­கி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இதனால் சர்ச்­சைகள் சபையில் ஏற்­பட்­டி­ருந்த நிலையில் சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விசேட கூற்­றினை முன்­வைக்­கு­மாறு குறிப்­பிட்ட நிலையில் அவர் தனது அறி­விப்­பினை ஆரம்­பித்தார்.

கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரின் போராட்டம்

இச்­ச­ம­யத்தில் தமது ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்த கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் மேசை­க­ளி­லி­ருந்த பதா­கை­களை கையில் தாங்­கி­ய­வாறு கோசங்­களை எழுப்­பிக்­கொண்­டி­ருந்­தனர். குறிப்­பாக அந்த பதா­கை­களில் ''ஐ.தே.க. திரு­டர்கள் நட­வ­டிக்கை எடுங்கள்'' என்று வலி­யு­றுத்தும் வாச­கங்கள் அதி­க­மாக சிங்­கள மற்றும் ஆங்­கில மொழி­களில் காணப்­பட்­டன.

எவ்­வா­றா­யினும் பிர­தமர் தனது உரையை தொடர்ந்­த­வண்­ண­மி­ருந்­த­மையால் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தமது ஆச­னங்­க­ளி­லி­ருந்து எழுந்து சபா­மண்­ட­பத்­திற்குள் பிர­வே­சித்­தனர். அத்­துடன் பல கோசங்­க­ளையும் எழுப்­பினர். இதனால் பிர­தமர் ரணிலின் உரைக்கு குந்­தகம் ஏற்­பட்­ட­போதும் அவர் அதனை கருத்­திற்­கொள்­ளாது உரை­யை­தொ­டர்ந்த வண்­ண­மி­ருந்தார்.

கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபா­மண்­ட­பத்­தினுள் பிர­வே­சித்து செங்கோல் வைக்­கப்­பட்­டி­ருந்த சபா­பீ­டத்­தினை நோக்கி பிர­வே­சித்­த­போது படைக்­க­ல­சே­வி­தர்கள் செங்­கோ­லுக்­கான பாது­காப்­பினை வழங்­கி­னார்கள்.

பதி­லடி வழங்க தயா­ரான

பின்­வ­ரிசை ஆளும் தரப்பு

இவ்­வாறு கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபா மண்­ட­பத்­தினுள் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்­தி­ருந்த தரு­ணத்தில் எதிர்த்­த­ரப்பில் பின்­வ­ரி­சையில் அமர்ந்­தி­ருக்கும் ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபூர் ரஹுமான், கவிந்து ஜெய­வர்த்­தன, சமிந்த விஜே­சிறி, எஸ்.எம்.மரிக்கார் மறு­பக்­கத்­தி­லி­ருந்து நளின்­பண்­டார, துஷார இந்­துநில் உள்­ளிட்ட இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபா­மண்­ட­பத்­திற்குள் பிர­வே­சித்­த­தோடு எதி­ரணி உறுப்­பி­னர்கள் சபா­பீ­டத்­தினை நோக்கி பிர­வே­சிப்­ப­தையும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அருகில் செல்­வதை தடுக்கும் முக­மா­கவும் பாது­காப்பு வல­யங்­களை அமைத்­தார்கள்.

இச்­ச­ம­யத்தில் திடீ­ரென சபா­மண்­ட­பத்­திற்குள் வந்த ஐ.தே.க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிட்னி ஜெய­ரட்ன கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரின் பதா­கை­யொன்றை பறித்து கிழித்தார். அத்­துடன் துஷார இந்­துலும் அவ்­வா­றான செயற்­பா­டொன்றை மேற்­கொண்டார். அதே­போன்று மறு­பக்­கத்தில் இருந்த பின்­வ­ரிசை ஆளும் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கூட்டு எதிர்க்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தள்­ளு­முள்­ளுப்­பட்­ட­வாறு இருந்­தார்கள்.

மரிக்­கா­ருக்கு விழுந்த அறை

இச்­ச­ம­யத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மரிக்­கா­ருடன் கெஹ­லிய எம்.பி. தள்­முள்­ளுப்­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது கெஹ­லிய எம்.பியின் பின்­னா­லி­ருந்து வரு­கை­தந்­தி­ருந்த காமினி லொக்­குகே எம்.பி. திடீ­ரென ஏதோ­கூ­றி­ய­வாறு மரிக்கார் எம்.பி.க்கு கன்­னத்தில் அறைந்தார்.

