Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்

Featured Replies

மாமா - மாமி

மச்சான் - மச்சாள்

சித்தப்பா - சின்னம்மா

அத்தை - ?

அத்தான் - ?

எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை.

இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது.

*******

யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன்.

அவர் சொன்னவை என்ன என்றால்..

அக்கா - அண்ணா

இது போல்

அத்தை - அத்தன்

அதாவது அத்தையுக்கு ஆண்பால் அத்தன் என்று வருமாம். அத்தன் என்றால்  அப்பா/தந்தை. அத்தன், அத்தை ஆகியவை தூய தமிழ்ச்சொற்கள் கலப்படங்கள் இல்லை எனக்கூறினார்.

அடுத்ததாக,

அத்தான் - அத்தாள்

அதாவது அத்தானுக்கு பெண்பால் அத்தாள் என்று அமையலாம் என்று கூறினார்.

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் என்று கூறினார்.

கூழிலில் தேடல் செய்து பார்த்தபோது அத்தாள் என்றால் அம்மா/தாய் என்று பொருள் உள்ளது.

அப்படி என்றால்,

அத்தன் - அத்தாள் என்று அல்லவா வரும் அத்துடன் அத்தை - அத்தான் என்றும் வரும் அல்லவா?

அத்தையின் ஆண்பால் =  அத்தானின் பெண்பால்

*******

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சித்தப்பாவுக்குச் சித்தி....அதிகம் பொருந்தும் போல...உள்ளது!

சின்னம்மாவுக்குச் ....சின்னையா பொருந்தும் போல உள்ளது!

அத்தை என்பது...ஈழத்துத் தமிழில் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்!

எனக்குத் தெரிய....தமிழ்ப் படங்களின் மூலம் தான்...இந்த ...அத்தை..அத்தை மகள்...என்று ஈழத்தமிழுக்குள் இந்த வார்த்தை புகுந்திருக்க வேண்டும்!

ஊரில்...அத்தை மகளை கட்டினான் என்று கூறுவதில்லை!  முறை மச்சாளைக் கட்டினான் என்று தான் கூறுவார்கள்!

எனினும் அத்தையின் மகளைக் கட்டுவதனால்...பரந்த...மரபணுப் பரம்பல் ஏற்பட மாட்டாது! பிறக்கும் குழந்தைகள்...ஆரோக்கியமாகவும், உடல் குறைபாடு அற்றவர்களாகவும் இருக்க மாட்டார்கள்!

இது வட இந்தியாவின்...யானைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தது! ஆமாம்....யானைகள்..தங்கள் இரத்த உறவுகளை...மனைவிகளாக ...கணவர்களாக ஏற்றுக் கொள்வதில்லையாம்!

இது..நமது முன்னோருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்பது விவாத்ததுக்கு உரியதே!

அத்தை மகனே....அத்தான் என்று அழைக்கப் படுகிறார்!

எனவே...நிச்சயம்...அத்தையின் ஆண்பால் ...அத்தானாக முடியாது!

அத்தன் என்று சொல்லும் போது...தமிழ் மணக்கவில்லை!

மலையாளம் தான் மணக்கிறது!

அச்சன்....தந்தை!

கர்ணன் படத்தில்.....குந்தி தேவியை....கிருஷ்ணன் விழிக்கும் போது....அத்தை..என்று தான் விழிக்கிறார்!

கண்ணனுக்கும்...குந்தி தேவிக்கும் உள்ள உறவு முறையை...நீங்கள் சொன்னால்...நான் பெண்பால் சொல்லுகின்றேன்!

இது எப்படி இருக்கு....கலைஞன்?

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனின் தந்தை வாசுதேவரின் தங்கை குந்திதேவி. 

வாசுதேவர் + தேவகியின் = மகன் கண்ணன்.

நந்தகோபன்+யசோதை = வளர்ப்பு மகன் கண்ணன்.

அதனால்தான் குந்திதேவியை அவர் அத்தை என அழைக்கிறார்.

சுவியும் பிறந்த நாளில் இருந்தே தனது தந்தையின் தங்கையை அத்தை என்றே அழைத்து வந்துள்ளார். இதனால் உங்களின் வாதங்கள் முடக்கு வாதமாய் அதாவது முடங்கிப் போய் விடுகிறது....!tw_blush:

அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

நன்றி....சுவியர்!

