Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்ப் பிரச்சாரம் செய்வோர் யார்? சுமந்திரனின் சவால்

Featured Replies

கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் சுமந்திரனின் பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்
  • et,

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

 

former UN staffer Benjamin Dix25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகள், ஐ.நாவின் தொடர்பாடல் முகாமையாளராக பென்ஜமின் டிக்ஸ் பணியாற்றியிருந்தார்.

ஒரு சிறந்த ஒளிப்படக் கலைஞருமான டிக்ஸ், இந்தியாவின் ஜெய்பூர் நகரில் நடந்த ஜெய்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த செவ்வியில்,

“சிறிலங்காவில் இரண்டு தரப்பிலுமே கொடூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்தது. ஆனால் உள்நாட்டுப் போரின் கடைசி பத்தாண்டுகளில் தமிழ்த் தலைமை தோல்வியடைந்தது.

தாங்கள் கொடுமைகளை இழைத்ததாக சிறிலங்கா இராணுவம் நம்பவில்லை.  தமிழ்த் தலைமையிடம் இருந்து அவர்கள் தமிழர்களை விடுவித்ததாக, மேற்கொள்ளப்படுவது வெறும் பரப்புரை தான். அது விடுதலை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் அழிவு.

சிறிலங்கா இராணுவம் இனப்படுகொலைகளை செய்தது என்று கூறுவதே  நியாயமானது.  சிறிலங்காவில் நிகழ்ந்த கொடுமைகள் நிச்சயமாக இனச் சுத்திகரிப்பை நோக்கி நடத்தப்பட்டவையாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சி தமிழர்கள் சிறிலங்காவில் இருப்பதை விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேற்ற முயன்றது.

தமிழர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் கொடுமை அல்லது பெயர்களை மாற்றுவது, அல்லது வடக்கில் சிறிலங்கா இராணுவம் சுற்றுலா விடுதிகளையும், சுற்றுலாவையும் நடத்த அனுமதிப்பது இன்னமும் தொடர்கிறது.

வடக்கில் தமிழர்களை வென்று விட்டதான உணர்வு இன்னமும் உள்ளது.

வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் பாரிய நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.

ஆனால் கடந்த காலத்தில் இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, இப்போது குறிப்பிடத்தக்களவு தளர்வுகள் ஏற்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/28/news/28697

  • தொடங்கியவர்

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தனுக்கு அடுக்குமாடி வீடு! என்ன துணிச்சல் இவருக்கு! சுமந்திரன் சீற்றம்

 

நாடாளுமன்றில் இதற்கு முன்னர் சமர்பிக்கப்பட்ட பல வரவுசெலவு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வாக்களித்துள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வரவுசெலவு திட்டங்களுக்கு வாக்களிக்கும் போது எவ்வளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என்பதை அவர் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா இரண்டு கோடி ரூபாய் வீதம் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

 

இந்நிலையில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டு தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிவசக்தி ஆனந்தன் கடந்த காலங்களில் பல வரவுசெலவு திட்டங்களுக்கு வாக்களித்துள்ளார். 2010ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரண்டு வரவுசெலவு திட்டங்களுக்கும் வாக்களித்துள்ளார்.

இந்நிலையில், வரவுசெலவு திட்டங்களை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் ஆதரிக்க வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தால், இதற்கு முன்னர் வாக்களித்த ஒவ்வொரு வேளையிலும் அவர் எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை தயவு செய்து அவர் மக்களுக்கு கூற வேண்டும். இதேவேளை, உளவு வேலை பார்ப்பதற்காக வவுனியாவில் அடுக்குமாடி வீடொன்று சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் வழங்கப்பட்டிருந்தது.

இப்படியானவர் என்ன துணிச்சலோடு எங்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்?”என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/172415?ref=ls_d_tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

 

27067390_1772223862827709_35753752362672

 

இவ்வளவு பாதுகாப்பா???

  • தொடங்கியவர்

ஆனந்­த­னின் குற்­றச்­சாட்­டுக்­கள் நகைப்­புக்­கி­ட­மா­னவை – –சுமந்­தி­ரன்

 

வரவு -– செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 2 கோடி ரூபா பெற்­றார்­கள் என்­றால், மகிந்­த­வின் காலத்­தில் 2010ஆம் ஆண்டு வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததற்­கும், 2015ஆம் மற்­றும் 2016ஆம் ஆண்­டு­க­ளில் வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததற்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆனந்­தன் எவ்­வ­ளவு நிதி பெற்­றார் என்­ப­தைக் கூற முடி­யுமா ?

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்கை வெளி­யீடு வவு­னி­யா­வில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதன்­போது நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இவர்­கள் எந்­தக் கூச்­ச­மும் இல்­லா­மல் பொய்­க­ளைச் சொல்­லு­கின்­றார்­கள். இவர்­க­ளது பொய்­கள் நகைப்­புக்­கி­ட­மா­னவை. இவற்­றுக்­குப் பதி­ல­ளிக்­க­வேண்­டிய தேவை இல்லை. ஆனா­லும் இதனை வைத்து விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தால், இந்­தப் பொய்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­க­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

அதற்கு முன்­ன­தாக, சுமந்­தி­ர­னுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டு­விட்­டது என்று சில பத்­தி­ரி­கை­க­ளில் செய்தி வெளி­வந்­தது. அந்த விட­யம் பத்­தி­ரி­கை­க­ளில் அல்ல அர­சி­த­ழில்­தான் முத­லில் வர­வேண்­டும். சுமந்­தி­ர­னுக்கு அர­சால் கொழும்­பில் வீடு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று சுரேஷ; பிரே­மச்­சந்­தி­ரன் கூறி­யி­ருந்­தார்.

