Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

Featured Replies

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

 

vavuniya-campus-300x200.jpgயாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் ஈடுபட்டனர்.

வளாக நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்தது.

vavuniya-campus.jpg

இதையடுத்து, சிங்கள மாணவர்கள் நிர்வாகப் பிரிவை முற்றுகையிட முனைந்த போது, பதற்ற நிலை ஏற்பட்டது. சிறிலங்கா காவல்துறையினரும் உதவிக்கு அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களையும் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/04/24/news/30553

  • தொடங்கியவர்

வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியா புறப்பட்டுள்ளனர்

vavuniya-uni.jpg?resize=800%2C445

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் சிங்கள மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ சிங்கள மாணவர்கள் முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

நிர்வாகத்திடம் அனுமதி பெறாது இவ்வாறு புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதால், வளாக நிர்வாகம் அதற்கு தடை விதித்திருந்தநிலையில் வளாகத்தின் நிர்வாக கட்டிடத்தொகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் உத்தியோகத்தர்களை வெளியேறவிடாமல் தடுத்திருந்தனர்.

இதனால் முதல்வர் காவல்துறையினருக்கு அறிவித்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் இருந்து நிர்வாக கட்டிடத்தொகுதி அமைந்துள்ள பகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள், தாம் கொண்டு வந்த ஆலய வடிவிலான கூட்டினை தருமாறு கோரி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.

இதனையடுத்து வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய காவல்துறை குழுவுக்கும் வளாகத்தின் முதல்வருக்குமிடையில் பேச்சுவார்ததை இடம்பெற்றதன் பின்னர் மாணவர்களை சந்தித்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பல்கலைக்கழக மேலிடத்தில் இருந்து அனுமதி கிடைக்கவேண்டும். அவ்வாறு அரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும். அதுவரை எவ்வித முரண்பாடான நிலைமைக்கும் செல்லக்கூடாது என தெரிவித்ததுடன், சிங்கள மாணவர்களால் கொண்டுவரப்பட்ட புத்தரை வைப்பதற்கான கூட்டினை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்

இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி சுமூக நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குழு அங்கு புறப்பட்டுள்ளனர்.

http://globaltamilnews.net/2018/76272/

  • தொடங்கியவர்

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை விவகாரம் – சமரசப் பேச்சுக்களால் சுமுக நிலை

vavu-uni-4.jpg?resize=768%2C576
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு முன்னெடுத்த முயற்சியால் ஏற்பட்ட குழப்ப நிலை சமரசப் பேச்சுக்களால் சுமுக நிலைக்கு வந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் வவுனியா காவல்துறையினரும் இன்று மாலை சிங்கள மாணவர்களுடன் பேசி, புத்தர் சிலை விவகாரத்தால் ஏற்பட்ட குழப்ப நிலையை சுமுக நிலைக்கு கொண்டு வந்தனர்.

வவுனியா வளாகத்தின் பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் அங்கு புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு அதற்கான கூட்டை நேற்று (23) அமைத்தனர். பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாது மாணவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியது.

 

இதன்போது சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டது. பார்க் வீதியுள்ள வளாக அலுவலகத்தின் வாயில் கதவைப் பூட்டி சிங்கள மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் வவுனியா வளாகம் நேற்று முதல் காலவரையரையின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா காவல்துறையினருக்கும் வளாக முதல்வருக்கும் இடையே பேச்சு இடம்பெற்றது. புத்தர் சிலையை பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக முதல்வருக்கு காவல்துறை அதிகாரி உறுதியளித்தார். அத்துடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று சிங்கள மாணவர்களுடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டனர். அதனையடுத்து சிங்கள மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

அத்துடன், புத்தர் சிலையை நிறுவுவதற்கான கூட்டையும் காவல்துறையினர் மீட்டுச் சென்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை முடிவுக்கு வந்தததால் வளாக கற்கைச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதால் அவர்கள் திரும்புவதற்கு அவகாசம் வழங்கப்படும் என தெரியவருகிறது.

vavu-uni-_4308.jpg?resize=768%2C374

http://globaltamilnews.net/2018/76272/

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலையை நிறுவுவதற்குத் தமிழ் மாணவர்களையும் அழைத்திருந்தால் அவர்கள் மேள தாளத்துடன் வந்து நிறுவியிருப்பார்கள். தமிழ் மக்கள், கடவுள் புத்தருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் சிங்களவர், பெரும்பான்மையினர் நினைத்ததைத் செய்வோம் என்ற திமிர்தான் இங்கு பிரச்சனைக்குக் காரணம்.

 

Bildergebnis für புத்தர் தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் புத்தர் சிலை வந்தே தீரும்
 

கொழும்பு வெள்ளவத்தையில் விசா பிள்ளையார் புத்த பான்சாலையில் தான் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, spyder12uk said:

கொழும்பு வெள்ளவத்தையில் விசா பிள்ளையார் புத்த பான்சாலையில் தான் இருக்கிறார்.

இங்கு மரத்துக்கு கீழே குந்தியிருந்த புத்தர் அல்ல பிரச்சனை. தமிழருக்கு தீராத பிரச்னையை ஏற்படுத்தி அடக்கி, அபகரித்து ஆள வேண்டும். இது நிறைவேறுமளவும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும். அணில் ஏற விட்டு குரைக்கும் என்னவோ போல் இதுக்குப் பின்னால் எங்கட தலைமைகள் சவால் விட்டுக்கொண்டும், அவகாசம் கொடுத்துக்கொண்டும் வருவினம்.