கலைஞனின் கேள்விக்கான பதில் உங்களிடம் நிச்சயம் இருக்க வேண்டுமே!

உங்கள் அத்தையின்கணவரை...எவ்வாறு அழைக்கின்றீர்கள்?

அது தான் நிச்சயமாக....அத்தையின் ஆண் பாலாக இருக்கும்!

எனது பக்கத்துக்கு வீட்டுக்காரி...தனது தகப்பனை.......பப்பா என்று தான் அழைப்பார்!

நானும் அவ்வாறு அழைக்க வெளிக்கிட்டு....பூவரசம் தடியொன்று முறிஞ்சு போனது தான்....விளைவு!

சரி...அதை விடுங்கள்!

கிறிஸ்துவுக்குப் பின்னர் ஏழாம் நூற்றாண்டு வரையும் சென்று பார்த்தேன்!

திருநாவுக்கரசு நாயனார்.....பிராமணர் அல்லாது ஒருவர்!

அவரது தேவாரமொன்றில்...

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்
                                          மாமியும் நீ, 
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும்
                                சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என்
                               நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு
                                 ஊர்ந்த செல்வன் நீயே.

'அத்தை' முறை வழக்கில் இருந்திருந்தால்...மாமன்..மாமி...என்று குறிப்பிடாமல்...அத்தை....அத்தன் என்று சொல்லியிருக்க மாட்டாரா, சுவியர்?

உறவு முறைகள்....மிகவும் குழப்பமானவை என்பதுடன்...அந்தந்தப் பிரதேசங்களின் பேச்சு வழக்குக்கு ஏற்ப மாறுபடுபவை!

அத்தான் எனும் போது...கணவனை அன்புடன் அழைக்கும் அதே உறவுச் சொல், அத்தார் எனும் போது ..அக்காவின் கணவன் என்று மரியாதைச் சொல்லாக மாறி நிற்கிறதே!

உங்களைப் போல...நாலு பேர் இங்க உலாவிற படியால...கன விசயங்களை அறியக் கூடியதாக இருக்கு!

 அத்தையின் மகனை நான் அத்தான் என்றே கூப்பிடுவேன். மகள்  மச்சாள்  முறைதான், ஆனால் கூப்பிடுவது டியே ,வாடி போடி என்றுதான். அப்படியே அவளும் என்னை அத்தான் என்றுதான் கூப்பிட வேண்டும்.அதுதான் முறையும் கூட. ஆனால் அவளுக்கு என்னை விட விலங்குகளின் மீது பிரியம் அதிகம் அதனால் ஏதாவதொரு விலங்கின் பெயரால்தான் அழைப்பாள். நேற்றுகூட போனில் அப்படித்தான்.

ஒருவரை...எப்படி அழைப்பது என்பது...அவரது தாய்...தந்தையர் சொல்லிக்கொடுப்பது தானே, சுவியர்!

ஆனால் வாடி..போடி...என்று அழைப்பது அன்பின் வெளிப்பாடு எனினும்....அதுவும் ஒரு வகையில்....பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்று தான் நான் கருதுகின்றேன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவரை மாமா என்றுதான் சொல்வது. மேலும் அவர் எனது தாயாரின் சகோதரரும் கூட. (அவர்கள் மாற்றுசடங்கு). மற்றது பொதுவாய் மச்சாள்  என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரே வீட்டிற்குள் இருந்து வளர்ந்தபடியால்,அம்மம்மாவுடனும். (நான் வயிற்றில், எனது தந்தையார் காலமாகி விட்டார்) அப்படி பேசிக் கொள்வது வழக்கம்.  tw_blush:

அப்பர் சிவனை அனைத்துமாய் பார்க்கிறார்.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, suvy said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இன்னொன்றையும் கவனியுங்கள் சுவியர்!

அப்பர்...அண்ணனை...அய்யன் என்று தான் விழிக்கிறார்!

சிங்களவன்....தமிழிலிருந்து ஏழாம் நூற்றாண்டிலேயே....பொறுக்கிற்றான் போல கிடக்கு!

