Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள கவிஞர்களின் கவியரங்கம் 02: யாழ் கீதம்!

Featured Replies

  • தொடங்கியவர்

கவியரங்கில் பங்குபற்றிய, பங்குபற்றும், பங்குபற்றப் போகும் அனைத்து யாழ்கள கவிக் குயில்களிற்கும், கவியரங்க நடுவர்களிற்கும், யாழ் கள கவியரங்க ஒழுங்கமைப்பாளர் என்ற முறையில் எனது நன்றிகளும்! பாராட்டுக்களும்!

உங்கள் யாழ் குழந்தை நாளை அகவை ஒன்பதில் காலடி வைக்கின்றது!

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திங்கட்கிழமை அடி நடக்கும்

செவ்வாய் எல்லாம் பொறி பறக்கும்-அட

வெள்ளிக்கிழமை வெற்றி கிடைக்குமடா..

சனிக்கிழமை சாந்தி கிடைக்கும்

திங்கள் கிழமை அடிநடந்தது

செவ்வாயன்று பொறிபறந்தது

புத்தம்புதிதாய் யுகம் பிறந்தது

வெற்றிச் சேதி எமைநெருங்குது!

விகடகவிஞர் சொல்நடக்குது

வியப்பில் எங்கள் விழிபிதுங்குது

வாழ்த்துச் சொல்ல வரிகளேதிங்கு

வணக்கம் வைத்தேன் உம்தன்கவிதைக்கு

வாழ்த்துக்கள்!

அருமையான கவிதை. காலத்திற்கேற்ப வரலாறு படைத்த வரிகள். ஆனாலும் யாழ்கீதம் என்ற வகைக்குள் அடங்கமாட்டேனென நிமிர்ந்து நிற்கிறது.

திங்கட்கிழமை அடி நடக்கும்

செவ்வாய் எல்லாம் பொறி பறக்கும்-அட

வெள்ளிக்கிழமை வெற்றி கிடைக்குமடா..

சனிக்கிழமை சாந்தி கிடைக்கும்

என்ற கவிவரிகளில் நல்ல கவி நயமும், சொல்நயமும் (காலத்தை வென்ற கருத்துடன்) மிளிர்கிறது.

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளை மனங்கொண்ட பிள்ளைக்கூட்டங்கள்

வேடிக்கைக் கதைகள் பேசப்பேச,

கள்ளச்சிரிப்புடன் கன்னித்தமிழும்

துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள,

வல்ல செயலாலே நல்ல உறவுகள்

பொல்லாத பொய்யதை வெல்ல வெல்ல

இன்னும் எதைச்சொல்ல இந்தவரிகளே

எம்கதை முழுவதும் கூறிடு தே

வாழ்த்துக்கள்!

மேலும்

தகவலும், தொழிலும் தளராத நுட்பமும்

தாயக மீட்புக்கு வளமூட்ட,

அகவல் பலதோன்றும் ஆதிப்பொருளாகி

அணைத்து வழி சொல்லும் பெருந்தளமாய்,

முகங்கள் பலசூடும் மேன்மை மாந்தர்கள்

மீட்டும் விரல்கட்கு யாழ்நரம்பாய்

ஈழக்குயிலினம் தாளயதியுடன்

எண்திக்கிருந்தும் கையிணைக்க,

ஆளும் பலமிக்க ஆய்வுத்துறைகளும்

கால முழுவதும் கோலமிட,

நாளும் வளந்தரு நல்லன பலவும

போன்ற வரிகள் யாழ்களம் பற்றிய நல்ல கருத்துச் செறிவுடன் உள்ளன.

மேலும், கவிதையெங்கும் நல்ல கவிநயமும் சொல்நயமும் இங்கு என்று கூறமுடியாத வாறு எங்கும் காணப்படுகிறது.

அத்துடன், இந்தப்பாடலை கேட்டவுடன் பாரதியாரின் தமிழ் மொழிவாழ்த்து மனதில் ரீங்காரமிடுவதை தவிர்க்க முடியவில்லை. எனவே அதை கீழே தருகிறேன்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

இந்த அருமையான பாடலின் சந்தததை ஒட்டியே கவிஞர் தனது பாடலையும் இயற்றியதை (ஆனாலும் சில இடங்களில் சந்தம் சறுக்குகிறது) காணமுடிகிறது. இதில் தவறேதும் இல்லை.

ஆனாலும், இந்தப் பாடலிலிருந்து கொஞ்சம் அளவுக்கதிகமான இன்ஸ்பிரேசன் எடுக்கப்பட்டு விட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

போட்டி நடுவர்களினால் முதல் மூன்று இடங்களைப் பெறும் பாடல்கள் அறிவிக்கபட்டுள்ளன!

கவியரங்கில் பங்குபற்றிய அனைத்து யாழ்கள கவிக் குயில்களிற்கும், கவியரங்க நடுவர்களிற்கும், யாழ் கள கவியரங்க ஒழுங்கமைப்பாளர் என்ற முறையில் எனது நன்றிகளும்! பாராட்டுக்களும்!

நன்றி!

