Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை! சம்பந்தன்

Featured Replies

சிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை! சம்பந்தன்

 

 

சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கபூர் அரசாங்கமானது இனங்களுக்கிடையில் ஒற்றுமை, சமத்துவம், ஊழல், மோசடியற்ற ஆட்சி, சட்டங்களுக்கு ஏற்ப கடுமையாக நடவடிக்கைகள் என்பனவற்றை கடைப்பிடித்து வருகின்றது.

இந்நிலையில் சிங்கபூருடனான ஒப்பந்தம் செய்வதன் மூலம் இலங்கையில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய கொள்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சி என்பனவற்றை பெற்றுக்கொள்ள முடியம் என கூறினார்.

மேலும் இலங்கை -சிங்கப்பூர் ஒப்பந்தம் மற்றும் இந்தியா- இலங்கைக்கிடையிலான ஒப்பந்தத்தால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும் என பலர் விமர்சிக்கின்றனர்.

குறித்த ஒப்பந்தங்கள் நாட்டுக்கு ஆபத்து என எண்ணினால் நாட்டை அபிவிருத்தியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல ஒருபோதும் முடியாத நிலை ஏற்படும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

http://athavannews.com/?p=705380-சிங்கப்பூர்-கடைபிடிக்கும்-கொள்கையை-இலங்கை-அரசு-கடைபிடிப்பதில்லை!-சம்பந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, நவீனன் said:

சிங்கப்பூர் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைள் சிலவற்றையேனும் இலங்கை அரசாங்கம் கடைபிடிப்பதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவற்றில் ஒன்றையாவது இந்த அரசாங்கம் கடைபிடித்தால் நாடு அபிவிருத்தியடையும் என கூறினார்.

ஒரு நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியென்றால் கொஞ்சமாவது பயபக்தியிருக்கும்.  ஆனால் சிறிலங்காவில் இருக்கும் எதிர்க்கட்சியோ சம்பளத்துக்கும் சலுகைகளுக்குமாகவே அவ்வப்போது அறிக்கை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நக்குண்டார் நாவிளந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒண்டும் வேண்டாம் இனவாதம் பேசுபவர் முதற்கொண்டு இந்த ஆவா சூவா எல்லாத்துக்கும் ஒரே ஒரு மருந்து பிரம்படி கொண்டு வந்தால் காணும் சிலோன் எங்கேயோ போயிடும் ஆனால் பாருங்க தனி ஸ்ரீலங்கா என்று எப்ப எழுத்தை மாத்தினமோ அண்டைக்கு சனியன் சொறிலங்கா மேல் ஏறினது இன்னுமிறங்கவில்லை இறங்கபோவதுமில்லை இப்போதைக்கு .

  • தொடங்கியவர்

சிங்கப்பூர் ஒப்பந்தத்தை கைவிடவே வேண்டாம்

01MAIN17072018Page1Image0007-18fa1b8285a4145ec3499f8daba6bcf3450c2531.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல் 

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதார உடன்படிக்கையில் குறைபாடுகள், நெருக்கடிகள் இருப்பின் அரசாங்கம் உடனடியாக அவற்றை சரிசெய்ய வேண்டும். நாட்டுக்கு ஏற்ற தரமான கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் சிங்கப்பூர் இலங்கை உடன்படிக்கையை கைவிடக்கூடாது. இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைக்கே சிங்கப்பூரின் ஆதரவு தேவைப்படுகின்றதே தவிர சிங்கப்பூர் இலங்கைக்கு வரவில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் - இலங்கை நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

இலங்கை -சிங்கப்பூர் உடன்படிக்கை குறித்து சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கப்பூர்- இலங்கை ஆகிய நாடுகளின் உறவு மிக நீண்டகாலமானதாகும். சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வந்த நிலையில் இலங்கை போன்று ஒரு நாடாக சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என கூறினார். அன்று இலங்கை துரித கதியில் அபிவிருத்திகண்ட நாடாக அவர் அடையாளம் கண்டார்.

