Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி!

Featured Replies

விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி!

 

பொங்கல் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம்(14.01.2018) வல்வெட்டித்துறையின் பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமானமானது, விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது, விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவமானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி!

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பட்டத் திருவிழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வருகை தந்த, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர பயணித்த விமான இலங்கை விமானப்படை விமானத்தின் விமானிக்கு, பலாலி விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய நிலையில் தரையிறங்கும் போது, விமானத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என, கொழும்பு சிங்கள ஊடகமான மௌவிம (mawbima) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு செல்லவிருந்த போதிலும், தலைமன்னர் நோக்கி விமானி விமானத்தை கொண்டு சென்றுள்ளார். பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, தலைமன்னார் தீவுக்கு அருகில் விமானம் செல்வது குறித்து அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் செல்லும் வழி தனக்கு தெரியாதென விமானி குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் கூகிள் வரைப்படத்தின் உதவியுடன் விமானத்தை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு விமானி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கொழும்பில் இருந்து பலாலி செல்ல 45 நிமிடங்கள் மாத்திரமே செலவிடப்படுகின்ற நிலையில், நேற்றைய தினம் விமான நிலையத்தை சென்றடைய 2 மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்க வேண்டிய சந்தர்ப்பத்தில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போய் விட்டமையே, ஆபத்தான நிலைமைக்கு முக்கிய காரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் அமைச்சரின் அதிகாரிகள் கொழும்பில் இருந்து இரண்டு வாகனங்களை வரவழைத்துள்ளனர். அதற்கமைய மீண்டும் நேற்றிரவு வாகனத்தில் அமைச்சர் கொழும்பிற்கு சென்றுள்ளார்

https://news.ibctamil.com/ta/internal-affairs/pilot-around-sky-longtime-does-not-know-airport

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வாசகர்களை முட்டாளாக்கின்றனர் போல இருக்கு....ஊட்கவியாளர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் விளம்பரம் தேடலாம் .

  • தொடங்கியவர்

இந்த செய்தியை என்னாலும் நம்பமுடியவில்லை. அதனால் இன்று காலையில் இங்கு இணைக்கவில்லை.

ஆனால் இப்ப பல தமிழ் ஊடகங்களிலும், ஒரு சில ஆங்கில ஊடகங்களிலும் இந்த செய்தி இருக்கு..:rolleyes:

21 minutes ago, putthan said:

என்ன வாசகர்களை முட்டாளாக்கின்றனர் போல இருக்கு....ஊட்கவியாளர்கள்....

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நவீனன் said:

இந்த செய்தியை என்னாலும் நம்பமுடியவில்லை. அதனால் இன்று காலையில் இங்கு இணைக்கவில்லை.

ஆனால் இப்ப பல தமிழ் ஊடகங்களிலும், ஒரு சில ஆங்கில ஊடகங்களிலும் இந்த செய்தி இருக்கு..:rolleyes:

 

இது உண்மை என்றால்  உள்ளூர் தனியார் விமானங்களை தவிர்ப்பது நல்லது..

  • தொடங்கியவர்

ஓம் அதுதான் நடந்திருக்கு. அவர் விமானப்படை விமானத்தில் அடுத்தநாள் காலை பிரயாணம் செய்து உள்ளார்.

 

 

Amaraweera refuses helicopter, returns on SLAF flight

 

 

 

image_1516000260-88a25e75f3.jpgFisheries and Aquatic Resources Development Minister Mahinda Amaraweera, who had refused a private helicopter, had returned on an SLAF routine flight this morning from Palali, Air Force Spokesman Capt. Gihan Seneviratne said.

The pilot of the private helicopter, which carried the Minister yesterday to Palali, had reportedly lost way to the runway and had been airborne for over 45 minutes searching for the Palali runaway to land.

Speaking to the Daily Mirror, Air Force Spokesman Capt. Gihan Seneviratne said that the Minister had come to Palali to attend a Thai Pongal function, however had requested the support of the Air Force following the incident.

Capt. Seneviratne said the Minister returned to Colombo this morning via a scheduled flight as he refused to travel in the same helicopter.

He said Ministers had air travel privilege only with the consent of the Ministry of Defence (MoD).

