Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விரோத மோடிக்கு இன்று சென்னையில் கிட்டிய வரவேற்பு..படங்கள்!

opposition-parties-hold-black-flag-prote

opposition-parties-hold-black-flag-prote

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

opposition-parties-hold-black-flag-prote

opposition-parties-hold-black-flag-prote

opposition-parties-hold-black-flag-prote

 

opposition-parties-hold-black-flag-prote

opposition-parties-hold-black-flag-prote

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கு கருப்புக் கொடி போராட்டம்:

தள்ளாத வயதில், தளராத தீரத்துடன் பங்கேற்ற ஹீரோ!

 

narayanappa.jpg

சென்னை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுகவினர் மட்டும் அல்லாமல், திரையுலகினர், ஏராளமான கட்சியினர், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை கருப்புச் சட்டை அணிந்த ஏராளமானோர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, பிரதமர் மோடிக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல, தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியை கையில் ஏந்திய தொண்டர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினர், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகே "கோ பேக் மோடி" என்ற வாசகம் அடங்கிய கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் கருப்புச் சட்டை அணிந்து மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாய், ஓசூரைச் சேர்ந்த 77 வயது ஜேவி நாராயணப்பா என்ற திமுக தொண்டர், மிகவும் சிரமங்களுக்கு இடையே சென்னைக்கு வந்துள்ளார்.

தள்ளாத வயதிலும், தளராத மனத்துணிவோடு, கருப்புச் சட்டை அணிந்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு ஓசூரில் இருந்து சென்னை வந்து திமுக தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான தொண்டர்களுக்கு மத்தியில், மனதில் தளராத உணர்வோடு கருப்புக் கொடி ஏந்தியிருக்கும் நாராயணப்பா ஹீரோவாக மின்னுகிறார். இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது ஒன்றே தமிழனின் தேச உணர்வை பறைசாற்றும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

தினமணி

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'கோ பேக் மோடி': உலக அளவில் டிவிட்டரில்

முதலிடம் பிடித்த ஹேஷ்டாக்

modi1.jpg

சென்னை: தமிழகத்துக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிரான #கோ பேக் மோடி# என்ற ஹேஷ்டாக் உலக அளவில் டிவிட்டரில் முதலிடம் பிடித்துள்ளது

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பிலும் இன்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது

ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வலுத்து வருகிறது.

 

go_back_modi_world.jpg

 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், இந்திய அளவில் மட்டும் அல்லாமல், கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக் இன்று உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது

இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிரான இந்த ஹேஷ்டாக், இன்று உலக அளவில் முதலிடம் பிடித்திருப்பது, தமிழக மக்களின் போராட்டம் உலக நாடுகளை கவனிக்க வைத்திருப்பதையே காட்டுகிறது.

தினமணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெடுபிடிகளை தாண்டி, மோடிக்கு எதிரே கறுப்பு கொடியை காட்டிய ஐஐடி மாணவர்கள்!

xchennai-iit-students-raised-slogans-and

 

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கண்ணில் கறுப்புக்கொடிகள் பட்டுவிடக்கூடாது என்று எத்தனையோ சிரத்தையாக போக்குவரத்து மாற்றம், வான்வழி போக்குவரத்து திட்டமிடப்பட்டாலும், ஐஐடி வளாகத்தில் பிரதமருக்கு நேராக ஐஐடி மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை நகர் முழுவதும் கறுப்பு நிறம் நிரம்பி வழிகிறது. பிரதமர் செல்லும் பாதைகளில் இந்த கறுப்பு அவர் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது.

இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு ஐஐடி மாணவர்கள் கறுப்புகொடி காட்டினர். பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமரின் கார் ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு சென்ற போது ஐஐடி மாணவர்கள் பிரதமருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன் இந்தியா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nice tweets.. :grin:

 

gbvfpng

 

kjnhpng

 

DakdIStUQAAJe8jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DakWsPNVMAEzyXU.jpg

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிண்டல் காணொளி..? :grin:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi wears black shirt as mark of protest against PM Narendra Modi

மோடிக்கு எதிர்ப்பு..கருப்பு சட்டையில் கருணாநிதி...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி, கறுப்பு சட்டை அணிந்துள்ளார்.

கோபாலபுரம் இல்லத்தில் அவர் கறுப்பு சட்டையுடன் அமர்ந்துள்ள புகைப்படம் கருணாநிதியின் டுவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மீட்பு பயணத்தில் உள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழகம் முழுக்க காவிரி ஆதரவு போராட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணிந்துள்ளனர். மோடிக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி கறுப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவிக்கும் போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திமுகவினரின் போராட்டத்திற்கு இது உற்சாகம் கொடுத்துள்ளது.

இதனிடையே, திருவிடந்தையில் பிரதமர் மோடி, ராணுவ சாகச கண்காட்சிகளை பார்வையிட்டார். சமீபத்தில் கருணாநிதியை அவரது இல்லத்தில், பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்த நிலையில், காவிரிக்காக கருணாநிதியும், மோடியை தமிழகத்தில் இருந்து திரும்பி போகச் சொல்லி களத்தில் குதித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-wears-black-shirt-as-mark-protest-against-pm-narendra-modi-317013.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: outdoor

 

Image may contain: 1 person, smiling

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.