Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணாங்கட்டியாகிவிட்ட "மண்"?????

Featured Replies

மண்ணாங்கட்டியாகிவிட்ட "மண்" .

ஈழத் தமிழன் தலையிலே மண்ணள்ளிப் போட்டு அவனை சர்வதேச அரங்கிலே இழிவுபடுத்தியிருக்கிறது மண் என்கிற ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாயினும், இந்த படத்தைப் பார்க்கும் துரதிர்ஸடம் எனக்கு இப்பொழுதுதான் கிட்டியது.

நாம் கட்டிக் காத்த பண்பாட்டையும் நெறி முறைகளையும் சிங்களவன் சிதைத்துக் கொண்டிருக்கும் இவ் வேளையிலே நம்வர்களும் சேர்ந்து இந்தக் கைங்கரியத்திலே ஈடுபடுவது என்பது மன்னிக்க முடியாத ஒரு பெரும் குற்றம்.

அந்தப் பணியை இந்த மண் திரைப்படம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது.

இலங்கைத் தமிழன் திறமைகளுக்கு தடை போட சிங்கள அரசு ஆரம்பித்த போது தான் அவன் அத் தடைகளை முட்டி மோதி உடைத்து தனது திறமைகளை சர்வ தேச எல்லைக்கு அறிவிக்க முயன்றான். விளைவு ஒவ்வொரு துறையிலும் அவன் கால் பதித்து தனது முத்திரையினை பதித்துக் கொண்டு வருகிறான்.

இலக்கியம் என்றாலும் சரி, உழைப்பியம் என்றாலும் சரி, எமது படைப்பாளர்களையும் கலைஞர்களையும் அதற்காக உழைப்பவர்களையும் ஊக்குவிக்க வேண்டிய கடப்பாட்டிலே நாம் இருக்கிறோம். ஆனால் அதுவே நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்க சென்று நச்சுக் களைகளை வளர்த்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் எமது கடமையே

எமது போராட்டத்தை விற்று பணம் பண்ணும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர். அவர் ஏற்கனவே பல படங்களை பண்ணியிருப்பதாகவும் படு ஆர்ப்பட்டமாக விளம்பரப்படுத்தியிருந்தார்.

வயது வந்தவர்களுக்கென்று அறிவிப்புச் செய்து காட்டவேண்டிய இப்படத்தை „இயக்கப் படம்“ என்ற ஓரு மாயையினை மக்கள் மத்தியிலே பரவவிட்டு ஜரோப்பாவிலே வியாபாரம் பண்ண முயற்சித்திருக்கிறார்கள் இப்படத்தோடு தொடர்புள்ளவர்கள். இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு துணை புரிந்திருக்கிறது „றமி“ நிறுவனம்.

பணம் கிடைத்தால் இவர்கள் எதையும் வெளியீடு செய்வார்கள் எனும் நிலைக்கு கீழிறங்கி விட்டார்களோ எனும் வருத்தமான கேள்வியே இதில் எழுகிறது.

கதைப்படி மலையகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இலங்கை இராணுவத்தாலே உயிர் உடமை இழப்புகளுக்கு ஆட்பட்டு வன்னியிலுள்ள கனகராயன் குளத்துக்கு இடம் பெயர்கிறது. அங்கே வைத்து அவர்களின் வாழ்க்கையானது எப்படியெல்லாம் அந்தப் பகுதி மக்களாலே இழிவு படுத்தப்படுகிறது என்பதே கதையாம்.

அந்தக் குடுத்பத் தலைவன் வேலைக்குப் போகும் இடத்திலும் சரி மது அருந்தும் இடத்திலும் சரி வார்த்தைக்கு வார்த்தை „வடக்கத்தையான் வடக்கத்தையாள்“ என்று அவர்கள் இழிவு படுத்தப் படுகிறார்களாம். பாடசாலையிலே படிக்கும் சக மாணவர்களாலும் ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப் படுகிறாளாம் அந்த குடும்பத்தின் மகள்.

