Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜாங்கனை குளத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட 44 பேர் கைது

Featured Replies

ராஜாங்கனை குளத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவதற்கெதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட 44 பேர் கைது

rajankanai.jpg?resize=728%2C490

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம காவல்துறை சந்தியில் காவல்துறையினர் மீது; கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராஜாங்கனை குளத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை; தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமைக் கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசயதாகவும் இதனால் 4 காவல்துறையினர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 39 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

http://globaltamilnews.net/2018/68793/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள்கட்டியிருந்த கோமணத்தையும் வித்துத்தான் யுத்த வெற்றி பெறபட்டது  என்பதை   அறியும் காலம் அண்மிக்கின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

ராஜாங்கனை குளத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் போத்தல்களை; தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமைக் கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனன் தானும் கெட்டு மற்றவனையும் கெடுக்கப்போறான்....சீனன் ஏற்கனவே நல்ல காத்து நல்ல தண்ணி இல்லாமல் தவிக்கிறான்....இதுக்கை?????

இதெல்லாம் பட்டுத்திருந்தோணும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சீனன் தானும் கெட்டு மற்றவனையும் கெடுக்கப்போறான்....சீனன் ஏற்கனவே நல்ல காத்து நல்ல தண்ணி இல்லாமல் தவிக்கிறான்....இதுக்கை?????

இதெல்லாம் பட்டுத்திருந்தோணும். :cool:

உண்மை தான் குமாரசாமி அண்ணை!

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப் படும்...குழந்தைகளுக்கான பால் மாவை....சுப்பர் மார்க்கற்றில்...வந்த உடனே...சீனாக்காரன் வாங்கிச் சீனாவுக்கு..அனுப்பி விடுகிறான்!

அவுஸ்திரேலியக் குழந்தைகளுக்குத் தாய்ப் பாலைத் தவிர வேறு வழியில்லை!

  • தொடங்கியவர்

தம்புத்தேகம சம்பவம் : 50 பேர் விளக்கமறியலில்

 

 

அநுராதபுரம் - இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து  நீரைப் பெற்றுக்கொண்டு   முன் னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குடி நீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்  தம்புத்தேகம  நகரில் முன் னெடுத்த ஆர்ப்பாட்டம் கலகமாக மாறியதில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம நீதவான் சமிலா நதிஷாணி முன்னிலையில் நேற்றிரவு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறி கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் 59 சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுள், 2 பெண்கள் அடங்களாக 50 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 6 ஆண் மற்றும் 3 பெண் சந்தேகத்துக்குரியவர்கள் அடங்களாக 9 பேர் சரீரப் பிணையில் செல்ல தம்புத்தேகம நீதவான் அனுமதியளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, கலகம் விளைவித்தமை,  பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர்களை கைது செய்ததாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குருணாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் நேற்று பெரும்தொகையிலான விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.  இராஜாங்கனை நீர்த்தேகத்தை அண்மித்துள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படும் நிலையில், இராஜாங்கனை குளத்தை, போத்தலில் அடைக்கப்படும் குடிநீரை தயாரிக்கும் நோக்கில் சீன தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது தம்புத்தேகம பகுதியில் உள்ள அனைவரும் ஒன்றுகூடியிருந்தனர். இதனால் குருணாகல் - அனுராதபுரம் வீதியி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டது.

  இதேவேளை  ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொலிஸார் நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றிருந்தனர். எனினும் அதனை கணக்கில் கொள்ளாது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். இதனால் அவ்விடத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டது.

அதனை கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டு தாககுதல் நடாத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடியடிப் பிரயோகம்  செய்தும் களைத்தனர்.

 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலின் போது 4 பொலிஸார் காயமடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் 59 பேரைக் கைது செய்தனர். 

http://www.virakesari.lk/article/31128

  • தொடங்கியவர்

இராஜாங்கனை குடிநீர் திட்டம் : தற்காலிகமாக இடைநிறுத்தம்

 

 

அநுராதபுரம் - தம்புத்தேகம நகர குழப்ப நிலை காரணமாக இராஜாங்கனை குடிநீர் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து  நீரைப் பெற்றுக்கொண்டு   முன் னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குடி நீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்  தம்புத்தேகம  நகரில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலகமாக மாறியதில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31141

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.