Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Picture2.jpg

csm_4_zu_3_teaser_Huawei_P20_Pro_Twiligh

 

ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்.. :)

கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என்  சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..:(

கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. !

உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.

மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..!

வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..!

உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.

40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..

மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..

என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..!

அதாங்க.. வாங்கிவிட்டேன்..!!  :grin:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

huawei_mate_rs_black.jpg   PORSCHE-DESIGN-HUAWEI-MATE-RS.jpg

 

 

ஹூவாய் (Huawei) கைப்பேசிகள் விற்பனை சந்தைக்கு இப்படியும் ஒரு மாடல் வந்துள்ளது..

6 ஜிபி நினைவுத் திறன், 256 ஜிபி சேமிப்பு கொள்ளளவு, 40 மெகா பிக்ஸலுடன் மூன்று லைக்கா(Leica) காமிரா, வயர்லெஸ் சார்ஜர், டால்பி அட்மாஸ் ஒலித்திறன், இரண்டு வகையில் கைரேகை அடயாளம் மூலம் உட்புகும் வசதி இன்ன பிற சமீபத்திய அம்சங்கள்..

விலையைக் கேட்டால் மயங்கிவிடுவீர்கள்.. ஏறக்குறைய இந்திய ரூபாய்கள் ஒரு லட்சத்து நாற்பதாயிரம்(Rs.1,40,000) மட்டுமே..

அமீரகத்தின் விலையில் Dhs.5,999/- திர்காம்..

இக்கைப்பேசி பக்கம் போகமுடியுமா..?

இதிலுள்ள பெரும்பாலான அம்சங்கள் நான் சென்ற மாதம் வாங்கிய கைப்பேசியிலும் உள்ளது..

இம்மாடலிலுள்ள சில கூடுதல் வசதிகள்:  538(PPI) பிபிஐ டிஸ்ப்ளே, 256 ஜி.பி சேமிப்பு, வயர்லெஸ் சார்ஜர், இரண்டு வகை கைரேகை அடையாள முறை.. மற்றவை ஒரே அம்சங்கள் தான்..

 

நிறுவன காணொளியில் பார்த்தால் விளங்கும்..

https://consumer.huawei.com/en/phones/porsche-design-mate-rs/

 

 

Edited by ராசவன்னியன்

  • 3 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு வாரங்களுக்கு முன் சென்னை, மதுரை, திருநெல்வேலி போனேனா..! 😍

அதிர்ச்சியாக எனக்கு ஐபோன் 13ம் ஆப்பிள் 7 கைக்கடிகாரமும் பிறந்த நாள் பரிசுகளாக என் வாரிசுகளிடமிருந்து கிட்டியது..🤫

இதில் என்ன குழப்பம் என்றால் இதுநாள் வரை Huawei P20 Pro ஆன்ராய்ட் கைப்பேசியே உபயோகித்து வந்த நான், இன்னும் ஆப்பிளுக்கு மாற இயலவில்லை..!

csm_4_zu_3_teaser_Huawei_P20_Pro_Twilight_small_533e6a9309.jpg

ஒரே குழப்பமாக உள்ளது..

ஆகவே  Huawei P20 கைப்பேசியை அதிகமாகவும், ஆப்பிள் 13 கைப்பேசியை குறைவாகவும் பயன்படுத்தி வருகிறேன்.

iPhone_13_Mini_(9)_1633111760137_1633111770414.jpg   MKU93_VW_PF+watch-41-alum-starlight-cell-7s_VW_PF_WF_SI?wid=2000&hei=2000&fmt=png-alpha&.v=1632171032000,1631661274000

வெகுநாள் பழகிய ஆன்ட்ராய்ட் என்னை பொறுத்தவரையில் இன்னமும் கையாள்வதற்கு வசதியாக உள்ளது.