கதையின் காலமோ சமகாலமாக இருக்கிறது. கனகராயன் குளமோ புலிகளின் கட்டுப் பாட்டிலே இருக்கிறது. இதிலே வேடிக்கை என்னவெனில் உயர் சாதிப் பையனுடன் சேர்ந்து காதலில் ஈடுபட்ட அப் பெண் கற்பமாகி விடுவதால் பையனின் குடும்பத்தவரால் ஏற்க மறுக்கப்பட்ட போது இறுதியிலே காவல் துறையிடம் முறைப்பாடு செய்யப்படுகிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள்ளே .விசாரணை செய்வதற்கு வருகின்ற காவல் துறையோ இலங்கைப் பொலிஸாம். எப்படி இருக்கிறது கதை.?

அங்கிருக்கும் பாடசாலையிலே கற்பிக்கும் ஒரு பெண் ஆசிரியர் பாலியல் கல்வியை தரக்குறைவாக மாணவர்களிடையே போதிக்கிறார். அது சம்பந்தமாக படு கேவலமாக நகைச் சுவை வேறு விடுகிறார். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற ஆசிரியர் மீது நாம் வைத்திருக்கும் பய பக்தி என்பது எவ்வாறானது என்பது இங்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அந்த ஆசிரியை தான் இப்படி தரக்குறைவாகக் கதைக்கிறார் என்றால் மாணவிகளே அதையும் மிஞ்சி விடுகிறார்களாம்.

உதாரணத்திற்கு ஒரு காட்சி. ஒரு இடத்திலே சில இளைஞர்கள் கூட்டமாக வருகிறார்கள் அங்கே ஒரு சக பாடசாலை தோழி அவர்களைப் பார்த்து கேட்கிறார் நீங்கள் ஏன் அங்கை போறியள் எண்டு தெரியும் அதிலை போற வாற பெட்டையளின்ரை ஆற்றை பெரிசு சின்னன் எண்டு பார்க்கத் தானே போறியள் எண்டு சொல்கிறார் உண்மையிலேயே எம் இளம் பெண்கள் அந்தளவு நிலைக்கு கீழ் இறங்கி விட்டார்களா?

பாடல் ஒன்று படு விரசமாக எழுதப்பட்டும் காட்சி அமைக்கப்பட்டும் உள்ளது. இந்தப் படலின் முடிவிலே நாயகி நயகனின் சட்டை பொத்தானைக் கழற்ற நாயகன் நாயகியின் சட்டையை கழற்றுகிறார். விட்டால் மிகுதியையும் எடுத்து விடுவார்கள் போலிருக்கிறது. கல்லெறிக்குப் பயந்து விட்டார்கள் போலும்.

பின் எல்லா விடயங்களும் நடந்து முடிந்த பின்னே இளைஞன் கேட்பான் நாம் அவசரப்பட்டு விட்டோம் என்று அதற்கு பெண் சொல்கிறாள் மனசைக் கொடுக்கத் தான் யோசிக்க வேணும் அதுக்குப்பின்னாடி உடம்பைக் கொடுக்க ஏன் யோசிக்கணும் ஆகா என்னவொரு தத்துவம்.

அத்துடன் கருவைக் கலைப்பதற்கு அந்தப் பெண்ணே பப்பாசி உண்ணலாம் என்று வழியும் சொல்கிறாள். ஒரு நண்பருடன் இந்தப் படம் குறித்து பேசிக் கொண்டிருந்த போது, „பப்பாசிப் படத்தையா சொல்கிறீர்கள்“ என்று கேட்டார். அந்தளவிற்கு இந்தத் திரைப்படத்தின் பெயர் நாறிப் போய்க்கிடக்கிறது.

