Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா? 83 members have voted

  1. 1. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

    • ஆம்!
      58
    • இல்லை!
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஆம் நான் தயார், தமிழர் துயரம் தீரும் வரை சிவாஜி படத்தை திரையரங்கிலோ, வீசிடியிலோ நான் பார்க்க மாட்டேன்!

You cannot split Tamilnadu Tamils and Cinema. Cinema is one of the part of their body like eye,.... It is like their part of family memebers, their life. So there is no way the stupid & blind Tamilnadu Tamils will hear our request. You should understand the mentality of current stupid, deaf, blind and brainless Tamilnadu Tamils. If you want to reach the stupid Tamilnadu Tamils the one and only way is through the cinema actores or actress. Yes. They can be reached only by them. There is no life for Tamilnadu Tamils without cinema.

  • Replies 135
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்டகாலாகவே நான் ரஜனியின் படங்களை திரையில் சென்று பார்ப்பதில்லை.

திரையில் சென்று நாம் படம் பார்ப்பதால், அவர்களுக்கு வருமானம்தான் வருகிறது. இணையத்தில் பார்ப்பதால் அவர்களுக்கு நட்டம் ஏற்படும்.

ஆகவே நான் சிவாஜி படத்தை இணையத்தில் பார்ப்பதை ஆதரிக்கிறேன்.

இதன் மூலம் தமிழ்நாட்டுத் திரையுலகினருக்கு நட்டம் ஏற்படுத்தின மாதிரியும் இருக்கும். சிவாஜி படம் பார்க்க வேண்டும் அடம்பிடிப்பவர்கள் படத்தை பார்த்த மாதிரியும் இருக்கும்.

ஆனால் புறக்கணிப்பதை விட எமக்கு ஆதரவான தமிழின உணர்வுள்ள திரையுலகினருக்கு கை கொடுப்பதே முக்கியம்.

இதன் மூலம் திரையுலகம் என்ற மாபெரும் சக்தியை நாம் எமக்கு ஆதரவாக செயற்படுவதற்கு தூண்ட முடியும்

சபேசனின் கருத்தே எனது கருத்தும்.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எமது உணர்வுகளை மதிக்காது எம்மை வைத்து வியாபாரம் செய்யும் தமிழ் சினிமா உலகிற்கு நாம் உதவி செய்வது தகுமா?

வெளிநாடுகளில் வாழும் நாங்கள் தமிழ் சினிமாவைப் புறக்கணிப்பது, எமக்கு சாதகமான பலாபலன்களை தமிழீழத்தில் ஏற்படுத்துமா?

தாயகத் தமிழீழத்தில் எமது உறவுகள்படும் துன்பங்களைத் துடைப்பதற்கு வெளிநாடுகளில் வாழும் நீங்கள் உங்கள் சில சுகங்களை - பொழுதுபோக்குகளை விட்டுக் கொடுக்க, தியாகம் செய்ய தயாராக இருக்கிறீர்களா?

:angry:பாபா :angry: என்ற பெயரில் கோமாளிக் கூத்தாடிய ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தை புறக்கணித்து, தமிழ் சினிமா உலகம், தமிழகம் ஈழத் தமிழர் மீது பாரா முகமாக இருப்பதை கண்டிக்க தயாராக இருக்கின்றீர்களா?

உங்கள் விமர்சனங்களை, வாதங்களை இங்கே முன்வைத்து வெளிநாடுகளில் தாயகத்தை மறந்து தூங்கும் எமது உறவுகளைத் தட்டி எழுப்பிவிடுங்கள்!

Ignorance of Tamil film actors towards Sri Lankan Tamil’s crisis should be given a lesson to open their eyes

Dear friends,

All these times the Sri Lankan Tamil expatriates

whom are living all around the world have been being contributed enormously towards the Indian Tamil film industry to sustain in their difficult time and also to grow in crores worth of payments are being earned by those top actors.

Even though none of the top actors, except a very few, have never given a single thought or voiced against Sri Lankan government’s genocide and atrocities to the innocent Tamils who are living in Tamil Eelam.

In this circumstances if we all expatriates get together and boycott the film called Sivaji acted by Rajni Kanth directed by Shanker and produced by AVM Saravanan (these 3 people are super star, super director and super producer respectively) costing them over 100 crores to produce and believing themselves most of the money can be recovered from Sri Lankan expatriates living all around the world.

We should all aware that by boycotting this film will give them a chance to realise to open their blind eyes towards

our grievances.

Don’t you all think that by seeing that film can be thrilled only for a few hours, but in the meantime by boycotting this film will give a real chance for the whole Tamil cinema industry to open their blind eyes and to lead their millions of fans to support our cause.

Please, please, please send this email to every one of your Tamil contacts all around the world and get some printouts and distribute to the people as maximum as you

can.

If we don’t seize this great opportunity at this very difficult time then we may not have the same again. And the history won’t ever forgive us. Once again please act as fast as you can.

