Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம்

Featured Replies

டிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம்

டிரம்ப்-புதின் மாநாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஷ்யாவுடன் இணைவது "நல்ல ஒரு விஷயம் என்றும், அது கெட்டது அல்ல" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி நகரத்தில் ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்ததை தொடர்ந்து, "ரஷ்யாவுடன் நல்ல உறவை எதிர்பார்ப்பதாக" டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க - ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் என டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அவர்களுக்கிடையேயான பகைமையை இன்னமும் அதிகரித்தது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக அமெரிக்கா முட்டாள்தனமாக நடந்து கொண்டதுதான், ரஷ்யாவுடனான உறவு சீரழிந்ததற்கு காரணம் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், "நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்" என்று ட்வீட் செய்துள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் எந்த திட்டமும் இருக்காது என இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜான் போல்டன் தெரிவித்தார்.

டிரம்ப்-புதின் மாநாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்கா - ரஷ்யா என்னதான் பிரச்சனை?

இதன் தொடக்கத்தை அறிய வேண்டுமென்றால் 1945-1989ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடந்த பனிப்போருக்கு செல்ல வேண்டும்.

இவ்விரு நாடுகளும் நேரடியாக சண்டையிட்டதில்லை. சோவித் யூனியன் வீழ்ந்த பிறகு, மற்றும் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா எழுந்த பிறகும் கூட இந்த நாடுகளுக்கிடையேயான பகைமை குறைந்தபாடில்லை.

குறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் மோசமடைய செய்தது. அதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்த சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது?

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் தலையீடு இருந்ததன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார் என்ற கருத்து எழுந்ததால் டிரம்ப் - புதின் இடையிலான உறவு உலகளவில் கவனமுடன் ஆராயப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது.

டிரம்ப்-புதின் மாநாடுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், அதிபர் தேர்தலின்போது ரஷ்யா செய்தது என்ன மற்றும் ரஷ்யாவுக்கும் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவுக்கும் தொடர்பேதாவது உள்ளதா என்பதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் விசாரணையை "சூனிய வேட்டை" என்று கூறி டிரம்ப் ரத்து செய்திருந்தார்.

தேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயக கட்சியினரின் கசப்புணர்வால் உந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு இது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தனது குடியரசு கட்சியின் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.

கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்காக ஜி8 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யாவை மீண்டும் சேர்த்துகொள்ளும் முடிவுக்கு டிரம்ப் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் கூறியதென்ன?

புதினினை பாராட்டும் வகையிலான பல கருத்துகளை டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக புதினை சிறந்த தலைவர் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமைவிட சிறந்த தலைவர் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டே டிரம்ப் கூறியிருந்தார்.

மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் சர்ச்சைக்கு மத்தியில் வெற்றிபெற்ற புதினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாமென்று தனது ஆலோசகர்கள் கூறியதையும் கேட்காமல், டிரம்ப் புதினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆனால், டிரம்ப் குறித்து சில சமயங்களே பேசிய போதும் புதின் வார்த்தைகளை கவனமுடனே கையாண்டார். இருந்தபோதிலும், புதின் டிரம்பை "மிகவும் சாமர்த்தியமான மனிதர், புத்திசாலி" என்று பாராட்டியுள்ளார்.

 

 

https://www.bbc.com/tamil/global-44851668

  • தொடங்கியவர்

தேர்தல் தலையீடு: ரஷ்யாவை ஆதரித்த டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

டிரம்ப்-புதின் ஹெல்சின்கி சந்திப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹெல்சின்கியில் டொனால்டு டிரம்ப்- விளாதிமிர் புதின்

ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்கள்கிழமை டொனால்டு டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இரண்டு மணி நேரம் தனியறையில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்தது என்று கூறும் தமது சொந்தப் புலனாய்வு அமைப்பை நம்புகிறாரா அல்லது ரஷ்ய அதிபரை நம்புகிறாரா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

"ரஷ்யா தலையிடவில்லை என்கிறார் அதிபர் புதின். அவர்கள் தலையிடுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று பதில் அளித்தார் டிரம்ப்.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக தேர்தலை நகர்த்தும் வகையில் ரஷ்ய அரசு உதவியோடு அமெரிக்காவில் இணையதளத் தாக்குதல்கள், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளை வெளியிடுவது ஆகிய வேலைகள் நடந்ததாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கண்டனங்கள்

தங்கள் சொந்தப் புலனாய்வு அமைப்பை மறுத்து, ரஷ்யாவை ஆதரிக்கும் டிரம்பின் செயலுக்கு உடனடியாக அமெரிக்காவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

"ரஷ்யா நமது கூட்டாளி நாடல்ல என்பதை டிரம்ப் உணரவேண்டும்," என்று கூறியுள்ளார் அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) மக்கள் பிரதிநிதிகள் அவைத் தலைவர் பவுல் ரய்யான்.

கடுமையான மொழியில் வெளியான அவரது அறிக்கையில், "அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அறம் சார்ந்து பொதுவான விஷயங்கள் இல்லை. நமது அடிப்படையான விழுமியங்களுக்கும், கொள்கைகளுக்கும் ரஷ்யா எதிராகவே உள்ளது. 2016 தேர்தலில் ரஷ்யா அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதா என்ற சந்தேகத்துக்கே இடமில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த செனட்டர் ஜான் மெக்கைன் இது பற்றிக் கூறும்போது, அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரின் "வெட்கக்கேடான செயல்பாடு" இது என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

"இதற்கு முன்பு இருந்த எந்த அமெரிக்க அதிபரும் எதிராளியிடம் தம்மை இந்த அளவு மோசமாக தாழ்த்திக்கொண்டதில்லை," என்று அவர் கூறியுள்ளார்.

