Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்!

Featured Replies

ஒரு பொண்ணு தப்பு செய்யறதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிக்கணும்! கௌதம் மேனனின் ஒன்றாக நிறுவனம் வெளியிட்டுள்ள குறும்படம்!

maa

பதின் வயதினரை குழந்தைகள் என்பதா வளர்ந்தவர்கள் என்பதா? அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தங்களுடைய குழந்தைப் பருவத்தை மெள்ள இழந்து கொண்டிருக்கும் வளர் இளம் பருவத்தினர். புத்தம் புது இளைஞர்கள். இவ்வயதில் ஆண்களாகட்டும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, சதா சர்வ காலம் தன்னைப் பற்றியே அதிகம் சிந்திக்கும் மனப்பான்மை ஏற்படும். நான் எனது என்ற தன்னியல்பும், சுயம் சார்ந்த சிந்தனையும் தோன்றும் சமயம், மேலும் தன்னுடல் பற்றிய அதீத உணர்வுகள் உருவாகும் காலகட்டம் இது.

இந்த வயதில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் கண்ணாடியை கையாள்வது போலத்தான் அவர்களிடம் பழக வேண்டியிருக்கிறது. அவர்களை அதிக கண்டிப்புடன் வளர்த்தாலும் பிரச்னை, சுதந்திரமாக வளர்த்தாலும் பிரச்னை. காரணம் கண்டித்தால் மனம் உடைந்து அவர்களில் சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் தீவினையாக பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் சுட்டெரிக்கும். கண்டிக்காமல் போனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் பெற்றோர்களின் மீதும் முக்கியமாக தாயின் மீதும் தான் பழிச் சொற்கள் வந்து சேரும். என்ன வளர்த்திருக்கா ஒரு புள்ளைய என்ற சொற்றொடர் ஒரு தாயைத் துரத்துவது போல தந்தையைத் துரத்துவது இல்லை. மேலும் ஆண் பெண் அது சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி இணைந்து தவறு செய்தால் அதில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். முள்ளில் சேலை விழுந்தாலும், சேலையை முள் கிழித்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என்ற பழைய சொல்லாடல் என்றும் பொருந்தும். ஆனால் காலந்தோறும் அணுகுமுறை என்பது மாறிவருகிறது. 

அத்தகைய ஒரு அணுகுமுறையை அடித்தளமாக வைத்து, அண்மையில் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக எனும் தயாரிப்பு நிறுவனம் மூலமாக இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார். மா என்று தலைப்புடைய இக்குறும்படத்தை அன்புற்குரிய அம்மாவுக்கு என்று சமர்ப்பணம் செய்துள்ளார் கெளதம் மேனன். 'லட்சுமி’ குறும்படப் புகழ் இயக்குநர் சர்ஜுன் கே.எம் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில், சுதர்ஷன் ஸ்ரீநிவாஸனின் ஒளிப்பதிவில், சுந்தரமூத்தி கே.எஸ் இசையில் இக்குறும்படம் வலைஞர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து ட்ரண்டிங்கில் டாப் 5 வரிசையில் உள்ளது.

இக்காலகட்டத்துக்குத் தேவையான கதைக் களன். தைரியமான அணுகுமுறை. மகளாக அனிக்காவும் தாயாக கனி குஸ்ருதியும் நடித்துள்ளனர் (இவர் மிஷ்கினின் பிசாசு படத்தில் குடிகாரனின் மனைவியாக நடித்தவர்). இருவரின் இயல்பான நடிப்பும் உடல்மொழியும் இப்படத்திற்கு பெரிய பலம். பதின்வயதுக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு தரவல்ல இந்தக் குறும்படம் இதோ 

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/28/maa-a-short-film-produced-by-gowtham-vasudev-menon-onraaga-2852890.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர்போன்ற சிந்தனையுள்ள அம்மாக்கள் கிடைப்பது பதின்ம வயது பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்......!

அருமையான குறும்படம்......!

  • தொடங்கியவர்
3 hours ago, suvy said:

இவர்போன்ற சிந்தனையுள்ள அம்மாக்கள் கிடைப்பது பதின்ம வயது பெண்பிள்ளைகளுக்கு கிடைக்கும் வரம் என்றுதான் சொல்ல வேண்டும்......!

