Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொர்க்கமே என்றாலும் ஷோபாபோல் வருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை  தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லைஎன்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது.

 

அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான்  இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காகநேரமில்லைஎன்றேன்.

 

சும்மா ஷோபாவிலை படுத்துக் கொண்டு ரிவி பாக்கிறதுக்கே அப்பாவுக்கு நேரம் காணாதுமூத்தவனிடம் இருந்து ஒரு நக்கல் வந்தது. கூடவேகிளுக்என்ற மருமகள்மாரின்ரை சிரிப்பும் சேரந்து வந்தன.

கொஞ்ச நேர கலந்துரையாடலுக்குப் பிறகு சொன்னேன், “ஓகே வாற சனிக்கிழமை நடக்கிற பிறந்தநாள் விழாவுக்கு போவோம்அந்த போவோம் என்ற வார்த்தைகளில் நான் அவர்களையும் மெதுவாக சேர்த்து விட்டிருந்தேன்.

 

வெள்ளை மேசை விரிப்புஅதன் மேலே அலங்காரம் என்ற பெயரில் சில காகிதத்தாலான சில வேலைப்பாடுகள். அவற்றின் மத்தியில் பிளாஸ்ரிக் கப்புகள், கோலா, பன்ரா, ஸ்பிரைட் என்று ஒன்றரை லீற்றர் போத்தல்கள் என மேசை  நிறைந்திருந்தது. உளுந்து வடை ஒன்று கடலைப்பருப்பு வடையுடன் ஜோடி சேரந்து சம்பலோடு எங்கள் மேசைக்கு வந்தது. பக்கத்தில் இருந்த மனைவியிடம்வடை எப்பிடி?” என்று கேட்டேன்கேட்கவில்லை என சைகையால் பதில் தந்தாள். எட்டு ஊருக்கும் கேட்கும்படி தமிழ் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

 

உங்கடை வீட்டை வரோணும் எண்டிருந்தன். இஞ்சை கண்டது நல்லதாப் போட்டுது.” அடுத்த பிறந்த நாள் விழாவுக்கான அழைப்பிதழ்  எங்களுக்கு அங்கேயே கிடைத்தது. நான் எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தங்களுக்கு தரப்பட்ட அழைப்பிதழ்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்த தெரிந்தவர் என்னைப் பார்த்து சிரித்தார். எனது வாய் பேசாமல் இருந்திருக்கலாம். அதுவும் பதிலுக்கு சிரித்துவிட  என்னைப் பார்த்து சிரித்தவர் பேனையை எடுத்து எதையோ கிறுக்கி விட்டு என்னை நோக்கி எழுந்து வந்தார். அவரது கையில் வெள்ளை என்வெலப் தெரிந்தது. இன்னுமொரு அழைப்பிதழ் நடந்து வருகிறது என்பது தெரிந்தது.

 

சாப்பிடும் போது எனக்குள் ஒரு கேள்வி பிறந்தது. கொத்துறொட்டிக்கு வெங்காயம் போடுகிறார்கள்தானே! பிறகு எதற்கு லீக்ஸையும் சேர்க்கிறார்கள்எதற்கு வம்பு என்று எதுவுமே கேட்காமலே சாப்பிட்டேன். ஏற்கெனவே அடுத்த கிழமைக்கான பிறந்தநாள் விழாவின் அழைப்பிதழ் வீட்டில் இருக்கிறது. இப்பொழுது இன்னும் இரண்டு சேர்ந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது ஒரு விழாவுக்குள் இன்னொரு விழா வந்து இடைஞ்சல் தராமல் ஒவ்வொரு சனிக்கிழமையையும் உனக்கு எனக்கு என்று ஒற்றுமையாக பிரித்தெடுக்க எங்களுக்கு தெரிந்திருக்கிறது.

 

எங்கடை காரிலை இடமிருக்கு. சனிக்கிழமை நான் வந்து உங்களை பிக்கப் பண்ணுறன்என்று மூத்தவன் சொல்லி இருந்தான். அவன் சனிக்கிழமை வந்த போது நான் ஷோபாவில் அமர்ந்திருந்தேன்

 

இன்னும் வெளிக்கிட இல்லையோ?” என்று கேட்டான். அவனது கேள்வியில் பட்டும் படாமலும் எரிச்சல் இருந்தது தெரிந்தது

 

காலிலை சுளுக்கிப் போட்டுதுஎன்று காலில் சுற்றி இருந்த பன்டேஜைக் காட்டினேன். தாயைப் பார்த்தான்

 

அப்பா வராமல் நான் தனியாக வாறது நல்லா இருக்காதுதாய் சொன்னதும்  “வரயில்லை எண்டால் ஒரு எஸ்.எம்.எஸ் ஆவது அனுப்பி இருக்கலாமே. நான் மினக்கெட்டு இஞ்சை வந்திருக்க தேவையில்லைஎன்று சலித்துக் கொண்டான். வேலை இடத்துக்கு நேரே போய் இருமி, தும்மி, பம்மிக் காட்டித்தானே சுகமில்லை எண்டு லீவு எடுக்க வேண்டி இருக்கு. அதுபோலத்தான் பன்டேஜைக் காட்டினால்தானே உனக்கும் விளங்கும் என்று சொல்ல நினைத்தேன்

 

மூத்தவன் போகும் போது, “அப்பான்ரை பேரிலை ஐம்பது யூரோ குடுக்கிறன். அப்பாட்டை வேண்டி வையுங்கோஎன்று தாயிடம் சொல்லிவிட்டுப் போனான்.

