Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு

Featured Replies

சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு

சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகின்றது.

mahinda2.jpg

இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

mahinda3.jpg

இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

mahinda1.jpg

மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

mahinda4.jpg

http://www.virakesari.lk/article/37122

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கதைத்து இருப்பினம் ? சம்பந்தமில்லாமல்  சம்பந்தன் கலந்து கொண்டு இருக்க மாட்டாரே வடகிழக்கு பக்கத்தை சூறையாட பிளான் போட்டு இந்த பொம்மையை ஆருகில் வைத்து இருப்பினம் அது எல்லாத்துக்கும் தலை ஆட்டும் ஆள் த்தானே .(ஏனென்றால் அதன் டிசைன் அப்படி )

  • தொடங்கியவர்

சீனா ஏற்பாடு செய்த நிகழ்வில் மஹிந்தர் – சம்மந்தர் இரகசியப் பேச்சு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்  கலந்துரையாடியுள்ளார்.

சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு தினம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்விற்கு ஒன்றாக வருகைதந்த  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுமார் 10 நிமிடங்கள் பிரத்தியேகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரியவராத போதிலும் இருவருடைய முகபாவனையும் தீவிரமான விடயம் கலந்துரையாடப்பட்டதை வெளிப்படுத்தியதாக காட்சியை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு பொது எதிரணியினர் தீவிர பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இரண்டு தலைவர்களும் குறித்த விடயம் தொடர்பிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடியிருப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

sam-mahi.jpg

IMG-20180723-WA0054.jpg

http://athavannews.com/ராஜபக்ஷர்களை-சந்தித்த-சம/

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நவீனன் said:

குறித்த நிகழ்விற்கு ஒன்றாக வருகைதந்த  எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுமார் 10 நிமிடங்கள் பிரத்தியேகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரியவராத போதிலும் இருவருடைய முகபாவனையும் தீவிரமான விடயம் கலந்துரையாடப்பட்டதை வெளிப்படுத்தியதாக காட்சியை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நான் நினைக்கிறன் சம் பரதநாட்டியம் கற்று இருப்பார் என்று அந்தாள் முகபாவனையிலும் ஆள் விடயம் சொல்றார்ராம் நம்புங்க மக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சம்பந்தர் ஐய்யாவைப் பார்க்கும் பொழுது இரு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றனர்.

ஒன்றுஇ அவர் அரைத்தூக்கத்தில் எப்போதும் இருக்கிறார் என்பது. ஏனென்றால் தலை சாதுவாகத் தொங்கியபடிஇ கண்கள் கீழிறங்கிஇ பாதி மூடப்பட்டுஇ வாயில் முனுமுனுப்பது போல எப்போதும் ஒருக்கிறார். ஆகவே . ஆகவே தனக்கு முன்னால் அமர்ந்ஹ்டிருந்து தன்னுடன் பேசுபவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு பாதிநேரத்தில் தெரியாமல்க் கூட இருக்கலாம். எனது ஐய்யாவும் (அம்மாவின் தகப்பனார்)இ ட்சாய்மனைக் கதிரையில் தூங்கியபடியே எங்களுடன் பேசுவார். நாங்கள் பேசுவது அவருக்குப் புரியாதுஇ அவர் பேசுவதிலும் எந்த அர்த்தமும் இருந்ததில்லை. ஆனால்இ எனது ஐய்யாவுக்கும்இ சம்பந்தருக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம்இ சம்பந்தர் வயதில் கூடியவர்.