அருமையான குறும்படம்......!

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற அம்மா இருக்கின்றனரா என்ற கேள்விக்கு பதில் ஆச்சரியக்குறிதான்.

  • தொடங்கியவர்

குழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் 'மா' குறும்படம்

ma%20short%20movie

குறும்படத்தின் கதைக்களம் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. இதுதான் பேசவேண்டுமென்ற எந்தக் கட்டுப்பாட்டையும் அது உடைக்கத் தொடங்கிவிட்டது.

ஆண்பெண் உலகத்தின் சிடுக்குகளை வெவ்வேறுவிதமாக பேசித் தீர்க்க முற்படும் இந்த நவீன படைப்புவடிவத்தின் ஊடாக இன்னும் பல முயற்சிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவையெல்லாம் போதுமான பக்குவத்தோடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி 'தாம்பத்ய உறவு' கணவன் எனும் எல்லையை கடந்துசென்றதைப் பேசிய 'லக்ஷ்மி' குறும்படம் ஆயிரக்கணக்கான வலைவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைப்பற்றிய உரையாடல் முடிவதற்குள்ளாகவே அதன் இயக்குநர் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இன்னொரு குறும்படத்தோடு களம் இறங்கியுள்ளார். இக்குறும்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.

குறும்படத்தின் களம் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் ஒரிஜனல் வழங்கியுள்ள மா குறும்படம் ஹாக்கி டோர்னமெண்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ள 10ஆம் வகுப்புப் படிக்கும் பெண் அவளது வயதைத் தாண்டி நேரும் சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறாள்.

இக்குறும்பட இயக்குநரின் முதல் படமான 'லட்சுமி' படத்தின் ஆரம்பத்தில் வருவதுபோல கொஞ்சம் ரசாபாசமான காட்சிகள் இதில் ஏதுதும் இல்லையென்பது கொஞ்சம் ஆறுதல். விளைவைப் பற்றி அறியாமல் அவள் ஒரு தவற்றைச் செய்கிறாள். ஹாக்கி விளையாட்டின் நண்பனோடு விருப்பார்வத்தோடு ஈடுபடும் பாலியல் சேர்க்கைக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் குறும்படத்தின் காலம் தொடங்குகிறது.

அதனால் பிரச்சனையில்லை. மற்றபடி கர்ப்பமுற்றதை உணர்ந்தபிறகு அவள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதைக்களனாக அமைந்துள்ளதால் படம் கவனமாக ஒரு கவிதை போல காட்சிப்படுததப்பட்டுள்ளது.

இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஜெயகாந்தன், பாலச்சந்தர் படங்களில் 70கள் 80களிலேயே பார்த்தாகிவிட்டது. இந்தமாதிரி பிரச்சனைகளை தனது படைப்புகளில் முன்வைத்த அத்தகைய படைப்பாளிகள் அதைக் கடந்துபோவதற்காக பின்னிய காட்சிகள் புரட்சிக் காட்சிகளாக அந்நாட்களில் பார்க்கப்பட்டன.

ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அச்சிறு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட விரும்புகிறாள்.... இக்குறும்படத்தில் 15 வயது பெண்ணின் விருப்பம்தான் பிரச்சனை. விருப்பம் எந்த வயதில் வரவேண்டும் என்பதில் சமீபத்தில் பொதுவெளிகளில் உரையாடல் தொடங்கியுள்ளது. ஆனால் 15 வயதுவரை குழந்தைப் பருவம் உள்ளதாக சட்டம் சொல்கிறது. மேலும் இக்காலத்தின் உணவுப்பழக்கவழக்கத்தில் 7ஆம் வகுப்பு பெண்கூட வயதுக்கு வந்துவிடுகிறாள். எனவே அவளுடைய குழந்தைப்பருவம் இல்லையென்று எப்படி சொல்லமுடியும்?

15 வயதில் உடல் சார்ந்த விருப்பம் தவறில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது மட்டும்தான் தவறு என்று இத்திரைப்படம் சொல்கிறது.