Tamil Expatriates Association

You cannot split Tamilnadu Tamils and Cinema. Cinema is one of the part of their body like eye,.... It is like their part of family memebers, their life. So there is no way the stupid & blind Tamilnadu Tamils will hear our request. You should understand the mentality of current stupid, deaf, blind and brainless Tamilnadu Tamils. If you want to reach the stupid Tamilnadu Tamils the one and only way is through the cinema actores or actress. Yes. They can be reached only by them. There is no life for Tamilnadu Tamils without cinema.

You cannot split Tamilnadu Tamils and Cinema. Cinema is one of the part of their body like eye,heart.... It is like their part of family memebers, their life. So there is no way the stupid & blind Tamilnadu Tamils will hear our request. You should understand the mentality of current stupid, deaf, blind and brainless Tamilnadu Tamils. If you want to reach the stupid Tamilnadu Tamils the one and only way is through the cinema actores or actress. Yes. They can be reached only by them. There is no life for Tamilnadu Tamils without cinema.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்.

தமிழ் மண்பற்றுள்ள நண்பர்களே!

என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு.

எத்தினை பேர் சினிமாப்பொழுது கழிக்காமல் இதில் இருக்கிறீர்கள்.

அல்லது முன்னர் இருந்தீர்கள்.

சும்மா ஏதோ பெரிசா வெட்டி வீழ்த்திவிட்டதாக வாக்கெடுப்பு நடத்தியே படத்தை நல்லா ஓட வைக்க இதுவே போதுமான தேர்தல்தான்.

-------------

என்ர தனிப்பட்ட கருத்து.

------------------

எங்களால் என்ன பொழுதுபோக்கை மக்களுக்கு எந்தவித பேதமற்று,

ரசிக்கும் படி கொடுக்க முடியும்.

நம்மவர்கள் ஏதோ ஒரு சாதாரண வீடியோப்படத்தில் நடித்துவிட்டு விருதுகள் என்று வெளிக்கிட்டு விட்டார்கள்.

நம்மவரில் இன்றும் ஈழத்து சிவாஜி, ஈழத்து ரிஎம்.எஸ்.ஏன் தென்னிந்திய படைப்புக் ஊடாக வெளிவந்த பாடல்கள், படைப்புக்கள்.....

அவற்றையே பின்பற்றும் தன்மை எங்களோடு பிரிக்கமுடியாமல் ஒட்டி விட்டிருக்கு..

தமி;ழ் மொழியில் இசை,திரை, தொலைக்காட்சி ...என சாதனை நீண்ட சரித்திரம் படைக்கும் தமிழைபேசுபவர்கள் தமிழகத் தமிழர்கள்.

இன்றும் பல சிக்கலுகளுக்ளு;ளும் எமக்காக குரல் கொடுப்பவர்கள் என

பாடகர்கள், நடிகர்கள்.அரசியல்வாதிகள்..........

என உள்ளனர்.

அதிலும் இன்றும் ஒரு சிலரே தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களாய் திரைத்துறையிலும் பாடகர்களாயும் வலம் வருபவர்கள்.

சும்மா ஏதோபுறக்கணிக்கிறோம் என்று புல்டா விடுவதில் பூச்சாண்டி காட்டுவதில் பிரயோசனம் இல்லை.

நமக்குள் எவ்வளவோ விடயங்கள் புறக்கணிக்க இருக்கிறது .

நம்மை முதலில் சுத்தம் செய்வோம். அதன் பின் வெளி அசுத்தங்களை இப்போதே இனங்கண்டு மெல் மெல்ல களையிற வழியவிட்டுட்டு ......

-------------

ஒண்டு சொல்வேன்

எமக்காக குரல் கொடுக்கும் வானொலி,தொலைக்காட்சி பற்றி எழுந்தபாட்டில் யாருக்கும் கருத்துசொல்லும் தகுதி இருந்தால் நேரடியாக அவர்களுக்கு தெரியப்படுத்துவோம். அதைவிட்டு எல்லாரும் சும்மா எழுதலாம் என்பதற்காக எழுதி எமதினத்தின் அடையாளத்துக்கான பணிகளை கொச்சைப்படுத்த விளையக்கூடாது..

எமக் கென்றொரு ஊடக வளர்ச்சி தேவை அதனைப்பலப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படுவோம்.

எப்படி வளர்கலாம் என நமக்குத்தோன்றும் கருத்துக்களை உரியவர்களுக்கு எழுதுவோம். அதைவிட்டு குறை சொல்வதே பிழைப்பாக இருக்கக்கூடாது.

-----------------

படத்தை புறக்ணிப்பது. என்று முடிவை அவரவரே எடுப்பது நல்லது.

ஆனால் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.

எங்களால் அதற்கு நிகரான கருத்தாளமிக்க நமது வாழ்க்கை விடயங்களை வெளிப்படுத்தும் திறன் இருப்பவர்கள் செற்படுங்கள்.

நமது தேசத்தை கட்டி எழுப்பும் கலை வளர்ச்சிக்கு ஆரோக்கியமான

தனித்துவமான எந்த சாயலுமற்ற கலைவடிவங்களை உருவாக்குவோம்.

புறக்கணிக்கப்போகிறோம் என்பவர்கள் பழைய பாடல் சீடிக்களை ...