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

  • தொடங்கியவர்

புங்கையூரன்,

திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரத்தை அலசிப்பார்த்தது அருமை. :96_ok_hand:

எவ்வளவு அழகாக விபரிக்கின்றார்;

  • அப்பன் நீ,
  • அம்மை நீ,
  • ஐயனும் நீ,
  • அன்பு உடைய மாமனும் மாமியும் நீ, 
  • ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
  • ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
  • துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
  • துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
  • இப் பொன் நீ,
  • இம் மணி நீ,
  • இம் முத்து(ந்)நீ,
  • இறைவன் நீ
  • ஏறு ஊர்ந்த செல்வன் நீயே!

குருஜி, நீங்கள் விட்டுக்கொடாமல் குறியாய் அத்தைக்காக வாதாடுவதன் பின்னால் இவ்வளவு சமாச்சாரங்கள் உள்ளனவா.

  • கருத்துக்கள உறவுகள்

விட்டு கொடுக்காமல் என்றல்ல உண்மையை தெரிந்து கொள்வோம் என்னும் ஆவல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, suvy said:

 இங்கே அய்யன் என்பது குருவை குறிக்கும் என நினைக்கின்றேன். பிதா, மாதா, குரு.

அய்யர் 

சுவியர்...பின்வரும் இணைப்பைப் பாருங்கள்!

அண்ணன் தான் என்று அடித்துச் சொல்லுகின்றார்...இவர்!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=6095&padhi=095&thiru=6

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கலைஞன் said:

அத்தை மகனே அத்தான் எனவே

அத்தையின் ஆண்பால் அத்தான் ஆகமுடியாது என்று கூறுகின்றீர்கள்.

சிந்தித்து பார்ப்பதற்கு மயக்கமாக உள்ளது.

ஆண்பால் பெண்பாலில் ஒன்றுக்கு நிகரான இன்னோர் சொல்லை வழங்கும்போது உறவுமுறையின் அடிப்படையில் விதிகள் உள்ளனவா?

தம்பி - தங்கை

இங்கு சகோதர உறவு முறை காணப்படுமாயின்

அத்தை - அத்தான்

இங்கே ஏன் தாய் மகன் உறவு முறை அமையமுடியாது?

நாங்களும் வீட்டில் அத்தை என்ற சொல்லை பாவிப்பதில்லை. அதற்காக நாங்கள் பயன்படுத்துவது இல்லை என்பதற்காக அது தமிழ் சொல் இல்லை என்றும் கூறமுடியாது. அதேசமயம் அத்தை, அத்தான் ஆகிய சொற்கள் இந்திய தமிழ் சினிமாவின் இறக்குமதியாய் இருக்குமோ என்றும் சந்தேகம் வலுக்கின்றது.

மகாபாரத கதை உருவாக்கத்தின் மூலம் தமிழ்மொழி இல்லை என்றால் அத்தை எனும் சொல் தமிழாய் இருக்காதோ? இந்திய தமிழ் சினிமாவில் ஏதும் நடக்கலாம்.

அத்தன் எனும் சொல் பழந்தமிழர் இலக்கியத்தில் உள்ளது போன்று பண்டிதர் அவர்கள் மேற்கோள் ஒன்றை சொல்லிக்காட்டினார் என்று நினைக்கின்றேன்.

கலைஞன்...பண்டிதர் சொன்னது சரி..!

பின்வரும் பாடலில்....அத்தன் என்ற சொல் வருகின்றது தான்!

ஆனால்....தந்தை என்ற பொருள் கொண்டு வருகின்றது!

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
.
  
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க

openbook.gifபொழிப்புரை:

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர் கூறும் ` கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை ` என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்
  • தொடங்கியவர்
39 minutes ago, புங்கையூரன் said:

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
 மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
 பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
 அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
 தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

எவ்வளவு அழகிய பக்தி உணர்வுடன் படைக்கப்பட்ட பாடல் இது~! :100_pray:

பண்டிதரும் அத்தன் என்றால் தந்தை என்றே கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் புங்கை/கலைஞன்....!

திருவெம்பாவை 3வைத்து பாடலில் முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்த தெதிரெழுந்தென் 

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றும் வருகின்றது.