தகப்பனுக்கு பயந்த மகனாக இருப்பவர் வெளி நாட்டுக்கு தப்பி ஓடும் போதிலே பேருந்து வண்டியிலே தனது தந்தைக்கு முன்னால் தந்தையின் நண்பரோடு உரையாடுவது இன்னும் கேவலமானது „நிறையப் பேர் அந்தப் பெட்டைக்குப் பின்னாலை திரிஞ்சம், ஆர் முதல்லை …………எண்டு எனக்குத் தான் அது வாச்சிது“. ஒரு தகப்பனுக்கு முன்னால் மகன் கதைக்கும் கதையா இது?

மலையக மக்கள் வடபகுதி மக்களாலே இழிவு படுத்தப் படவில்லை என்று நான் நியாயப்படுத்த வரவில்லை ஆனால் அது தற்போதும் அதுவும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிலே நடக்கிறது என்பதையே ஏற்க முடியாதுள்ளது.

இந்தியாவின் மசாலா சினிமாவை மனப் பால் குடித்துக் கொண்டு அதை ஈழத்திலே அரங்கேற்றி பணம் பண்ண முனைந்திருக்கிறார்கள் இலண்டனில் இருக்கும் புதியவன் குழுவினர். (புதியவன் லண்டனிலே ஒரு பேராசிரியராம்)

இங்கொரு வேடிக்கை என்னவெனில் ஊர் ஊராக இப்படத்தை "இயக்கப்படம்" என்று கதையைப் பரப்பி திரையிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இதை இந்தியாவிலும் திரையிட்டு எமது மானத்தை ஏலம் போட்டிருக்கிறார்கள். அதற்கு ஜெயா தொலைக்காட்சியும் நிறையவே உதவியுள்ளது.

ஈழத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு அரசியல் சதி நடைபெற்று இருக்கிறது என்பது மட்டும் புலனாகிறது.

www.webeelam.com

சாதியம் என்ற குப்பையை கிளறும் போது "நாம் அழுக்காய் இருப்பதை ஒத்துக்கொண்டால்தான் குளிப்பதை பற்றி பேச முடியும்" என்று கூறிய சபேசனா இதனை எழுதியது????

இதை நான் எழுதுவில்லை.

ஆயினும் இதில் சொல்லப்பட்ட கருத்துக்களோடு எனக்கு பெரும்பாலும் உடன்பாடு உண்டு.

மலையகத்தமிழரை இளக்காரமாக நோக்குகின்ற தன்மை பல யாழ்ப்பாணத் தமிழர்களிடம் உண்டு என்பது உண்மை. அதை இந்தக் கட்டுரையும் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது.

ஆனால் அதை இந்தப் படம் பல மடங்கு மிகைப் படுத்தி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எமக்கு ஆதரவாக திரும்பும் வேளையில் இப்படி ஒரு கருத்தை மிகைப்படுத்தி ஒரு படம் வெளிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஒரு மலையகத் தமிழர் அடிபட்டு காயங்களுடன் கிடக்கிறார். ஆனால் ஈழத் தமிழர் அவரை காரில் ஏற்ற மறுக்கிறார். வடக்கத்தையான் தன்னுடைய காரை நாசமாக்கி விடுவான் என்று சொல்கிறார்.

இதில் ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன்

தெல்லிப்பழையில் இந்திய ஈழ யுத்தம் ஆரம்பித்திருந்த நேரம். ஒரு இந்திய இராணுவத்தின் வாகனம் தாக்கப்படுகிறது. அதில் ரத்தக் காயங்களோடு தப்பிய ஒரு இந்தியச் சிப்பாய் ஒழுங்கைகளுக்காள் ஓடி எங்களுடைய அயல் வீட்டிற்கு வந்து சேருகிறான். வந்து காயங்களிற்கு கட்டுப்போட ஏதாவது கேட்கிறான்.

அயல்வீட்டுத் தாய் பரிவோடு அவனுக்கு கட்டுப் போட்டு விடுகிறார். அவர் அச்சத்தில் அதை செய்யவில்லை. அவர் இந்தியப் படைகளுக்கு ஆதரவானவர் அல்ல. மாறாக புலிகளை ஆதரிப்பவர். ஆயினும் ஒரு மனிதாபிமானத்தோடு அதைச் செய்தார்.