படங்கள் அதாவது தென்னிந்திய திரைப்பாடல் சீடிக்கள் ஒலி ஒளி அனைத்தையும் தீயிட்டு கொழுத்துங்கள்.

அதன் பின்னர் எங்களிம் எங்களவர்கள் படைத்த பாடல்கள் படங்கள் எனப்பார்கக என்ன இருக்கோ அதைமட்டும் பாருங்கள் கேளுங்கள்.

தென்னிந்திய படைப்புக்கள்.....ரிவி ச்சனல்கள் ரேடியோச்சனல்கள் எல்லாம் ஒண்டு விடாமல் புறக்கணியுங்கள்.

என்ன யார் உங்களில் தயாராக உள்ளீர்கள்? அப்ப செய்யுங்கள்.

என்னய்யா இது நல்லா இருக்கா செய்யுங்கள்.

ஐயா மாரே,

இந்த வேண்டுகோள் தமிழகத்தவருக்கோ அல்லது இந்திய சினிமாத்துறைக்கோ எதிரானது அல்ல. ஈழத்தமிழர் மற்றும் அவர்களின் அபிலாசைகள் நோக்கிய ஒரு கவனஈர்ப்பு மட்டுமே.

அத்துடன் திருட்டு வீசிடியில் பார்ப்பது, இணையத்தில் பார்ப்பது என்பன நமது நோக்கத்தை அவர்கள் தவறாக விளங்கிக் கொள்வே வழிவகுக்கும். தமிழகத்திலும் திருட்டுப்பட்டமே எஞ்சும்.

சினிமா என்பது இந்தியர் வாழ்வில் இரத்தம் போல இன்றி அமையாதது. அது மேல் மட்டம், நடுத்தர வர்க்கம், அடி மட்டம் என சகல மட்டங்களுக்கும் பாயக் கூடிய மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம். ஈழத்தமிழருக்கு கதவு மூடிய அனைத்து வீடுகளின் கதவிடுக்குகளினுடே புகுந்து செல்லக் கூடியது. இதனை உணர்ந்துதான் புலிகள் கூட சில சினிமாதுறையினரை வன்னிக்கு அழைத்து சுமுக உறவை பேண முயல்கின்றனர். அதன் ஒரு அங்கமாகத்தான் இந்த நடவடிக்கையும் அமையும். அதாவது இன்னும் ஈழத்தமிழர் பிரச்சனை வேறு சினிமா / தொழில் வேறு என்று முகம் திருப்பிக் கொண்டவர்களுக்கு, இல்லை நாங்கள் உணர்வுள்ளவர்கள் எங்கள் உணர்வுகளை மதியுங்கள் என்று இடித்துரைத்து எம்பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இனி இதற்கு நாம் தயாரா? ஆம் நெடுக்காலபோனவர் கூறியது போல் 99% நாம் தயாரில்லை என்பது ஒரு வருத்தமான உன்மை. இந்த ஒரு சின்னத்தியாகத்தை கூட செய்யாமல் என்ன செய்வது அது தமிழரின் தலைவிதி என்று இருக்கப் போகிறோமா? இல்லை அந்த ஒரு சதவீத தமிழரும் விரைந்து முயன்று சிறந்த வழியில் இதனை பிரச்சாரம் செய்து சாதிக்கப்போகிறோமா?

ஆலோசனைகள்.

1) தமிழ் தொலைக்காட்சிகளில் எங்கள் நியாயங்களை விளக்கி இந்த சிவாஜி படத்தை புறக்கணிக்கும் படி எதிர் விளம்பரம் போடலாம். (இதன் சட்டபூர்வத்தன்மை பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தரவும்). ஏனெனில் இந்த சிவாஜி படம் ஒட்டு மொத்த இந்திய சினிமா துறையின் படைப்பு. இந்த புறக்கணிப்பு நிச்சயம் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்.

2) .................யாராவது ஆர்வமுள்ளவர்கள் முன்வையுங்கள்!

பிற்குறிப்பு:

1) தயவு செய்து சாணக்கியனில் மேல் உள்ள தனிப்பட்ட கோபத்தில் இதைப் புறக்கணிக்காது ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள், செயற்படுங்கள்.

2) ஈழத்து சினிமாத் துறையை கட்டியெழுப்புவது, இந்திய தரத்திற்கு(?) நிகராக தயாரிப்பது போன்றவை நீண்டகாலத் திட்டங்களாக இருக்கட்டும். அவை தமிழ்ஈழத்திற்குப் பின். அவற்றுடன் அவசரமாக செய்ய வேண்டிய இதை போட்டு குளப்பிக் கொள்ள வேண்டாம்.

Edited by சாணக்கியன்

வணக்கம்.

தமிழ் மண்பற்றுள்ள நண்பர்களே!

என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு..............

...................

...................

என்ன யார் உங்களில் தயாராக உள்ளீர்கள்? அப்ப செய்யுங்கள்.

என்னய்யா இது நல்லா இருக்கா செய்யுங்கள்.

நண்பரே வணக்கம்,

நீங்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்:

1) எதிர் பிரச்சாரம் எதிராகவன்றி பிரச்சாரமாகவே அமையும்.

