Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி புதுமுறிப்பில் விபத்து – இளைஞர் பலி – தலைக்கவசம் அணிந்திருந்தால் இறப்பை தடுத்திருக்கலாம் :

Featured Replies

கிளிநொச்சி புதுமுறிப்பில் விபத்து – இளைஞர் பலி – தலைக்கவசம் அணிந்திருந்தால் இறப்பை தடுத்திருக்கலாம் :

MURIPPU-3.jpg?resize=800%2C454
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி புதுமுறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று(18) பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தவிபத்தில் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிம் தியாகராசா வயது 28 என்பவரே பலியாகியுள்ளார்

உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

MURIPPU-4.jpg?resize=800%2C454

உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு ஒரு உந்துருளியில் தலைக் கவசம் இன்றி பயணித்த மூன்று இளைஞர்கள் பிரதான சந்தியில் பேரூந்தின் பின்பக்கமாக வீதியில் ஏற முற்பட்ட போது உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த இளைஞர்கள் தலைக் கவசம் அணிந்து உந்துருளியில் பயணித்திருந்தால் இறப்பை தடுத்திருக்க முடியும் எனவும் விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

MURIPPU-1.jpg?resize=800%2C454MURIPPU-2.jpg?resize=800%2C454

http://globaltamilnews.net/2018/62246/

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

 

விபத்து மட்டும் தான் மிஞ்சி நிற்கிறது நாளுக்கு நாள் அகால மரணங்கள் தொடர்து கொண்டே இருக்கிறது tw_cold_sweat:

  • தொடங்கியவர்
  •  
  • 24 மணி நேரத்தில்; 6 விபத்துக்களில் -6 பேர் உயிரிழப்பு!!
accident-750x400.jpg

24 மணி நேரத்தில்; 6 விபத்துக்களில் -6 பேர் உயிரிழப்பு!!

 

கிளி­நொச்சி, அக்­க­ரா­ய­னில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். வீதி­யோ­ரம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த பேருந்­து­டன் மோட்­டார் சைக்­கிள் மோதியே விபத்து நடந்­துள்­ளது.

அதே­வேளை, கடந்த 24 மணி நேரத்­துக்­குள் நாட்­டில் நடந்த 6 விபத்­துக்­க­ளில் 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று பொலிஸ் ஊட­கப் பிரிவு தெரி­வித்­தது.

அநு­ரா­த­பு­ரம், ஹப­ரா­துவ, தலாத்­து­ஓய, சிகி­ரியா, கிளி­நொச்சி, கல்­குடா ஆகிய பிர­தே­சங்­க­ளில் இந்த விபத்­துக்­கள் நடந்­துள்­ளன.

கிளி­நொச்சி
கிளி­நொச்­சி­யி­லி­ருந்து அக்­க­ரா­யன் நோக்­கிப் பய­ணித்த மோட்­டார்­சைக்­கிள் வீதி­ய­ரு­கில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த பேருந்து ஒன்­று­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. மோட்­டார்­சைக்­கி­ளின் பின்­பு­றம் வந்த டிரக்­டர் மோட்­டர்­சைக்­கிள் மீது மோதி­யது. மோட்­டார்­சைக்­கி­ளில் பின்­னி­ருக்­கை­யில் பய­ணித்­த­வர் உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்
நாக­ராசா (வயது-20) என்ற இளை­ஞரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

 

அனு­ரா­த­பு­ரம்
நேற்­று­முன்­தி­னம் முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அநு­ரா­த­பு­ரம் தொட­ருந்து நிலை­யத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிப் பய­ணித்த தொட­ருந்­தில் மோதுண்டு நப­ரொ­ரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். அநுர ரஞ்சி எனப்­ப­டும் 44 வய­து­டைய நபரே இதன்­போது உயி­ரி­ழந்­த­வ­ரா­வார்.

ஹப­ரா­துவ
காலி, ஹப­ரா­துவ பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் காலை 9 மணி­ய­ள­வில் காலி­யி­லி­ருந்து மாத்­தறை நோக்­கிப் பய­ணித்த தனி­யார் பேருந்து பெண்­ணொ­ரு­வர் மீது மோதி­யது. அந்­தப் பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். 73 வய­து­டைய புஸ்பா ரஞ்­சனி என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

தலாத்­து­ஓய
கண்டி, தலாத்­து­ஓய பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முச்­சக்­கர வண்டி விபத்­தில் ஒரு­வர் உயி­ர­ழந்­தார்.
முச்­சக்­கர வண்டி கட்­டுப்­பாட்டை இழந்து இரு­வர் மீது மோதி, மின்­கம்­பத்­து­ட­னும் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. பலத்த காய­ம­டைந்த இரு­வ­ரும் மருத்­து­வ­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். அதில் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். தொட­நு­வ­ர­வைச் சேர்ந்த 73 வய­து­டைய கர­லி­யத்த என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

சிகி­ரியா
தம்­புள்ளை, சிகி­ரி­யா­வில் நேற்­று­முன்­தி­னம் வானொன்று கட்­டுப்­பாட்டை இழந்து லொறி­யொன்­று­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. வானில் பின் ஆச­னத்­தில் அமர்ந்து பய­ணித்த ஒரு­வ­ரும், லொறி­யின் சார­தி­யு­டன் பய­ணித்த மற்­று­மொ­ரு­வ­ரும் காய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் ஒரு­வர் சிகிச்சை பய­ணின்றி உயி­ரி­ழந்­தார்.

கல்­குடா
மட்­டக்­க­ளப்பு, கல்­குடா பகு­தி­யில் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து பய­ணித்த முச்­சக்­கர வண்டி மின் கம்­ப­மொன்­று­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. அதில் முச்­சக்­கர வண்­டி­யின் பின்­னி­ருக்­கை­யில் பய­ணித்­த­வர் உயி­ரி­ழந்­தார்.நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த விபத்­தில் கல்­கு­டா­வில் வசிக்­கும் 37 வய­து­டைய முத்­து­லிங்­கம் சூரி­ய­கு­மார் என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார் என்று பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­தது.

http://newuthayan.com/story/63769.html

  • கருத்துக்கள உறவுகள்


ஒரு மோட்டார் சைக்கிள் மூன்று பேர் , அதுவும் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்றுள்ளார்கள். தவறு இளைஞர்களுடைதே. 

இது சிங்களவனின் சதி என்பதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, colomban said:


ஒரு மோட்டார் சைக்கிள் மூன்று பேர் , அதுவும் தலைக்கவசம் இன்றி வேகமாக சென்றுள்ளார்கள். தவறு இளைஞர்களுடைதே. 

இது சிங்களவனின் சதி என்பதை என்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சிங்களத்தின்ரை சதியெண்டு இஞ்சை ஆர் சொன்னது????? <_<

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சிங்களத்தின்ரை சதியெண்டு இஞ்சை ஆர் சொன்னது????? <_<

மொட்டாக்குப் போடுவதாலும், தொப்பி அணிவதாலும்  முசுலீம்களை இனம்கண்டு  சிங்களம் அவர்கள்மேல் தாக்குதல் தொடுப்பது தெரிந்ததே. தலைக் கவசமும் ஒரு தொப்பிதானே...! தாக்குதலில் இருந்து தப்புவதற்கு இந்த இளைஞர்களும் அதனை அணியாமல் விட்டிருக்கலாம். :shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.