“Some media is attempting to tarnish the Air Force image using the incident. Ministers can use the Air Force aircraft with the consent of the MoD. We brought the Minister back using a scheduled flight from Palali to Colombo and there is nothing unusual in this,” he said. (Thilanka Kanakarathna)

 

http://www.dailymirror.lk/article/Amaraweera-refuses-helicopter-returns-on-SLAF-flight-143943.html

17 minutes ago, putthan said:

இது உண்மை என்றால்  உள்ளூர் தனியார் விமானங்களை தவிர்ப்பது நல்லது..

 

  • தொடங்கியவர்

பலாலி செல்ல விமா­னிக்கு வழி­தெ­ரி­யாதாம் : மயி­ரி­ழையில் உயிர்தப்­பினார் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர

Mahinda-Amara-3-604ec5ed4165c02217385a44c57902b1f8f08803.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரு மான மஹிந்த அம­ர­வீர யாழ். நோக்கி பய­ணித்த தனி யார் உலங்கு வானூர்­தியின் விமா­னிக்கு வழி தவ­றி­யதால் ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய விபத்­தி­லி­ருந்து அமைச்சர் உள்­ளிட்ட குழு­வினர் மயி­ரி­ழையில் உயிர் தப்­பு­யுள்­ளனர்.  

இந்­நி­லையில் குறித்த விமா­னியின் விமானம் செலுத்­து­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­திரம் தற்­கா­லி­க­மாக இரத்து செய்­யப்­பட்டு உடன் விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த விசா­ர­ணைக்கு சிவில் விமான சேவைகள் அதி­கார சபையின் சிறப்புக் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக சிவில் விமான சேவைகள் அதி­கார சபையின் பணிப்­பாளர் நாயகம் எம்.எம்.சி நிமல்­சிறி கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந்­நி­லையில் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து அமைச்சர் மஹிந்த அம­ர­வீ­ரவை பாது­காப்­பாக கொழும்­புக்கு அழைத்து வரு­வற்­காக தலை­யீடு செய்து நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக விமா­னப்­ப­டையின் ஊடகப் பேச்­சாளர் குரூப் கெப்டன் கிஹான் சென­வி­ரட்ன கேச­ரிக்கு தெரி­வித்தார்.

அதன்­படி பலா­லி­யி­லி­ருந்து கொழும்பு நோக்கு நேற்று வருகை தந்த விமா­னப்­ப­டைக்கு சொந்­த­மான சிறி­ய­ரக விமா­னத்தில் அவரை அழைத்து வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக குரூப் கெப்டன் கிஹான் சென­வி­ரத்ன மேலும் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர நேற்று முன்­தினம் இடம்­பெற்ற பொங்கல் விழாவில் கலந்­து­கொள்ள யாழ். நோக்கி சென்­றுள்ளார். தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு சொந்­த­மான உலங்கு வானூர்த்தி ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு நேற்று முன்­தினம் காலை வேளையில் யாழ். நோக்கி பய­ணித்­துள்ளார்.

குறித்த உலங்கு வானூர்த்­தி­யா­னது பய­ணத்தை ஆரம்­பித்து 45 நிமி­டங்­களில் பலாலியை சென்­ற­டைந்­தி­ருக்க வேண்டும். எனினும் அந்த உலங்கு வானூர்த்தி ஒரு மணி நேரத்தைக் கடந்தும் பலா­லியை சென்­ற­டை­யா­த­தை­ய­டுத்து அது தொடர்பில் அமைச்­சரின் பிர­தான பாது­காப்பு அதி­கா­ரிக்கு சந்­தேகம் எழுந்­துள்­ளது. அத­னை­ய­டுத்து குறித்த பாது­காப்பு அதி­காரி விமா­னி­யிடம் அது தொடர்பில் வின­வி­யுள்ளார். இதன் போது உலங்கு வானூர்த்­தி­யா­னது தலை­மன்னார் பகு­தியில் பய­ணித்து கொண்­டி­ருந்­தது. பிர­தான பாது­காப்பு அதி­கா­ரியின் விசா­ர­ணையின் போது விமானி வழிப்­பாதை தெரி­யாது என பதி­ல­ளித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து உலங்குவானூர்திக்குள் அச்­ச­ நி­லைமை ஏற்­பட்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் நிலை­மையை சமா­ளித்த பாது­காப்பு அதி­காரி உடன் தனது கைய­டக்க தொலை­பே­சியில் கூகுள் வரைப்­பட உத­வி­யுடன் பலாலி விமான நிலை­யத்தை நோக்கி பய­ணிக்க விமா­னிக்கு வழி­காட்­டி­யுள்ளார்.