  • தொடங்கியவர்
 
 
 

புத்­தர் சிலை விவகாரத்தில் – சில மாண­வர்­களே பிடி­வா­தம்!!

என்ன நடந்­தா­லும் பர­வா­யில்லை புத்­தர் சிலையை அமைத்தே தீரு­வோம் என்று பிடி­வா­த­மாக நின்­ற­வர்­கள் ஒரு சில சிங்­கள மாண­வர்­களே. ஏதோ ஒரு பின்­பு­லத்­தில் தான் அவர்­கள் இத்­த­கைய செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

இவ்­வாறு யாழ்ப்­ப­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வவு­னியா வளாக முதல்­வர் த.மங்­க­ளேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வவு­னியா வளாக சிங்­கள மாண­வர்­க­ளால் புத்­தர் சிலை அமைக்க முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­க­ளின் பின்­னர் ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் தொடர்­பில் அவர் நேற்று ஊட­கங்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தி­னர். அதன்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது-,

கடந்த சனிக்­கி­ழமை வவு­னியா வளா­கத்­தின் விடு­திப் பகு­திக்கு ஒரு சில மாண­வர்­க­ளால் புத்­தர் சிலை வைப்­ப­தற்­கான கூடு ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அனைத்து மதங்­க­ளுக்­கும் உரிய வணக்­கத் தலங்­களை அமைப்­ப­தற்­கு­ரிய நிரந்­த­ர­மான திட்­டத்­துக்­காக நிலம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அங்­கேயே வணக்­கத் தலங்­களை அமைக்க முடி­யும்.

விடு­திப் பகு­தி­யில் இடம் போதா­துள்­ள­து­டன், இந்த நட­வ­டிக்­கை­யால் மாண­வர்­க­ளுக்கு இடை­யில் ஒரு குழப்­ப­மான சூழ்­நிலை ஏற்­ப­டும் என்­ப­தைக் கருத்­தில் கொண்­டும் முயற்­சி­யைக் கைவிட வேண்­டும் என்று நாம் மாண­வர்­க­ளுக்­குக் கூறி­னோம்.

அவர்­கள் எங்­கள் கோரிக்­கையை செவி­ம­டுக்­கா­மல் தாம் அங்கு தொடர்ந்து வைத்­தி­ருப்­போம் என்று கூறி­னர். நேற்று (நேற்று முன்­தி­னம்) எமது நிர்­வா­கம் கூடி முடி­வெ­டுத்­த­தன்­படி அந்­தக் கூட்டை நாம் எமது கட்­டுப்­பா­டில் எடுத்து வந்­தோம். எமது உத்­தி­யோ­கத்­தர்­க­ளைப் பின்­தொ­டர்ந்து வந்த மாண­வர்­கள் அவர்­களை வழி­ம­றித்து முரண்­பட்­ட­னர்.

துறைத் தலை­வர்­கள், பீடா­தி­ப­தி­கள் அனை­வ­ரும் அந்த இடத்­துக்­குச் சென்று மாண­வர்­க­ளு­டன் பேசி­யி­ருந்­த­னர். அவர்­கள் எம்மை மதிக்­கா­மல் முரண்­பட்­ட­து­டன் எம்மை தாக்­க­வும் முயன்­ற­னர்.

எனி­னும் நாம் அந்­தக் கூண்டை எமது கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருந்­த­து­டன், வணக்­கத்­த­லம் நிரந்­த­ர­மாக அமைக்­க­கும் பொழுது அதை மீண்­டும் வழங்­கு­வோம் என்று அவர்­க­ளுக்­குக் கூறி இருக்­கி­றோம்.

இது தொடர்­பாக வளாக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வ­ரு­டன் நாம் பேசி­னோம். இது தொடர்­பா­கத் தனக்­குத் தெரி­யாது என்­றும் எமக்­கும் இந்­தச் செயற்­பாட்­டுக்­கும் சம்­பந்­தம் இல்லை என்­றும் ஒன்­றி­யத்­த­லை­வர் கூறி­னார்.

அதன்­பின்­னர் நாம் விசா­ரித்­தோம். ஒரு நான்கு மாண­வர்­களே இதை முன்­னின்று செயற்­ப­டுத்­தி­யுள்­ள­னர். நீங்­கள் எம்­மைப் பல்­க­லைக் கழ­கத்தை விட்டு வெளி­யில் அனுப்­பி­னா­லும் பர­வா­யில்லை, நாம் என்­ன­வும் செய்­வோம் என்று அவர்­கள் நிர்­வா­கத்­துக்கு அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.

இந்­தச் செயற்­பாடு ஒரு பின்­ன­ணி­யு­டன் நடத்­தப்­ப­டு­கின்­றது என்றே எமக்­குத் தெரி­கி­றது. பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­துக்­குள் ஒரு குழப்ப நிலை உரு­வா­கு­வ­தைக் கருத்­தில் கொண்டு அனைத்­துக் கல்­விச் செயற்­பா­டு­க­ளை­யும் கால­வ­ரை­யின்றி மூடி­யுள்­ளோம்.-என்­றார்.

http://newuthayan.com/story/87503.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.