 

அவர் சொல்­வதை உண்மை என்று நிரூ­பித்­தால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­ கின்­றேன் என்று சொன்­னேன். பின்­னர் கொழும்­பில் ஒரு வீதி­யின் பெய­ரைக் குறிப்­பிட்டு வீடு உள்­ளது என்று அவர் சொன்­னார். அவர் சொன்ன முக­வ­ரிக்­குச் சென்று பார்த்­தேன்.

அங்கு வெளி­நாட்­டுத் தூத­ரகங்­கள் இயங்­கு­கின்­றன.
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நடேசு சிவ­சக்தி இதற்கு முன்­னர் பல வரவு– செல­வுத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­வர். வரவு செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளிக்க இலஞ்­சம் வழங்­கப்­ப­டு­கின்­ற­தா­யின் அவர் இது­வ­ரை­யில் எவ்­வ­ளவு இலஞ்­சம் வாங்­கி­யி­ருந்­தீர்­கள் என்று மக்­க­ளுக்கு விளக்­கு­மாறு அவ­ரி­டம் நாம் கேட்­கின்­றோம்.

உளவு வேலை பார்ப்­ப­தற்­காக அடுக்­கு­மாடி வீடு ஒன்றை சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு வழங்­கி­யி­ருந்­தார்­கள். அவ­ருக்­கும் ரிசாத் பதி­யு­தீ­னுக்­கும் ஈபி­டி­பிக்­கும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. அதனை ஒரு சில நாள்­க­ளுக்கு முன்­வரை ஒரு வாட­கை­யும் வழங்­கா­மல் வைத்­தி­ருந்­த­வர். அத­னைக் கைய­ளிக்­கு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­குழு உத்­த­ர­வி­டும்­வரை வைத்­தி­ருந்­தார். அப்­ப­டிப்­பட்­ட­வர் எவ்­வா­றான பொய்யை திரு­வாய் மலர்ந்­த­ரு­ளி­யி­ரு­கி­றார்.

ஒவ்­வொரு முறை­யும் வரவு – செல­வுத் திட்ட விவா­தத்­தில் நாங்­கள் உரை­யாற்­று­கின்­ற­போது, வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதி போதாது என்று குறிப்­பி­டு­கின்­றோம். எங்­க­ளது எல்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுமே இத­னைக் குறிப்­பிட்­டி­ ருக்­கின்­ற­னர். போரி­னால் பாதிக்­கப்­பட்ட வடக்கு – கிழக்கை ஏனைய மாகா­ணங்­க­ளு­டன் ஒப்­பி­டா­தீர்­கள். சிறப்­பாக வடக்கு -– கிழக்கு மாகா­ணத்தை கவ­னி­யுங்­கள் என்று தெரி­வித்­தி­ருந்­தோம்.

அரச தலை­வர் செய­ல­கத்­தி­னால் வடக்கு -– கிழக்கு சிறப்பு நிதி ஒதுக்­கீட்­டுக்­கான சுற்­ற­றிக்கை மாவட்­டச் செய­லர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. தலைமை அமைச்­ச­ரின் அமைச்­சி­னால் அதற்­கான நிதி ஒதுக்­கீடு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இவை கடந்த ஆண்டு செப்­ரெம்­பர் மாதமே நடந்­தன. வரவு -– செல­வுத் திட்ட வாக்­கெ­டுப்பு டிசெம்­பர் மாதம் நடந்­தது.

ஒவ்­வொரு மாவட்­டச் செய­ல­ரி­ட­மும் நாம் திட்ட முன்­மொ­ழி­வு­க­ளைச் சமர்­பித்­தி­ருந்­தோம். அதற்­கு­ரிய வேலை­கள், சம்­பந்­தப்­பட்ட திணைக்­க­ளங்­க­ ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

சிவ­சக்தி ஆனந்­த­னின் குற்­றச்­சாட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிறீ­த­ரன், மாவை.சேனா­தி­ராசா இரு­வ­ரும் பதில் வழங்­கி­ய­தும், ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு வித­மாக பதில் வழங்­கு­கின்­றார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரு­வ­ரும் ஒரே விட­யத்­தைத்­தான் கூறி­யி­ருந்­தார்­கள். மாவை.சேனா­தி­ராசா, தான் ஒதுக்­கிய திட்­டங்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். நாடா­ளு­ம­டன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன், நாங்­கள் பணம் வாங்­க­வில்லை என்று சொல்­லி­யி­ருந்­தார். இதில் என்ன குழப்­பம் இருக்­கின்­றது.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தனது ஒதுக்­கீட்டு விவ­ரத்தை வெளி­யிட்­ட­தும், அவர் யாழ்ப்­பாண தேர்­தல் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து ஒரு குறிப்­பிட்ட இடத்­துக்கு மாத்­தி­ரம் நிதி­யை ஒதுக்­கி­யி­ருக்­கின்­றார் என்று குற்­றம் சுமத்­தப் பட்­டது. கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாம் கலந்து பேசி, ஒவ்­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒவ்­வொரு பிர­தே­சத்­துக்கு திட்­டங்­க ­ளைப் பங்­கீடு செய்து ஒதுக்­கி­யி­ருந்­தோம் -– என்­றார்.

http://newuthayan.com/story/65679.html

பொய் பிரச்சாரத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும் பின்தள்ளி இப்போது சுமந்திரன் தான் முன்னணி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.