Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் சொல்லுவார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொல்லுவார்?

சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்என்பதே அந்தத் தலையங்கம்.

 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான  Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள்.

 புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில் விடுதலைப்புலிகளின் அபிமானிகள் சிலர் அடிதடிகளில் இறங்க, அவர்கள் யேர்மனிய காவல்துறையினரால் கைதாகிப் போனார்கள். அதில் சிலர் சிறைக்கும் போய் வந்தார்கள்அதன் பின்னர் இயக்கங்களின் பெயரால் புலம் பெயர் தமிழர்களுக்கு மிரட்டல்கள், பிரச்சினைகள் ஏதாவது வந்தால் தங்களுக்குத் தகவல் தரும்படி யேர்மனிய காவல்துறை ஒரு மஞ்சள் துண்டுப்பிரசுரம் ஒன்றை தமிழில் அச்சடித்து புலம்பெயர் தமிழர்களின் வீடுகளுக்கு அனுப்பியும் வைத்திருந்தது. இந்த நிகழ்வு யேர்மனியில் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களுக்கு அன்று பெரும் பின்னடைவாகிப் போயிருந்தது.

 இந்த நிலமையைச் சீர்செய்வதற்காக, பழ.நெடுமாறனும், தோழர் மணியரசனும் தொண்ணூறில் யேர்மனிக்கு வந்தார்கள்(அல்லது அனுப்பி வைக்கப்பட்டார்கள்). இவர்களது வருகையின் போது யேர்மனியில் தோற்றம் பெற்றதுதான் உலகத் தமிழர் இயக்கம். இந்த உலகத்தமிழர் இயக்கம், ஈழப்போராட்டத்தை சற்று ஓரமாக வைத்துவிட்டு புலம் பெயர்ந்தோருக்கான தமிழ்க்கல்வி, தாயகத் தமிழர்களுக்கான புனர்வாழ்வு இரண்டையும் முன்னிலைப் படுத்தியது. இந்த இரண்டில் உலகத் தமிழர் இயக்கத்தின் (தமிழாலயம்நிர்வாகியாக இரா.நாகலிங்கம் மாஸ்ரரும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பொறுப்பாளராக .பிரபாகரனும் தெரிவாகியிருந்தார்கள். தமிழாலயமும், தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் புலம் பெயர் தமிழர் மத்தியில் தங்களை வெளிக்காட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கின. பொங்கல் விழா, வாணிவிழா என தமிழாலயங்களும், இன்னிசை இரவு என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தங்களுக்குள் வரையறுத்துக் கொண்டு யேர்மனியின் முக்கிய நகரங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தன

 இவ்வாறான கலை நிகழ்ச்சிகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் அவர்களது உறவுகளுக்கும் மட்டுமே மேடைகள் தரப்பட்டன. அப்படியான ஆதரவாளர் ஒருவரின் மகள்தான் சுஜிதா. அப்பொழுது நடந்த அநேக கலை நிகழ்ச்சிகளில் சுஜிதாவின் நடனங்கள் மேடைகளை அழகுபடுத்தப்படுத்தின.

E74772_C8-7048-4_D6_A-91_FF-040_F0_F4341

Nordrhein-Westfalen மாநிலத்தின்  Linnich நகரில் உள்ள யேர்மனிய பாடசாலையில் சுஜிதா படித்துக் கொண்டிருந்தாள். 26.08.1993 அன்று மாலை சுஜிதாவின் பெற்றோர் அவளது பாடசாலைக்குச் சென்று தங்களது மகள்சுஜிதா இன்னும் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை?” என்று அறிவித்திருக்கிறார்கள். “அவள் இன்று பாடசாலைக்கே வரவேல்லையேஎன்ற பதில்தான் பெற்றோருக்கு கிடைத்தது. அவளது பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையிடம் சென்று தங்கள் மகளை காணவில்லை என முறைப்பாடு செய்தார்கள். சிறார்களை காணவில்லை என்று முறைப்பாடு வந்தால், முதலில் அயலவர்கள், நண்பர்கள்உறவினர்களிடம் போய் விசாரியுங்கள் என்று காவல்துறை ஆலோசனை தரும். அத்துடன் தங்கள் தரப்பு விசாரணைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

 சுஜிதா காணாமல் போன காலகட்டத்திலே மேலும் இரண்டு சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒன்று, Hessen நகரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த 12 வயதான அபீர் என்ற சிறுமி மாலை ஐந்து மணிக்கு கடைக்குச் சென்றவள் வீடு திரும்பவில்லை. மற்றது அபீர் வீட்டின் அயலில் வசித்த மரியானா என்ற ஒன்பது வயது பொஸ்னியா நாட்டைச் சேர்ந்த சிறுமி. இந்த இரண்டு சம்பவங்களையும் சுஜிதா காணாமல் போனதையும் ஒன்றிணைத்து இது வெளிநாட்டவர்களின் மீதான நாசிகளின் செயற்பாடுகள் என பேச்சு வேகமாகக் கிளம்பியது.