2) ஈழத்தமிழரின் படைப்பு கீழ் மட்டத்திலும், குறைபாடு மிக்கதாகவும் உள்ளது.

2) தமிழக சினிமாத்துறை சார்ந்து கட்டியெழுப்பட்ட எங்கள் ரசனைக்கு மாற்றீடு கைவசம் இல்லை.

3) தமிழக சினிமாத் துறையினர் சிலர் ஆதரவு தருகின்றனர்.

4) பாடகர்களில் மிகச் சிலரே தமிழர்.

5) ஊடகங்களுக்கு எதிரா குறை மட்டும் சொல்லக் கூடாது, நேரே முறையிட வேண்டும்.

6) புறக்கணிப்பது தனிப்பட்டது, தகமையுள்ளவர்கள் செயற்படுங்கள்.

7) தேசத்தின் தனித்துவமான கலைதுறையை கட்டியெழுப்புவோம்.

8) புறக்கணிப்பதானால் முற்றுமுழுதாக தமிழக கலைத்துறையை நிரந்தரமாக புறக்கணியுங்கள்.

எதிராக 8 கருத்துகள் எழுதவேண்டும் என்ற நோக்கில் எழுதியுள்ளீர்கள். ஆம் உங்கள் கருத்துக்கள் நியாயமானவைதான். ஆனால் நீங்கள் இந்த சிவாஜி புறக்கணிப்பை தவறாக நோக்கி விட்டீர்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கேள்விகளுக்கான சுருக்கமான பதில்கள்.

1) எதிர் பிரச்சாரம் எதிராகவன்றி பிரச்சாரமாகவே அமையும்.

ஆம் உதாரணம் Da Vinci Code திரைப்படத்திற்கான எதிர்ப்பு அதற்கு புகழையே தேடித்தந்தது. தாயாரிப்பாளர்கள் இரண்டை எதிர் பார்கின்றனர். 1) லாபம் 2) புகழ் ஒன்றில்லாவிட்டாலும் ஒன்று கிடைத்தாலும் அவர்களுக்கு லாபமே. ஆனால் எங்களுக்கும் இது லாபத்தையே தரும். ஏனேனில் எமது நோக்கமாக இருக்கவேண்டியதெல்லாம் ஈழத்தமிழர் பால் அல்லது அவர்கள் படும் துயரத்தின் பால் அவர்களின் கவனத்தை ஈர்ப்பதே! தயாரிப்பாளர் நட்டமடைவது அல்லது திரைப்படம் புகழ் பெறுவது என்பது எங்கள் நோங்கம் அன்று. நாங்கள் செயலில் இறங்கும் போது நிச்சயம் அது ரஜனியினதோ அல்லது சங்கரினதோ காதுகளை எட்டும்.

2) ஈழத்தமிழரின் படைப்பு கீழ் மட்டத்திலும் குறைபாடு மிக்கதாகவும் உள்ளது.

ஈழத்தமிழரின் வாழ்வே சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கையில் கலை வளர்க்க முடியாது.

2) தமிழக சினிமாத்துறை சார்ந்து கட்டியெழுப்பட்ட எங்கள் ரசனைக்கு மாற்றீடு கைவசம் இல்லை.

தமிழக சினிமாவை எதிர்ப்பது அல்லது முற்றாக புறக்கணிப்பது என்பது நோக்கமல்ல. அவர்களை எங்கள் பால் ஆதரவு நிலையெடுக்க வைப்பதே நோக்கமாகும்.

3) தமிழக சினிமாத் துறையினர் சிலர் ஆதரவு தருகின்றனர்.

நல்லது, நாம் அவர்களை ஆதரிப்போம். எமது இந்த புறக்கணிப்பை அவர்களும் மனப்பூர்வமாக ஆதரிப்பர் (பாரதிராஜா, திருமாவளவன்)

4) பாடகர்களில் மிகச் சிலரே தமிழர்.

அதனால் என்ன? பணத்திற்காக தானே அவர்கள் பாடுகிறார்கள். பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்.

5) ஊடகங்களுக்கு எதிரா குறை மட்டும் சொல்லக் கூடாது, நேரே முறையிட வேண்டும்.

இதை பற்றி வேறு தலைப்பு போய் கொண்டுள்ளது.

6) புறக்கணிப்பது தனிப்பட்டது, தகமையுள்ளவர்கள் செயற்படுங்கள்.

அப்படியல்ல முடியுமான வழிகளில் அனைவரும் இணைந்து செயற்படுவோம். பெரு வெற்றி காண்போம்.

7) தேசத்தின் தனித்துவமான கலைதுறையை கட்டியெழுப்புவோம்.

விடுதலை கிடைத்ததும் உங்கள் ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் முன்வையுங்கள்.

8) புறக்கணிப்பதானால் முற்றுமுழுதாக தமிழக கலைத்துறையை நிரந்தரமாக புறக்கணியுங்கள்.

இது தேவையற்ற விடயம்.