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் நின்­றி­ருந்த மரிக்கார் எம்.பி. சில நிமி­டங்­களில் சுதா­க­ரித்­த­வாறு காமினி லொக்­குகே எம்.பியை தாக்­கு­வ­தற்­காக சென்­ற­போது அரு­கி­ருந்த நவிவி, சமிந்த விஜே­சிறி உள்­ளிட்ட சில எம்.பிக்கள் அவரைத் தடுத்து நிறுத்­தி­னார்கள். இருப்­பினும் அவர் ஆவே­ச­மாக தாக்­கு­த­வற்­காக முனைந்­த­போதும் மறு­பக்­கத்­த­லி­ருந்து ஓடி­வந்த பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மரிக்­காரை பின்­னா­லி­ருந்து கட்­டிப்­பி­டித்து சபா­பீ­டத்­திற்கு அருகில் இருந்த படிக்­கட்­டுக்கு அருகில் கொண்டு சென்றார்.

இதன்­போது முன்­வ­ரி­சையில் மேலைத்­தேய உடை­யுடன் சால்­வை­யொன்றை அணிந்­த­வாறு சபைக்குள் வருகை தந்­தி­ருந்த நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால ஆகியோர் மரிக்­கா­ரி­டத்தில் விட­யங்­களை கேட்டு அவ­ருக்கு ஆறு­த­ல­ளித்­த­வா­றி­ருந்­தனர். இச்­செ­யற்­பாடு ஒரு­பக்கம் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கையில் மறு­பக்­கத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியும், ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­களும் கோசங்­களை எழுப்­பி­ய­வாறு தள்­ளு­முள்­ளுப்­பட்­ட­வாறே இருந்­தனர்.

''திருடர் திருடர் மகிந்த திருடர்'' என்­று­ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் கோசம் எழுப்­பவும், ''திருடர் திருடர் ரணில் திருடர்'', ''திருடர் திருடர் வங்கித் திருடர்'' என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோசம் எழுப்பி பரஸ்­பரம் விட்­டுக்­கொ­டுக்­காது செயற்­பட்­டனர்.

மயங்கி விழுந்தார் கவிந்து எம்.பி

இவ்­வா­றான நிலையில் தள்­ளு­முள்­ளுப்­பட்டுக் கொண்­டி­ருந்த ஆளும், எதிர்த்­த­ரப்­பி­ன­ரி­டையே சம­ரச நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டக்­கொண்­டி­ருந்த கவிந்த ஜெய­வர்த்­தன எம்.பி திடீ­ரென சபா­பீ­டத்தில் மயக்கம் போட்டு வீழ்ந்தார். பின்னர் அவரை தூக்கிச் சென்ற பிரதி அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா, சுஜீவ சேன­சிங்க உள்­ளிட்­ட­வர்கள் அவரை ஆச­னத்தில் அமர்த்தி குடிப்­ப­தற்கு தண்ணீர் வழங்­கி­னார்கள். பின்னர் அவரை தோளில் சுமந்­த­வாறு சில உறுப்­பி­னர்கள் சபையை விட்டு வெளி­யேறிச் சென்­றனர்.

காரி­யத்­திலே கண்­ணா­க­வி­ருந்த பிர­தமர்

இத்­த­கைய நிலை­மைகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது விசேட கூற்­றினை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்­த­வாறே இருந்தார். அவ­ருக்கு அருகில் அமைச்சர் கஜந்த கரு­ணா­தி­லக்க, மலிக் சம­ர­விக்­க­ரம, கபீர் காசீம் உள்­ளிட்­ட­வர்கள் இருந்­த­தோடு பிர­த­மரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக சாகல ரட்­நா­யக்க சபைக்கு உள்ளும் வெளி­யு­மாக சென்­ற­வண்ணம் காணப்­பட்டார்.