காயத்திற்கு கட்டுப்போட்டுக் கொண்டு தொடர்ந்து ஓடிய இந்தியச் சிப்பாய் ஒரு நூறு மீற்றர் தொலைவில் எங்கிருந்தோ வந்த ஒரு தோட்டா தாக்கி இறந்து போகிறான்.

அப்பொழுது அந்தத் தாய் கவலைப்படத்தான் செய்தார்.

ஒரு மனிதன் காயப்பட்டுப் போயோ, நோய் வாய்ப்பட்டோ இருக்கும் போது, உதவுவதுதான் தமிழர்களின் பண்பு.

அதையெல்லாம் இந்தப் படம் கொச்சைப்படுத்துகிறது.

கார்டூன் சித்திரங்களில் சொல்லவரும் கருத்து ஊதி பெருப்பிக்கப்பட்டிருக்கும். காரணம் அது பார்வையாளரைக் கவர்ந்து அவரிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில். அதனை போன்றே இப்படத்திலும் தமிழர்களிடையிலான ஏற்றத்தாழ்வு மனப்பான்மை பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ளதாக கருத முடிகிறது. (படத்தை நான் பார்காதவரையில் உறுதியாக எதனையும் சொல்ல முடியவில்லை)

ஆனால் தற்போதய சூழ்நிலைக்கு இது உகந்ததல்ல என்ற உங்கள் கருத்தை ஏற்கிறேன். அது போன்றே சாதிய ஆராட்சியும் காலத்திற்கு உகந்ததல்ல என்பதே என் கருத்தாகவிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏற்கனவே இப்படத்தை பார்த்தேன்

இதில் ஒரு வெட்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் இயக்கப்படம் என்றே என்கைக்கு இப்படம் வந்தது

நிதர்சனனின் கருத்துக்களோடு முழுவதுமாக நான் உடன்படுகின்றேன்

அதனால் அவற்றை மீள எழுதாமல் விடுகின்றேன்

ஆசிரியர் மாணவர் இடையே ஆன உறவு எமதூரில் மிகவும் போற்றுதற்குரியது.

பெண்கள் பொதுவாக மாணவிகள் இப்படியெல்லாம் கதைக்கமாட்டார்கள்

இயக்கப்படம் என்பதால் என்பிள்ளைகளுடன் இப்படத்தைப்பார்த்தேன்.

அவர்களின்பார்வைகளுக்கு பதில்சொல்ல இன்னும்முடியவில்லை.

ஐரோப்பாவில் மிகவும் கீழ்தனமாக வளர்ந்தவர்

(ஏனெனில் ஐரோப்பாவிலும் ஒழுங்காக சிந்திப்பவர் வளர்பவர்உண்டு.)

எமது மண்ணை இப்படி சிந்தித்துள்ளார் போலுள்ளது.

மிகவும் அருவருப்பான கேவலமான சொற்பதங்களைக்கொண்ட படம்.

என்னை மிகவும் நோகடித்த படம்.

மண் என்றவுடன் எங்கள் நாட்டு அவலங்களைப்பிரதிபலிக்கும் என எண்ணிய எனக்கு முகத்தில் கரிபூசிய உணர்வுதான் ஏற்பட்டது. மிகைப்படுத்தப்பட்ட காட்சி அமைப்புக்கள் இந்த சூழ்நிலையில் மண் படம் மண்ணாங்கட்டிதான் கட்டுரை ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லப்பட்ட கருத்துக்களோடு எனக்கு பெரும்பாலும் உடன்பாடு உண்டு.

மலையகத்தமிழரை இளக்காரமாக நோக்குகின்ற தன்மை பல யாழ்ப்பாணத் தமிழர்களிடம் உண்டு என்பது உண்மை. அதை இந்தக் கட்டுரையும் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது.

