Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி – மைத்திரி – எரிக் சொல்ஹெயிம் சந்திப்பு…

Featured Replies

இன்று பிற்பகல் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

 

modi-maithri-colombo (1)இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அனைத்துலக சூரியசக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக,  இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அவர் நேற்று மாலை இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அத்துடன், மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி வந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அளித்த இராப்போசன விருந்திலும் சிறிலங்கா அதிபர் பங்கேற்றார்.

ms-ramnath (1)ms-ramnath (2)

இன்று அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் தொடக்க மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

அதையடுத்து, சிறிலங்கா அதிபர் மற்றும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதியபோசன விருந்து அளிக்கவுள்ளது.

அதேவேளை, இன்று  பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால 25 நிமிடங்கள் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/03/11/news/29713

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசினார் இந்தியப் பிரதமர் மோடி

 

modi-maithri (3)இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு இன்று புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபரும் உரையாற்றியிருந்தார்.

இதையடுத்து, இன்று மதியம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக, இந்திய அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

modi-maithri (1)modi-maithri (2)modi-maithri (3)

http://www.puthinappalakai.net/2018/03/11/news/29717

  • தொடங்கியவர்

மோடி – மைத்திரி – எரிக் சொல்ஹெயிம் சந்திப்பு…

9.jpg?resize=800%2C319
இந்தியாவின் புதுடில்லியில் இன்று (11) ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இடையில் சந்திப்பொன்று ராஸ்திரபதி பவனில் இடம்பெற்றது.

சூரியசக்தி மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதியின் பங்குபற்றுதலை பெரும் கௌரவமாக கருதுவதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், சர்வதேச சூரியசக்தி மாநாட்டின் செய்தியை முழு உலகிற்கும் எடுத்துச் செல்வதற்கு இணைந்து செயற்பட உதவுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

கடந்த சில வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றிருப்பதை நினைவுகூர்ந்த இந்திய பிரதமர், எதிர்காலத்திலும் இந்த உறவை பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இரு நாடுகளின் தூதுவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெயிம் க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

2-1.jpg?resize=800%2C349
சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கினார்.

இலங்கையில் 28 வீதம் குறைவடைந்துள்ள வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், காடுகளின் பாதுகாப்பிற்காக விமானப்படை விசேட கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது தொடர்பான அறிக்கை தனக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடல் மாசடைதல் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

நிர்மாண நடவடிக்கைகளுக்காக அதிகளவில் மணல் மற்றும் மண் அகழ்வதன் காரணமாக ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இதற்காக தொழில்நுட்ப மாற்றீடுகள் மற்றும் முன்மொழிவுகளை எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்துமாறு எரிக் சொல்ஹெயிமிடம் கேட்டுக்கொண்டார்.
நோர்வே அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் குறித்தும் ஜனாதிபதி  நினைவுகூர்ந்தார். சுற்றாடல் பாதுகாப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எரிக் சொல்ஹெயிம் ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

  3-1.jpg?resize=800%2C6127.jpg?resize=800%2C332  10-1.jpg?resize=800%2C293

02-2.jpg?resize=800%2C384

http://globaltamilnews.net/2018/70379/

  • கருத்துக்கள உறவுகள்

பல முறை சொல்லியும் விளங்காத  ஆட்கள்  இந்த திரியை பார்க்கல்லாம் .

  • கருத்துக்கள உறவுகள்

02-2.jpg?w=1267&key=22cd4c8178e07a4a69c6

 

ஏன்...சிங்கள ஜனாதிபதிக்குப் பெரிய.தண்ணிப் போத்தலும்....பிரதமர் மோடிக்குச் சின்னத் தண்ணிப் போத்தலும் கொடுத்திருக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.