Jump to content

Recommended Posts

திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

-பாவேந்தர் பாரதிதாசன்

இப்போது இந்தக் கேள்வியின் அவசியம் ஏன் வந்தது என்று தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு வழிநூலே என்றும், குறிப்பாக, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று தரப்படுத்தி, பிராமணருக்கு ஏனையோர் கீழ்நிலை என்றும், குறிப்பாக, சூத்திரர் பிராமணருக்கு அடிமை ஊழியம் செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவர் என்று சொல்லும் நால்வருண வருணாசிரம தருமத்தைத் தூக்கிப்பிடிக்கும் மனுதரும சாத்திரத்தைப் பின்பற்றியே திருக்குறள் எழுதப்பட்டது என்றும் ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார்  தமிழ்நாட்டில் வசிக்கும் முனைவர்.நாகசாமி என்னும் ஓர் ஆரியர்; இவர் 'தொல்லியல் அறிஞர்' என்றும் 'கல்வெட்டு ஆய்வாளர்' என்றும்  அறியப்பட்டவர்; திருக்குறள் ஆரிய தர்ம சாத்திரங்களின் வழிநூல் என்றும், தமிழ்நாடு என்று எதுவும் தமிழர்களுக்குக் கிடையாது என்றும் இது பண்டைய சமற்கிருத சாத்திரங்களில் ஆரியதேசம் என்றே அறியப்படுகின்றது என்றும்  இவர் வெளியிட்டுள்ள ஆங்கில நூலில் எழுதி நிறுவ முனைந்துள்ளார்.

"Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras" என்பது திருவாளர் நாகசாமியின் ஆங்கில நூலின் தலைப்பு.  உண்மைக்குப் புறம்பான கருத்துக்களையும், உண்மையைத் திரித்தும் இவர் நிறுவ முயலும் கருத்துக்கள், திருக்குறளின் மாண்பை ஒருக்காலும் சிதைக்க இயலாது. ஆயினும், தமிழர்களின் கலை, பண்பாடு, வரலாறு, சமயம், மெய்யியல், வழிபாடு உள்ளிட்ட அனைத்துக் கூறுகளும் ஆரியர்கள் போட்ட பிச்சை என்றும், மொத்த இந்தியாவும் ஆரிய தேசமே என்னும் ஒற்றைக் கலாச்சாரத்தை ஆட்சிக்கு உள்ளும் வெளியும் நிலைநிறுத்த முற்படும் பாசிச சக்திகள் செய்யும் பல்வேறு முயற்சிகளின் ஒரு பரிமாணமே திரு.நாகசாமியின் இம்முயற்சி என்பதை youtube இணையதளத்தில் வெளிவந்துள்ள பின்வரும் காணொளி வெளிச்சம்போட்டுக் காட்டும். ராஜீவ் மல்கோத்திரா என்னும் வடஇந்திய ஆரியர், தமிழ் நாட்டில் பலநூறு தலைமுறைகளாகத் தமிழர்களோடு தமிழர்களாக வாழும் கருப்பு ஆரியரான முனைவர் நாகசாமியைக் காணும் பேட்டியில் இவ்விரு ஆரியர்களும் கூறும் விஷமத்தனமான கருத்துக்களைக் கேட்டு, கொதிக்கும் உங்கள் ரத்தம் சொல்லும் "ஏன் இன்னும் இக்காணொளியை மறுத்தும், இந்நூலுக்கு மறுப்பும் எழுதாமல் மென்மையான கட்டுரை எழுதுகிறீர்கள்?" என்று.

 

இக்காணொளி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளதால், ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூல் உலகெங்கிலும் பேசப்படுகின்றது; குறிப்பாக, வடஇந்தியாவில்  இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது  என்ற நோக்கில், இந்நூலுக்கு ஒரு மறுப்புநூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவேண்டியது மிகமிக அவசியம். ஆங்கிலத்தில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழறியாத அறிவுலகத்துக்கு உண்மையைத் தெரிவிக்கப் பயன்படும்; தமிழில் வெளிவரும் மறுப்பு நூல், தமிழர்களுக்குப் பயன்படுவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஆரியரான திரு.நாகசாமி, திருக்குறளைப் பற்றி ஏன் இப்படியொரு பொய்யான நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிடவேண்டும் என்பதைத் தமிழர்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். உலகப்பொதுமறை திருக்குறளுக்கு ஒப்பிட்டுச் சொல்லுமளவு ஒரு அறம்-நீதி-வாழ்வியல்நெறி பேசும் நூல் உலகெங்கிலும் உள்ள எந்நாட்டு இலக்கியத்திலும் இல்லை. சமயம் சாராது, காலம்-இடம் என்னும் பரிமாணங்களைக் கடந்து விளங்கும் திருக்குறளின் பெருமை எந்நூலுக்கும் இல்லை. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்று உலக அரங்குக்கு உரக்கச் சொல்லும் நூல் திருக்குறள்.

[உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலான பைபிள் ஒரு மதநூல்.  பெரும்பாலான நாடுகளின் அரசுமதமாகக் கிறித்துவமதம் விளங்குவதால், பைபிள் அந்தந்த நாட்டு அரசுகளின் துணையால் அந்தந்த நாட்டு மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டது என்பதால், பைபிள் எண்ணிக்கையை திருக்குறள் எண்ணிக்கைக்கு ஒப்பிட இயலாது.]

எந்நாட்டு அரசுகளின் உதவியுமின்றி, நூலின் கருத்துப் பொருண்மை ஒன்றால் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு அறிஞர் பெருமக்களின் தனிமுயற்சியின்  துணைகொண்டு மட்டுமே,  அதிகமான பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலாக விளங்குகிறது திருக்குறள்.  ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பெருமையினைத் தாங்கி நிற்கும் திருக்குறளின் பெருமைகண்டு தாங்கொணாப் பொறாமை மேலிட்டு, அந்நூலினை விழுங்கிச் செரித்துவிடத் துடிக்கின்றனர் ஆரியர்கள். இங்கு ஆரியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களில், ஆரியக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் தமிழரும் அடக்கம் என்பதைக் கவனத்தில் கொள்க.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" என்று சங்ககாலம் தொட்டு முழங்கிவரும் பாரதிதாசர்களால் அவ்வப்போது இடர்களையப்பட்டுத் தமிழன்னையின் மணிமுடி மகுடத்தில் ஒளிரும் மாணிக்கமாக திருக்குறள் போற்றப்பட்டு வருகின்றது. என்றாலும், தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஆரியர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், திருக்குறளுக்கு எதிராக எழுதுவதையோ, அல்லது திருக்குறளை ஆரியக் கருத்தியலில் அடைக்க முயல்வதையோ செய்யத் தவறுவதேயில்லை.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஆரியர்கள் அனைவரின் வீட்டிலும் ஆரியரின் தாய்மொழியான வடமொழி பேசப்படுவதில்லை; ஏனெனில், வடமொழி என்னும் ஆரியம் உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதைந்து செத்துப் போய்விட்டது. எனவே, தமிழகத்தில் வாழும் வடஆரியர்கள் தமிழில்தான் உரையாடுகின்றனர். ஆயினும், தமிழ் அவர்களின் தாய்மொழி அன்று என்பதிலும், வடமொழி செத்துவிட்டாலும், அதன்பின்னர் ஆரியர்கள் உருவாக்கிக்கொண்ட அரைச்செயற்கை மொழியான சமற்கிருதமே உயர்வான மொழியென்றும் உறுதியாகப் பேசுபவர்கள்; சமற்கிருதம் தேவமொழி என்றும், தமிழ் 'நீசமொழி' என்றும் நம்மிடமே உரக்கப் பேசுவார்கள். தமிழர்களுக்கு நலம்பயக்கும் திட்டங்கள் எதுவாயினும் சரி அல்லது காவிரி உள்ளிட்ட தமிழர்களின் உரிமைகள் தொடர்பான எவையாக இருந்தாலும் சரி, வரிந்து கட்டிக்கொண்டு, எதிர்நிலைக் கருத்தியல்களைப் பரப்புவதில் முழுமூச்சுடன் ஈடுபடுவர்.

ஆரிய தரும சாத்திரங்களுக்கும் திருக்குறளுக்கும் தத்துவ அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிறுவ,  "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்னும் குறள் ஒன்றே போதும்.

பிறப்பினால் அனைத்து உயிர்களும் ஓர் நிலை(சமம்-ஒக்கும்); அவ்வுயிர்கள் வாழும் உடல்களின் தன்மையைப் பொருத்தும், தொழிற்படும் செய்தொழில் பொருத்தும், உயிர்களின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்கிறார் பொய்யாமொழிப் புலவர்.

காட்டாக, தொடு உணர்ச்சி மட்டுமே கொண்ட ஓரறிவு உயிரான மரம், நாம் வெளியிடும் கரியமில வாயுவை காற்றில் இருந்து சுத்திகரித்து நீக்கி, நமக்கான உயிர்வளி என்னும் 'Oxygen'-ஐ வெளியிடுகின்றது; சூரிய ஒளியின் துணைகொண்டு, தனக்கான உணவையும், ஏனைய உயிர்களுக்கான உணவாக இலைகளையும், காய்களையும், பழங்களையும் உற்பத்தி செய்கின்றது. இவை அனைத்திற்கும் தேவையான நீர்ச்சத்தை, காற்றிலிருந்தும், நிலத்தடியிலிருந்தும் பெறக் கடினமாக உழைக்கிறது. கடும் தட்பவெட்பச் சூழல்களில் தன்னைக் காத்துக்கொள்ளக் கடுமையாகத் தனியே போராடுகின்றது; ஏனென்றால், மரங்களால் நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ இயலாதல்லவா? இத்துணைப் போராட்டங்களின் வெளிப்பாடாகத்தான் மனிதர்களுக்காகப் பூப்பதும், காய்ப்பதும், கனிவதும் நிகழ்த்துகின்றது.  