இவ்­வாறு நிலை­மைகள் தொடர்ந்­த­வண்­ண­மி­ருக்­கையில் பிர­த­மரின் உரை நிறை­வுக்கு வரவும் சபையில் அமை­தியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு சபா­நா­ய­கரால் முடி­யாது போனது. இந்­நி­லையில் சபை நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக 11.05 மணிக்கு ஒத்­தி­வைத்து கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­தினை கூட்­டு­வ­தாக அறி­வித்தார்.

மரிக்­காரின் பதி­லடி

இச்­ச­ம­யத்தில் சபா­நா­யகர் அக்­கி­ரா­ச­னத்தில் இருந்து எழுந்­த­போது அனைத்து உறுப்­பி­னர்­களும் எழுந்து நின்­றார்கள். இச்­ச­ம­யத்தில் எதி­ர­ணியின் பின் வாயில் ஊடாக பிர­வே­சித்த மரிக்கார் எம்.பி, மெது­வாக நடந்து வந்து சபா­பீ­டத்­தினை பார்த்­த­வாறு நின்­று­கொண்­டி­ருந்த காமினி லொக்­குகே எம்.பியை தாக்­கி­விட்டு வெளியே ஓடி­விட்டார். மரிக்கார் எம்.பி.யின் இந்த பதுங்கல் தாக்­கு­தலை கண்ட கூட்டு எதிர்க்­கட்­சியின் எம்.பி.க்கள் கொதித்­துக்­கொண்டு ஆளும் தரப்பு உறுப்­பி­னர்கள் நோக்கி ஒன்று திரண்­ட­தோடு சிலர் மரிக்­காரை துரத்­திக்­கொண்டு சபையை விட்ட வெளி­யே­றிச்­சென்­றனர்.

பாது­காப்­பாக வெளி­யே­றிய த.தே.கூ

ஒரு­பக்­கத்தில் ஆளும் தரப்பு பின்­வ­ரிசை எம்.பிக்­களும் மறு­பக்­கத்தில் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களும் சூழ்ந்­த­வண்­ண­மி­ருக்­கையில் ஆரம்­பத்­தி­லேயே கோசம் எழுப்பி போராட்டம் இடம்­பெற்­ற­மையால் முன்­வ­ரி­சை­யி­லி­ருந்து சென்று மூன்­றா­வது வரி­சையில் அமர்ந்­தி­ருந்த எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரும் ஏனைய உறுப்­பி­னர்­களும் பாது­காப்­பாக வெளி­யேறிச் சென்­றனர்.

உக்­கி­ர­ம­டைந்த தாக்­குதல்

இத­னை­ய­டுத்து நிலை­மைகள் மோச­ம­டைந்­தன. பின்­வ­ரிசை ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறப்­பி­னர்கள் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்­சி­யான த.தே.கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களின் மேசை­களில் இருந்த ஆவ­ணங்­களை எடுத்து ஆளும் தரப்­பினர் நோக்கி எறிய ஆரம்­பித்­தனர்.

இச்­ச­ம­யத்தில் எதிர்த்­த­ரப்பின் முத­லா­வது நிர­லிற்கும் இரண்­டா­வது நிர­லிற்கும் இடையில் நின்­று­கொண்­டி­ருந்த ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­களை, கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கடு­மை­யாக தாக்­கி­ய­தோடு அவர்­க­ளுக்கு நிக­ராக ஆளும் தரப்பு எம்.பிக்­களும் தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். அத்­துடன் மறு­பக்­கத்தில் நளின் பண்­டார, ஹெக்டர் அப்­பு­காமி உள்­ளிட்­ட­வர்­களும் களத்தில் குதித்­தனர்.

பிர­சன்ன ரண­துங்­கவின் தாக்­குதல்

இவ்­வாறு நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருந்த நிலையில் ஆளும் கட்சி பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் நின்­றி­ருந்த பகு­திக்குள் மெது­வாக வந்த பிர­சன்ன ரண­துங்க எம்.பி, சமிந்த விஜே­சி­றியை இலக்­கு­வைத்து தாக்­கி­விட்டு விரை­வாக சபை­யி­லி­ருந்து வெளி­யே­றிச்­சென்று மற்­றொரு வாயில் ஊடகா மீண்டும் சபைக்குள் பிர­வே­சித்து நின்றார்.