இரண்டாவதுஇ பயத்தினால் வருவதுஇ நாங்கள் கேட்கக் கூடாததைக் கேட்டுஇ சிங்களவர்களைக் கோபப்படுத்திவிட்டோமென்றால்இ அவர்கள் விஸ்வரூபம் எடுத்து எங்கே மீண்டும் எங்களை அழித்துவிடுவார்களோ என்கிற நியாயமான (?!) பயத்தினால் வரும்இ இயல்பான தாழ்வுமனப்பான்மை. இங்கே மகிந்த சேருடன் அமர்ந்து சம்பந்தன் பேசும் அழகிலேயே தெரிகிறதுஇ யார் சொல்கிறவர்இ யார் செவிமடுக்கிறவர் என்பது. மகிந்த தலை நிமிர்ந்துஇ கடுமையான முகத்துடன்இ ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருப்பதைஇ சம்பந்தர் தலை தாழ்ந்துஇ பயத்துடன் ஆமோதிப்பதுபோலத்தான் தெரிகிறது.

இவ்விரண்டில் எது நடந்திருந்தாலும்இ எமக்கு நண்மை ஏதும் வரப்போவதில்லை.

ஆனால் ஒரு கேள்விஇ சிங்களவன் சீனனின் பணபலத்தோடும்இ ஆயுத பலத்தோடும்இ சர்வதேச அழுத்தங்களினிலிருந்து தப்புவதற்கு அவர்கள் கொடுத்த ஆதரவினாலும் தமிழர்களை வென்றுஇ இன்று சீனாவின் 91 ஆவது ராணுவ ஆண்டில் கலந்துகொள்கிறான். இதில்இ சம்பந்தன் ஐயா ஏன் கலந்துகொண்டார்? எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையிலா? ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த போரின் கதாநாயகர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில்இ ஐய்யாவுக்கு என்ன வேலை? சும்மா ஒரு பொதறிவுக்காகக் கேட்கிறன் ஆரும் பிழையா என்னை நினைக்க வேண்டாம். 

  • தொடங்கியவர்

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த

mahinda-sampanthan-gota-1-300x200.jpgதாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில், நேற்று மாலை வரவேற்பு விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன பிரதம விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில், மகிந்த ராஜாபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன், கோத்தாபய ராஜபக்ச, சீனத் தூதுவர் செங் ஷியுவான், கபில வைத்தியரத்ன உள்ளிட்டோர் அருகருகே அமர்ந்திருந்து நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்சவும், இரா.சம்பந்தனும், கோத்தாபய ராஜபக்ச அருகில் இருக்கும் போது, தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர்.

mahinda-sampanthan-gota-1.jpg

mahinda-sampanthan-gota-2.jpgmahinda-sampanthan-gota-3.jpgmahinda-sampanthan-gota-4.jpgஇந்தச் சந்திப்பு குறித்து யாழ்ப்பாண நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச-

“சம்பந்தனிடம் விரிவான பேச்சுக்களை நடத்தினேன். எனது ஆட்சியின் போது சீனாவிடம் அதிக கன்களை பெற்று , நாட்டை கடன்சுமைக்குள் தள்ளி விட்டதாக, தற்போதைய ஆட்சியாளர்களுடன் இணைந்து அவரும் குற்றம்சாட்டி வருகிறார்.

ஆனால் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே அதிக கடனை பெற்றேன், இப்போது அந்த அபிவிருத்தியும் தடைப்பட்டு விட்டது, இதனை சுட்டிக்காட்ட தவறிவிட்டீர்கள் என்று அவரிடம் கூறினேன்.

நாம் அதிகாரத்துக்கு வந்ததும், எங்களுடன் பேசித் தீர்க்க நீங்கள் முன்வர வேண்டும். எங்களுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும். வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், தமிழ் மக்களைத் தவறான பாதைக்கு கொண்டு சென்றால், உங்கள்  மத்தியில் புதிய புதிய அரசியல் சக்திகள் உருவாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அவருக்கு விளக்கினேன்.

பின்னர் அதனால் கவலைப்பட வேண்டியிருக்கும் என்றும் அவருக்கு கூறினேன்.