பெண்ணின் தாய் இந்தமாதிரி மகளை அணுகும்விதம் மிகமிக புதுசு. அக்குழந்தையை அரவணைத்து வெகுசாதாரணமாக இப்பெண் குழந்தையின் தந்தைக்கு அதாவது தன் கணவனுக்குத் தெரியாமல் பிரச்சினையைக் கடந்துசொன்றுவிடக் கூடியதாக கையாளுகிறார் அத்தாய்.... பெண் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க அவளை மீண்டும் புத்துயிர்ப்பதுகூட ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இயக்குநருக்கு நமது கேள்விகள் வேறு...

லக்ஷ்மி குறும்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதி இருந்தது. படத்தையே ரிஜக்ட் செய்தவர்களும் உண்டு. அதை ஒப்பிடும்போது மா குறும்படம் வைத்திருக்கும் அடிப்படையே கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இப்படத்தில் மறைக்கமுடியாத நினைவுச்சின்னமாக பெண்ணுக்கு கர்ப்பம் என்ற அடையாளம் உருவாகிறது. அதை மறைக்க பெரிய உணர்ச்சிபோராட்டமும் வேண்டியிருக்கிறது இப் பெண்ணுக்கு. இதுஎதுவும் ஆணுக்கு இல்லை. ஆண் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு பெரிய அளவில் வேலையில்லை, அதுசார்ந்த எந்த விவாதமும் படத்தில் இல்லை. புரிதலும்கூட இல்லை.

மா என்றால் அன்னை என்று பொருள் அதுகூட இந்தி மொழியில்... அந்த இந்தி வார்த்தையை இக்குறும்படத்திற்கு சூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டியதில்லை. அது இயக்குநரின் ஒருவகையான தேர்வு என்றுகூட விட்டுவிடலாம்.

படத்தில் ஒரு பொறுப்புள்ள கல்லூரி புரபொசரின் வீட்டுக்குள் ஒரு முக்கியப் பிரச்சனை அவரது கண்களை மறைத்து நடப்பதாக காட்டுவது நம்பும்படியாக இல்லை.

இளம் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே தீயாகப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறது ஊடகம் சினிமா, வலைதளங்கள் போன்றவை. அது ஆண் செய்தாலும் சரி பெண் செய்தாலும் சரி பெண்குழந்தையின் விருப்பம் என்றாலும், குழந்தைப் பருவ காமத்தைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான புதுமைப் புரட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த நடிப்பு, கேமரா, திரைக்கதை நேர்த்தி குறைத்துமிதிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு பொறுந்தியுள்ள இக்குறும்படம் முழுக்கமுழுக்க இயக்குநரின் சினிமா ஆர்வம் தவிர வேறெதாகவும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

ஒரு முக்கியப் பிரச்சனையை அதன் தீவிரத்தின் ரணங்களுக்கான சிராய்ப்புகள் எதுவும் இன்றி அழகான திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தி பெரிய சினிமாவின் மினியேச்சராக இக்குறும்படம் அமைந்திருப்பதையும் இன்னொருவகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22549602.ece

இணைப்பிற்கு நன்றிகள்..

அம்மா கதாபாத்திரம் சிறப்பு. இறுதியில் மகள் மீதான நம்பிக்கையும் மீண்டும் விளையாட மைதானத்துக்கு அனுப்புவதும் நல்ல முடிவு. ஆனால் கவலையும் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் மன உழைச்சலும் தான் காட்டப்படுகின்றது. இவற்றுக்கு நிகராக கருக்கலைப்பின் சிரமங்களையும் சிறுமியின் மன உடல் வலிகளையும் காட்டத் தவறிவிட்டார்கள். போட்டோ எடுத்ததா இல்லை வேறுயாருடனும் பகிரப்பட்டதா என்ற உறுதிப்படுத்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமையை கருக்கலைத்தலின் சிரமங்களை வெளிபபடுத்துவதற்கும் கொடுத்திருந்தால் நல்லதொரு பாடமாக இது இருந்திருக்கும். கருவுண்டாகாத முறையில் பாதுகாப்பாக சிறுவர்கள் உடற்சேர்க்கையில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தையும்  இப்படம் கணிசமானளவு தோற்றுவிக்கின்றது. முழுமைபெறவில்லை.. 

  • தொடங்கியவர்

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் கருத்து போன்றே சிலரது கருத்தும் இருந்தது இந்த வீடியோ பதிவில் youtube இல்.

