Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடிகை ஸ்ரீதேவி காலமானார்

Featured Replies

அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம்!

 

நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு மும்பையில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. 

ஸ்ரீதேவி

 

கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மரணமடைந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவு சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடயவியல் சோதனைக்குப் பின்னர் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு நேற்றிரவு அவரது உடல் தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு, இந்தியா கொண்டுவரப்பட்ட அவரது உடல் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் என இந்திய சினிமா நட்சத்திரங்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். 

 

அஞ்சலிக்குப் பின் அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர் யாரும் பார்த்திடாத வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தேரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள பார்லி பில்லே பகுதியில் மயானத்துக்குச் சென்ற இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

https://www.vikatan.com/news/india/117774-mortal-remains-of-sridevi-wrapped-in-tricolour-accorded-state-honours.html

  • Replies 57
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, நவீனன் said:

அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய தேசியக் கொடியை அவர் உடல்மீது போர்த்தி அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின்னர் யாரும் பார்த்திடாத வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

ஸ்ரீதேவி நல்ல நடிகை...அது இது எல்லாம் ஓகே.ஆனால் என்ன கோதாரிக்கு அரச மரியாதை? நாட்டுக்கு இவர் செய்த அளப்பெரிய சேவை என்ன?
தேசியக்கொடி போர்த்தி அரச மரியாதை இதிலையிருந்து தெரியுது நாட்டின்ரை சிறப்பு. :cool:

DXC4goxVwAAnjKG.jpg:large

 
 
DXHGr8KV4AAFTkd-750x430.jpg

ஸ்ரீதேவிக்கு அரச மரியாதை – மக்கள் கடும் எதிர்ப்பு..!!

”மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு” என்று மக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டுபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள் பின்னர் தான் அவர் மது போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. மது போதையில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது இந்தியத் தேசியக் கொடியை போர்த்தி மாநில அரசு மரியாதை செய்தது. அதைப் பார்த்து பலரும் கோபப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் இறந்தவருக்கு எதற்கு மாநில அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளனர்.

 

மதுபோதையில் இறந்தவரால் கேரளாவில் மது இறந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டடு என்றும் மக்கள் குமுறுகிறார்கள். சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்தார். அவர் தொழிலை அவர் ஒழுங்காக செய்ததற்காகவா இவ்வளவு முக்கியத்துவம் என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

மது போதையில் விழுந்து இறந்தவரை கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு வேளை சோறு கிடைக்காமல் போன மதுவை அடித்துக் கொன்றதை யாரும் கண்டுகொள்ளக் கூட மாட்டார்களா என்று சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

http://newuthayan.com/story/72497.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 

மதுபோதையில் இறந்தவரால் கேரளாவில் மது இறந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டடு என்றும் மக்கள் குமுறுகிறார்கள். சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்தார். அவர் தொழிலை அவர் ஒழுங்காக செய்ததற்காகவா இவ்வளவு முக்கியத்துவம் என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

மது போதையில் விழுந்து இறந்தவரை கொண்டாடுவார்கள் ஆனால் ஒரு வேளை சோறு கிடைக்காமல் போன மதுவை அடித்துக் கொன்றதை யாரும் கண்டுகொள்ளக் கூட மாட்டார்களா என்று சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

பசிக்கு அரிசி திருடியவன் கொலைசெய்யப்படுகிறான்.
பகட்டு வாழ்க்கைக்குப் பல்லாயிரம் கோடிகளைத் திருடியவன் பிளைட்டில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறான். நாட்டு நிலைமை அப்படியிருக்கு...

DWwPFAAVAAEim_l.jpg:large

 

ஊடக தர்மம் என்பது இது தான்  இன்றைய நிலைமை.....

DXFawtEV4AAUfpH.jpg

காற்றில் கலந்தார் கனவு தேவதை: ஸ்ரீதேவி இறுதிச் சடங்கின் கடைசி நிமிடங்கள்

தமிழின் திரைவானில் தோன்றி, தெலுங்கில் ஒளி வீசி பிறகு இந்தி திரைப்பட உலகில் ஆதிக்கம் செலுத்திய, பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.

Srideviபடத்தின் காப்புரிமைE.GNANAM

மும்பை அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாட்டு மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்ரீதேவி உடலின் இறுதி ஊர்வலம் சுமார் ஐந்தரை கி.மீ. தூரத்தைக் கடந்து சென்று வில்லே பார்லே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்றவரான ஸ்ரீதேவியின் உடலுக்கு மஹராஷ்டிர மாநில அரசு மரியாதை வழங்கப்பட்டது.

நடிகர்கள் ஷாரூக் கான், அமிதாப் பச்சன், பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் ஆகியோர் சுடுகாட்டுக்கு வந்திருந்தனர்.

கையில் மலருடன் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். Image captionகையில் மலருடன் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர்.

எரிமேடை வரை செல்ல ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அனுமதி இல்லை. தங்கள் கனவு தேவதையின் இறுதி ஊர்வலத்தைப் பார்க்கவும், இறுதி ஊர்வலத்துக்கு வரும் நடிகர்களைப் பார்க்கவும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். எனினும், அவர்கள் சுடுகாட்டுக்கு சில நூறு மீட்டர்கள் முன்பாகவே நிறுத்தப்பட்டனர்.