 

கடைக்கு போய் அடுத்த கிழமைக்கான பொருட்களெல்லாம் வாங்கி வந்து, வார விடுமுறையில் செய்வதற்கென ஒதுக்கி வைத்திருந்த வேலையில் இருபத்தைந்து வீத வேலையை மட்டும் முடித்துவிட்டு சாப்பிட்டுஅப்பாடிஎன்று ஷோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது பிறந்தநாள் விழாவுக்குப் போன பிள்ளைகள் விழா முடிந்து திரும்பி வந்தார்கள்.

 

ஷோபாவில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்த மூத்தவனின் கண்களில், “நான் போற பொழுதே ஷோபாவில்தான் இருந்தாய். திரும்பி வருர போதும் அதிலேயே இருக்கிறாய். ஐஞ்சாறு மணித்தியாலமா ஒரே இடத்திலேயே இருக்கிறீயே...” என்ற ஏளனம் தெரிந்தது

 

சின்னவன் கையில் வெள்ளை என்வெலப்புகள் இருந்தன. நான் அவனது கையைப் பார்ப்பதை புரிந்து கொண்ட அவன், “இன்னும் மூன்று விழாக்களுக்கு அழைப்பு கிடைச்சிருக்கு என்றான்

 

கதைத்து முடிந்து அவர்கள் போன பிறகுதான் பார்த்தேன்என்னுடைய அழைப்பிதழ்களுடன் அவர்களுக்குக் கிடைத்த அழைப்பிதழ்களும் கலந்து என் மேசையில்  ஒன்றாக இருந்தன.

 

ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

 

கவி அருணாசலம் 

10.02.2018

  • கருத்துக்கள உறவுகள்

 நடை முறை வாழ்வை  அழகாக சொல்லிய கவி அருணாசலத் தாருக்கு ... பாராட்டுக்கள் .  

விழாவுக்கு சென்ற இடத்தில அழைப்பு கொடுப்பது ..எனக்கு சரியாக படவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் ஏதாவது விசேசமெண்டால் எங்களுடன் வருவதில்லை. காரணம் அங்கு இவர்கள் வயதுப் பிள்ளைகள் வேறு வேறு திசைகளில் பயணம் செய்துகொண்டிருக்கினம். அவர்களுக்குக் கதைப்பிராக்குக்குக்கூட ஆக்கள் கிடைப்பதில்லை. 

மற்றும் சத்தமாக ஒலிபெருக்கியில் பாட்டுப்போடுவது அதற்குள் நாங்கள் இரைச்சலாகக் கதைப்பது. பிறந்தநாளுக்கு கோக் வெட்டி ஊட்டும்போது எதுவித இயற்கைத்தனமும் இன்றி கமராவைப் பார்த்து கேக் ஊட்டும் கையால் போலியோ வந்தவர்கள்போல் மடக்கி எந்த வித சம்பந்தமுமில்லாது ஜடங்கள்போல் முகத்தைக் கமராவுக்குக்காட்டிக்கொண்டு. கப்பி பேர்த்டே பாடுவதற்கூட வெட்ப்படும் அல்லது தெரியாத சமூகமாகத் தெரியும் ஒரு விருந்துக்கு ஏன் வரவேண்டும் தவிர இன்னுமொரு புறத்தில் பெர்சுகள் சிறுடுகள் இளசுகள் எனப்பேதமின்றீப்பதான் தண்ணியைக்கண்டதுபோல வாய்ய்குள் ஊத்துவது

அதைவிட மோசம் என்னவென்றால்

மனைவி என்ன நிறத்தில உடை உடுத்துகிறாவோ அதே நிறத்தில் மினுங்கல் மிட்டாய் பலூன் நிறத்தில் ஆண்களும் உடை உடுத்தி மைனர் குஞ்சுகள்போல் வலம்வருவது.  

இதுதவிர பெற்றொர் தண்ணியடியிலையும் கதையளக்கிறதிலையும் மினக்கிட சிறுசுகள் புதிதாக வாங்கிக்கொடுத்த தொலைபேசியில் விலையாடு ஏதாவதை எடுத்து அதன் பற்றறி இறங்கினாலும் நிலத்தோட கிடக்கிற பிளக் பொயின்ன்ரில இணைச்சு தரையோட தரையாகப் படுத்துக்கிடந்து அனாதைப்பிள்ளையாக விளையாடுவது

இவைகளைப்பார்த்தால் கொஞ்சம் விசையம் விளங்கின இளையோருக்கு இதுகளில் கலந்துகொள்ள மனம்வருமோ