3 hours ago, சண்டமாருதன் said:

இணைப்பிற்கு நன்றிகள்..

அம்மா கதாபாத்திரம் சிறப்பு. இறுதியில் மகள் மீதான நம்பிக்கையும் மீண்டும் விளையாட மைதானத்துக்கு அனுப்புவதும் நல்ல முடிவு. ஆனால் கவலையும் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியும் மன உழைச்சலும் தான் காட்டப்படுகின்றது. இவற்றுக்கு நிகராக கருக்கலைப்பின் சிரமங்களையும் சிறுமியின் மன உடல் வலிகளையும் காட்டத் தவறிவிட்டார்கள். போட்டோ எடுத்ததா இல்லை வேறுயாருடனும் பகிரப்பட்டதா என்ற உறுதிப்படுத்தலுக்கு கொடுக்கும் முன்னுரிமையை கருக்கலைத்தலின் சிரமங்களை வெளிபபடுத்துவதற்கும் கொடுத்திருந்தால் நல்லதொரு பாடமாக இது இருந்திருக்கும். கருவுண்டாகாத முறையில் பாதுகாப்பாக சிறுவர்கள் உடற்சேர்க்கையில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தையும்  இப்படம் கணிசமானளவு தோற்றுவிக்கின்றது. முழுமைபெறவில்லை.. 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நவீனன்.

முதலாவதாக இந்த கதைக்கு ஏற்றமாதிரி நடித்த தாய்க்கும் மகளுக்கும் பாராட்டுக்கள்.

அடுத்து இது மாதிரியான பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பெற்றோர்களே முக்கிய இடங்களில் பாதுகாப்புறைகளை வையுங்கள் என்று சொல்லும் நிலை.

இனிவரும் காலங்களில் எதுவுமே செய்யாதே என்பதை விட பாதுகாப்பாக செய் என்று சொல்லும் மனோபக்குவம் வர வேண்டும்.

  • தொடங்கியவர்

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்த வீடியோ தொடர்பாக மேலே சண்டமாருதன் எழுதியவாறு மாறுபட்ட கருத்தில் விவாதிக்கிறார்கள் youtube இல்.

6 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்பிற்கு நன்றி நவீனன்.

முதலாவதாக இந்த கதைக்கு ஏற்றமாதிரி நடித்த தாய்க்கும் மகளுக்கும் பாராட்டுக்கள்.

அடுத்து இது மாதிரியான பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் இதை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பெற்றோர்களே முக்கிய இடங்களில் பாதுகாப்புறைகளை வையுங்கள் என்று சொல்லும் நிலை.

இனிவரும் காலங்களில் எதுவுமே செய்யாதே என்பதை விட பாதுகாப்பாக செய் என்று சொல்லும் மனோபக்குவம் வர வேண்டும்.

  • தொடங்கியவர்

மாற்றுக் களம்: தாய்க்கும் மகளுக்கும் ‘மா’

02chrcjmaa%202

பெண்களின் பாலியல் சுதந்திரத்தைப் பேச முயன்று தமிழ் வலைவாசிகளின் கவனத்தை ஈர்த்து, சலசலப்பையும் ஏற்படுத்திய குறும்படம் ‘லட்சுமி’. இதன் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இயக்கத்தில் கடந்த வாரம் யூடியூபில் வெளியானது ‘மா’ என்ற புதிய குறும்படம். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் விடலைப் பெண் கருவுறுகிறாள். தன்னுடைய தாயிடம் நடந்ததைச் சொல்ல இருவரும் இணைந்து சூழலை எதிர்கொள்வதுதான் ‘மா’ குறும்படத்தின் கதை.

நுட்பமான திரைமொழி

‘பாலியல் சுதந்திரம்’ என்ற கருத்தாக்கத்தைப் போலவே ‘பதின்பருவ கர்ப்பம்’ என்பதும் பொதுச் சமூகத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய தலைப்பே! சமூக ஒழுக்க மரபுகளை மீறும் எந்த ஒன்றும் நிச்சயம் எதிர்ப்பையும் சந்திக்கும் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில் ‘லட்சுமி’ குறும்படம் இரண்டையும் பெற்றது. ஆனால், ஒரு கலைப் படைப்பு நேர்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே அது சமூகத்தில் தாக்கம் செலுத்திக் காலத்தை வெல்லும். இத்தகைய புரிதலோடு அணுகினால் ‘லட்சுமி’ குறும்படத்தைக் கையாண்டவிதத்தைக் காட்டிலும் நுட்பமாக ‘மா’வில் திரைமொழி பேசியிருக்கிறார் இயக்குநர் சர்ஜுன்.

