Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய டாக்ரருக்கு 175 வருட சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(CNN)If you happen to see Chipper Jones, Jim Thome, Vladimir Guerrero or Trevor Hoffman today, tell them congrats for making it into baseball's Hall of Fame. Here's what else you need to know to Get Up to Speed and Out the Door. (You can also get "5 Things You Need to Know Today" delivered to your inbox daily. Sign up here.)

1. Larry Nassar sentencing

Lou Anna Simon, Michigan State University's president, resigned just hours after Larry Nassar was sentenced to up to 175 years in prison for his decades of abuse of young female athletes. Critics lashed Simon, accusing her of mishandling the scandal involving Nassar, who worked as a doctor at the school.
Nassar was also the former doctor for USA Gymnastics, and when Judge Rosemarie Aquilina sentenced him -- after a week's worth of victim statements from 150 women and girls -- she pretty much threw the book at him. "I've just signed your death warrant," she said. Aquilina also read a letter that Nassar wrote to her in which he accused the women of lying and said he was "manipulated" into a guilty plea. After reading it, she literally tossed it aside.

வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி டாக்டருக்கு 175 ஆண்டு சிறை

 

 
Larry%20Nassarjpg

லாரி நாசர். 175 ஆண்டுகள் சிறைத் தண்டனை.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணி யின் முன்னாள் டாக்டர் லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிக்ஸிகன் மாகாணம், பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் லாரி நாசர் (54). மருத்துவரான அவர் 1986-ல் ஜிம்னாஸ்டிக் தேசிய அணியின் மருத்துவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 10 ஆண்டு காலத்தில் மூத்த மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை என்ற பெயரில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை டாக்டர் லாரி நாசர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் டாக்டர் லாரியின் பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதுதொடர்பாக எப்பிஐ போலீஸார் விசாரித்தனர். மிக்ஸிகன் மாகாணம் இங்ஹாம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி ரோஸ்மேரி அகுலினா வழக்கை விசாரித்தார்.

விசாரணையின்போது நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 156 முன்னாள் வீராங்கனைகள் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஷான் ஜான்சன் உள்ளிட்டோரும் லாரி நாசருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதி ரோஸ்மேரி நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது லாரி நாசருக்கு 175 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குழந்தைகள் ஆபாச வீடியோ காரணமாக அவருக்கு ஏற்கெனவே 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனது ஆயுள் காலம் முழுவதையும் லாரி நாசர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/article22523994.ece?homepage=true

நல்ல தண்டனை. தன்னை நம்பி வந்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு மரண தண்டனை கொடுத்து இருந்தால் சாவு அவரை விடுவித்து இருக்கும். இனி காலம் பூராவும் களி தின்ன வேண்டியது தான்.

நேற்று பிபிசி யில் நீதிமன்றத்திற்கு வந்த  ஒரு பெண்ணின் உரையை கேட்டேன்; கண் கலங்கி விட்டது. சில சிறுமிகளுக்கு தம் மேல் நிகழ்ந்தது பாலியல் துஷ் பிரயோகம் என்பதை கூட புரியும் வயது இருக்கவில்லை. வளர வளர தான் புரிய முடிந்தது.

அமரிக்க ஜெயில் இவருக்கு மிச்ச கைதிகள்  Jailhouse justice கொடுப்பார்கள். அப்ப புரியும்

`என்றும் மறக்க முடியாத ரணங்களைக் கொடுத்த சாத்தான்' - நீதிபதி முன்பு கண்ணீர்விட்ட வீராங்கனைகள்

 
 

அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிரான வழக்கில் 156 பெண்கள் சாட்சி கூறியிருப்பது அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

லாரி

 

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவராக இருந்தவர் லாரி நாசர். ஜிம்னாஸ்டிக் மாணவிகள் 7 பேருக்கு சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2017 நவம்பர் மாதம் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. லாரிக்கு எதிரான வழக்கு நீதிபதி ரோஸ்மரி முன்னிலையில் கடந்த சில நாள்களாக விசாரிக்கப்பட்டுவருகிறது. 7 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகதான் லாரி மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் லாரியால் பாதிக்கப்பட்ட 156 பெண்கள் சாட்சி கூறியிருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாட்சி அளித்த 156 பெண்களில் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளும் அடக்கம். லாரிக்கு எதிராகப் பெண்கள் சாட்சி கூறிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சாட்சி கூறிய பெண்களில் சிலர் பேசியது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. அவற்றில் சிலரின் சாட்சியங்கள் பின்வருமாறு...

கைல் ஸ்டீபன்
''லாரி நாசர் என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியபோது எனக்கு வயது 6. எங்கள் குடும்ப நண்பரான லாரி மீது என் பெற்றொர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். லாரி என்னிடம் தவறாக நடந்துகொண்டதைப் பற்றி என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் நம்பவில்லை. எனக்கு நடந்தது என்ன என்பதை சரியாகச் சொல்லவும் தெரியவில்லை. ஆனால், இப்போது நான் வலிமையான பெண்ணாக வந்து நிற்கிறேன். எனக்கு நடந்ததை விவரிக்கிறேன்.''