சம்பந்தனையும் கோத்தாபய ராஜபக்சவையும் அருகருகே அமர்த்திப் பேசி, இணக்கப்பாடான சூழலுக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் தாம் நீண்ட நேரம் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியதாக இரா.சம்பந்தனும், யாழ். நாளிதழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/07/24/news/32046

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

எனக்கு சம்பந்தர் ஐய்யாவைப் பார்க்கும் பொழுது இரு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றனர்.

ஒன்றுஇ அவர் அரைத்தூக்கத்தில் எப்போதும் இருக்கிறார் என்பது. ஏனென்றால் தலை சாதுவாகத் தொங்கியபடிஇ கண்கள் கீழிறங்கிஇ பாதி மூடப்பட்டுஇ வாயில் முனுமுனுப்பது போல எப்போதும் ஒருக்கிறார். ஆகவே . ஆகவே தனக்கு முன்னால் அமர்ந்ஹ்டிருந்து தன்னுடன் பேசுபவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு பாதிநேரத்தில் தெரியாமல்க் கூட இருக்கலாம். எனது ஐய்யாவும் (அம்மாவின் தகப்பனார்)இ ட்சாய்மனைக் கதிரையில் தூங்கியபடியே எங்களுடன் பேசுவார். நாங்கள் பேசுவது அவருக்குப் புரியாதுஇ அவர் பேசுவதிலும் எந்த அர்த்தமும் இருந்ததில்லை. ஆனால்இ எனது ஐய்யாவுக்கும்இ சம்பந்தருக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம்இ சம்பந்தர் வயதில் கூடியவர்.

இரண்டாவதுஇ பயத்தினால் வருவதுஇ நாங்கள் கேட்கக் கூடாததைக் கேட்டுஇ சிங்களவர்களைக் கோபப்படுத்திவிட்டோமென்றால்இ அவர்கள் விஸ்வரூபம் எடுத்து எங்கே மீண்டும் எங்களை அழித்துவிடுவார்களோ என்கிற நியாயமான (?!) பயத்தினால் வரும்இ இயல்பான தாழ்வுமனப்பான்மை. இங்கே மகிந்த சேருடன் அமர்ந்து சம்பந்தன் பேசும் அழகிலேயே தெரிகிறதுஇ யார் சொல்கிறவர்இ யார் செவிமடுக்கிறவர் என்பது. மகிந்த தலை நிமிர்ந்துஇ கடுமையான முகத்துடன்இ ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருப்பதைஇ சம்பந்தர் தலை தாழ்ந்துஇ பயத்துடன் ஆமோதிப்பதுபோலத்தான் தெரிகிறது.

இவ்விரண்டில் எது நடந்திருந்தாலும்இ எமக்கு நண்மை ஏதும் வரப்போவதில்லை.

ஆனால் ஒரு கேள்விஇ சிங்களவன் சீனனின் பணபலத்தோடும்இ ஆயுத பலத்தோடும்இ சர்வதேச அழுத்தங்களினிலிருந்து தப்புவதற்கு அவர்கள் கொடுத்த ஆதரவினாலும் தமிழர்களை வென்றுஇ இன்று சீனாவின் 91 ஆவது ராணுவ ஆண்டில் கலந்துகொள்கிறான். இதில்இ சம்பந்தன் ஐயா ஏன் கலந்துகொண்டார்? எதிர்கட்சித் தலைவர் என்கிற முறையிலா? ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த போரின் கதாநாயகர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில்இ ஐய்யாவுக்கு என்ன வேலை? சும்மா ஒரு பொதறிவுக்காகக் கேட்கிறன் ஆரும் பிழையா என்னை நினைக்க வேண்டாம். 

எங்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ....நிரந்தரமாகக் குடி கொண்டு விட்டதென்பது....மிகவும் வருத்தத்துக்குரியது!