மோத­லுக்குள் சிக்­கிய ரோகிணி எம்.பி

ஆண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மோதலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அவர்­களை கட்­டப்­ப­டுத்த ரோகிணி கவி­ரட்ண எம்.பி. முனைந்து கொண்­டி­ருந்தார். இச்­ச­ம­யத்தில் மற்­றொரு வாயில் ஊடாக வருகை தந்த பிர­சன்ன ரண­வீர, அநு­ருத்த இந்­திக்க உள்­ளிட்ட எம்.பிக்கள் கடு­மை­யான தாக்­கு­தல்­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­த­போது அந்த மோத­லு­க­ளுக்கு நடுவில் ரோகிணி எம்.பி சிக்­கிக்­கொண்டார்.

இருப்­பினும் ஹிரு­ணிகா பிரே­ம­சந்­திர, துசித்தா விஜே­மான்ன ஆகி­யோ­ருடன் ஜோன்சன் பெர்­ணான்டோ ஆகியோர் ரோகிணி எம்.பியை மீட்­டெ­டுத்து அப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெளி­யேற்­றி­னார்கள்.

கிழிந்­தது மேலாடை

இவ்­வா­றான நிலையில் தேசிய உடையில் வருகை தந்­தி­ருந்த பிர­சன்ன ரண­வீர ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­க­ளுடன் கடு­மை­யான மோதல்­களில் ஈடு­பட்டார். அவ­ரு­டைய மேலாடை இதன்­போது கிழிக்­கப்­பட்ட நிலையில் அவரை ஏனைய உறுப்­பி­னர்கள் மீட்­டெ­டுத்­தார்கள். இவ்­வாறு மோதல்கள் சுமார் இரு­பது நிமி­டங்­க­ளாக தொடர்ந்­த­வண்­ண­மி­ருந்­தது.

தடுத்து நிறுத்­தப்­பட்ட பிர­தமர்

இச்­ச­ம­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மோதல்­களில் ஈடு­பட்­டோரை சம­ர­சப்­ப­டுத்­து­வ­தற்­காக முனைந்து மோதல்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களின் ஆச­னங்கள் இருந்த பகு­திக்கு வரு­கை­தர முற்­பட்­ட­போது அமைச்­சர்­க­ளான சாகல ரட்­நா­யக்க, கபீர் காசீம், மலிக் சம­ர­விக்­கி­ரம, அர்­ஜுன ரண­துங்க ஆகியோர் அவரை தடுத்து நிறுத்தி சபை­யி­லி­ருந்து வெளி­யேறிச் செல்­லு­மாறு ஆலோ­சனை வழங்­கி­னார்கள்.

இது என்ன கலா­சாரம்?

ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரின் மோதல்­களை கட்­டப்­ப­டுத்த முனைந்­து­கொண்­டி­ருந்த மகிந்­தா­னந்த அழுத்­க­மகே, ரோகித்த அபே­கு­ண­வர்த்­தன ஆகியோர் இது என்ன அர­சியல் கலா­சாரம், இப்­படி மோதிக்­கொள்­வதில் என்ன இருக்­கின்­றது என்று குறிப்­பிட்­ட­தோடு இவற்­றுக்­கெல்லாம் சபா­நா­ய­கரே பொறுப்­புச்­சொல்ல வேண்டும் என்று கூறி நிலை­மை­களை சுமூ­க­மாக்க முனைந்­தனர்.

ஆளும் தரப்பும் முயற்சி

ஆளும் தரப்பின் உறுப்­பி­னர்கள் சிலரும் ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­களை தடுத்து நிறுத்தி கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வர முனைந்­தார்கள். இத­னை­ய­டுத்து நிலை­மைகள் சுமு­க­மாக வந்­த­போதும் ஆங்­காங்கே உறுப்­பி­னர்கள் கூட்­டங்­கூட்­ட­மாக கூடியவாறு இருந்தார்கள்.