ஆனால் அதை இந்தப் படம் பல மடங்கு மிகைப் படுத்தி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எமக்கு ஆதரவாக திரும்பும் வேளையில் இப்படி ஒரு கருத்தை மிகைப்படுத்தி ஒரு படம் வெளிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மெய்யாகவே தமிழகத்தில் இருந்து இலங்கையில் குடியேறிய தமிழர்கள் அங்கிருந்த பூர்வீகத்தமிழர்களால் மதிப்புக்குறைவாக நடத்தப்பட்டனரா???

ஆம் என்றால் என்ன காரணத்தால் அவ்வாறு நடத்தப்பட்டனர் என்று யாராவது எனக்கு சொல்வீர்களா??

Edited by NanjilNadan

இதை நான் எழுதுவில்லை.

ஆயினும் இதில் சொல்லப்பட்ட கருத்துக்களோடு எனக்கு பெரும்பாலும் உடன்பாடு உண்டு.

மலையகத்தமிழரை இளக்காரமாக நோக்குகின்ற தன்மை பல யாழ்ப்பாணத் தமிழர்களிடம் உண்டு என்பது உண்மை. அதை இந்தக் கட்டுரையும் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது.

ஆனால் அதை இந்தப் படம் பல மடங்கு மிகைப் படுத்தி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எமக்கு ஆதரவாக திரும்பும் வேளையில் இப்படி ஒரு கருத்தை மிகைப்படுத்தி ஒரு படம் வெளிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. ஒரு மலையகத் தமிழர் அடிபட்டு காயங்களுடன் கிடக்கிறார். ஆனால் ஈழத் தமிழர் அவரை காரில் ஏற்ற மறுக்கிறார். வடக்கத்தையான் தன்னுடைய காரை நாசமாக்கி விடுவான் என்று சொல்கிறார்.

இதில் ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்கிறேன்

தெல்லிப்பழையில் இந்திய ஈழ யுத்தம் ஆரம்பித்திருந்த நேரம். ஒரு இந்திய இராணுவத்தின் வாகனம் தாக்கப்படுகிறது. அதில் ரத்தக் காயங்களோடு தப்பிய ஒரு இந்தியச் சிப்பாய் ஒழுங்கைகளுக்காள் ஓடி எங்களுடைய அயல் வீட்டிற்கு வந்து சேருகிறான். வந்து காயங்களிற்கு கட்டுப்போட ஏதாவது கேட்கிறான்.

அயல்வீட்டுத் தாய் பரிவோடு அவனுக்கு கட்டுப் போட்டு விடுகிறார். அவர் அச்சத்தில் அதை செய்யவில்லை. அவர் இந்தியப் படைகளுக்கு ஆதரவானவர் அல்ல. மாறாக புலிகளை ஆதரிப்பவர். ஆயினும் ஒரு மனிதாபிமானத்தோடு அதைச் செய்தார்.

காயத்திற்கு கட்டுப்போட்டுக் கொண்டு தொடர்ந்து ஓடிய இந்தியச் சிப்பாய் ஒரு நூறு மீற்றர் தொலைவில் எங்கிருந்தோ வந்த ஒரு தோட்டா தாக்கி இறந்து போகிறான்.

அப்பொழுது அந்தத் தாய் கவலைப்படத்தான் செய்தார்.

ஒரு மனிதன் காயப்பட்டுப் போயோ, நோய் வாய்ப்பட்டோ இருக்கும் போது, உதவுவதுதான் தமிழர்களின் பண்பு.

அதையெல்லாம் இந்தப் படம் கொச்சைப்படுத்துகிறது.

''புத்தனின் பெயரால்'' என்ற திரை படம் எதை கூறியது...??

அதில் வந்த காட்சிகள் எதை பறை சாற்றின...??

அதிலும் சில காட்சி அமைப்புக்கள்..பெண்ணை எப்படி கற்பழிப்பதென்று

செய்து காட்டினர்..இதை பலர் குடும்ப சகிதம் பார்த்து கொண்டிருந்தனர்.