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே! வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!" என்று ஓருயிர்த் தாவரத்தின் வலியைக் காட்சிப்படுத்துகின்றார் தற்காலத் தமிழ்க் கவிஞர் பா.விஜய். இத்துணை சேவைகளைத் தன் சக உயிர்களுக்குச் செய்யும் ஓருயிர்த் தாவரத்தைக் காட்டிலும், ஆறறிவு மனிதப்பிறவிகளாகிய நாம் எவ்வகையில் உயர்ந்தவர்கள்? மற்ற உயிர்களுக்கு எவ்வகையில் சேவை செய்தவர்கள்? மனிதர்களாகிய நாம், நம் அனைத்துத் தேவைகளுக்கும் மற்ற உயிர்களைக் கொன்றும், தொழிநுட்ப வளர்ச்சி என்ற பெயரால் ஏனைய உயிர்களின் வாழ்வாதாரங்களைப் பாழ்படுத்தியும், வருங்காலத்தில் இப்புவியை உயிர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற பாழிடமாக ஆக்கும் போக்கில்  கேவலமாகவே வாழ்ந்து வருகின்றோம்.

மனித வாழ்வு என்பதே ஏனைய உயிரினங்களின் நல்வாழ்வைச் சார்ந்தது; ஏனைய உயிர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதால் மட்டுமே மனிதகுலம் தன்னைப் பாதுகாக்க இயலும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்த தமிழர்களின் அறநூல் திருக்குறள் சொல்லும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் அனைத்து உயிர்களுக்கான சமநீதித் தத்துவம் எங்கே?

ஆரிய பிராமணர்குலம் ஒன்றன் நன்மையையே கருத்தில்கொண்டு,      பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைச் சூத்திரர்கள் என்னும் இழிமக்களாக்கி, அவர்களை என்றும் ஆரியப் பிராமணர்களுக்கு அடிமைப்படுத்த வடிவமைக்கப்பட்ட  மனுதருமம், சநாதன தருமம் என்ற பெயர்களில் உலாவரும் பாசிச, மனிதவிரோத ஆரிய தர்ம சாத்திர நூற்கள் எங்கே?

எவ்வகையிலாவது இவ்விரண்டு நூற்களையும் ஒப்பிடவே இயலாதபோது, திருக்குறளை ஆரிய தர்ம சாத்திரங்களின் சுருக்கம் என்று சொல்லும் அடாவடித்தனத்தை நூலில் வடித்த ஆரியருக்கு, நாம் வடிக்கும் பொருத்தமான மறுப்பு நூல் ஒன்றே காலத்தை வென்ற விடையாக அமையும்.

நூல் முழுவதையும் எழுதி முடித்தபின், ஒரு புத்தமாக வெளியிடலாம் என்றிருந்தேன். அப்படி வெளியிட்டிருந்தால், அதில் உலகத் தமிழர்களின் பங்களிப்பு இல்லாதிருக்கும்; பல குறைபாடுகளையும் கொண்டிருக்கும். கிருஷ்ணன் என்னும் தனித்தமிழனாக மறுப்பு நூல் எழுதுவதைப் பார்க்கிலும், 'யாழ்' போன்ற உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் தளத்தில் தொடர் கட்டுரையாக எழுதினால், உலகத்தமிழர்களின் அறிவார்ந்த பங்களிப்புடன் ஒரு நிறைவான நூலாக வெளிவரும் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்ததால், இந்நூலைத் தொடர்கட்டுரையாக எழுத முனைகின்றேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனிக் கருத்தை மையமாகக் கொண்ட கட்டுரையாக இருக்கும். எனவே, முந்தைய கட்டுரைகளைப் படித்தால்தான் நடப்புக் கட்டுரை புரியும் என்ற தொடர்கதை இலக்கணம் இத்தொடருக்குப் பொருந்தாது.