டொரன்டோ மொன்றியல் மாநகரங்களில் புத்தாண்டு பரிசாக அனைத்து வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக தலா 100 டி வீ டிக்கள் இலவச விநியோகம் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்

சிவாஜி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டொரன்டோ மொன்றியல் மாநகரங்களில் புத்தாண்டு பரிசாக அனைத்து வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக தலா 100 டி வீ டிக்கள் இலவச விநியோகம் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்

சிவாஜி

ம்....பண்ணியில் பண்ணிப்பாருமன்???????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஆம் என்றே வாக்களித்துள்ளேன்.இருப்பினு

ரஜினி ஒரு கேள்விக்குறிதான்............................. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இந்த படத்தை பார்கிறமோ இல்லையோ பிரச்சினை அதில்லை அது உங்கள் சொந்த பிரச்சினை, ஆனால் நாங்கள் செய்யவேண்டியது எங்க தேசியத்திற்கு ஆதரவை அதிகரிப்பது அதாவது எல்லோரிடமும் நேசக்கரம் நீட்டுவது, அதை விட்டிட்டு இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சாரம் அவசியமா? அயல் நாடு சம்பந்தப் பட்ட விடயங்களில் நாம் நிதானமாக நகரவேண்டும். ஆகவே நான் இந்த விவாதத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன்

Edited by Valvai Mainthan

ரஜனியின் அண்ணா கர்நாடக தமிழர் எதிர்ப்பு அணியின் தலைவர். கலவரங்களின் போது முன்னுக்கு நின்று தமிழரை துவம்சம் பண்ணியவர். இவர் ரஜனி சிவாஜி படம் சூட்டிங் நடக்கேக்க சுட சுட ஆட்டுக்கறி சாப்பிடுவதற்காக 40, 000 ரூபா செலவில் வாமப் பண்ணுற பெரிய அறையொன்றை வாடைகைக்கு எடுத்திருந்தாராம் ஏன் ஆட்டுக்கறி சாப்பிட.

படம் முடிய ரிசிகேசென்று புறப்படும் இந்தால் மிருகவதைக்கு உடன் படுகுது. பாபா படத்தில அவர் சொல்ல வந்த கதை என்னவோ உண்மைதான். ஆனால் அவர் இன்னும் திருந்தவில்லை. மிருகங்களைக் கொல்கிறார். தியானத்தினால் உருவாகிய சக்தியினை பாவித்து சந்திரமுகியினை அமோக வெற்றி பெற செய்தார். அவரின் பட வசனங்கள் எங்களின் வாழ்க்கையில் சில நேரங்களில் கடும் புயலினை சந்திக்கும் போது ஆறுதலாக இருக்கும். உதாரண்மாக படையப்பா பாடல் சீன். கல்லுடைக்கும் சீன்கள், பாபா வின் ஆன்மீக சீன்கள்( இவைகளும் உண்மை என்று நான் நம்புவதால்) பாட்சா வசனம்கள்....இப்படியாகத்தான் எனது எம்.ஜி.ஆர் என்னை கவர்ந்தார். ஆகவே இங்கு பிரச்சனை ரஜனி தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஆகவே இவர்கள் எம் உணர்வுகளினை வைத்து வியாபாரம் பண்ண வரும் போது பார்க்காது விட்டு இவர்களும் நாளை சிந்தித்து திருந்த ஆவன செய்யத்தான். நான் படையப்பா வின் பின் ஒரு படமும் பார்ப்பதிலை. அனால் எம்.ஜி.ஆரின் சகல படங்கள் கொண்ட நூல்நிலையம் என்னிடம் உண்டு தேவை எண்டா போட்டுப்பார்க்க.

ஆகவே எனி கொடுக்கப்போகும் காசுகளை ஒரு தமிழீழ உதவி என்று எழுதப்பட்ட உண்டியலில் மறவாது போட்டு உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள். இதனால் நீங்கள் ஒரு திருப்தி அடைந்து தமிழீழ மண்ணுக்கு ஏதும் செய்ததாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ungalukellaam pidikalaendu nanga padam parkama irukka mudiyathu . onnu seiungo intha vote ellam vendam pesama poi eelathila fight pannungo

நாம் இந்த படத்தை பார்கிறமோ இல்லையோ பிரச்சினை அதில்லை அது உங்கள் சொந்த பிரச்சினை, ஆனால் நாங்கள் செய்யவேண்டியது எங்க தேசியத்திற்கு ஆதரவை அதிகரிப்பது அதாவது எல்லோரிடமும் நேசக்கரம் நீட்டுவது, அதை விட்டிட்டு இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சாரம் அவசியமா? அயல் நாடு சம்பந்தப் பட்ட விடயங்களில் நாம் நிதானமாக நகரவேண்டும்.

வல்வை மைந்தன் சொல்வதே என் கருத்தும். இது பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசுவதை தமிழ் சினிமாவே ஊக்குவிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். (சினிமாவில தமிழா பேசுறாங்க எண்டும் சொல்லுவீங்க)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தேசியப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஆட்களை( அது சுயநலத்திற்காக இருந்தாலும்), அவர்களின் படங்களை வரவேற்போம். மற்றவர்களைப் புறக்கணிப்போம். தமிழீழத்தை ஆதரிச்சால் தான், தமிழக சினிமாப் படங்களுக்கு நாங்கள் மதிப்பளிப்போம் என்ற நிலை உருவானால், நிச்சயம் அவர்கள் ஆதரிக்க வேண்டிய நிலைக்கு வருவினம்.