ஆயினும் இவை ஒரே பொருளில் கொள்ளாது இடத்துக்கு ஏற்றவாறு பொருள் படும் என்றுதான் சொல்கிறேன்.

அதுபோல் திருப்பொற்சுன்னத்திலும் 1 வைத்து பாடலில் "அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

அதனால் அந்தச்சொற்பதம் வழக்கொழிந்து விட்டதுபோல.....!

  • கருத்துக்கள உறவுகள்

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

நீங்கள் சொல்வது சரி, சுவியர் !

இன்னொரு இடத்தில்..

முத்த்னே முதல்வா...,,

தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா...

என்றும் வருகிறது!

இஙுகு தலைவன் என்று பொருள் வரும் போல கிடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அபிராமி அந்தாதி 57 வது பாடல் : 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் .....என்று தொடங்கும்..... இங்கு ஐயன் என்பது நேரே சிவனை குறிக்கும்......!

சுவியர்,

ஒரு மொழியின் தொன்மை என்பது...வரலாறுகளிலோ அல்லது சரித்திர சான்றுகளிலோ இல்லை என்றே நான் நம்புகிறேன்! ஒரு மொழி எவ்வாறு வளைந்து கொடுக்கின்றது என்பதைலேயே அதன் தொன்மை தங்கியுள்ளது! தமிழ் கவிதை மொழி! அதனைப் பற்றி வரும் போது .. எழுதாமல் இருக்க முடியவில்லை! இப்போதும் கைத் தொலை பேசியில் வைத்துத் தான் தட்டிக் கொண்டிருக்கிறேன்!

புதிய... புதிய உதாரணங்களைத் தாருங்கள்!

நீண்ட நாட்களின் பின்னர் ... மனத்திருப்தி தந்த விவாதம் இதுவாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை,அதற்கு குருஜிக்குத்தான் நன்றி......!

தமிழ் ஒரு வானம் போன்றது. ஒரு எழுத்து சொல்லுக்கே பத்து அர்த்தம் வரும். யானைக்கும் குதிரைக்குமே முப்பதுக்கு மேல் பெயர்கள் உள்ளன. எங்கோ படித்தது , ஒருமுறை வள்ளலார் அடியார்களுடன் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் சிவபுராணம் பற்றி சொற்பொழிவாற்றும் படி கேட்கின்றனர்.அவரும் சுருங்கக் கூறவா விரிவாய் கூறவா என்று கேட்க அவர்களும் தாராளமான நேரம் இருக்கு, நீங்கள் விரிவாய் கூறுங்கள் என்கின்றனர். வள்ளலார் காப்பு சொல்லிவிட்டு நமசிவாய வாழ்கவில் முதல் வரும் "ந"என்ற எழுத்தின் பெருமைகளை அர்த்தங்களை சொல்லிக்கொண்டே போகிறார். பிரசங்கம் முடியவில்லை ஆனால் நேரம் முடிந்து விட்டது.

இவையெல்லாம் சொல்லுந்தரமன்று.....!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அத்தையின் ஆண் பால் பிரச்சனை காரணமாக போலும்,  எமது குடும்பத்தில் அத்தையம்மா - அத்தைமாமா என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

இவ்வளவு பெருமைகள் உள்ள தமிழ் மொழியை பேசும் ஒரு கூட்டம் இப்படியும் உறவுகளை அழைக்குதே.
உம்மா - வாப்பா 
நானா / காக்கா - ()தாத்தா
சாச்சா - சாச்சி
உம்மம்மா 
வாப்பம்மா 
மைனி (மதினி)

டாத்தா   ?

இல்லை வாப்பா... அது அரபி சொல்லுக..

அப்பா ஒரு உருது சொல் தெரீமா?

அய்யா என்று செல்லீட்டு இருந்த நம்ம,  இந்தியாவில் இருந்து தமிழ் படங்கள் வந்த அப்புறம் தாம் அப்பா செல்லி செல்லறம் தானே வாப்பா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் - மச்சாள் 
இது, தமிழ் சொல்லாக.... இருக்க வேண்டும்.
அந்த... உறவு, தமிழர்களில்.. வித்தியாசமான மரியாதைக்குரியது.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.