2016 தலையீட்டுக்கு ரஷ்யாவை பொறுப்பாக்கும் வகையில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட செயல் இது என்று விமர்சித்திருக்கிறார் இன்னொரு குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம்.

"டிரம்பின் செயல்பாடுகள் நமது எதிரிகளை வலுப்படுத்தி நமது தரப்பையும் நமது கூட்டாளிகளின் தரப்பையும் பலவீனப்படுத்தியுள்ளது" என்று டிவீட் செய்துள்ளார் ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான சக் ஷும்மர். இவர் இது குறித்து தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளை இட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @SenSchumer
 

For the president of the United States to side with President Putin against American law enforcement, American defense officials, and American intelligence agencies is thoughtless, dangerous, and weak. The president is putting himself over our country.

 

அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநர் டேன் கோட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க ஜனநாயகத்தை பாதிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ரஷ்யா ஈடுபட்டுவருவது உளவுத்துறையினருக்கு தெளிவாகத் தெரியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் விளக்கம்

விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் டிவீட் செய்த டிரம்ப், தமது உளவுத் துறையினர் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டார். அத்துடன், "நமது கடந்த காலத்தின் மீது மட்டும் நாம் கவனம் குவிக்க முடியாது. உலகின் இரண்டு மிகப்பெரிய அணு ஆயுத சக்திகளாக இருக்கும் இரண்டு நாடுகளும் ஒன்றாகப் போகவேண்டும் என்றும் உணர்ந்துள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்புக்கு கால்பந்து பரிசளித்த டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க வணிகத் துறையில் ஒரு கூட்டத்தில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்க-ரஷ்ய உச்சி மாநாட்டைப் பாராட்டியதோடு, டிரம்பையும் புகழ்ந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் பிரசாரத்தை பாதிக்கும் வகையில் இமெயில்களை ஹேக் செய்ததாக ரஷ்ய ராணுவ உளவுத் துறையினர் 12 பேர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் குற்றம் சுமத்திய நிலையில், இந்த டிரம்ப்-புதின் உச்சி மாநாட்டை ரத்து செய்யவேண்டும் என்று சில அமெரிக்க அரசியல் தலைவர்கள் கோரியிருந்தனர்.

https://www.bbc.com/tamil/global-44855556

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பின் லூசுத்தனமான உளறல்களைப் பின்லாந்து நாட்டின் பத்திரிகைகள் வெட்டவெளிச்சமாக்கியுள்ளன 

அதில் பிரதானமானது

பின்லாந்து நாடு நேட்டோவில் அங்கம்வகிப்பதில் நாம் மகிழ்சியடைகிறோம் எனக்கூறியது காரணம் பின்லாந்து இதுவரைக்கும் நேட்டோவில் அங்கம்வகிக்கவில்லை. தவிர ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு ரஸ்யா உதவிசெய்ததா எனக்கேட்டபோது பூடின் இல்லையெனப் பதிலளித்திருந்தார் ஆனால் ட்ரம் எதுவித பதிலும் கூறவில்லை காரணம் அமெரிக்கச் சட்டப்படி இவர் பொய்கூறியதாக எதிர்காலத்தில் நிரூபித்தால் பலத்த சர்ச்சைகளுக்கு ஆளாகநேரிடும் என்பதாகும்.

ஆனால் இந்தச்சந்திப்பின்மூலம் சுமார் இரண்டரை வார இடைவெளியில் இரு வல்லரசுகளது தலைவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்து மிகப்பெரும் சந்திப்பு ஒன்றை நடாத்துமளவுக்கு பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியின் நிர்வாகம் தேவையான வளங்களைக்கொண்டிருக்கின்றது என பின்லாந்து நாட்டின் நிர்வாகிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

இச்சந்திபில் செய்தி சேகரிக்கவென உலகின் பல்வேறுபாகங்களிருந்து ஆறாயிரத்தி நானூறுக்கும் அதிகமான செய்தியாளர்களும் அது தொடர்பானவர்களும் வந்திருந்தார்கள் இரு தலைவர்களது பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான விடையங்களை மட்டுமன்றி அனைத்துப் பத்திரிகையாளர்களையும் ஒருங்கமைக்கும் பணி மிகவும் சவாலனது அதை பின்லாந்தின் நிர்வாகம் செவ்வனே செய்தது என அறியமுடிகிறது.

ஒரு சிறிய நாடு தனது பலத்துக்கு மேலானதான விடையத்தைச் செய்து தனது பெயரைக் காப்பாறியுள்ளது மட்டுமே நன்மையாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ ட்ரம் ன் உடலில் 23 புலிகேசியின் ஆவி புகுந்து விட்டுது போல் இருக்கு கிம்முடன் ம் புடின் உடனும் மனுஷன் கொஞ்சுது கெஞ்சுது  பக்கத்தில் உள்ள கனடா முதல் கொண்டு பலம் குறைந்த நாடுகளுடன் சவுண்டு விட்டு மல்லுக்கு நிக்கிறார்  வடிவேலு வின் 23 புலிகேசி cd ஒன்றை இலவசமாய் ட்ரம்புக்கு அனுப்பி விடுவது உத்தமம் மனுஷன் மாரிகீறி அணுகுண்டு பொத்தானில் கைவைக்காமல் இருக்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.