உண்மையாக ஆதரவு தாறவையை தனியா தெரியும் தானே. அவங்களுக்கு என்றைக்குமே, எங்கட மரியாதையைச் செலுத்துவோம். ரஜனியை நிகழ்ச்சி செய்ய புலத்தில் இருந்து எங்கட ஆட்கள் கூப்பிட்டதாகவும், அவர் தன்னால் வாற நிதியைப் போராட்டத்துக்கு பாவிப்போம் என்று சொல்லி அதை மறுத்ததாகவும் கதை ஒன்று அடிபட்டது. அது உண்மையா? அப்படியிருந்தால், புலத்தில் அதைத் தோற்கடிக்க வேணும்.

முந்தியொருக்க விசு இயக்கத்தைப் பற்றிக் கேவலமாகக் கதைச்சதையும், (90களில்) அதை நாங்கள் மறந்திடுவம் என்று, 2000ம் ஆண்டுகளில் கனடாவில் அரட்டையரங்கம் நடத்த வந்த போது, நாங்கள் கொடுத்த எதிர்ப்பையும் விசு இப்பவும் மறக்க மாட்டார்.

ஏதோ, அற்பச் சினிமாவுக்காக எம் மரியாதையை இழக்க கூடாது பாருங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ellorukum vanakkam

ivaruku adhikaram koduthathu aaru

sivaji padam irandu varundakhalaka ethuku kondirekarkal rajini kannadan enral

onkaluku apoluthu theriavelliai

nann kurikerian ithai paruparavarkal sivaji padathen orimai kedikathal ipadi

kilipukerakaral anenral ithu nalkal munnar than orimai kodutharkal

chandramuki padam tamilakathil 60 crore andhra vel 20 crore collect seithuthu

ithil naztapadapovathu pulathtamilarkal than

63 children onkulatu ranuvam kolai seithapothu ongaludu patru engaponathu

appdi seithalum qualityana sinhala padakali parpam --enna ongal pattru

selar said pula rich tamilarkal pathikapattal paravaiellai endru

thai kooti kodukum anandu,doughla hondo pondravurkal irukum

poothu ivarkaluku aen thandani

selar said 30 years tillnot completed selar mathiri colombovel iruthu kondu

girlskaledum yahoo,msn el pallai illithu kondiruthal lateaka then seium

tamilarkali kattupadhuthu evanukam orimaiillai

nangal katupadakodivan ore oruthan than(thalivar) andavaniku koda orimaiillai

athu than kalakanipun enru tv telcast seipadukarithai somma padam

kanbikuthu athil enna sollurarkal ennru athai parthu thelivakukal

---selar colombovel irukiraen enru sollikutu epothum online irukirai onuku

onrum thonavillai vetel soma iruthal vettri enbathu onga vetel irukirathu

---throkiakali kandu pedi avarkali akatru

குமாரசாமி ஐயா,

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்றே புரியவில்லை?

1) "அதில் மிச்சம் பிடிக்கும் பணத்தை அவர்கள் வேறு வழிகளில் செலவிடலாம்"

இதில் மிச்சம் பிடித்து போராட்டத்திற்கு உதவலாம் என்று நாங்கள் கூறவில்லையே! நீங்களாவே அவ்வாறு கருதிக் கொண்டு அதற்கு சுனாமி வரை வியாக்கியானம் தருகிறீர்கள். இறுதியில்

"அவர்கள் தாங்களாக திருந்த வேண்டும்.ஆனால் அவர்களுக்கு எடுத்துச்சொல்வது நம் கடமையே." சரி எப்படி எடுத்துச் சொல்லலாம். வீடுவீடாக சென்று விளக்கம் கொடுக்கலாமா? அனைவரையும் கூட்டி வகுப்பெடுக்கலாமா?..........இவை ஒன்றும் சரிவராது என்று உங்களுக்கு தெரியும் தானே. இதையாவது செய்யுங்களேன்?

2)

அ) "வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்திய சினிமாவை ஒதுக்குவதால் எமது தமிழீழத்திற்கு எவ்வித பலாபலனும் ஏற்படப்போவதில்லை."

ஆ) "நாம் இந்திய சினிமாவை ஒதுக்குவதாயின் ஒட்டுமொத்தமாக ஒதுக்கவேண்டும்.அது சாத்தியப்படாது.காரணம....."

இ) "தமிழ்நாட்டு சினிமாவும் அரசியலும் ஒன்றாக பின்னிப்பிணைந்தவைகள்!!!!சினிமாரீதியாக நாம் வெளிநடப்பு செய்வோமேயானால் அங்கே அரசியல் ரீதியாக எமக்கு இன்னும் கூடுதலாக பின்னடைவுகளைஏற்படுத்தும்."

ஈ) "எனவே சினிமா மக்களோடு பின்னிப்பிணைந்து விட்டது.இதனை களையெடுப்பது கடினம்.அதுவும் புலம்பெயர் மக்களிடையே இன்னும் கடினமானது."

