Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கை ஆட்டிப்படைத்த மழை – இதுவரை 20 பேர் உயிரிழப்பு- 68,343 பேர் பாதிப்பு!!

Featured Replies

சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு

 

(எம்.மனாசித்ரா)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்  நாயகம் அமலநாதன் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நிலையில் 14432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4075 குடும்பங்களைச் சேர்ந்த 12132 பேர் 137 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்ப்ட்டுள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை இன்றும் நாளையும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/33763

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தெற்கை ஆட்டிப்படைத்த மழை – இதுவரை 20 பேர் உயிரிழப்பு- 68,343 பேர் பாதிப்பு!!

S2-22.jpg
 
 
 

சீரற்ற வானி­லை கார ண­மாக 19 மாவட்­டங்­க ளில் இது­வரை ஏற்­பட்ட இட­ரால் 10 பேர் உயி­ரி­ழந்த­னர். 68 ஆயி­ரத்து 343க்கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் தெரி­வித்துள்­ளது.

கேகாலை, பொலன்­ன­றுவை, காலி, புத்­த­ளம் மற்­றும் மொன­ரா­கலை மாவட்­டங்­க­ளி­லேயே உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. மின்­னல் தாக்­கத்­தின் கார­ண­மாக நால்­வ­ரும், கடுங் காற்­றால் மூவ­ரும், மண்­மேடு சரிந்து ஒரு­வ­ரும், நீரில் அடித்­துச் செல்­லப்­பட்டு ஒரு­வ­ரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று மத்­திய நிலை­யம் தெரி­வித்­துள்­ளது.

இடர்­க­ளால் 18 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 18 ஆயி­ரத்து 079 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 68 ஆயி­ரத்து 343 பேர் பாதிப்­பு­களை எதிர்­க­கொண்­டுள்­ள­னர் என்­றும் மத்­திய நிலை­யம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

 

சீரற்ற கால­நி­லை­யால், 25 வீடு­கள் முற்­றா­கச் சேத­ம­டைந்­துள்­ளன. ஆயி­ரத்து 464 வீடு­கள் பகு­தி­ய­ள­வில் சேத­ம­டைந்­துள்­ளன.தற்­ச­ம­யம் 168 தற்­கா­லிக முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அவற்­றில் 6710 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 24 ஆயி­ரத்து 187 பேர் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

http://newuthayan.com/story/09/தெற்கை-ஆட்டிப்படைத்த-மழை-இதுவரை-20-பேர்-உயிரிழப்பு-68343-பேர்-பாதிப்பு.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

'சீனா கொடுத்த காசில் 20 வீதத்தினை ஏப்பம் மிட்டு  மிகுதி 80 வீதப் பணத்தில் நீர்நிலைகளை அழித்து கண்ட கண்ட இடங்களில் பாலங்கள் கட்டியதினால் வெள்ளம் வடிந்து செல்ல முடியாததினால் அதிகளவு மக்களுக்கு சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக' என்னுடன் வேலை செய்யும் சிங்களவர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, கந்தப்பு said:

'சீனா கொடுத்த காசில் 20 வீதத்தினை ஏப்பம் மிட்டு  மிகுதி 80 வீதப் பணத்தில் நீர்நிலைகளை அழித்து கண்ட கண்ட இடங்களில் பாலங்கள் கட்டியதினால் வெள்ளம் வடிந்து செல்ல முடியாததினால் அதிகளவு மக்களுக்கு சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக' என்னுடன் வேலை செய்யும் சிங்களவர் ஒருவர் இந்தியர் ஒருவருக்கு சொன்னார்.

அப்பு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை சிங்கள மக்களுக்கு.....அவ‌ர்களுடைய பிரச்சனை தமிழர்களுக்கு உரிமை கொடுக்க கூடாது என்பது தான்....எவ்வளவு அரச பணத்தை கொள்ளையடித்தாலும் கண்டுகொள்ள மாற்றார்கள் ஆனால் தமிழருக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது என்றால் ஊர்வலம் போய் அரசாங்கத்தை வீழுத்தவும் தயங்க மாற்றார்கள்.....நம்மட சகோதரயாக்கள்

  • தொடங்கியவர்
11 பேர் பலி; 85,000 பேர் பாதிப்பு, மழை தொடரும்
 
 

இயற்கை சீற்றத்தால் இதுவரை 14 மாவட்டங்களைச் சேர்ந்த 18,542 குடும்பங்களைச் சேர்ந்த 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,526 குடும்பங்கள் 194 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனரர்த்தங்களால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.   

நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் மேகமூட்டமான வானமும் இன்றிலிருந்து குறிப்பாக இன்றிரவு முதல் சற்று அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகிழக்கு, வடமேல், மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில் காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70-80கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/11-பேர்-பலி-85-000-பேர்-பாதிப்பு-மழை-தொடரும்/150-216428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.