அமிதாப்பச்சன், காரை விட்டு இறங்காமலேயே சுடுகாட்டுக்கு உள்ளே வரை சென்றுவிட்டதால் அவரை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

சுமார் ஐந்தரை கி.மீ. தூரமுள்ள இறுதி ஊர்வலப் பாதையில்தான் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்தப் பாதையில் உள்ள ஃபோர் பங்களா பகுதியில் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஊர்வலம் தொடங்கும் முன்பாகவே மூடப்பட்டதாகக் கூறுகிறார் பிபிசி தமிழின் சிவக்குமார் உலகநாதன்.

முன்னதாக, ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது உடல் மூடப்பட்டிருந்ததால் அவரது முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய ரசிகர்கள் தெரிவித்தனர்.

உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் இருந்து பார்க்க தாங்கள் அனுமதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அஞ்சலி செலுத்தவரும் ஐஸ்வர்யா ராய் பச்சன் Image captionஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அஞ்சலி செலுத்தவரும் ஐஸ்வர்யா ராய் பச்சன்

துபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.35 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூரின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர், போனி கபூரின் இளைய சகோதரர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் ஸ்ரீதேவி உடலுடன் இந்தியா திரும்பினர்.

மும்பை விமான நிலையத்துக்கு உடல் வந்து சேர்ந்தபோது போனி கபூரின் இன்னொரு தம்பியான நடிகர் அனில் கபூர், அவரது மகள் சோனம் கபூர், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.

ஸ்ரீதேவி Image captionஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படவுள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்

ஊடகங்கள், திரைத் துறையினர் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் ஆகியோருக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மற்றும் பிராத்தனைக்காக அவரது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவிக்கு

இறுதிச் சடங்குகளுக்காக உடல் மும்பை அந்தேரியில் உள்ள கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஸ்ரீதேவி - போனி கபூரின் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நள்ளிரவில் வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீதேவிக்கு
 
 
 
 

 

செவ்வாய்கிழமை மாலை , நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்ய அந்நாட்டு போலீஸ் அனுமதி வழங்கியது. இத்தகவலை துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

ஸ்ரீதேவி

அதில், நடிகை ஸ்ரீதேவியின் இறந்த உடலை எம்பாமிங் செய்ய ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடமும், இந்திய தூதரகத்திடமும் துபாய் போலீஸ் அனுமதிக் கடிதத்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகை ஸ்ரீதேவி ஹோட்டலிலிருந்த குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கூறும் தடயவியல் துறையின் அறிக்கை திங்கள்கிழமை வெளியானது.

மேலும், அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஸ்ரீதேவி உடலை எம்பாமிங் செய்ய துபாய் போலீஸ் அனுமதிபடத்தின் காப்புரிமைTWITTER

விசாரணைக்குப் பின் முடிவு:

மரணம் நிகழ்ந்த சூழலை அறியவும், சட்ட விதிகளைப் பின்பற்றி உண்மையை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், ஸ்ரீதேவியின் குடும்பத்தினரிடம், அவரது உடலை ஒப்படைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக துபாய் காவல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதேவிக்கு எம்பாமிங் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் Image captionஸ்ரீதேவிக்கு எம்பாமிங் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்

எஸ்.வி சாலையில் உள்ள விலே பார்லே சேவா சமாஜ் சுடுகாட்டில் 5 மணிக்கு மேல் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

http://www.bbc.com/tamil/india-43208224

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதேவி இறந்த போது ஏற்பட்ட அனுதாபம் எரியூட்டப்படும் போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிதேவி இறந்த போது ஏற்பட்ட அனுதாபம் எரியூட்டப்படும் போது இல்லை.

ஏன் சாமி..?

  • பெண் என்பதால் ஒழுக்கத்தை அவரிடம் எதிர்பார்த்தீர்களா?
  • ஓட்டலில் தண்ணியை போட்டு வழுக்கி இறந்ததாலா?
  • ஊடகங்களின் மித மிஞ்சிய அலப்பறைகளால் வந்த வெறுப்பா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ராசவன்னியன் said:

ஏன் சாமி..?

  • பெண் என்பதால் ஒழுக்கத்தை அவரிடம் எதிர்பார்த்தீர்களா?
  • ஓட்டலில் தண்ணியை போட்டு வழுக்கி இறந்ததாலா?
  • ஊடகங்களின் மித மிஞ்சிய அலப்பறைகளால் வந்த வெறுப்பா?

என்னைப்பொறுத்தவரைக்கும் அவர் ஒரு நடிகை அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.

அனுதாபங்களும் அஞ்சலிகளும் மனிதத்தன்மையுடன் தெரிவிக்கின்றேன்.

ஆனால் ஊடகங்களின் மிதமிஞ்சிய பிரமாண்டமும் அரசமரியாதையும் முகம் சுழிக்க வைத்துவிட்டது. இந்தியாவில் இன்றும் சினிமாவை வைத்து எதையும் சாதிக்கலாம் என்றொரு பிரம்மை வளர்ந்து கொண்டே வருகின்றது.பள்ளிக்கூடம் செல்லாமல் சினிமாக்கொட்டகை சென்றால் அறிவை வளர்க்கலாம் என்றொரு நிலை வரும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.