 ஒரு கிழமை கடந்தும் காணாமல் போன சுஜிதா வீட்டுக்குத் திரும்ப வரவேயில்லையென்று செப்ரெம்பர் 2ந் திகதி, சுஜிதாவின் பெற்றோர்கள் ஒரு சட்டத்தரணியை அணுகினார்கள்.

 சுஜிதா காணாமல் போய் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, 07.09.1993 அன்று Nordrhein-Westfalen மாநிலத்தில் உள்ள  Mindergangelt என்ற காட்டுப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் காட்டின் நடுவே தீ எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறைக்கு அறிவித்திருக்கிறார். அங்கு எரிந்து கொண்டிருந்தது சுஜிதாவின் உடல் என்பதை காவல்துறை பின்னர் உறுதிப்படுத்தியது.

 13 வயதான சுஜிதாவின் மரணம் புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவளது இறுதி நிகழ்வில் பங்கு கொள்வதற்காக, கிடைத்த வாகனங்களில் ஏறி தூர இடங்களில் இருந்தெல்லாம் பயணம் செய்து  பல தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அப்பொழுது விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த லோரன்ஸ் திலகர் முன்னிலையில் நடந்த அவளது இறுதி நிகழ்வில் தங்கள் சொந்த மகளையே பறிகொடுத்தது போன்ற துயரத்தோடு இயக்க வேறுபாடுகள் இன்றி பல தமிழர்கள் பங்கு பற்றியிருந்தார்கள்.

 அரைகுறையாக எரிந்த சுஜிதாவின் உடலை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து, எரிப்பதற்கு சற்று முன்னர்தான் அதாவது செப்டம்பர் 7 ம் திகதிதான் அவள் இறந்திருக்கிறாள் என அறிக்கை தந்தார்கள்.

 போதிய நாட்கள் இருந்தும் காவல்துறையின் அலட்சியப் போக்கினால்தான் தங்களது மகளை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது என அவளது பெற்றோர்கள் காவல்துறை மீது குறை சொன்னார்கள்.

 தங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது என்றும், தாங்கள் மேற்கொண்ட விசாரணைகளில் சுஜிதாவுக்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் என்பதும், அந்த நட்பை அவளது பெற்றோர் ஏற்கவில்லை என்பதும் தெரிய வந்தது. அத்துடன் இந்து முறைப்படி சடங்குகள் செய்து மட்குடம் உடைத்து, தீ மூட்டியே அவளது உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கொலைக்குப் பின்னர் கொலையாளி, தடயங்களை அழித்து தான் தப்பிக்கப் பார்ப்பானே தவிர கொலையாளியே கொலையுண்டவரின் உடலை எடுத்துப் போய் இறுதிச் சடங்குகள் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவளது கொலைக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவளின் பெற்றோரே என காவல்துறை தாங்கள் சேகரித்த ஆதாரங்களோடு சொன்னது.

 இந்த வருடத்துடன் சுஜிதாவின் மரணம் நிகழ்ந்து இருபத்தைந்து வருடங்களாகின்றன. கொலையாளி யார்? யார்தான் சொல்லப் போகிறார்கள்?

கவி அருணாசலம்

03.04.2018

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு சம்பவம் ஜேர்மனியில்  நடந்து இருப்பது அதுவும் அப்பவே நடந்து இருப்பது அதிசயம்..இது பற்றி எண்ட அண்ணருக்கோ அல்லது வேற அந்த காலத்தில் ஜேர்மனி வந்த உறவுகளுக்கோ எதாவது தெரியுமா?
 
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் அசமாந்த போக்குதான் கொலைகாரர் தப்பிக்க 
முக்கிய காரணமாக இருக்கிறது.

முக்கிய தடயங்கள் கிடைக்க பெற்றும் தீவிர விசாரணை 
நடக்கவில்லை என்பது தெரியவருகிறது.

பெற்றோரை குற்றம் சாட்டிய காவல் துறை 
ஒரு கொலைக்கு உரிய தண்டனையை ஏன் கொடுக்கவில்லை?
ஏன் மேலும் போதிய ஆதாரம் திரட்டவில்லை ?