மூன்றாமிடம் : வல்வை சஹாரா

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ் வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஈழக்குயிலினம் தாளயதியுடன்

எண்திக்கிருந்தும் கையிணைக்க,

ஆளும் பலமிக்க ஆய்வுத்துறைகளும்

கால முழுவதும் கோலமிட,

நாளும் வளந்தரு நல்லன பலவும்

மேலும் மேலும் படை நூறுசெய்ய

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வெள்ளை மனங்கொண்ட பிள்ளைக்கூட்டங்கள்

வேடிக்கைக் கதைகள் பேசப்பேச,

கள்ளச்சிரிப்புடன் கன்னித்தமிழும்

துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள,

வல்ல செயலாலே நல்ல உறவுகள்

பொல்லாத பொய்யதை வெல்ல வெல்ல

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

தகவலும், தொழிலும் தளராத நுட்பமும்

தாயக மீட்புக்கு வளமூட்ட,

அகவல் பலதோன்றும் ஆதிப்பொருளாகி

அணைத்து வழி சொல்லும் பெருந்தளமாய்,

முகங்கள் பலசூடும் மேன்மை மாந்தர்கள்

மீட்டும் விரல்கட்கு யாழ்நரம்பாய்

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ்வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

இரண்டாமிடம் : நோர்வேஜியன்

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெஞ்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

முதலாமிடம் : இன்னுமொருவன்

இன்றைய வருடத்துக்குரிய யாழ் கீதமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடல்!

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

எனது கவிதைக்கு இரண்டாம் இடத்தைத் தந்து கௌரவித்தமைக்கு

கவிதை அரங்கின் நடுவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத்

தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன் நோர்வேஜியன்

எனது கவிதைக்கு முதலிடமளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நோரவேஜியன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு வாழ்த்துக்கு மூன்றாமிடம் வழங்கிய யாழ்க்களத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். :lol:

வெற்றிக்கவிகளுக்கு என்னினிய நல்வாழ்த்துக்கள்..ஒழுங்கமைப்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கவிகளுக்கு என்னினிய நல்வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

கவியர்களுக்கு பாராட்டுக்கள்

  • 4 months later...
  • தொடங்கியவர்

நோர்வேஜியன் வணக்கம்!

நான் யாழ் இணையத்தில் forum03 இல் 200,000 ஆவது [உண்மையில் இப்போது யாழ் இணணயத்தில் மொத்தம் 540,000 கருத்துக்களிற்கு மேல் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது...] கருத்தை எழுதுபவரிற்கு ஒரு பாடலை பாடி தருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தேன். வாக்குறுதி செய்தபடியே பாடலை நான் சும்மா சின்னதாக ஸ்டார்ட் பண்ணி கடைசியில் அது பெரிய பூதமாக உருவெடுத்துவிட்டது. இறுதியில்..

அதிகளவு நேரம் மினக்கெட்டு இந்த பாடலை செய்வதால் இதை சும்மா முஸ்பாத்திக்கு செய்யாது சீரியசான ஒரு பாடலாக செய்வோம் என தீர்மானித்தேன். நான் பாடலின் அரைப்பகுதியை எழுதிவிட்டேன். இன்னும் அரைப்பகுதி பாடல் வரிகள் தேவைப்பட்டது. இந்நிலையில் எனது மூளை மந்தநிலைக்கு வந்து முடங்கிவிட்டது. இதனால்..

முன்பு நாம் செய்த யாழ்கீதம் எனது மெமரியில் வந்துபோக உடனடியாகவே இங்கு வந்து நோர்வேஜியனின் இந்தப்பாடலை 200,000 கருத்துக்களை யாழ்களம் கண்டதற்காக நான் செய்யும் வாழ்த்துப் பாடலில் சேர்த்து பாடுவதற்காக திருடிச் செல்கின்றேன். வரும் வெள்ளிக்கிழமை இந்தப்பாடலை யாழில் நீங்கள் கேட்கக்கூடியதாக இருக்கும். நோர்வேஜியனுடன் தனிமடலில் தொடர்புகொள்ள முடியவில்லை. உங்கள் பாடலை உங்கள் அனுமதியின்றி களவெடுத்து பாடுவதற்காக மன்னித்துகொள்ளவும். இங்கு யாழ் கீதத்தில் உள்ள மற்றையவர்களின் பாடல்களையும் வாசித்து, பாடிப் பார்த்தேன். ஆனால், உங்கள் பாடல் மாத்திரமே நான் அமைத்த பின்னணி இசையுடன் கச்சிதமாக பொருந்தி வருவதோடு, தாளக்கட்டுக்களும் சரியாக அமைகின்றது. நீங்கள் கவிதைகள் எழுதும்போது பாடிப்பாடித்தான் எழுதுவீங்கள் போல இருக்கு. உங்கள் பல கவிதைகளில் கவனித்து உள்ளேன். நீங்கள் பாவிக்கும் சந்தங்கள், தாளக்கட்டுக்கள் அந்தமாதிரி சூப்பராக இருக்கும். எங்கே உங்களை இப்போது காணவில்லை? தொடர்ந்து யாழில் கவிதைகள் படையுங்கள்.

எனக்கு பாடலில் மிகுதி அரைப்பகுதியை செய்வதற்கு இன்னும் எட்டு பந்திகள் - பாடல் வரிகள் வேண்டும். இங்கு ஏழுபந்திகளே உள்ளன. எனவே, நான் இன்னொருபந்தியையும் பாடலில் சேர்க்கின்றேன்.

நன்றி!

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெஞ்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

என்னை கவர்ந்த வரிகள்.நன்றி கலைஞன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.