Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கில் முகாம்களை மூடமாட்டோம் - இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம்

Featured Replies

வடக்கு கிழக்கில் முகாம்களை  மூடமாட்டோம் - இலங்கைஇராணுவ தளபதி மீண்டும் திட்டவட்டம்

இலங்கை இராணுவம் வடகிழக்கில் உள்ள தனது முகாம்களை மூடாது என தெரிவித்துள்ள இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க எனினும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  இராணுவம் நிலை கொண்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை குறைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குகிழக்கில் நாங்கள் 522 ஏக்கர் நிலங்களை விடுவிக்க தயாராகவுள்ளோம்,எனினும் இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு முதல் நாங்கள் எங்களை உரிய விதத்தில் தயார்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிற்கு உட்கட்டுமான தேவைகள் உள்ளன இதன் காரணமாக நாங்கள் வேறு இடத்திற்கு செல்வது என்றால் படையினர் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கான இடங்களை நாங்கள் அமைக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Untitled-1-96.jpg

இதன் காரணமாக நான் அரசாங்கத்திடமிருந்து நிதியை கோரியுள்ளேன் எங்களிற்கு 800 மில்லியன் தேவைப்படுகின்றது இதில் 100 மில்லியன் ஏற்கெனவே கிடைத்துள்ளது எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் கோரியுள்ள முழுமையான நிதியை அரசாங்கம் இன்று தந்தால் கூட படையினரை வேறு இடத்தில் தங்கவைப்பதற்கான கட்டிடங்களை அமைப்பதற்கு எனக்கு ஐந்து மாதங்கள் பிடிக்கும் எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் நாங்கள் கோரிய நிதி எங்களிற்கு கிடைத்ததால் எங்கள் படையினர் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நான் உறுதிசெய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யூலை மாத இறுதிவரை இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் 65,000 ஏக்கர் நிலங்களை விடுவித்துள்ளது, தற்போது படையினர் சுமார் 19,000 ஏக்கர் நிலங்களில் நிலை கொண்டுள்ளனர்,வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர். கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்தில் படையினர் நிலை கொண்டுள்ளனர் எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் 2621 ஏக்கர் நிலம் மாத்திரமே தனியாரிற்கு சொந்தமானது ஏனைய நிலங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களிற்கு சொந்தமான தனியார் நிலங்களை வழங்குவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் காரணமாக தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது,எங்கள் பிரசன்னம் தொடரும் ஆனால் நாங்கள் நிலைகொண்டுள்ள படையினரின் பிரசன்னத்தை குறைத்துகொண்டு நிலங்களை விடுவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் நாங்கள் நிலை கொண்டுள்ளமைக்கு அங்கு பிரச்சினைகள் காணப்பட்டதே காரணம்,யுத்தம் முடிவடைந்து  ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிகளை பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/38518

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வடக்கில் நாங்கள் நிலை கொண்டுள்ளமைக்கு அங்கு பிரச்சினைகள் காணப்பட்டதே காரணம்,யுத்தம் முடிவடைந்து  ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் காவல்துறையினர் அந்த பகுதிகளை பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒருத்தருக்கும் விளங்கவில்லை இவ்வளவு காசை சிலவளிச்சு அங்கு இருந்து என்ன செய்கினம் என்று ?.....................

கொலை, களவு, கொள்ளை, கஞ்சா , தண்ணி ,ஆவா கூட்டம் ,என்று வரிசையிலை வடகிழக்கில் பெருகுது கொஞ்சம் விளக்கமாய் என்ன புடுகின்கொண்டு இருகிரியல் என்று சொன்னால் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

மூட விட்டுறுவமா. நம்மள மீறி மூட ஏலுமா?

முடிஞ்சா, மூடிக்காட்டுங்க பாரப்பம்.... ?

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் என்பது சிங்களப் பேரினவாதம் நன்றாகத் தீனி போட்டு வளர்த்த வேட்டை நாய். அதன் முக்கிய தொழிலே தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும்தான் என்பது வெள்ளிடைமலை.

சிங்களம் ஒருபோதுமே தனது வேட்டை நாய்களை தமிழர் பகுதிகளிலிருந்து மீள் அழைக்கப்போவதில்லை.

தமிழர் தாயகம் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பிற்கும் , சிங்களப் பேரினவாதத்தின் தமிழர் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைக்கும் வேட்டை நாய்கள் அங்கே நிலை கொள்வது அவசியம்.

தமது தொடர் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் தமிழினம் மீளவும் எழுச்சிகொள்ளாமல் பார்த்துக்கொள்வதற்கும், அப்படி எத்தனித்தால் 2009 முள்ளிவாய்க்காலை நினைவூட்டவும் இந்த ஆக்கிரமிப்பு அவசியமாகிறது.

அத்துடன், தொடர்ந்தும் நரமாமிச வேட்டையாடிய, லட்சக்கணக்கான கொலைகளை அரங்கேற்றிய வேட்டை நாய்களை தூரத்தே வைத்திருப்பதும் சிங்களத்திற்குத் தேவையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனம்.

அசைக்கமுடியாத கோட்டை, கொத்தளம் கட்டி யாண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அசைக்கப்பட்டார்கள்.

கோட்டையே தேவையில்லை என்று ஆண்ட

பிரிட்டிஸ்காரணையும் அசைக்க கிற்லர் வரவில்லையா? 

உலகத்தையே கட்டியாண்டவர்கள் நாட்டுக்குள்ளும் விவாகரத்து கோசம் வந்ததே.

நம்பிக்கையுடன் இருங்கள். நிலைமை மாறும் ஒருநாள். அதுவே நிதர்சனம்.?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மூடனும். அமெரிக்கன் சீனன் ஹிந்தியன்.. பாகிஸ்தானி வந்து குந்த இடம் வேணும் தானே. பிடிச்சு வைச்சுங்க. ?

காணி இராணுவத்திடம் இருப்பது தான் தமிழன் நிலத்துக்கு பாதுகாப்பு . ஏன் என்றால்  இராணுவத்திடம்னிருக்கும் நிலத்தை சர்வதேச அரசியல் நிலைமைகள் எமக்கு சாதகமாக வரும் போது அதை மீள பெற்று கொள்ளலாம், ஆனால் அந்த நிலம் உரிமையாளர்களிடம் சென்றால் அதை அரேபிய வதேறிகளுக்கு வித்து போட்டு  அசைலம் தான் எங்கட சனம் அடிக்கும்.

இப்படி தான் மயிலிட்டியை விடுவித்த்கு இப்பொழுது எல்லம் அவர்களுக்கு வித்தாச்சு.

இப்ப பலாலில சர்வதேச விமான நிலையம் வர போகுதாம்,அப்ப இனியென்ன  அதை சூழவுள்ள காணிகளும் உரிமையாளரை புலம்பெயர் நாட்டிலும் தேடி சென்று நல்ல விலை கொடுத்து வாங்கப்படும். கட்டார் மற்றும் சவுதி அரசாங்கங்கள் நல்ல உதவியாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.