Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.!

Featured Replies

இருளில் மூழ்கிய பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.!

 

 

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/31364

  • தொடங்கியவர்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

இலங்கையில், ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

,பேஸ்புக்படத்தின் காப்புரிமைDANIEL LEAL-OLIVAS/AFP/GETTY IMAGES

கண்டிமாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு காரணமான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுக்கும் நோக்கிலேயே சமூக வலைத்தளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பிரகாரம் வடிகட்டப்படுவதாக இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சபை கூறியுள்ளது.

வெறுப்புணர்வுப் பிரசாரங்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஃபேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களை பல இடங்களில் முடக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்ண செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டுவிட்டர்படத்தின் காப்புரிமைBETHANY CLARKE/GETTY IMAGES

அதேவேளை ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் மற்றும் வைபர் ஆகிய வலையமைப்புக்களை இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக நாடெங்கிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள்.

இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் பதற்றநிலை தொடர்வதை அடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்படத்தின் காப்புரிமைSTAN HONDA/AFP/GETTY IMAGES

கண்டி மெனிக்கின்ன பிரதேசத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தமது குடிமக்களுக்கு இலங்கைப் பயணம் குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.

இலங்கைக்கு பயணிப்பவர்கள் அங்கு, ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்குமாறு அவை அறிவுறுத்தியுள்ளன.

லிங்கிட்யின்படத்தின் காப்புரிமைCARL COURT/GETTY IMAGE

அதேவேளை சுற்றுலாத்துறை நிலவரங்களை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுற்றுலா போலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும் அறிவித்துள்ளது.

பயண முகவர்கள் வெளிநாடுகளுக்கு சரியான விபரங்களை தரவேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தேவையற்ற பதற்றம் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அது கேட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-43316036

  • கருத்துக்கள உறவுகள்

https://web.whatsapp.com/998bbd15-ad75-4b8f-9df1-32865e1c7944

ஒன்றுமே வேலை செய்யவில்லை என்கிறார்கள் ஆனால்  தொடர்ந்து காணொளி வந்து கொண்டு உள்ளதே அடியில் இன்றைய திகதியுடன் ?

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முடக்கம் : மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பம்

10-c3a3238b367a4c15b559d2f95a7dcf09ce5e5851.jpg

 

(ரொபட் அன்டனி, எம்.எப்.எம்.பஸீர்)

முகப்புத்தகம் எனும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை முடிக்கியுள்ள அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளது. நேற்றுமுற்பகல் முதல் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்யும்  விசேட பொறிமுறை ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். 

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட மேற்பார்வை நடவடிக்கைகள் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பொறியியலாளர்களால் வகுக்கப்பட்டுள்ள முறைமைகளே கடைபிடிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இனவாதத்தை தூண்டும் அல்லது சேதங்களை ஏற்படுத்தும் பதிவுகளை தடை செய்யும் முகமாக இந்த சிறப்பு திட்டங்கள் அமைந்திருக்கும் என தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் குறித்த சமூக வலைத்தளங்கள் ஊடான தகவல் பரிமாற்றங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களின் இயக்கம் மிக மந்த கதியில் இருந்தது.

கண்டி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள இனவாதத்தை தூண்டும் வகையிலான அறுவறுக்கத்தக்க சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் பரவலடைய சமூக வலைத்தளங்களே காரணம் என கண்டறியப்பட்டது.

அதனூடாகவே வன்முறையாளர்கள் ஒன்றிணைவதும் கண்டறியப்பட்டது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக சமூக வலைத்தளங்கள் மேற்பார்வை செய்யப்பட்டு அதன் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் இந்நடவடிக்கை ஊடாக உண்மைப் பிரச்சினை தீரப்போவது இல்லை எனவும் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் இரடி கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதலில் கண்டி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. அதனை அடுத்து கொழும்பு உள்ளிட்ட நாடு முழுவதும் இந்த பேஸ்புக், வட்சப், மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கின இதனால் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடும் உறவினர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பில் நேற்று அரசாங்கத் தகவல் தினைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் இனவாத பிரசாரங்கள் தொடர்பில் அமைச்சரவையில்பேசப்பட்டது. எனவே தற்போது அரசாங்கம் அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-08#page-1

16 hours ago, பெருமாள் said:

https://web.whatsapp.com/998bbd15-ad75-4b8f-9df1-32865e1c7944

ஒன்றுமே வேலை செய்யவில்லை என்கிறார்கள் ஆனால்  தொடர்ந்து காணொளி வந்து கொண்டு உள்ளதே அடியில் இன்றைய திகதியுடன் ?

VPN (Virtual private network) software போட்டு பாவித்தால் எல்லாம் வேலை செய்யுது....:rolleyes:

சில நேரங்களில் ஒரு VPN சொட்வேரை பிளாக் செய்தால் வேறு ஒன்றை தரவிறக்கி பாவிக்க வேண்டிவரும். Playstore / ஆப்பிள் store ல கணக்கா VPN சாப்ட்வேர் இலவசமாக கிடைக்குது. உதாரணமாக VPN மாஸ்டர், Hotspot VPN ....

Currently I am using Hotspot VPN and it is working fine. I able to access all social medias.

  • தொடங்கியவர்

சமூக வலைத்தளங்களின் தற்காலிக தடை நீடிப்பு…

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/70142/

6 hours ago, நவீனன் said:

மூக வலைத்தளங்களின் தற்காலிக தடை நீடிப்பு…

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தின் கோர முகங்களை மறைக்க சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்துக்கு மேலதிக நேரம் தேவைப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.