சுமார் இரு மணி நேரம் வானில் பய­ணித்த குறித்த வானூர்த்தி பலாலி விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அச்­சந்­தர்ப்­பத்தில் வானூர்த்­தியின் எரி­பொ­ரு­ளா­னது நிறைவு கட்­டத்தை எட்­டி­யி­ருந்­த­தா­கவும் அறி­ய­மு­டி­கி­றது.

குறித்த உலங்கு வானூர்த்­தியை தரை­யி­றக்க விமா­னப்­ப­டை­யி­னரின் உத­வியும் பெறப்­பட்­ட­துடன் அவ்­வா­னூர்தி தரை­யி­றங்க எடுத்த கால அள­வினை அவ­தா­னத்தில் கொண்ட போது ஏற்­பட்ட சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் அதற்­கான உத­வி­களை வழங்க முடிந்­த­தாக விமானப் படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் கிஹான் சென­வி­ரத்ன தெரி­வித்தார்.

குறித்த உலங்கு வானூர்த்­தி­யா­னது விமானப் படைக்கு சொந்­த­மா­னது என தக­வல்கள் பரப்­பப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய அவர் அது விமா­னப்­ப­டைக்க சொந்­த­மா­னது அல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லை­யி­லேயே அமைச்சர் குறித்த தனியார் உலங்கு வானூர்­தியில் கொழும்பு திரும்­பு­வதை நிரா­க­ரித்த நிலையில் விமா­னப்­படை தலையீடு செய்து விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் கொழும்பு நோக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்தாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அமைச்சரின் பாதுகாப்பு விவகாரம் என்பதால் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவும் சிறப்பு அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-16#page-1

1 hour ago, நவீனன் said:

The pilot of the private helicopter, which carried the Minister yesterday to Palali, had reportedly lost way to the runway and had been airborne for over 45 minutes searching for the Palali runaway to land.

உலங்கு வானூர்திகள் இறங்க ஓடுபாதைகள் தேவையில்லை!
இறங்கு தளம் அல்லது சமதரை போதும்.

மன்னார் வளைகுடாவில் விமானி இலவச டூர் அடிச்சிருப்பார்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் 'news.ibctamil.com' வடிவமைத்த நவீன உலங்கு வானூர்தியா.?

விமான நிலையம் தெரியாது நீண்ட நேரம் வானில் சுற்றிய விமானி!

 

  • தொடங்கியவர்

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

 

sakurai-heliபலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழாவில் பங்கேற்க, அமைச்சர் மகிந்த அமரவீர தனியார் நிறுவனம் ஒன்றின் உலங்குவானூர்தியில் பலாலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

உலங்குவானூர்தியை விமானி மன்னார் தீவில் தரையிறக்க முயன்ற போது, தான் அவருக்கு பலாலிக்கு செல்லும் வழி தெரியாது என்று தெரிய வந்தது.

இதையடுத்து, சுமார் 2 மணிநேரம் அலைக்கழிந்த பின்னர், எரிபொருள் தீர்ந்த நிலையில், உலங்குவானூர்தி பலாலியில் தரையிறக்கப்பட்டது.

sakurai-heli

விமானப்படை மறுப்பு

அதேவேளை, அமைச்சரை ஏற்றிச் சென்றது சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியே என்று வெளியான செய்திகளை சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன மறுத்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் பலாலிக்கு விமானப்படை விமானங்கள் எதுவும் பயணம் மேற்கொள்ளவில்லை. சிவில் விமானம் ஒன்றே அன்றைய நாள் பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விசாரணைக்குழு

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு, சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“விசாரணைகள் நடந்து வரும் நிலையில், குறிப்பிட்ட விமானி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இதுபொறுப்பற்ற தன்மை மாத்திரமன்றி, சரியான விமானப் பயணத் திட்டம் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல், விமானி ஒருவர் பயணத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானதும் கூட.

முக்கிய பிரமுகர் என்பதற்காக மாத்திரமன்றி, தனியொரு பயணியின் உயிருக்கும் கூட விமானி தீங்கிழைக்கக் கூடாது.

பாதை தெரியாமல் விமானி பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்குபடுத்தியது யார்?

இதற்கிடையே, சகுராய் எவியேசன் என்ற நிறுவனத்தின் உலங்குவானூர்தியிலேயே அமைச்சர் மகிந்த அமரவீர பலாலிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்றும், குறித்த விமானத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஒழுங்கு செய்திருந்தனர் என்றும், கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/01/16/news/28505

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.