மனிதகுல விரோத நூலாகிய சநாதன மனுதரும சாத்திர நூற்களின் சுருங்கிய வடிவமே திருக்குறள் என்று கொடுமை பறையும் "Thirukkural - an Abridgement of Vedic Dharma Sastras"  ஆரியப் பேரினவாதப் பாசிச நூல் சொல்லும் மையக் கருத்துக்களின் சுருக்கத்தையும், அந்நூலின் ஒவ்வொரு கருத்துக்குமான பதிலாக ஒவ்வொரு கட்டுரையுமாகத் தொடர்ந்து எழுத உள்ளேன். தமிழர்கள் அனைவரும் ஒவ்வொரு கட்டுரையையும் திறனாய்வு செய்து, குறைகளைச் சுட்டி, தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தால், ஒரு வலிமையான நூலாக இத்தொடர் கட்டுரைகள் உருவெடுக்கும். தமிழரெல்லாம் இணைந்து உருவாக்குவோம்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே!   மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ!       -   புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

 

குரளறம் தொடர்ந்து பேசுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியத்தின் இந்தக் பிதற்றலுக்கு காரணம் கீழடி.

கீழடி என்ற வராலாற்று தொல்பொருள் என்ற நிலப் பிரளயம், வரலாற்று பிரளயமாக உருவெடுத்து, ஆரியத்தையம் அதன் பொய்யான வரலாற்று அத்திவாரத்தையும் பெயர்த்தெடுத்து, ஆதி அந்தம் உள்ள  ஆரியமே  என்னுடானா சாவல் விடுகிறாய், வரலாற்றில் இருந்து துடைத்தெறிவதற்கு சர்வ சாதாரணமாக இருக்கும் கீழடியே போதும், வரலாற்றில் உன் இடத்தையும் காலத்தையும் தெரிந்து நடந்துகொள் என்று முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.

இது ஆரியதின் குலையை இழுத்து உலுக்கி இருக்கிறது.

ஆரியத்தின் இந்த  பிதற்றலை முடிப்பதற்கு, வள்ளுவத்தின் "மான் பபுலியை வேட்டையாடுமிடம் காமத்தில்" என்ற காமத்து பாலே போதும்.

அதாவது, அன்றே வள்ளுவம்  பெண் ஆணை  மேவுவதை, ஆகக் குறைந்தது காமத்திலே காட்டியிருக்கிறது.

ஆரியத்தின் வருண சாத்திரம் என்ற பிதற்றல் உண்மையானால், சூத்திரப் பெண் பிராமணிய ஆணை ஆக்க குறைந்தது காமத்திலே வேட்டையாடுவாள் என்பதினால் அடிபட்டுப் போகிறது.  

ஆரியம் இதற்கு  என்ன சொல்லப்போகிறது?

Link to comment
Share on other sites

நன்றி தோழர்  Kadancha,

மிகவும் பயனுறு தகவல். உங்கள் பங்களிப்பு நன்றியோடு என் நூலிலே குறிக்கப்பெறும்.

கிருஷ்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி பிடித்த ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவ அனைத்துக் குறுக்கு வழிகளையும் கையாளும். வரலாற்று ரீதியாக சிங்களப் பேரினவாதமும் இந்த வரையறைக்குள் அடங்கும். பெரியார் சொன்னதுபோல் தமிழகத்திலாவது அவர்களைத் தட்டி வைத்துக் கொண்டே இருந்தால்தான் தமிழன் இந்த மண்ணில் வாழ முடியும்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

திருவள்ளுவர் தமிழ் மரபில் வேதங்களை போற்றி அந்தணர் வேதங்களை காப்பதே மன்னவர் வேலை என்கிறார்.

திருவள்ளுவரும் வேதங்களும் - பார்ப்பனர்களும்

 
தமிழில் இலக்கணம் செய்த தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பார்ப்பனர்களே என்பது தமிழ் பாரம்பரிய வரலாறு. வள்ளுவரை - பஞ்சாங்கம் செய்யும் வள்ளுவர் சாதி எனச் சொல்வோரும் உண்டு.
 
 
thiruvalluvar.png
                                   திருவள்ளுவரின் 14ம் நூற்றாண்டு சிலை
தமிழர்களின் மூத்த தொல்குடி அந்தணர்கள் அல்லது பார்ப்பனர்கள் என மிகத் தெளிவாய் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து  சிலம்பு 7. வரந்தரு காதை
 
திருக்குறளில் வள்ளுவர் வேதங்களையும், பார்ப்பனர்களையும் போற்றியே குறளில் கூறி உள்ளார்.
                                              download.jpg
 
திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்
ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை
மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.
தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.

நாம் அறுதொழிலோர் எனில் சங்க இலக்கிய நடைமுறையில் காண்போம்.
 
பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

 
 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.

வள்ளுவர் பார்ப்பனர் வேதம் ஓதுதலை மறந்தாலும் குடி பிறப்பால் உள்ள ஒழுக்கம் பேண வேண்டும் என்கிறார்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

 ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21

வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.

 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                  (28-நீத்தார் பெருமை)

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.