Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்!!

Featured Replies

மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்!!

 

33894888_1635388303177839_77553281503802

 
 

கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர்.

வலி. வடக்குப் பிரதேசத்தில் சில லில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதில் கட்டுவன் சந்தியில் இருந்து மயிலிட்டிச் சந்திக்குச் செல்லும் பிரதான பாதையில் சில மீற்றர் தூரம் மட்டும் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய பிரதேசம் படையினரின் அபகரிப்பிற்குள் உள்ளது.

 

கடந்த ஏப்ரல் 13 ம் திகதி விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் பலவற்றிற்குச் செல்லும் பாதைகள் இன்றி நிலம் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த விடயம் தற்போது படையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் குறித்த காணிகளிற்குச் செல்லும் பிரதான வீதியை விடுவிக்கும் நோக்கில், படையினர் தமது முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை தற்போதுள்ள நிலைகளில் இருந்து சுமார் 50 மீற்றர் பின் நகர்த்தி வருகின்றனர்.

இதன் மூலம் படையினரின் பிடியில் உள்ள 450 மீற்றர் நீள வீதியும் மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/16/மயிலிட்டியில்-தடுப்பு-வேலி-அமைக்கும்-படையினர்.html

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நல்லது நடந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஏதோ நல்லது நடந்தால் சந்தோசம்.

எங்கடை நாட்டுக்கு வாழ்க்கை முழுக்க உதே வசனம் தான் சரிப்பட்டு வரும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத அலைகள் 3 இல் ஒரு மாதத்துக்குள் விடுவித்த நிலங்களை.. ஆக்கிரமிப்பாளனுக்கு மண்ணின் மைந்தர்களை காட்டிக்கொடுத்து.. மண்ணை ஆக்கிரமிக்கச் செய்துவிட்டு.. இன்று அதே நிலங்களை.. 9 வருடமாக மீட்கிறார்கள்...  இன்னும் மீட்ட பாடில்லை. ஏதோ நடந்தால் சரின்னு சந்தோசப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு ஆக்கிரமிப்பாளன் தான் நினைத்ததை எம்மவர்களைக் கொண்டே நிறைவேற்றி வருகிறான். அதிலும் அவனுக்கு வெற்றியை வாங்கிக் கொடுக்கிறோம்..

ஓரிரு நாளுக்குள் விடப்பட வேண்டிய நிலங்களும்.. தமிழர் தேசமும்.. இன்னும் விடுபட்டுக் கொண்டிருக்கிறது.. போர் ஓய்ந்து.. ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையிலும். இருந்தாலும் ஆக்கிரமிப்பாளன் இடும் பிச்சை என்பது.. எமக்கு பெரும் சந்தோசம். ஏனெனில்.. அவனிடம் கேட்டுப் பெறும் அளவுக்கு எமக்கு வலுவில்லை. அவனாப் போடுவதை கவ்விக் கொள்வதைத் தவிர. ?

  • கருத்துக்கள உறவுகள்

மாவை, சுமந்திரன், சம்பந்தன்...  இந்த விடயத்தை,  கேள்விப்  பட்டால்....  
அடுத்த  போரை... ஆரம்பித்து விடுவார்கள்.
அதானால்....  இந்த விடயம், அவர்களுக்கு தெரியாமல்... இருக்கட்டும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.