குறிப்பாகத் தாய்-மகள் உறவை நுணுக்கமாகப் படம் பதிவுசெய்திருக்கிறது. தன்னுடைய 15 வயது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும் முதலில் வெறுத்தொதுக்கும் தாய் பின்னர் அவளை அரவணைத்தல், மகளின் நிலையைக் கணவரிடம் சொல்லிவிடத் துடித்தாலும் அதன் பாதகத்தை எண்ணி அமைதி காத்தல், இறுதி காட்சியில் மகளை மீண்டும் நிமிர்ந்தெழ உத்வேகம் அளித்தல் என கம்பீரமாகத் தாய்மையைத் தன்னுடைய திறமையான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார் மலையாள நடிகை கனி கஸ்ருதி.

பெண்ணுக்காக, பெண்ணைப் பற்றி

இவை சாத்தியமாகக் காரணம் பிரியங்கா ரவிந்திரனின் திரைக்கதை. பிரியங்காவைப் பாராட்டும் அதே வேளை, திரைக்கதாசிரியராக ஒரு பெண்ணைக் கொண்டுவந்த இயக்குநருக்கும் பாராட்டுகள். பெண்மையை, பெண்களின் வாழ்வுலகை அவர்களின் அகவுலகை ஆண் மையப் பார்வையில் வெளிப்படுத்தும் கலை வெளிப்பாடுகள் முழுமையானவை என்று கூறிவிட முடியாது. திரைக்கதையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சர்ஜுன் அவ்விதத்தில் ஒரு பெண் திறமையை இப்படத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருப்பது நம்பகத்தின் அருகில் பார்வையாளர்களைக் கொண்டுவருகிறது.

02chrcjmaa%201
ஆண் தன்மையில் திருப்பம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது முதன்முறையாகப் பேசப்பட்டிருக்கும் கருப்பொருள் அல்ல. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ முதல் ‘ஆதலால் காதல் செய்வீர்’வரை ஆண்கள் பெண்களை மயக்கித் தங்களுடைய வலைக்குள் விழ வைப்பதாகவே திருமணத்துக்கு வெளியே உருவாகும் பாலியல் உறவுகள் புனையப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய உறவில் பெண்களுக்குச் சம்மதமோ விருப்பமோ இருப்பதாகச் சொல்லும் துணிச்சல் அரிதாகவே வெளிப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘லட்சுமி’, ‘மா’ இரண்டு படங்களும் அத்தகைய மனத்தடையை மீறி உள்ளன. குறிப்பாக, ‘மா’வில் உள்ள ஹரி கதாபாத்திரம்

நிகழ்ந்தவற்றுக்குப் பொறுப்பேற்கும் காட்சி ஆண் தன்மை குறித்த புனைவில் முக்கியத் திருப்பம் அல்லது சோதனை முயற்சி எனலாம். அந்தத் தருணத்தில் படம், யார் மீதோ பழி போட்டுவிட்டு விலகி ஓட நினைக்காமல், பாலியல் கல்விக்கான தேவையை மறைமுகமாக வலியுறுத்துகிறது. அதே சோதனை முயற்சியைத் தந்தை கதாபாத்திரத்திலும் இயக்குநர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ஹாக்கி வீராங்கனையான தன்னுடைய மகளின் விளையாட்டுப் பயிற்சிக்கான உடையை குறைபேசுவது, தனக்கு வரும் அலைபேசி அழைப்பில் சக ஆசிரியரிடம் ஆண்-பெண் நட்பைக் கொச்சைப்படுத்துவது என்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை குறைகளையும் கடந்து பதின்பருவ பாலியல் சிக்கலையும் தாய்-மகளுக்கு இடையிலான புரிதலையும் நுட்பமாகத் திரையில் பேச முயன்றிருக்கிறது ‘மா’.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22621386.ece

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2018 at 1:17 AM, நவீனன் said:

குழந்தைப் பருவ எல்லைகளை உடைக்கும் 'மா' குறும்படம்

ma%20short%20movie

குறும்படத்தின் கதைக்களம் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. இதுதான் பேசவேண்டுமென்ற எந்தக் கட்டுப்பாட்டையும் அது உடைக்கத் தொடங்கிவிட்டது.