அன்று இலங்கை அரச துறையில், கல்வியில், சுகாதாரத்தில் பறிய முன்னேற்றம் கண்டது. ஆனால் காலப்போக்கில் சிங்கப்பூர் மிகவும் வேகமாக முன்னோக்கி சென்ற நிலையில் இலங்கை பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது. துரதிஷ்ட வசமாக எமது நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படாது போய்விட்டன. ஏன் இவை இடம்பெறவில்லை? சிங்கப்பூர் எவ்வாறு வெற்றி பெற்றது? இந்த கேள்விகளை கேட்க வேண்டும். 1960 களில் சிங்கபூர் சுதந்திரம் கண்ட பின்னர் தலா வருமானம் அன்று இருந்ததை விட இன்று பாரிய உயர்வினை கண்டுள்ளது. 500 அமெரிக்க .ெடாலர்களாக இருந்த தலா வருமானம் இன்று 55 ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது. மிகப்பெரிய உயர்வினை கண்டுள்ளது. ஆனால் எமது தலா வருமானம் இருந்ததை விட குறைந்துள்ளது.

நல்லாட்சி, திறமையின் அடிப்படையில் அபிவிருத்திகள், அரசியல் தலையீடுகள் இல்லாமை, அங்கு மக்கள் மத்தியில் ஒற்றுமை, நான்கு மொழிகள் இருந்தும் அவை ஒன்றாக செயற்படுகின்றமை, சமத்துவம் காணப்படுகின்றமை, பாகுபாடு இல்லாமை, தூய்மையான ஊழல் இல்லாத அரசாங்கம் உள்ளமை, உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையில் அனைவரும் தூய்மையான அரசியலை முன்னெடுக்கின்றமையே இதற்கு காரணமாகும்.

சட்டத்தின் ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றமை, சட்டம் சமமாக அனைவருக்கும் முன்னெடுக்கப்படுகின்றமை, சமூக சமத்துவம் காணப்படுகின்றமை, கல்வி, அபிவிருத்தி என அனைத்திலும் சமத்துவம் உள்ளமை ஆகியன சிங்கபூரின் வெற்றிக்கு காரணமாகும். ஆனால் நாம் இவற்றை கருத்தில் கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்காது, நல்ல ஆட்சியை கவனத்தில் கொள்ளாது, சட்டத்தை கருத்தில் கொள்ளாது, சமூக சமத்துவத்தை கருத்தில் கொள்ளாமை எமது வீழ்ச்சிக்கு காரணமாகும். ஆகவே இவற்றை முதலில் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

எமது துறைமுகங்களை அவர்கள் பயன்படுத்தி அவர்களின் ஆரம்ப பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்ததாக சில வரலாறுகள் உள்ளன. இதனால் சிங்கபூர் அபிவிருத்தி கண்டது. ஆனால் நாம் அபிவிருத்தி அடையவில்லை. கொள்கை அடிப்படையில் நாம் ஆட்சி செய்யவில்லை. எனவே கொள்கை எமக்கு மிகவும் முக்கியமானது. அதனை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். சிங்கபூர் உடன்படிக்கை செய்ய அவர்கள் இங்கு வரவில்லை. அவர்கள் எம்மை விட பாரிய முன்னேற்றம் கண்டு முன்னோக்கி சென்றுள்ளனர். ஆகவே எமக்கு தான் இவ்வாறான ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றதே தவிர சிங்கப்பூருக்கு எமது தயவு தேவையில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.. ஆகவே இந்த உடன்படிக்கைகளை செய்யும் பொது முரண்பாடுகள் நெருக்கடிகள் இருப்பின் அரசாங்கம் அவற்றில் திருத்தங்கள் செய்ய வேண்டும், ஆனால் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலமாக நாட்டுக்கு நன்மைகளை கொண்டுவரவேண்டும். அவர்கள் எமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும். எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். இனியும் நாம் பின்னோக்கி செல்லக் கூடாது. இந்த நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் .

 நாம் மிகவும் பின்தங்கி நிற்கும் நபர்கள். ஆகவே இந்த உடன்படிக்கைகளை முன்னெடுக்க எமக்கு தேவை உள்ளது . ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து அதன் மூலமாக எமக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்பட வேண்டும். அந்த நம்பிக்கை எமக்கு வர வேண்டும். வீணாக அச்சம் கொண்டு உடன்படிக்கைகளை கைவிடக் கூடாது. தைரியமாக இந்த ஒப்பந்தங்களை முன்னெடுத்து நாட்டினை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.