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு 60  அல்லது எழுபது எடுப்பினம்....போனவுடனை 2.00 பெருமதியான ஒருவடை,ஒரு கேக்கு..ஒரு முருக்கு...ஒரு சமோசா...ஒரு மாங்கோ மிக்ஸ்....பிறகு நீண்டலயினிலை நின்று...ஒரு கோபபயில்  எல்லா வகையான சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு....கையிலை பழமும்...அயிஸ்  கிறீமையும் எடுத்துக்கொண்டு போனால்....பின்பு என்னொருலயினிலை நின்று செயற்கை சிரிப்புடன் ஒரு போட்டோ எடுத்துவிட்டால் பேர்த்த்டே முடிந்தது.......அப்ப கோல் நடத்திரவை 3 பெரிய மாளிகை கட்டுவினம்தானே...பேர்த்டேவச்சவர் 10 வ்ரியம் கடன் கட்டுவர்......இது கனடா நிலை பாருங்கோ..

 

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

வயசாகிப் போனால் எதிலும் விருப்பம் சிரத்தையின்றி மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்று அமைதியை தேடும்.. பிள்ளைகளின் இக்கால களியாட்டங்களோடு மனம் ஒன்றாது.

ஆனால் புலம் பெயர்ந்து அந்நிய தேசத்தில் எம் கலாச்சாரத்தில் அரிதாக அமையும் ஏதேனும் விழாக்கள், கொண்டாட்டங்களில் கலந்துகொண்டால், நாலு சனத்தை பார்த்துக் கதைத்த திருப்தியும், சந்தோசமும் கிட்டுமே?

எங்கும் போகமாட்டேனென்று அடம்பிடித்து சோபாவிலேயே எவ்வளவு நாள் கவிழ்ந்து கிடப்பது..? 'வயசுப்போன இந்த அப்பாவே இப்படித்தான்' என பிள்ளைகளுக்கும் சலிப்பு வருமே..? பின்னர் முற்றாக ஒதுக்கிவிடுவார்கள். 'பிள்ளைகள் எங்களை கண்டுகொள்ள மாட்டேங்கிறார்'களென வயசான பெற்றோர்கள் பிந்நாளில் புலம்பி பிரயோசனமில்லை.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து, அவர்களோடு வெளியில் விழாக்களுக்கு சென்று வருவது குடும்ப உறவுகளுடனான இறுக்கத்தை தவிர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

வயசாகிப் போனால் எதிலும் விருப்பம் சிரத்தையின்றி மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்று அமைதியை தேடும்.. பிள்ளைகளின் இக்கால களியாட்டங்களோடு மனம் ஒன்றாது.

ஆனால் புலம் பெயர்ந்து அந்நிய தேசத்தில் எம் கலாச்சாரத்தில் அரிதாக அமையும் ஏதேனும் விழாக்கள், கொண்டாட்டங்களில் கலந்துகொண்டால், நாலு சனத்தை பார்த்துக் கதைத்த திருப்தியும், சந்தோசமும் கிட்டுமே?

எங்கும் போகமாட்டேனென்று அடம்பிடித்து சோபாவிலேயே எவ்வளவு நாள் கவிழ்ந்து கிடப்பது..? 'வயசுப்போன இந்த அப்பாவே இப்படித்தான்' என பிள்ளைகளுக்கும் சலிப்பு வருமே..? பின்னர் முற்றாக ஒதுக்கிவிடுவார்கள். 'பிள்ளைகள் எங்களை கண்டுகொள்ள மாட்டேங்கிறார்'களென வயசான பெற்றோர்கள் பிந்நாளில் புலம்பி பிரயோசனமில்லை.

நமக்கு பிடிக்குதோ, பிடிக்கலையோ பிள்ளைகளின் விருப்பத்தை மதித்து, அவர்களோடு வெளியில் விழாக்களுக்கு சென்று வருவது குடும்ப உறவுகளுடனான இறுக்கத்தை தவிர்க்கும்.

 

அதற்க்கு வேறு பல இடங்களுக்கு போகலாம்.... சில பிறந்த நாள் கொண்டாட்டம், saree functions க்கு போனால், சந்தோசம் திருப்தி கிடைக்காது.... மன இறுக்கம், இரத்த அழுத்தம் அதிகமாகும்.... முக்கியமா கனடாவில்... 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Sabesh said:

அதற்க்கு வேறு பல இடங்களுக்கு போகலாம்.... சில பிறந்த நாள் கொண்டாட்டம், saree functions க்கு போனால், சந்தோசம் திருப்தி கிடைக்காது.... மன இறுக்கம், இரத்த அழுத்தம் அதிகமாகும்.... முக்கியமா கனடாவில்... 

கனடாவில் இம்மாதிரி குடும்ப விழாக்களென்றால் பகட்டை காட்டவும், புறணி பேசும் இடமாகவுமா அமைகிறது..?

பெரும்பாலும் அந்நிய தேசத்தில் தமிழர்கள் வாழும்போது இம்மாதியான விழாக்கள், ஒன்றுகூடல்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து, அழுத்ததிலிருந்து மனம் விடுபட்டு லேசாக உதவாதா? No social life..?

saree functions - இம்மாதிரியும் குடும்ப விழாக்கள் உள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.