குப்பை மேடான எதிர்க்கட்சி ஆசன வரிசை

மோதல்கள் நிறைவடைந்த பின்னர் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த ஆசன பகுதி அனைத்தும் குப்பைமேடாக காணப்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆவணங்கள் எவையும் மேசைகளில் இல்லாதிருந்தன. கடதாசிகள் கிழித்றெியப்பட்ட நிலையில் இருந்தன. இச்சமயத்தில் சபை உதவியாளர்கள் அவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஒதுங்கியிருந்த சு.க

இந்த அமர்வுக்கு சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் வருகை மிகக்குறைவாக இருந்தமை ஒருபுறமிருக்கையில் வருகை தந்திருந்த ஒருசில உறுப்பினர்களில் எவரும் இந்த மோதல்களை தடுப்பதற்கு முன்வந்திருக்கவில்லை.

அதிர்ச்சியும் வேடிக்கையும்

இவ்வாறு நிலைமைகள் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் காலணியின்றி சபைக்குள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் சில பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் இந்த மோதல் நிலைமைகளை அதிர்ச்சியுடன் பரார்த்துக்கொண்டிருந்தனர்.

மீண்டும் தலைதூக்கவில்லை

சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றிருந்த இந்த சம்பவத்தின் பின்னர் மீண்டும் சபை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டபோதும் இந்த விடயம் சம்பந்தமாக எந்தவொரு தரப்பினரும் கவனம் செலுத்தியிருக்கவில்லை. மேலோட்டமாக ஜே.வி.பி.தலைவர் அநுர குமார திஸாநாயக்க எம்.பியும், தினேஸ் குணவர்த்தன எம்.பியும் பேசிக்கொண்டனர். அதேநேரம் மரிக்கார், கவிந்து ஆகிய எம்.பிக்கள் சபைக்கு மீண்டும் வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும் : எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் கோரிக்கை

1-14ffd7e76dda9f43a5c841c567cf8b3c81cb5a86.jpg

 

(ஆர்.ராம்,  எம்.எம்.மின்ஹாஜ்) 

இலங்கை மத்­தி­ய­வங்கி பிணை முறிகள் விற்­பனை தொடர் பான ஜனா­திபதி ஆணைக்­கு­ழுவின் முழு­மை­யான அறி க்கை விரைந்து பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் சபையில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிணை­முறி விவ­காரம் தொடர்­பாக இடம்­பெற்ற விசேட அமர்வில் போது எழுந்த வாதப்­பி­ர­தி­வா­தங்­களின் இடையில் கருத்­துக்­களை முன்­வைத்­த­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர்­மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூடிய விரைவில் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என்று பிர­தமர் உட்­பட கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தின் அனைத்து உறுப்­பி­னர்கள் மத்­தி­யிலும் பொது இணக்­கப்­பா­டொன்று காணப்­பட்­டது.

அது தொடர்பில் எந்த முரண்­பாடும் கிடை­யாது. ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யா­னது கூடிய விரைவில் சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட வேண்டும் என்­பதில் நாம் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து உடன்­ப­டு­கிறோம். இந்த விட­யத்­திலும் எந்த கருத்து முரண்­பாட்­டுக்கும் இட­மில்லை.

இந்த விட­யங்கள் அனைத்தும் மக்கள் பணம், பொது நிதி தொடர்­பா­னதும் நாடும் பாரா­ளு­மன்­றமும் கரி­ச­ணை­யு­டை­ய­து­மான விட­ய­மாகும். மக்­களும் பாரா­ளு­மன்­றமும் இந்த விட­யத்தில் கொண்­டுள்ள அக்­க­றை­யா­னது இந்த பாரா­ளு­மன்­றத்­தி­லான விவாதம் விரைந்­த­வொரு சந்­தர்ப்­பத்தில் எடுத்­துக்­கொள்­ளப்­ப­டாமல் இருப்­பதன் மூலம் இந்த விடயம் எந்த விதத்­திலும் திசை­தி­ருப்­ப­டு­வதை நான் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

பிணை­முறி விவ­காரம் தொடர்­பான ஆணைக்­குழு அறிக்கை மட்­டு­மல்­லாது, பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையும் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். ஆகவே இரு அறிக்­கை­களும் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு இரு அறிக்­கை­களும் பாரா­ளு­மன்­றத்தில் விவாத்­திக்­கப்­பட்டு விட­யங்­களின் அடிப்­படை வரை செல்ல வேண்டும். அது மட்­டு­மல்­லாது, கடந்த காலத்­திலும் தற்­போதும் இந்த நாட்டில் இழைக்­கப்­பட்ட அனைத்து ஊழல் மோச­டிகள் தொடர்­பிலும் விசா­ரிக்­கப்­பட்டு உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட வேண்டும்.

ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் பகி­ரங்­க­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருக்­காத சந்­தர்ப்­பங்­களும் இந்த நாட்டின் வர­லாற்றில் இருந்­தி­ருக்­கின்­றன. பல்­வேறு ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அந்த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்ட போதிலும் அந்த அறிக்­கைகள் பகி­ரங்­க­மா­ன­தாக வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

குறைந்­தது இந்த அறிக்­கை­யி­லுள்ள உள்­ள­டக்­கங்­க­ளை­யா­வது வெளி­யிட்­ட­மைக்­காக ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அர­சாங்­கத்­துக்கும் நான் பாராட்டு தெரி­விக்­கிறேன். முழு அறிக்­கை­யையும் வெளி­யிட்டு அது தொடர்பில் விவா­த­மொன்றை நடத்­து­மாறும் வலி­யு­றுத்­து­கிறேன். விவாதத்தை தவிர்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நாட்டு மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படுத்தப்படக்கூடாது. மக்களுக்கு விடயங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இது மக்களின் நிதியாகும். ஆகவே,அறிக்கை தொடர்பில் இந்த பாராளுமன்றம் என்ன சொல்ல வேண்டும் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.  

 

 

இரு­ முறை உரை­யாற்­றிய பிர­தமர் ரணில்

 

(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

பாரா­ளு­மன்­றத்தில் எழுந்த சர்ச்­சையை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது உரையை இரு முறை நிகழ்த்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான விசேட அமர்வின் போது ஆரம்­பத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­று­வ­தற்கு எதி­ர­ணி­யினர் கடு­மை­யான எதிர்ப்­பு­களை வெளி­யிட்­டனர்.

எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எம்.பிக­ளுக்­கி­டையில் மோதல் ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருந்த சர்ச்­சை­யான நிலை­மை­களின் போதும் தனது உரையை நிறைவு செய்­யாமல் தொடர்ந்து உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்தார். இதனை அடுத்து உரையை இடை­யூறு ஏற்­பட்­ட­மை­யினால் உரை தெளி­வாக எடுத்து கூற முடி­ய­வில்லை என்ற கார­ணத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு 10 மணி­நேரம் சபை ஒத்­தி­வைக்­கப்­பட்ட பின்னர் சபை நட­வ­டிக்­கைகள் மீள கூடி­யதன் பின்­னரும் பிர­தமர் மீண்டும் உரை­யாற்­றினார்.

இதன்­போது எதி­ர­ணி­யினர் கடு­மை­யான வாதங்களை முன்வைத்தனர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையை தொடர்ந்து ஆற்றினார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-11#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 கொள்ளையரும், ரவுடிகளும்நிறைந்துள்ள   ஸ்ரீலங்கா  பாராளுமன்றத்தில்   இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களிடம் இருப்பதைத்தான் அவர்களால் மற்றவருக்கு கொடுக்க முடியும்.

17 hours ago, நவீனன் said:

இது என்ன கலா­சாரம்?

ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரின் மோதல்­களை கட்­டப்­ப­டுத்த முனைந்­து­கொண்­டி­ருந்த மகிந்­தா­னந்த அழுத்­க­மகே, ரோகித்த அபே­கு­ண­வர்த்­தன ஆகியோர் இது என்ன அர­சியல் கலா­சாரம், இப்­படி மோதிக்­கொள்­வதில் என்ன இருக்­கின்­றது என்று குறிப்­பிட்­ட­தோடு இவற்­றுக்­கெல்லாம் சபா­நா­ய­கரே பொறுப்­புச்­சொல்ல வேண்டும் என்று கூறி நிலை­மை­களை சுமூ­க­மாக்க முனைந்­தனர்.

இது சிங்கள-பௌத்த கலாச்சாரம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.