ஆண்பெண் உலகத்தின் சிடுக்குகளை வெவ்வேறுவிதமாக பேசித் தீர்க்க முற்படும் இந்த நவீன படைப்புவடிவத்தின் ஊடாக இன்னும் பல முயற்சிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால் அவையெல்லாம் போதுமான பக்குவத்தோடு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி 'தாம்பத்ய உறவு' கணவன் எனும் எல்லையை கடந்துசென்றதைப் பேசிய 'லக்ஷ்மி' குறும்படம் ஆயிரக்கணக்கான வலைவாசிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைப்பற்றிய உரையாடல் முடிவதற்குள்ளாகவே அதன் இயக்குநர் இயக்குநர் சர்ஜூன் கே.எம். இன்னொரு குறும்படத்தோடு களம் இறங்கியுள்ளார். இக்குறும்படத்தை தமிழ் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் தயாரித்துள்ளார்.

குறும்படத்தின் களம் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் ஒரிஜனல் வழங்கியுள்ள மா குறும்படம் ஹாக்கி டோர்னமெண்ட் விளையாட்டில் ஆர்வம் உள்ள 10ஆம் வகுப்புப் படிக்கும் பெண் அவளது வயதைத் தாண்டி நேரும் சம்பவங்களால் அலைக்கழிக்கப்படுகிறாள்.

இக்குறும்பட இயக்குநரின் முதல் படமான 'லட்சுமி' படத்தின் ஆரம்பத்தில் வருவதுபோல கொஞ்சம் ரசாபாசமான காட்சிகள் இதில் ஏதுதும் இல்லையென்பது கொஞ்சம் ஆறுதல். விளைவைப் பற்றி அறியாமல் அவள் ஒரு தவற்றைச் செய்கிறாள். ஹாக்கி விளையாட்டின் நண்பனோடு விருப்பார்வத்தோடு ஈடுபடும் பாலியல் சேர்க்கைக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் குறும்படத்தின் காலம் தொடங்குகிறது.

அதனால் பிரச்சனையில்லை. மற்றபடி கர்ப்பமுற்றதை உணர்ந்தபிறகு அவள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நிமிடங்களே கதைக்களனாக அமைந்துள்ளதால் படம் கவனமாக ஒரு கவிதை போல காட்சிப்படுததப்பட்டுள்ளது.

இந்தமாதிரி பிரச்சனைகள் எல்லாம் ஜெயகாந்தன், பாலச்சந்தர் படங்களில் 70கள் 80களிலேயே பார்த்தாகிவிட்டது. இந்தமாதிரி பிரச்சனைகளை தனது படைப்புகளில் முன்வைத்த அத்தகைய படைப்பாளிகள் அதைக் கடந்துபோவதற்காக பின்னிய காட்சிகள் புரட்சிக் காட்சிகளாக அந்நாட்களில் பார்க்கப்பட்டன.

ஆனால் இப்படம் அவற்றிலிருந்து சற்றே மாறுபடுகிறது. அச்சிறு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூட விரும்புகிறாள்.... இக்குறும்படத்தில் 15 வயது பெண்ணின் விருப்பம்தான் பிரச்சனை. விருப்பம் எந்த வயதில் வரவேண்டும் என்பதில் சமீபத்தில் பொதுவெளிகளில் உரையாடல் தொடங்கியுள்ளது. ஆனால் 15 வயதுவரை குழந்தைப் பருவம் உள்ளதாக சட்டம் சொல்கிறது. மேலும் இக்காலத்தின் உணவுப்பழக்கவழக்கத்தில் 7ஆம் வகுப்பு பெண்கூட வயதுக்கு வந்துவிடுகிறாள். எனவே அவளுடைய குழந்தைப்பருவம் இல்லையென்று எப்படி சொல்லமுடியும்?

15 வயதில் உடல் சார்ந்த விருப்பம் தவறில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது மட்டும்தான் தவறு என்று இத்திரைப்படம் சொல்கிறது.