மரோனே (லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க அணியில் முக்கிய வீராங்கனை)

''என் வாழ்க்கையில் இருண்ட நாள் அது. எனக்கு அப்போது 15 வயது. போட்டியில் பங்குபெற டோக்கியோவுக்கு விமானத்தில் சென்றேன். எங்களுடன் மருத்துவர் லாரி நாசரும் வந்திருந்தார். மறுநாள் காலை நான் கண்விழித்தபோது ஒரு தனி அறையில் லாரி நாசர் அருகில் இருந்தேன். பிறகுதான், அவர் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. நான் கண்விழித்தபோது இறந்துவிடுவேன் என்று நினைத்துப் பயந்தேன். லாரி நாசர், சிறுமிகளைச் சீரழித்த சாத்தான். என் மனதில் என்றும் மறக்க முடியாத ரணங்களை கொடுத்த சாத்தான்.''

வைபர்
''நான் லாரி நாசரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண். ஆனால், என்னை நான் அப்படி அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் ஒலிம்பிக் வீராங்கனை. ‘Victim' கிடையாது. எங்கள் அனைவருக்கும் நேர்ந்த இந்தக் கொடுமைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் பொறுப்பேற்க வேண்டும். இனி இப்படி நடக்கக் கூடாது.''

larry
 

இப்படியாக ஒவ்வொருவரின் சாட்சியும் ஆழமாக அழுத்தமாக நீதிபதி முன்னிலையில் பதிவானது. இதையடுத்துப் பேசிய நீதிபதி ரோஸ்மரி ‘லாரி நாசர், உன்னைத் தண்டிப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். உனக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கிறேன். இனி நீ சிறைக்கு வெளியே வரக் கூடாது. நீ சிறைக்கு வெளியே வாழத் தகுதியற்றவன். நான் உன் மரணத்துக்கு கையெழுத்திடுகிறேன்’ என்று கூறி தீர்ப்பு நகலில் கையெழுத்திட்டார். 

 

நன்றி - The Guardian

https://www.vikatan.com/news/world/114522-175-years-prison-for-usa-gymnastics-team-doctor-larry-nassar.html

1 hour ago, நவீனன் said:

எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் கண் கலங்க வைக்குது

பாலியல் வன் கொடுமையை எதிர்க்க துணியும் பிள்ளைகளாக எங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொல்லை விவகாரம்: அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணி அதிகாரிகள் கூட்டாக பதவி விலகல்

பதிவு: ஜனவரி 27, 2018 04:27

 Share  Tweet   

பாலியல் தொல்லை புகாரில் சிக்கியதை தொடர்ந்து, அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணி அதிகாரிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
பாலியல் தொல்லை விவகாரம்: அமெரிக்கா ஜிம்னாஸ்டிக் அணி அதிகாரிகள் கூட்டாக பதவி விலகல்
 
வாஷிங்டன்:

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் டாக்டராக செயல்பட்டு வந்தவர் லேரி நாசர் (54). மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டியிலும் வேலை பார்த்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் வீராங்கனைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் அமெரிக்கா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்ற வீராங்கனை ஒருவர் இவர் மீது செக்ஸ் புகார் கூறியுள்ளார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, லேரி நாசருக்கு 175 வருடம், அதாவது 2,100 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் அணியின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர் என ஜிம்னாஸ்டிக் அணி செய்தி தொடர்பாளர் லெஸ்லி கிங் நேற்று தெரிவித்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மருத்துவரை தாக்க முயற்சித்த வீராங்கனைகளின் தந்தை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Father-of-female-artists-3.jpg?resize=24

அமெரிக்காவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவரை, வீராங்கனைகளின் தந்தையொருவர் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்த வேளையில் இவ்வாறு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் தேசிய அணியின் மருத்துவர் மீது இவ்வாறு பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Father-of-female-artists-2.jpg?resize=30
மிச்சிகன் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் தந்தையொருவர் மருத்துவரை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார். லாரி நாசார் என்ற மருத்துவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

Father-of-female-artists-3-1.jpg?resize=
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளான Lauren மற்றும் Madison Margraves   ஆகிய இரண்டு மகள்களும் நீதிமன்றில் கண்ணீர் மல்க தமக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்த போது, அவர்களின் தந்தை மருத்துவரை தாக்குதவற்கு முயற்சித்துள்ளார். நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வீராங்கனைகளின் தந்தையை பிடித்து தாக்குதல் நடத்துவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Father-of-female-artists-4.jpg?resize=28Father-of-female-artists-5.jpg?resize=27

http://globaltamilnews.net/2018/64949/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.