Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!!

Featured Replies

வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!!

 

 

17457333_1259796384057008_77766594847894

 
 
 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

http://newuthayan.com/story/11/வடக்கு-கிழக்கில்-மீண்டும்-புலிகள்-உருவாக-வேண்டும்-அறைகூவல்-விடுக்கிறார்-இராஜங்க-அமைச்சர்-விஜயகலா.html

  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் முன்னிலையில் விஜயகலா ஆவேசம்

 

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்காஅரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களானஉள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்ஜே.சீ.அளவதுவள ஆகியோர் முன்னிலையிலேயே மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் யூலை 2 ஆம் திகதியான இன்றைய தினம்திங்கட்கிழமை “உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக்கள் சேவை என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தஇந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவணை, சிறுவர்மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பில் கடும் ஆத்திரம் வெளியிட்டதுடன்,தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ பணிகளுக்கு எந்தவித ஆதரவையும் வழங்க முடியாதநிலையில் யாழ் மாவட்ட மக்களான நாங்கள் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை இந்தநிகழ்வில் கதாநாயகன்களாக அமர்ந்துகொண்டிருக்கும் அமைச்சர்கள் இருவரிடமும்மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய ஆறு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுபடுகொலைசெய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கின்றது. இவ்வாறான கொடூரங்களை தடுக்கமுடியாத எமக்கு எதற்காக உத்தியோபூர்வ பணி நடமாடும் சேவை எங்களுக்கு.

உண்மையிலேயே 2009 மே 18 க்கு முதல் நாங்கள தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை ஒவ்வொருத்தரும் உணர்வுபூர்வமாகஉணர்கின்றோம்.

உண்மையிலேயே இன்றைய நிலை தமிழீழ விடுதலைப் புலிகளை மீளஉருவாக்க வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டும்என்றால் நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமானால் எங்களது பிள்ளைகள்நிம்மதியாக கல்வி கற்பதற்கு பாடசாலைக்கு சுதந்திரமாக சென்று வீடு திரும்ப வேண்டுமானால்வடக்கு கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்” என்று சிறுவர்மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மிகவும் ஆவேசத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

https://www.ibctamil.com/ltte/80/102744?ref=bre-news

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை வரவழைக்கும் அறைகூவல் புலி வந்தால் இவதான் முதல் ஆள்  சுவிஸ் குமாரை கொழும்புக்கு கொண்டு போனதுக்கு .தேர்தல் வருது என்றவுடன் இப்படி சவுண்டு விடுறா போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

போர் மும்முரமாக நடைபெற்றபோது சமூகத்தில் பொருளாதார ரீதியின் அடிமட்டத்தில் இருந்தவர்கள் பலர் அச்சூழலைப் பயன்படுத்தி சிங்களத்தின் சலுகைகளைப் பெற்று வடக்குக் கிழக்கில் வியாபரம்செய்து பணக்காரரானார்கள் அவர்கள்ப் பொதுவாக நாம் "வன்செயல் பணக்காரர்" என அழைப்பதுண்டு இவர்களில் விஜயகலாவின் கணவன் மகெஸ்வரனும் உள்ளடக்கம்  புலிகளது சொத்துக்களை அபகரித்து தற்போது கோடீஸ்வரரர்களாக புலம்பெயர்தேசங்களில் மட்டுமல்ல குடாநாட்டிலும் பலர் வாழ்கிறார்கள் இவர்களில் யாழ் நகரில் கிறீன் கிறாஸ் விடுதி அதிபரும் உள்ளடக்கம் சாதாரண பார்மசி வைத்திருந்த இவர் இப்போது யாழ்நகரில் குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்கள் ஒருவர்.

இப்போது இவர்களுக்கு எல்லாம் ஏதோ பணத்தட்டுப்பாடுபோல் தெரிகிறது மீண்டும் புலிகள் வந்தால் தங்கள் கஜானாவில் குறைந்த பணத்தை மக்களிடம் ஒன்றுக்கு இரண்டாக  விலை வைத்து அப்பணத்தில் சீரும் சிறப்புமா வாழலாம்.

அதுக்குப் புலியோ பூனையோ யாராவது வந்து ஊரவன் பிள்ளைகளை சாவுகொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு கொழும்பில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடாத்தலாம் எனகணக்குப்போடுகிறார்கள்.

சரி மீண்டும் புலி வரட்டும் விஜயகலா முதல்ப் போராளியாக உங்கள் இரு பிள்ளைகளையும் அ வர்களிடம் இணைப்பீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

 உசுப்பேற்றும் அரசியல் பேச்சை மேடையில் பேசிவிட்டு அமைச்சர்களை வீட்டுக்கு அழைத்து நல்ல யாழ்ப்பாணத்து மச்சக்கூழ் காச்சிக் கொடுத்து “யாவாரம்” பார்க்கும் வித்தை மட்டும்தான் அக்காவுக்கு தெரியுமாக்கும்?