பொதுவாக நான் ஏதாவது சொல்ல வெளிக்கிட்டால்......சிங்களவனின்ர 'காய் நகர்த்தலைப் பாத்தியா' எண்டு சொல்லி...நம்ம சனமே நம்மை..மடக்கிப் போட்ட சந்தர்ப்பங்கள்...மிகவும் அதிகம்!

அதுக்காகப் பல நேரங்களில்....மௌனமாகக் கடந்து போவதே...இப்போதெல்லாம் எனது வழக்கமாகி விட்டது!

நீங்களும்...அவ்வாறான மன நிலைக்கு வந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...ரகு!

எனக்குத் தெரிந்த சிங்களவன்...( பல மட்டங்களில்...பலருடன் பழகிய அனுபவம் உண்டு) எம்மைப் போலவே மிகவும் சாதாரணமானவன்!

அதனால் தான்...அரசியல் வாதிகள்....அவர்களுக்குப் புலிப்பாசாங்கு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!

சம்பந்தனிடம்....எமது...பிரச்சனையை...முன்னெடுக்கும் ஆளுமையே..இல்லாதபோது...எவ்வாறு...அவரோ...அவரது...கட்சியோ எமக்குத் தீர்வைப் பெற்றுத் தருமென்று....நீங்கள் நம்புகிறீர்கள்?

தனது ஸ்தானத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவே...அவர் இந்த அழைப்பை...ஏற்றுப் போயிருக்கிறார் என்பது எனது அனுமானம்!

உலகத்தில் மூளை....கூடிய இனம்....சீன இனம்!

கொஞ்சம் கொஞ்சமாக  ஆரம்பித்து....காலித் துறைமுகத்தையே...தொண்ணூற்றி ஒன்பது...வருசக் குத்தைகைக்கு...எடுத்துப் போட்டு நிக்குது..சீனா!

அது மட்டுமன்றி...கந்தளாயில்...கரும்பு வளர்க்கும்...ஒப்பந்தமும்...இரகசியமாக முடிந்து விட்டது...என்று கேள்வி!

இங்கெல்லாம்...எமது மக்களோ...சிங்கள மக்களோ...வேலை செய்ய முடியாது! சீனாவில்...இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களே வேலை செய்வார்கள்!

சீனா...ஒவ்வொன்றாக...எல்லாவற்றையும்....எடுக்கக்...கையாலாகாத...இந்தியா...வீணி வடிச்சுக்கொண்டிருக்க வேண்டியது தான்...இன்றைய நிலை!

சீனாவின் தேசிய கீதம் இசைக்குமளவுக்கு.....நக்குண்டார்...நாவிழந்தார் ...நிலையில்...நிற்கிறது...சிங்களம் என்று தான் நான் கருதுகின்றேன்!

சிங்களத்தின் சரிவானது....ஏற்கனவே....ஆரம்பித்து விட்டது!

இனி...அதனது ....பயணம்....பாதாளத்தை நோக்கியே இருக்கும்! சிங்களப் பிக்குகளின்....ஆதிக்கமும்...தானாகவே முடிவுக்கு வரும் என நினைக்கிறேன்!

பொறுத்திருந்து பாருங்கள்!

china-1-1024x682.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.china-1-1024x682.jpg

இதன்போது, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் நேற்று மாலை கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு வருகை தந்தபோதே இவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆகியோர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://thinakkural.lk/article/15460

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ragunathan said:

ஒன்றுஇ அவர் அரைத்தூக்கத்தில் எப்போதும் இருக்கிறார் என்பது. ஏனென்றால் தலை சாதுவாகத் தொங்கியபடிஇ கண்கள் கீழிறங்கிஇ பாதி மூடப்பட்டுஇ வாயில் முனுமுனுப்பது போல எப்போதும் ஒருக்கிறார். ஆகவே . ஆகவே தனக்கு முன்னால் அமர்ந்ஹ்டிருந்து தன்னுடன் பேசுபவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கு பாதிநேரத்தில் தெரியாமல்க் கூட இருக்கலாம். எனது ஐய்யாவும் (அம்மாவின் தகப்பனார்)இ ட்சாய்மனைக் கதிரையில் தூங்கியபடியே எங்களுடன் பேசுவார். நாங்கள் பேசுவது அவருக்குப் புரியாதுஇ அவர் பேசுவதிலும் எந்த அர்த்தமும் இருந்ததில்லை. ஆனால்இ எனது ஐய்யாவுக்கும்இ சம்பந்தருக்கும் இடையில் உள்ள ஒரே வித்தியாசம்இ சம்பந்தர் வயதில் கூடியவர்.

