Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா

Featured Replies

வருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தனது வருங்கால கணவர் யார் என்பதை உறுதியாக அறிவித்திருக்கிறார். #Nayanthara

201803251603280953_Nayantara-announcing-
 
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
 
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.
 
அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
 
இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.
 
201803251603280953_1_Nayan_2._L_styvpf.j
 
அப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.
 
அதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/25160328/1153091/Nayantara-announcing-future-husband-name.vpf

  • தொடங்கியவர்

நயன்தாராவை ஏன் பிடிக்கும்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், எதற்காக நயன்தாரா பிடிக்கும் என்பதை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

201803281331421304_Vignesh-Shivan-Talks-
 
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாகவே நெருங்கி பழகி வருகிறார்கள். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்றார்கள். டுவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இதனால், இருவரும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கூறப்பட்டது. என்றாலும், நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ காதலிப்பதாக சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை. 
 
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, விழா மேடையில் பேசும் போது, “நான் விருது பெறுவதற்கு காரணமாக இருந்த பெற்றோர், சகோதரர், வருங்கால கணவர் ஆகியோருக்கு நன்றி” என்று கூறினார்.
 
இதன்மூலம் விக்னேஷ் சிவனை காதலிப்பதை முதல் முறையாக நயன்தாரா வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். எனவே, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
 
201803281331421304_1_vignesh-15._L_styvp
 
இந்த நிலையில், ஒரு டி.வி. இசை நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், தன்னை நயன்தாரா கவர்ந்தது எப்படி? என்பது பற்றி கூறும்போது, “நயன்தாரா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. அதற்கெல்லாம் மேலாக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட இரும்பு பெண்மணி. இதன் காரணமாக அவரை எனக்கு அதிகமாக பிடிக்கும். அந்த வகையில் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன்” என்றார்.

https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/28133142/1153650/Vignesh-Shivan-Talks-about-Nayanthara.vpf

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் நொஞ்சில பால்வாத்த மாதிரி இருக்கு.
இந்த குமர கரை செர்க்க பட்டபாடு. 

ஆனால் இவள் இரும்பு என்றால் கொஞ்சம் கஷ்டம்தான் லேசில உடையாது / வளையாது. உவர் என்ன கஷ்டப்பட போகின்றாறோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

இப்பதான் நொஞ்சில பால்வாத்த மாதிரி இருக்கு.
இந்த குமர கரை செர்க்க பட்டபாடு. 

ஆனால் இவள் இரும்பு என்றால் கொஞ்சம் கஷ்டம்தான் லேசில உடையாது / வளையாது. உவர் என்ன கஷ்டப்பட போகின்றாறோ.

"சூடக்கினால்" இரும்பு வளைந்து கொடுக்கும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

இப்போதைக்கு நாய் வாழ்க்கைதான்.....!  

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பழகுவவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டால் இதுவரை காலமும் இருந்தநட்பை கேவலப்படுத்து விதமாக ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவது நம்மவர்களின் பொதுவான இயல்பு , இது அவர்களின் இரட்டை முகம். ஆனால் ஒரு சிலர் அதனை மவுனமாக கடந்து செல்வார்கள் ஆனால் தாம் பழகினவர்களை கேவலப்படுத்த மாட்டார்கள், ஆனால் தம்மை கேவலப்படுத்தினவர்களை தமது வாழ்க்கையில் இருந்து துடைத்தெறிந்து விடுவார்கள்.
ஒரு கேவலமான நடிகர் தான் நெருக்கமாக இருந்த நபருடன்  முரண்பாடு வந்தவுடன் இணயத்தில் படத்தை வெலியிட்டு மற்றவரை கேவலப்படுத்தினார் கடைசியாக  இன்னொரு  சமயத்தில் அதே மாதிரி  பரபரப்புக்காக பீப் பாடலை தானே இணயத்தில் வெலியிட்டு தானே கேவலப்பட்டு போனார். அவர் செய்த குற்றத்திற்கு அவராகவே அதே மாதிரியான தவறில் மாட்டி நாறிப்போனார், இத்தனைக்கும் அந்த நல்ல மனிதர் அதே நடிகருடன் பிறிதொரு படத்தில் நடித்திருந்தார் .
இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர் பொது வாழ்கையில் மற்றவர் துன்பம் அறிந்து தானாக உதவும் அற்புதமான மனிதர் , இப்படியான மனிதர்கள் இலகுவாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை , அடுத்தவர்களின் அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளைப்பற்றி அவர்கள் அலட்டிக்கோள்வதில்லை.
இந்த காரணங்களுக்காகவே பலருக்கும் நயந்தாராவை பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை
துரோகிகளை மன்னிப்பதற்கு இரும்பு இதயம் தேவைதான் ஆனால் இவர் அவர்களை ஒரு  பொருட்டாகவே எண்ணுவதாக தெரியவில்லை என நினைக்கிறேன்

On 3/28/2018 at 7:16 AM, குமாரசாமி said:

இந்த குமரையும் கரைசேர்க்க வழியிருந்தால் சொல்லுங்கப்பா...:17_heart_eyes:

DXYFLYBV4AEUNfO.jpg

முதலில் அவவுக்கு திருமணம் செய்யும் நோக்கம் உள்ளதோ என்று அறியவேண்டும். அதை செய்யுங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கலைஞன் said:

முதலில் அவவுக்கு திருமணம் செய்யும் நோக்கம் உள்ளதோ என்று அறியவேண்டும். அதை செய்யுங்கள். 