  • தொடங்கியவர்

தற்கொலைக்கும் கொலைக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா

யாழ். சுழிபுரத்தில் 6 வயது சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து தற்போது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

சிறுமி ரெஜினா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அரச வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

 

 

உண்மையிலேயே ஒரு பெண் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகின்றாள் என்பது பெண்ணுக்கே விளங்கும், ஆணுக்கு விளங்கமாட்டாது. ஆறு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் எதற்காக உத்தியோகப்பூர்வப் பணி இந்த மாவட்டத்திற்கு என அங்கு வருகைத்தந்திருந்த அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

சுழிபுரம், காட்டுப்புலத்தில் 6 வயதுச் சிறுமி ரெஜினா பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நீதிகோரிப் பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சிறுமி கயிற்றால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் வன்கொடுமைக்கான தடயங்கள் உள்ளன என்று பிரேத பரிசோதனையில் வைத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமையானது பலரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சிறுமி ரெஜினாவிற்கு நீதிகோரி பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பல அரசியல்வாதிகள் குறித்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்தனர், இருப்பினும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் சம்பவ இடத்திற்கு பிரசன்னமாகாததும், ஆறுதல் தெரிவிக்கும் வகையில்கூட அந்த இடத்திற்கு சமூகம் தராமையும் மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, கொலை செய்யப்படுதல் மற்றும் தற்கொலை செய்துகொள்ளல் என்ற இரு விடயங்கள் தொடர்பில் தெளிவின்மை உள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

http://www.tamilwin.com/politics/01/187046?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீள உருவானாலும் நீங்கள் என்னமோ சிங்களவர்களின் கட்சியில்தானே அமைச்சராக இருக்கபோறீர்கள்...

எந்த இனம் சுதந்திரமாக இருக்கவே கூடாது என்று நினைக்கிறதோ, எந்த இனம் நீங்கள் சொல்லும் புலிகளை அழித்ததோ. எந்த கட்சியின் பிதாமகர்களில் ஒருவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன இறுதிமூச்சுவரை எம்மை அழிப்பதையே தன்னோட அரசியலாக கொண்டாரோ   அதே  பெரும்பான்மை இனத்து அரசியலுடன் தேனிலவு கொண்டாடிக்கொண்டு  இனமான ஆவேசபேச்சா, எப்படி  கொஞ்சம்கூட மானரோஷமில்லாமல் இப்படியெல்லாம்  பேச முடிகிறது உங்களால்?

முடிந்தவரை ஒரு சிறுபான்மையினம் தனது வாழ்வுக்காக ஆயுதம் கொண்டு  மோதி பார்த்தாச்சு, துரதிர்ஷ்டவசமாக எதிரிகளைவிட எமது இனத்திற்குள்ளேயே அந்த போராட்டத்திற்கு எதிரிகள் அதிகமானதால் எல்லாமே நாசமா போச்சு...

அன்றிருந்த  படைகளைவிட பல ஆயிரம் மடங்கு பலத்துடன் சிங்களம் திமிருடன் நிற்கிறது,அதன்முன்னால் இனிமேல் எந்த ஒரு முட்டாள் தமிழனும் ஆயுதமேந்த தயாரில்லை..

நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் துணைவர் மண்ணெணெய் விற்ற காசில் நாலைஞ்சு ஏகே துப்பாக்கிகள் வாங்கி போராடி பாருங்கள்...முடிவை தேடி கொள்ளுங்கள் , ஆனால் யாரையும் ஆயுதம் ஏந்தவோ,மீளவரவோ சொல்லாதீர்கள், உங்கள் போதைக்கு தமிழர் ரத்தவறையை டேஸ்ட்டுக்கு கேக்காதீர்கள்.

சிங்களவன் விஷயத்தில் எனக்கு பல விஷயங்களில் உடன்பாடில்லையென்றாலும், இதை சொல்லியே ஆகவேண்டும்...

தமிழன் என்ற இனம் வாழ்ந்தால் ஒன்று முற்றுமுழுதாக பிரபாகரன் தலமையில் வாழ்ந்திருக்கணும்...

இல்லையென்றால்...முற்றுமுழுதாக சிங்களவனின் ஆட்சியில் வாழணும்,

இந்த இடைதரக தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் ஆப்ரிக்க Mamba snake-கைவிட கொடிய விஷம் கொண்டவர்கள், அவர்கள் தலைமையின் கீழ் வாழாமல் தப்பித்ததில் மட்டும் புலம்பெயர் தமிழர்கள்  மிகவும் அதிர்ஸ்டசாலிகள்...வேறு எந்த விஷயத்திலும் அல்ல!

  • தொடங்கியவர்

 

“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.