இதெல்லாம் தமிழ் சனத்தை ஏமாத்தற வேலையுங்க தேர்தல் வருது இந்த தீர்வு இந்ததீர்வு வருது என்று புலுடா காட்டி கொண்டு வந்து சரியா தேர்தல் நேரத்தில் "நாங்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் தீர்வை நோக்கி நகர்துள்ளோம் இந்த நேரத்தில் தமிழ் மக்களாகிய நீங்கள் எங்களை  மீண்டும் ஓட்டு போட்டு பதவிக்கு கொண்டுவந்து விடனும் இல்லயோ இனி தமிழ் மக்ளுக்கு தீர்வு என்பதே கிடையாது" என்று அடிப்பினம் அப்படி வருவது போல் பெரிய பெரிய சட்ட புத்தக கட்டுடன் இறுக்கமான முகத்துடன் இந்த சம் சும் கூட்டம் ஓடுபட்டு திரிவினம் பாருங்க அத்துடன் சும் எதோ வெட்டி விழுத்தினது போல் பிச்சைக்கு சிங்களத்தால் ஒன்று இரண்டு தமிழருக்கு நன்மை தரும் சம்பன்வங்கள் மேடை போட்டு குடுப்பினம் பிறகென்ன தேர்தலில் வெண்டபின் பழையபடி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க உலகம் முழுக்க பறப்பினம் ஒட்டு போட்ட தமிழ் சனம் ஓட்டுக்குள்ளால் ஆவா குரூப் இறங்குதோ என்று பழையபடி பார்க்க வேண்டியதுதான் பகலில் தேர் யார் இழுப்பது என்று தின்றது செமியாமல் கத்திவிட்டு தவளை போல் இருக்க வேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புங்கையூரன் said:

சீனாவின் தேசிய கீதம் இசைக்குமளவுக்கு.....நக்குண்டார்...நாவிழந்தார் ...நிலையில்...நிற்கிறது...சிங்களம் என்று தான் நான் கருதுகின்றேன்!

சிங்களத்தின் சரிவானது....ஏற்கனவே....ஆரம்பித்து விட்டது!

அதிலும் கவனித்தீர்கள் என்றால் முதலில் சீன தேசியகீதமும் இரண்டாவதாக இலங்கை தேசிய கீதமும் இசைக்கப்பட்டது என்று இண்டைக்கு சக்தி டீ வி சொல்லிச்சு ....அகலக்கால் போட்டு படுத்துவிட்டான் சீனன் இனி அழுது புரண்டாலும் விமோசனம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதிலும் கவனித்தீர்கள் என்றால் முதலில் சீன தேசியகீதமும் இரண்டாவதாக இலங்கை தேசிய கீதமும் இசைக்கப்பட்டது என்று இண்டைக்கு சக்தி டீ வி சொல்லிச்சு ....அகலக்கால் போட்டு படுத்துவிட்டான் சீனன் இனி அழுது புரண்டாலும் விமோசனம் இல்லை 

இலங்கையில் மட்டுமல்ல.....அவுசில் அருகிலிருக்கும்...பப்புவா நியுகினி....பிஜி...போன்ற நாடுகள் தொடங்கி...கானா...நைஜீரியா....சியராலியோன் என்று சீனாவின் பிடி...விரிந்து கொண்டே செல்கின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.