உ) "எனவே எம்மக்கள் தானாக சுயபுத்தியால் திருந்தினாலேயன்றி...................?சினிமாமோகத்தை கொஞ்சம் குறைக்கலாமேதவிர முற்று முழுதாக குறைப்பதென்பது குதிரைக்கொம்பே."

எந்தப்பயனுமில்லை என்று ஆரம்பித்து இடையில் அரசியல் பின்னடைவு என்று பயங்காட்டி, பின்னர் களையெடுப்பது கடினம் என்றும் தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் தாங்களாகவே திருந்த வேண்டும் என்று முடித்திருக்கிறீர்கள்.

பின்வரும் கேள்விகளுக்கு விடை தாருங்கள்:

அ) முயற்சி செய்வதால் பயனில்லையா?

ஆ) பயந்தால் அரசியலில் வெல்லலாமா?

இ) களை என்று தெரிந்த பின்னும் கடினம் என்பதால் கைவிடலாமா?

ஈ) மக்கள் தம் தவறுகளை உணர இவ்வாறான சிறு முயற்சிகள் அவசியமா இல்லையா?

பிற்குறிப்பு:

கள்ளடித்து விட்டு கருத்தெழுதுவது பற்றி களவிதிகளில் இல்லையாயினும் தயவு செய்து நீங்களாகவே உணர்ந்து நடக்கவும்.

Ungalukellaam pidikalaendu nanga padam parkama irukka mudiyathu . onnu seiungo intha vote ellam vendam pesama poi eelathila fight pannungo

சோல்ஜா சொன்னது:

உங்களுக்கெல்லாம் பிடிக்கேல எண்டு நாங்க படம் படம் பார்க்காம இருக்க முடியாது. ஒன்னு செய்யுங்கோ இந்த வோட் எல்லாம் வேண்டாம் பேசாம போய் ஈழத்தில பைட் பண்ணுங்கோ!

சோல்ஜா,

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நாங்கள் உங்களை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லையே!

ஈழத் தமிழர்பால் பரிவு கொண்டவர்களிடம் மட்டுமே கேட்கின்றோம்

டொரன்டோ மொன்றியல் மாநகரங்களில் புத்தாண்டு பரிசாக அனைத்து வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக தலா 100 டி வீ டிக்கள் இலவச விநியோகம் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்

சிவாஜி

சேவை நோக்கம் கொண்ட நெஞ்சங்களுக்கு நன்றிகள் கோடி!

வல்வை மைந்தன் சொல்வதே என் கருத்தும். இது பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசுவதை தமிழ் சினிமாவே ஊக்குவிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். (சினிமாவில தமிழா பேசுறாங்க எண்டும் சொல்லுவீங்க)

தமிழ் சினிமா பார்த்து தமிழில் புலமை பெறும் உங்கள் சந்ததி வளம்பெற வாழ்த்துகள்!

நாம் இந்த படத்தை பார்கிறமோ இல்லையோ பிரச்சினை அதில்லை அது உங்கள் சொந்த பிரச்சினை, ஆனால் நாங்கள் செய்யவேண்டியது எங்க தேசியத்திற்கு ஆதரவை அதிகரிப்பது அதாவது எல்லோரிடமும் நேசக்கரம் நீட்டுவது, அதை விட்டிட்டு இந்த சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட பிரச்சாரம் அவசியமா? அயல் நாடு சம்பந்தப் பட்ட விடயங்களில் நாம் நிதானமாக நகரவேண்டும்.

சிவாஜி படம் பார்ப்பது எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை. பார்க்காமல் இருப்பதுதான் பிரச்சனை (வீட்டில் உள்ளவர்களின் கோபத்திற்கு முகம் கொடுப்பது).

இது எனது சொந்தப்பிரச்சனை இல்லை. நாளும் பாரிய மனித அவலத்தை எதிர் நோக்கும் நான் பிறந்த தமிழ் சமுகத்திற்காக எனது எல்லைகளுக்குற்பட்டு நான் செய்யக் கூடிய ஒரு துளி முயற்சி. இது எங்கள் பிரச்சனை என்று உணர்பவர்கள் இணைந்து கொள்ளுங்கள்!

நேசக்கரம் நீண்ட வேண்டியது நாமல்ல அவர்கள்!

நாம் அவலக்குரல் எழுப்பினோம!

அவர்கள் வரவில்லை!

இனி என்ன செய்யலாம்?

அவர்களுக்கு புரியும் மொழியில் ஒன்றாக இணைந்து உரத்து குரல் கொடுப்போம்!

இது பாதிக்கப்பட்ட மக்களின் குரல். எந்த ஒரு அமைப்பிற்கும் தொடர்பில்லை!

ஈழத்தமிழரை ஆதரித்து இந்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நடக்கும் ஊர்வங்கள், கூட்டங்கள் என்பவற்றுடனும் அதனை நடத்தும் அமைப்புகளுடனும் நாம் அவதானமாக விலகி இருக்க வேண்டுமா?