ஒரே கால கட்டத்தில் இரு முஸ்லீம் சிறுமிகள் காணாமல் போயிருக்கிறார்கள் 
இவர்களுக்கும் வேறு மதத்தினருடனான காதல் காரணமாக அமைந்து இருக்கலாம் 
இல்லையேல் கடத்த பட்டும் இருக்கலாம் 

ஆசை படம் வெளிவந்த காலத்தை ஒட்டி  
அதே போல இரு கொலைகள் நான் அறிய நடந்து இருக்கிறது 
கொலைகாரர்கள் ..... இப்படித்தான் கற்றுக்கொள்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

மருதங்கேணி,

உங்கள் கேள்விகள் முன்னரும் பலரால் கேட்கப்பட்டிருந்தவைதான். குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத பட்சத்தில் யாருக்குமே தண்டணை தர முடியாது. அதே நேரம் பொலீஸ் தரப்பு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று சொல்லவும் முடியாது. யேர்மனிய தொலைக்காட்சி  ZDF இல் Explosiv (13.09.1993) நிகழ்ச்சியில்  அப்பொழுது பொலீஸ் தரப்பு இது பற்றிய தங்கள் விளக்கத்தை கொடுத்திருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிக்கிரிகைதான் இங்கே இடிக்கிறது.

இதில் நாங்கள் ஒன்றையும் கண்டறிய முடியாது. இது ஒரு பதிவு மட்டுமே

On 04/04/2018 at 8:10 PM, ரதி said:

இப்படி ஒரு சம்பவம் ஜேர்மனியில்  நடந்து இருப்பது அதுவும் அப்பவே நடந்து இருப்பது அதிசயம்..இது பற்றி எண்ட அண்ணருக்கோ அல்லது வேற அந்த காலத்தில் ஜேர்மனி வந்த உறவுகளுக்கோ எதாவது தெரியுமா?
 
?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

மருதங்கேணி,

உங்கள் கேள்விகள் முன்னரும் பலரால் கேட்கப்பட்டிருந்தவைதான். குற்றங்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத பட்சத்தில் யாருக்குமே தண்டணை தர முடியாது. அதே நேரம் பொலீஸ் தரப்பு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்று சொல்லவும் முடியாது. யேர்மனிய தொலைக்காட்சி  ZDF இல் Explosiv (13.09.1993) நிகழ்ச்சியில்  அப்பொழுது பொலீஸ் தரப்பு இது பற்றிய தங்கள் விளக்கத்தை கொடுத்திருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதிக்கிரிகைதான் இங்கே இடிக்கிறது.

இதில் நாங்கள் ஒன்றையும் கண்டறிய முடியாது. இது ஒரு பதிவு மட்டுமே

?

போலீசார் போதுமான அளவில் ஆதாரங்களை சேகரிக்கவில்லை 
என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

பொலிஸாரின் பார்வையில் பெற்றோர்தான் கொலையாளிகளாக 
இருக்கிறார்கள் ........ ஆகவே அவர் காணாமல் போனார் என்பது 
பொய் .......... 12 நாட்கள் மறைக்க பட்டு இருக்கிறார்.

இதை சடலத்தை கைப்பற்றிய உடனேயே போலீசார் 
அவர்கள் வீட்டுக்கு சென்று போதிய ஆதாரங்களை திரட்டி இருக்கலாம்.
அவர்களுடைய டெலிபோன் ட்ராக் பண்ணி இருக்கலாம். 

அல்லது இது பெற்றோரின் வேலைதான் என்று தெரிந்து கொண்டும் 
மூட பெற்றோரை தண்டிக்க போனால் குடும்பம் சிதறி மீண்டும் 
பாதிப்புக்கள் தொடரும் என்றுவிட்டு 
தெரியாதது  போல ... போதிய ஆதாரம் இல்லை என்றுவிட்டு இருந்து இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

போலீசார் போதுமான அளவில் ஆதாரங்களை சேகரிக்கவில்லை 
என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

ஒரு கொலையின் குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தும்வரை பொலீஸ் அதனது ஆவணத்தை பாதுகாத்து வைத்திருக்கும் என்பது நடைமுறை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன்.24.08.1991அன்று யேர்மனியில் Weimar என்ற இடத்தில் parkஇல் விளையாடிக்கொண்டிருந்த  ஸ்ரெபானி என்ற 10 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தி A4 நெடுஞ்சாலையில் உள்ள 53 மீற்றர் உயரமான  Teufelstal பாலத்தில் இருந்து வீசி, கொன்ற கொலையாளியை  06.03.2018இல்தான் பொலீஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது.

பொலீஸாரால் அன்று சேகரித்து வைக்கப் பட்டிருந்த தரவுகளின் அடிப்படையில் DNA சோதனையில் இன்று மாட்டிக் கொண்ட அந்தக்  கொலையாளியான லொறி ஓட்டுனருக்கு  இப்பொழுது வயது 65.