குமர்ப்பிள்ளையள் எங்கையாவது தங்களுக்கு கலியாணம் வேணும் மாப்பிளை வேணும் எண்டு நச்சரிச்சிருப்பினமே??? பெரியாக்கள்தான் அதை நேரகாலத்துக்கு உணர்ந்து செய்துவைக்க வேணும்.....

On 3/28/2018 at 7:32 AM, suvy said:

இப்போதைக்கு நாய் வாழ்க்கைதான்.....!  

இந்த பிள்ளையுக்கு இப்ப என்ன குறை என்று சொல்லுறீங்கள்?

நன்றியுள்ள மூன்று நாய்கள்; ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதம், ஒவ்வோர் தனிச்சிறப்பு. அவற்றை தனித்தனியாய் உற்றுப்பாருங்கள்..

அடுத்ததாக பேச்சுத்துணைக்கு நல்ல ஒரு பாட்டி அருகில்..

மற்றது வசதியான வீடு..

சொகுசு கார்..

ருசியான காப்பி..

கண்ணை மூடி பிள்ளை இனிமை காண்கின்றது..

இந்த மகிழ்ச்சி திருமணம் செய்தால் கிடைக்குமா? :26_nerd:

சும்மா குறை பிடிப்பதே பெரிசுகளுக்கு வேலையாய் போயிற்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30.3.2018 at 1:23 AM, vasee said:

நாம் பழகுவவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டால் இதுவரை காலமும் இருந்தநட்பை கேவலப்படுத்து விதமாக ஒருவரைப்பற்றி மற்றவர் பேசுவது நம்மவர்களின் பொதுவான இயல்பு , இது அவர்களின் இரட்டை முகம். ஆனால் ஒரு சிலர் அதனை மவுனமாக கடந்து செல்வார்கள் ஆனால் தாம் பழகினவர்களை கேவலப்படுத்த மாட்டார்கள், ஆனால் தம்மை கேவலப்படுத்தினவர்களை தமது வாழ்க்கையில் இருந்து துடைத்தெறிந்து விடுவார்கள்.
ஒரு கேவலமான நடிகர் தான் நெருக்கமாக இருந்த நபருடன்  முரண்பாடு வந்தவுடன் இணயத்தில் படத்தை வெலியிட்டு மற்றவரை கேவலப்படுத்தினார் கடைசியாக  இன்னொரு  சமயத்தில் அதே மாதிரி  பரபரப்புக்காக பீப் பாடலை தானே இணயத்தில் வெலியிட்டு தானே கேவலப்பட்டு போனார். அவர் செய்த குற்றத்திற்கு அவராகவே அதே மாதிரியான தவறில் மாட்டி நாறிப்போனார், இத்தனைக்கும் அந்த நல்ல மனிதர் அதே நடிகருடன் பிறிதொரு படத்தில் நடித்திருந்தார் .
இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர் பொது வாழ்கையில் மற்றவர் துன்பம் அறிந்து தானாக உதவும் அற்புதமான மனிதர் , இப்படியான மனிதர்கள் இலகுவாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வதில்லை , அடுத்தவர்களின் அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளைப்பற்றி அவர்கள் அலட்டிக்கோள்வதில்லை.
இந்த காரணங்களுக்காகவே பலருக்கும் நயந்தாராவை பிடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை
துரோகிகளை மன்னிப்பதற்கு இரும்பு இதயம் தேவைதான் ஆனால் இவர் அவர்களை ஒரு  பொருட்டாகவே எண்ணுவதாக தெரியவில்லை என நினைக்கிறேன்

அந்த அற்புதமான நடிகரை இப்படியல்லவா வர்ணித்து வைத்திருக்கின்றார்கள்..

DZdNX8ZWsAIvQHn.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2018 at 11:13 AM, குமாரசாமி said:

அந்த அற்புதமான நடிகரை இப்படியல்லவா வர்ணித்து வைத்திருக்கின்றார்கள்..

DZdNX8ZWsAIvQHn.jpg:large

கு சா அண்ணா சரியாத்தானே வர்ணித்துள்ளார்கள் சாஜகான் பெயர் வரலாற்றில்நிலைத்திருப்பதற்கு காரணம் தாஜ்மகால் , அதே போல் தாஜ்மாகாலுக்கு முகவரியுண்டு அனால் அதைக்கட்டின கொத்தனார்களுக்கு முகவரியே இல்லை சரியாகத்தான் வர்ணித்துள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.