ஒன்று மட்டும் புரிகிறது. சிலர் தாமும் செய்யமாட்டார்கள் மற்றவரையும் செய்விடமாட்டார்கள். எல்லாம் புலிகள் பார்ப்பார்கள் என்று விட்டு சுகமாக நித்திரை கொள்கிறார்கள்!

  • தொடங்கியவர்

யாழ் கள நண்பர்களிற்கு, இங்கு நான் விவாதத்தை ஆரம்பித்து வைத்தவன் என்ற முறையில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இங்கு சில நண்பர்கள் நாம் அவர்களை வற்புறுத்தி, "நீங்கள் சிவாஜி படம் பார்க்கக் கூடாது" என்று அறிவுரை சொல்லும் வகையில், நாம் கருத்து வெளிவிட்டுள்ளதாக, எம்மீது குற்றம் சாட்டுவதை காணக்கூடியதாக உள்ளது. இன்னும் சிலர், இவ்வாறு நாம் கருத்தாடுவதற்கு "எமக்கு என்ன அதிகாரம்/ உரிமை இருக்கிறது?", "இந்த அதிகாரத்தை யார் தந்தார்கள்?" என்று கேள்வி கேட்பது போல் உள்ளது.

இங்கு நாம் உங்களைப் போன்ற சாதாரண பொது மக்களே என்பதை முதலில் தெரிவித்து, தமிழ்த் தேசியத்தை மையப் பொருளாகக் கொண்டு இயங்கும் யாழ் களத்தில் இவ்வாறான விவாதங்களை செய்வதற்கு/ ஆரம்பிப்பதற்கு உங்களுக்கும் உரிமை உண்டு என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். எனவே, அதிகாரிகள் என்று இங்கு எவரும் இல்லை. அதிகாரம் என்றும் இங்கு ஒருவருக்கும் ஒன்றும் இல்லை.

மற்றையது, நாம் இணைத்த தலைப்பில் கேட்கப்பட்டதெல்லாம் கேள்விகளே! ஒருவரையும் "இவ்வாறு செய்!" என்று நாம் அவர்களிற்கு அறிவுரை கூறவில்லை. விவாதத்தை ஒழுங்காக வாசிக்காதவர்கள் திரும்பவும் ஒருமுறை வாசிக்கவும்.

சிவாஜி படத்தை புறக்கணிக்கச் சொல்லி இங்கு யாழ் களத்தில் ஒரு பிரச்சாரமும் செய்யப்படவில்லை. இது சம்மந்தமான ஒரு செய்தி எனக்கு கிடைத்தது, எனவே, இதைப்பற்றி யாழ் களத்தில் விவாதித்து நண்பர்களின் கருத்துக்களை அறியும் முகமாகவே மேற்குறித்த தலைப்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவாஜி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கான மூலம் யாழ் களத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை.

மேலும், படத்தை பார்ப்பதும், புறக்கணிப்பதும் அவரவர் இஸ்டம். ஆனால், சில நண்பர்கள் படத்தைப் புறக்கணித்தால் தாயகத்திற்கு ஏதாவது நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றார்கள் போல இருகின்றது.

ஒவ்வொரு நண்பர்களும் தமது தனிப்பட்ட கருத்துக்களை, விறுப்பு, வெறுப்புக்களை கூறியுள்ளார்கள்.

எம்மை தமிழக சினிமாத் துறை அசட்டை செய்தால், நாம் தமிழக சினிமாத் துறையை அசட்டை செய்ய வேண்டும் என்பதே இங்கு விவாதத்தில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம். ஆனால், முதலில் இதைச் செய்வதற்கு "நாம் - எமது மனங்கள் பக்குவப்பட்டுள்ளதா?" என்பதுதான், "எமக்கு எம்மைக் கட்டுப்படுத்தக்கூடிய மனவைராக்கியம் உள்ளதா?" என்பதுதான் எனது இப்போதைய கேள்வி.

எம்மை, எமது அலைபாயும் மனதை நாம் கட்டுப்படுத்தாதவரை எல்லாமே வெறும் வாய்ப் பேச்சாகத்தான், வாய்ப்பேச்சு வீரமாகத்தான் இருக்கும்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எழுதப்பட்ட கருத்துக்களைப் பார்த்தபின் எப்படியாவது Cine World Cinema இல் காத்திருந்தாவாது படம் பார்க்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். ரஜனி வேறு பழைய Style இல் வருகிறாம். :unsure::lol:

இங்கு எழுதப்பட்ட கருத்துக்களைப் பார்த்தபின் எப்படியாவது Cine World Cinema இல் காத்திருந்தாவாது படம் பார்க்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். ரஜனி வேறு பழைய Style இல் வருகிறாம். :unsure::o

தலைவா............ :lol::lol::o

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா............ :unsure::lol::lol:

சொல்ல மறந்துவிட்டேன்.. ஆங்கிலப் பட rate இல் tickets விற்றால்தான் பார்க்கமுடியும் என்ற நிதி நிலைமை.. :o இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது Tamil Torrents! B)

மாமு இதுக்கெதுக்கு கவலையழ் களத்தில2 பேர வெள்ள வான வச்சு கடத்திடாப் போச்சு :P

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.