ஆக சேகரித்த தடயங்களை வைத்தே பொலீஸ் தனது விசாரணையைச் செய்யும்அவர்களைக் குறை சொல்லுவதில் பிரயோசனமில்லை  மருதங்கேணி

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் அவ்வளவு நாள் வைத்து இருந்து விட்டு கொலை செய்ய வேண்டும்?...போலீசில் போய் காட்டிக் கொடுத்து விடுவார் என்பதால் தான் ...பலத்தகாரம் செய்யப் பட்டு இருக்கா விடடால் நிட்சயம் தாய், தகப்பன் தான்..
 
  • கருத்துக்கள உறவுகள்

இது அப்போது பல நாட்களாகப் பேசப்பட்ட விடயம்தான். மகள் கர்ப்பமானதாகவும் அதைத் தெரிந்த தந்தையே மகளை அடித்தபோது சுவரில் மோதுண்டு மகள் இறந்துவிட்டதாகவும் வீட்டின் கெலரில் இருந்த குளிர்பதனப்பெட்டியில் அவளது உடலை வைத்திருந்து பெற்றவர்களே மகளைக் காணவில்லை என்று நாடகமாடியதாகவும் இறந்தவரின் தாய் மாமனும் தந்தையுமே பின் அவரின் உடலைக் கொண்டு சென்று காட்டில் எரித்துவிட்டு முற்றிலும் எரியுமுன் போலீசுக்குச் சொன்னதாகவும் பலர் பேசிக்கொண்டனர். எந்தவித ஆதாரங்களும் இல்லாததில் பின்னர் அவ்விடயம் அப்படியே போய்விட்டது.

On 05/04/2018 at 10:27 PM, Maruthankerny said:

போலீசார் போதுமான அளவில் ஆதாரங்களை சேகரிக்கவில்லை 
என்றுதான் நான் சொல்ல வருகிறேன்.

பொலிஸாரின் பார்வையில் பெற்றோர்தான் கொலையாளிகளாக 
இருக்கிறார்கள் ........ ஆகவே அவர் காணாமல் போனார் என்பது 
பொய் .......... 12 நாட்கள் மறைக்க பட்டு இருக்கிறார்.

இதை சடலத்தை கைப்பற்றிய உடனேயே போலீசார் 
அவர்கள் வீட்டுக்கு சென்று போதிய ஆதாரங்களை திரட்டி இருக்கலாம்.
அவர்களுடைய டெலிபோன் ட்ராக் பண்ணி இருக்கலாம். 

அல்லது இது பெற்றோரின் வேலைதான் என்று தெரிந்து கொண்டும் 
மூட பெற்றோரை தண்டிக்க போனால் குடும்பம் சிதறி மீண்டும் 
பாதிப்புக்கள் தொடரும் என்றுவிட்டு 
தெரியாதது  போல ... போதிய ஆதாரம் இல்லை என்றுவிட்டு இருந்து இருக்கலாம்.

ஆதாரமே இல்லாது எத்தனை கொலைகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிலும் கெட்டிக்காரர்கள் இருக்கின்றனர் மருதங்கேணி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2018 at 6:18 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது அப்போது பல நாட்களாகப் பேசப்பட்ட விடயம்தான். மகள் கர்ப்பமானதாகவும் அதைத் தெரிந்த தந்தையே மகளை அடித்தபோது சுவரில் மோதுண்டு மகள் இறந்துவிட்டதாகவும் வீட்டின் கெலரில் இருந்த குளிர்பதனப்பெட்டியில் அவளது உடலை வைத்திருந்து பெற்றவர்களே மகளைக் காணவில்லை என்று நாடகமாடியதாகவும் இறந்தவரின் தாய் மாமனும் தந்தையுமே பின் அவரின் உடலைக் கொண்டு சென்று காட்டில் எரித்துவிட்டு முற்றிலும் எரியுமுன் போலீசுக்குச் சொன்னதாகவும் பலர் பேசிக்கொண்டனர். எந்தவித ஆதாரங்களும் இல்லாததில் பின்னர் அவ்விடயம் அப்படியே போய்விட்டது.

ஆதாரமே இல்லாது எத்தனை கொலைகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிலும் கெட்டிக்காரர்கள் இருக்கின்றனர் மருதங்கேணி.

அத்துடன் சிலர் தேவையில்லாத வதந்திகளையும் பரப்புவார்கள்.  

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விப்பட்ட கதையாகத்தான் இருக்கின்றது. திட்டமிட்டுக் கொல்லாவிட்டாலும் உண்மையை ஒத்துக்கொள்ளுமளவிற்குச் செல்ல சமூகத்தடைகள் காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு மேல் தெரிந்த விடயம் பரகசியம் என்பதிற்கு மாறாக இருக்கின்றதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.