பெண்ணின் தாய் இந்தமாதிரி மகளை அணுகும்விதம் மிகமிக புதுசு. அக்குழந்தையை அரவணைத்து வெகுசாதாரணமாக இப்பெண் குழந்தையின் தந்தைக்கு அதாவது தன் கணவனுக்குத் தெரியாமல் பிரச்சினையைக் கடந்துசொன்றுவிடக் கூடியதாக கையாளுகிறார் அத்தாய்.... பெண் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்க அவளை மீண்டும் புத்துயிர்ப்பதுகூட ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இயக்குநருக்கு நமது கேள்விகள் வேறு...

லக்ஷ்மி குறும்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிபாதி இருந்தது. படத்தையே ரிஜக்ட் செய்தவர்களும் உண்டு. அதை ஒப்பிடும்போது மா குறும்படம் வைத்திருக்கும் அடிப்படையே கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

இப்படத்தில் மறைக்கமுடியாத நினைவுச்சின்னமாக பெண்ணுக்கு கர்ப்பம் என்ற அடையாளம் உருவாகிறது. அதை மறைக்க பெரிய உணர்ச்சிபோராட்டமும் வேண்டியிருக்கிறது இப் பெண்ணுக்கு. இதுஎதுவும் ஆணுக்கு இல்லை. ஆண் சார்ந்த குற்றவுணர்ச்சிக்கு பெரிய அளவில் வேலையில்லை, அதுசார்ந்த எந்த விவாதமும் படத்தில் இல்லை. புரிதலும்கூட இல்லை.

மா என்றால் அன்னை என்று பொருள் அதுகூட இந்தி மொழியில்... அந்த இந்தி வார்த்தையை இக்குறும்படத்திற்கு சூட்ட வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் நாம் கேள்வி எழுப்பவேண்டியதில்லை. அது இயக்குநரின் ஒருவகையான தேர்வு என்றுகூட விட்டுவிடலாம்.

படத்தில் ஒரு பொறுப்புள்ள கல்லூரி புரபொசரின் வீட்டுக்குள் ஒரு முக்கியப் பிரச்சனை அவரது கண்களை மறைத்து நடப்பதாக காட்டுவது நம்பும்படியாக இல்லை.

இளம் குழந்தைகளுக்கு சாதாரணமாகவே தீயாகப் பற்றிக்கொள்ளத் தூண்டுகிறது ஊடகம் சினிமா, வலைதளங்கள் போன்றவை. அது ஆண் செய்தாலும் சரி பெண் செய்தாலும் சரி பெண்குழந்தையின் விருப்பம் என்றாலும், குழந்தைப் பருவ காமத்தைச் சொல்லும் படமாக இது அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.

இந்தமாதிரியான அசட்டுத்தனமான புதுமைப் புரட்சிகள் தேவைதானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதில் பங்கேற்றவர்களின் சிறந்த நடிப்பு, கேமரா, திரைக்கதை நேர்த்தி குறைத்துமிதிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு பொறுந்தியுள்ள இக்குறும்படம் முழுக்கமுழுக்க இயக்குநரின் சினிமா ஆர்வம் தவிர வேறெதாகவும் அதை நியாயப்படுத்த முடியவில்லை.

ஒரு முக்கியப் பிரச்சனையை அதன் தீவிரத்தின் ரணங்களுக்கான சிராய்ப்புகள் எதுவும் இன்றி அழகான திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தி பெரிய சினிமாவின் மினியேச்சராக இக்குறும்படம் அமைந்திருப்பதையும் இன்னொருவகையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article22549602.ece

மிக நேர்த்தியாக படமாக்கப்பட்ட குறும்படம். நடித்ததை விட வாழ்ந்து காட்டினார்கள் தாயும் சேயும். சமூகம் மேலும் பக்குவம் பெறத் தேவையான படம். வலைத்தளங்களில் எப்படியோ இத்தனைக் காலம் இக்குறும்படத்தைப் பார்க்கவில்லை. நவீனன் அவர்களுக்கு நன்றி. 

பின்னூட்டம் அளிக்கையில் தேவையின்றி முழுக் கட்டுரையை Quote செய்துவிட்டேன். யாழ் நண்பர்கள் மன்னிக்கவும்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.