ஆப்பிளுக்கு மாற இனிமேல்தான் பழக வேணும்.. ☹️

நானும் ஒரு ஆன்ட்ராய்ட் பயனாளி. தற்போது Samsung s21 கைபேசியும் Samsung watch 4 வும் பயனபடுத்தி வருகின்றேன் (என்னை நான் ஒரு Anti Apple product person என்று சொல்வதுண்டு) ஆனால் மனைவியும் பிள்ளைகளும் எப்பவும் அப்பிள் போன் தான் பயன்படுத்துகின்றனர். எப்பவாவது அவர்களின் போனை நான் பயனபடுத்த வேண்டிய நிலை வரும் போது ஒவ்வொரு முறையும் வெறுத்து விடுவேன். 

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆன்ட்ராய்ட் எப்பவும் பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப தன் அம்சங்களை  (Features) கொடுக்கும். அப்பிள் தன் அம்சங்களுக்கு ஏற்ப பயனாளரை மாறச் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கி நடவடிக்கைகள், பணப்பரிமாற்றங்களுக்கு ஐபோனையும்  வழக்கமான ஏனைய பயன்பாடுகளுக்கு அன்ரொயிட்  போனையும் பயன்படுத்துவது நல்லது.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இரு வாரங்களுக்கு முன் சென்னை, மதுரை, திருநெல்வேலி போனேனா..! 😍

அதிர்ச்சியாக எனக்கு ஐபோன் 13ம் ஆப்பிள் 7 கைக்கடிகாரமும் பிறந்த நாள் பரிசுகளாக என் வாரிசுகளிடமிருந்து கிட்டியது

என்னையா
அமீரகத்தில் வாங்க முயன்றதை வாரிசுகள் எப்படியோ அறிந்து(மனைவியிடம் மூக்கால் அழும்போது ஒட்டுக் கேட்டிருப்பார்களோ?)பிறந்தநாள் பரிசாக தந்திருக்கிறார்கள்.

வாரிசுகளின் மனதைப் புண்படுத்தாமல் பேசாமல் ஐபோனையே பாவியுங்கள்.

ஐபோன் பாவிக்கவில்லை என்றால் கைக்கடிகாரமும் வேஸ்ட்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது பழைய ஆன்ட்ராய்ட் கைப்பேசியிலிருந்து (HUAWEI P20 Pro) புது ஐபோனிற்கு(iPhone 13) வாட்ஸ்அப் (WhatsApp)தரவுகளை பலவிதங்களிலும் முயன்றும் பரிமாற்றம் (Transfer) செய்ய இயலவில்லை.

முடிவில் இணையத்தில் மென்பொருளை(Dr.Fone) காசுகொடுத்து வாங்கி மாற்றிக்கொண்டேன்.

அதிலும் பாருங்கள், ஐக்ளவுடில்(iCloud) இலவசமாக 5ஜிபி(5GB) தான் நாம் சேமிக்க முடியும். அதற்கு மேல் எந்த தரவுகளையும் சேமிக்க மாதாந்தம் வாடகை செலுத்த வேண்டுமாம்.

இதெனப்பு கொடுமையா இருக்கு..? 😪

ஆன்ட்ராய்ட் கைப்பேசியில், ஐக்ளவுடை விட மிக அதிகமான தரவுகளை கூகிள் ட்ரைவில்(Google Drive) சேமிக்க இயலுமே..!

யானையை வாங்கி தீனி போடுவது போல ஐபோன் வாங்கி செலவு செய்ய வேண்டியிருக்கு..!

memees.php?w=650&img=c2FudGhhbmFtL3NhbnRoYW5hbS1jcml0aWNpc2UtbWFub2JhbGEtZmFjZWJvb2stMjAxNjA0MTIxOTE4NDguanBn

"இதுக்கு பருத்தி மூட்டை கொடவுனிலேயே இருந்திருக்கலாம்..!!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைப்பேசிகளில்(Android & iPhone) வரும் பிரச்சினைகளை திருத்த, இந்த இணையத்தில் மென்பொருள்கள் உள்ளன. (Paid software)

https://drfone.wondershare.com/

காசு கட்டி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நான் இதிலுள்ள வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான மென்பொருளை வாங்கி, தரவுகளை என் புது ஐபோனிற்கு மாற்றிக்கொண்டேன். 

யாழ்கள உறவுகளுக்கு இந்த இணைப்பு பயன்படலாம். (May be).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.