Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம்

Featured Replies

 
26731106_2310502475644002_86165064309298

பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம்

 
 

பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

IMG-371ef5d0662ed2ad0517c648cd2eae75-V.j

 

IMG-c1e756b3e68193957552f5155e61ede5-V.j

IMG-cf5e88f782ac407c15d21fd16e5f754e-V.j

26230272_2310502098977373_6839278267682826230401_2310508172310099_5897936400506026230416_2310503552310561_8343541835473826230715_2310502018977381_7423561708770626231233_2310503098977273_2685647826446526239930_2310507808976802_5774940359336726730592_2310503332310583_4168176303357526730893_2310502742310642_3714820294625526731129_2310502698977313_2457238379819526731621_2310502878977295_3468366139305726733504_2310503238977259_78853187816706

http://newuthayan.com/story/62619.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 

பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:
 
 

வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

http://newuthayan.com/story/62619.html

இணைய தளங்களில் நாங்கள் தமிழ் உணர்வு காட்டினாலும், தலைவர் பிறந்த தேசம்,காலத்தின் தேவை கருதி நிகழ்காலத்தோடு ஒட்டி ஓடுகிறது!

...அதை புரிந்துகொள்ளூம்வரை ஏற்கனவே நண்பர்களாயிருந்த இணையவாசிகள், கருத்து மோதல்களால் முட்டிமோதி, இணையவழி தடங்களில் எதிரிகள் ஆகி ஏற்கனவே இருந்த நண்பர்களை இழந்து வாழ்வதே  காலத்தின் தீர்ப்பாக தொடரும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நவீனன் said:

இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சிங்கள அமைச்சருக்கு இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சிங்கள அமைச்சருக்கு இதில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன ?

அவர் கலந்து கொண்டாரா, கலந்து கொள்ள வைக்கபட்டிருப்பாரா பெருமாள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

கலந்து கொள்ள வைக்கபட்டிருப்பாரா

இதில் இரண்டாவதுதான் விடை .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

இதில் இரண்டாவதுதான் விடை .

தாயகம் எவரையும்பற்றியும் கவலைபடாமல் ஏதோ முடிவெடுக்க தயாராகிவிட்டது என்றே தோன்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜன் தனக்குள்ள செல்வாக்கைக் காட்ட அமைச்சரை கொண்டுவந்திருப்பார். பட்டம் விடும் போட்டியிலும் அரசியல்வாதிகள் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

தாயகம் எவரையும்பற்றியும் கவலைபடாமல் ஏதோ முடிவெடுக்க தயாராகிவிட்டது என்றே தோன்றுகிறது!

இதில் கிருபனின் கருத்தே எனதும் mr.valavan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அங்கஜன் தனக்குள்ள செல்வாக்கைக் காட்ட அமைச்சரை கொண்டுவந்திருப்பார். பட்டம் விடும் போட்டியிலும் அரசியல்வாதிகள் தேவையா?

ஆனால் அதை தடுக்க இனிமே யாரும் இல்லை என்பதே செய்தி சொல்லும் சேதி!

Just now, பெருமாள் said:

இதில் கிருபனின் கருத்தே எனதும் mr.valavan

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பாட்டுப் போட்டே மைத்திரிக்கு ரீல்விட்ட அங்கஜன்...அமைசருக்கு பிரபாகரன் வீடு காட்டுகிறேன் என்று கூட்டிவந்திருப்பார்...சில்லறை விடயங்களையிட்டு கவலைபடக்கூடாது.....இது ஒரு குப்பை வண்டிதள்ளுகிற தேர்தலுக்கே இந்த கெடுபிடி....இத்துடன் ஒரு முடிவும் வரலாம்.....

  • தொடங்கியவர்
 
26219994_1765501726794353_81942848371805

பலரையும் ஈர்த்த பட்டம்!!

வல்வெட்டித்துறையில் நேற்று இடம்பெற்ற பட்டம் விடும் போட்டியில் பலரையும் ஈர்த்த பட்டம் இது.

http://newuthayan.com/story/62708.html

  • தொடங்கியவர்

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்டம் ஏற்றும் போட்டி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்டம் ஏற்றும் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. குறித்த போட்டியில் பல விதமான பட்டங்கள் அறுபது ஏற்றப்பட்டன. அவற்றில் பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது. அந்த பட்டத்தினை வடிவமைத்த ம.பிரசாந்த்க்கு 15ஆயிரம் ரூபாய் பணமும் , 1பவுண் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

IMG_9387.jpg?resize=800%2C600

அன்னப்படகு பட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது. அதனை வடிவமைந்த ம.ஆரோக்கிக்கு அரை பவுண் தங்க நாணயமும் , 10ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுக்கொண்டது. அதனை வடிவமைத்த வெ.ராஜேந்திரனுக்கு துவிசக்கர வண்டி ஒன்றும் , 5ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

IMG_9326.jpg?resize=800%2C600IMG_9328.jpg?resize=800%2C600IMG_9332.jpg?resize=800%2C600IMG_9353.jpg?resize=800%2C600IMG_9364.jpg?resize=800%2C600IMG_9380.jpg?resize=800%2C600IMG_9383.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/61374/

வல்லை பட்டப் போட்டியின் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பட்டங்கள்!

 

வல்லை பட்டப் போட்டியின்  முதல் மூன்று இடங்களைப் பெற்ற பட்டங்கள்!

வல்லை உதய சூரியன் கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்ற பட்டப் போட்டியில் இடம்பெற்ற பட்டங்களில் வெற்றிபெற்ற பட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி போட்டியில் இடம்பெற்ற 60 பட்டங்களில் 1 ஆம் இடத்தினை பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் பெற்றுள்ளது.

இப் பட்டத்தினை ஏற்றிய ம.பிரசாந்திற்கு 15 ஆயிரம் ரூபாவும் 1 பவுண் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.இப்பட்டம் மூன்றாவது தடவையாகவும் முதல் பரிசிலினை பெற்று வருகின்றது.

வல்லை பட்டப் போட்டியின்  முதல் மூன்று இடங்களைப் பெற்ற பட்டங்கள்!

2 ஆம் இடத்தினை அன்னப்படகு பட்டம் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய ம.ஆரோக்கி என்பவருக்கு அரைப்பவுண் தங்கக் காசும் 10 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்பட்டது.

3 ஆம் இடத்தினை உருமாறும் ரான்ஸ்போமர் பெற்றுள்ளது. இப்பட்டத்தினை ஏற்றிய வெ.ராஜேந்திரன் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாவும், சைக்கிள் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, சிறப்பு விருந்தினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழ்வை பெருமளவான மக்கள் பார்வையிட வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வல்லை பட்டப் போட்டியின்  முதல் மூன்று இடங்களைப் பெற்ற பட்டங்கள்!

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/vallai-padda-event-14

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.