திறந்த மேலாடையுடன்..சிறந்த பெண்கள்..இளவயசு காறி...அட..டா..

....??......ஒரு...பாலியல் படமுங்கோ..என்று..அதை சொல்ல முடியமா...??

இல்லை..அந்த உண்மை கதைதனை

அப்படியே சொல்ல வேண்டும் என்ற காரணத்தால் அந்த காட்சியை இணைத்தார்கள்

என்று சொல்ல முடியுமா...??

தெரியாமல் அங்கு போய் குடும்பமாய் குந்திய பலர்

அந்த காட்சியையும் பார்த்து ரசித்து கொண்டனர்.

எம் தமிழர் பண் பாடு என்று வருகின்ற போது இவ்வாறான விமர்சனங்கள்

எழுவது முறையே.

அதற்காகத் தான் என்னவோ அந்த படம் பல விருதுகளையும் பெற்றது...

அமெரிக்க காறன் கூப்பிட்டு கொடுத்தான் என்றால் பாருங்களேன்..

இது ஒரு பரப்புரை..புலம் பெயர் மக்களை தென்னிந்திய திரயுலக மோகத்தை

திருப்பி தமிழர் ஈழ திரைக்குள் திருப்பும் ஒரு நடவடிக்கையாய என்பதை

ஜயா சபேசன் ஆராய்ந்து சொல்ல வேண்டும்..

ஆனால்..இந்த மண் படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்தே பின்னர் தான்

அது பற்றி கூற முடியும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது போல் கிழக்கு பகுதியான மட்டக்களப்பு போன்ற இடங்களில் உள்ள தமிழர்களும் யாழ்ப்பாண தமிழர்களால் சற்று இழிவாகவே பார்க்கப்பட்டனர் என்றும் பின்னர் புலிகள் ஆட்சிக்கு வந்த பின் தான் இத்தகைய பாகுபாடுகள் குறைந்தன என்று .ஈழத்தமிழ் சகோதரர் ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறேன் அவர் கூறியதில் உண்மை உள்ளதா??? தமிழக தமிழர் நடத்தப்பட்ட விதம் பற்றி அவர் என்னிடம் ஏதும் சொல்லவில்லை...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.

யாழப்பான சமுகத்தினரிடையே இவ்வாறான நிகழ்வுகள் உள்ளது...

அங்கே சாதியத்திற்கென கோவிலே வைத்துள்ளார்கள்..அங்கு போய் நான் நின்ற பல்லாண்டுகளிலே

இதனை ..எனக்கு நடந்த சில நிகழ்வுகளும்..4றின..

ஆனால் வன்னி நிலபரப்பில் இவ்வாறான சரிக்கொரு கோயிலென்று இதுவரை இல்லை..

அதனால் தான் வன்னி மண் தலை வணங்கா மண்ணாக உள்ளது...

இவ்வாறான அடிமை தனங்களில் இருந்து விடுபட்டு..பகுத்தறிவால் உயர்ந்து நிற்கிறது...

யாழ்பாணத்தில் படித்த உயர் குல வர்க்கத்தினருக்கு தாம் எல்லோரையும் விட உயர்ந்தவர் என்ற சிந்தனை இருந்தது.

கல்வி அறிவு குறைந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை அவர்கள் மதிக்கவில்லை.

இது ஒரு கசப்பான உண்மை.

ஆயினும் இன்றைக்கு இது பெரும்பாலும் குறைந்து விட்டது. மண் திரைப்படம் சித்தரித்தது போன்ற நிலை ஈழத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை பார்த்துவிட்டு என் ஊரில் இருக்கும் இன்னுமொரு தமிழ்க்குடும்பத்திற்கு அந்த பட சிடியை கொடுத்தேன்.அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு சொன்னார்கள் "இதை விட கமலஹாசனின் படத்தை குடும்பத்துடன் இருந்துபார்க்கலாம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.