Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!!

Featured Replies

  • வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!!
 
 

வடக்கு முதல்வர் ஆன்மிகப் பயணம்!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இந்­தி­யா­வுக்கு இரு­வார கால ஆன்மி­கப் பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளார். தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருந்து ஆன்மி­கப் பய­ணத்தை அவர் மேற் கொள்­வார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

தமி­ழ­கத்­தில் பல்­வேறு அர­சி­யல் சந்­திப்­புக்­க­ளி­லும் அவர் ஈடு­ப­டக் கூடும் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் யார் என்ற கேள்வி எழுந்­துள்ள நிலை­யில், முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/83371.html

  • தொடங்கியவர்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்கு விஜயம்

 

 
 

வட­மா­காண முத­ல ­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம் செல்லும் அவர் இரு­வார காலம் அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

தமி­ழகம் செல்லும் முத­ல­மைச்சர் சில சந்­திப்­புக்­க­ளிலும் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக முத­ல­மைச்சர் தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வட­மா­காண சபையின் பதவிக் காலம் முடி­வ­டை­ய­வுள்­ளது. இந்த நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எத்­த­கைய முடி­வினை எடுப்பார் என்ற பர­ப­ரப்­பான  நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை அடுத்த மாகாண சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் கள­மி­றங்கும் உத்­தேசம் இல்லை என்று கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்­திரன் கருத்துத் தெரி­வித்­துள்ள நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது அடுத்த கட்ட நிலைப்­பாடு குறித்து விரைவில் அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

ஆன்­மீக சுற்­று­லாவை மேற்­கொண்டு இந்­தியா செல்லும் முத­ல­மைச்சர் நாடு திரும்பியவுடன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப் பினை வெளியிடுவார் என்று தெரிவிக் கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/32368

  • தொடங்கியவர்
  • இரு வாரங்கள் முதலமைச்சராக சர்வேஸ்வரன் பதவியேற்பு!!
 
 

இரு வாரங்கள் முதலமைச்சராக சர்வேஸ்வரன் பதவியேற்பு!!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீக சுற்றுப்பயணமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளதை அடுத்து, பதில் முதலமைச்சராக மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் நாளை
பதவியேற்கவுள்ளார்.

பத்தரமுல்லவில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உப அலுவலகத்தில், ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.

இவர் இருவாரங்கள் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://newuthayan.com/story/83653.html

  • தொடங்கியவர்

விரைவில் முக்கிய தகவலை வெளியிடவுள்ளார் விக்னேஸ்வரன்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து விக்ஸே்வரன் விளக்கமளித்துள்ளார்.

அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதில் “சுமந்திரன் கூறிய கருத்துக்கு எதிர்வரும் 12ம் திகதி நான் பதிலை தெரிவிக்கவுள்ளேன்.”

இரண்டு வார பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்வதாகவும், இந்த பயணத்தில் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் பரிசீளிக்கப்படும்” என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/179488?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்
விக்கியரும் கடைசியில் இந்தியாவிடம் அனுமதி கேட்டுத் தான் தேர்லில் நிற்கப் போறார்....எதுக்கெடுத்தாலும் சம்மந்தரும்,சுமத்திரனும் இந்தியாவிடம் போய் அனுமதி கேட்க்கினம் என்று புலம்பிறவை இப்ப என்ன சொல்லப் போயினம்
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு,  தமிழ் நாட்டு ஆட்சியாளரிடமும், அந்த மக்களிடமும்  அனுமதி கேட்டுத்தானாம் எல்லாம் செய்யுதாம். அதுதான் முதலமைச்சரும்  தமிழ் நாட்டு மக்களிடம் அவர்களின் வாக்குக் கேட்டு  அவர்கள் ஓம் என்றால்  தேர்தலில் நிக்கப்போறாராம். காமாளைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தை சொல்ல......இந்தியாவின்ரை நாடிபுடிச்சு பாக்கப்போறார் போலை கிடக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.