Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர்: விசாரணை ஆரம்பம்

Featured Replies

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினர்: விசாரணை ஆரம்பம்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், அங்கு அவரிடம் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்றையதினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் அவரது இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவு தீர்மானித்தது.

கீத் நோயார் தாக்குதலுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இரவு கீத் நோயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர உட்பட இராணுவ வீரர்கள் 8 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/முன்னாள்-ஜனாதிபதியின்-இல/

  • தொடங்கியவர்

சி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த

 

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுவினர்  வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

mahinda.jpg

இதற்கிணங்க குற்றபுலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 

சி.ஐ.டி.யினர் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டிருந்த வேளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38646

  • தொடங்கியவர்

கீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….

mahinda1.jpg?resize=550%2C366

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று (17.08.18) முன்னாள் ஜனாதிபதியிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இதுதொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் விசாரணையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, ஐவரடங்கிய குற்றபுலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர், ஊடகவியலாளர் கீத் நொயர் தொடர்பில் விசாரித்தார்கள் அந்த சம்பவம் தொடர்பில் தற்போது தனக்கு நினைவில் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் அரசியல் தேவைக்கருதியே மேற்கொள்ளப்படுகின்றன.

 

அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமே எனக் குறிப்பட்ட மகிந்த, தற்போதைய கருஜயசூரிய தனக்கு இரவு 11.20 அளவில் தொலைபேசி அழைப்பை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தனக்கு அது தொடர்பில் நினைவில்லை எனவும், இவ்வாறான விசாரணைகளுக்கு முகம் கொடுப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

protest.jpg?resize=650%2C433

இதே வேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்று அந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

http://globaltamilnews.net/2018/91763/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

கீத் நொயர் தாக்கப்பட்டமை குறித்த விடயங்கள், நினைவில் இல்லை அழிந்து போயின….

mahinda1.jpg?resize=550%2C366

ஊடகவியலாளர் கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களே!   இந்த மனுசனிட்டைப்போய் முள்ளிவாய்க்கால் போர் குற்ற விசாரணை நடத்தேலுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

மக்களே!   இந்த மனுசனிட்டைப்போய் முள்ளிவாய்க்கால் போர் குற்ற விசாரணை நடத்தேலுமா? 

Bildergebnis für mahintha sampanthan sumanthiran

சம்பந்தனும், சுமந்திரனும்  நம்புகிறார்கள்.
ஹ்ம்ம்... அது, எங்கள் தலை விதி. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ஒரே பார்வையில் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மகிந்தவின் வாக்குமூலமும்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

SB-Dissanayake-and-Mahinda.jpg?resize=80

 

மூளையில் அறிவு இருப்பவர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுத்  திணைக்கள அதிகாரிகளை அனுப்பி வைக்க மாட்டார் – SB..

மூளையில் கொஞ்சம் அறிவு இருக்கும் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சாட்சியங்களை பெற அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அனுப்பி வைக்க மாட்டார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியது, முன்னாள் ஜனாதிபதி அல்ல. இதனால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து வாக்குமூலம் பெறுவது என்பது கேலிக்குரியது. இது ஒரு நாடகம், இதற்கான பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுதியுள்ளார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மகிந்த வாக்குமூலம் ஒன்றை பெற்ற பின்னரே அரசாங்கம்  மூன்றாண்டு நிறைவை கொண்டாடுகிறது…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்ற பின்னரே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தனது மூன்றாண்டை கொண்டாட முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.  வீரக்கொட்டிய மெதமுலன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கி வருகிறது. நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளது. தேசிய வளங்களை விற்பனை செய்யவதை மறைக்க முயற்சித்து வருகிறது. ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டாவது ஆண்டை கொண்டாடியது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று தனது மூன்றாவது ஆண்டை கொண்டாடுகிறது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் பொய்யான நாடகங்களை அரங்கேற்றி, ஊடக கண்காட்சிகளை நடத்தி வந்ததாகவும் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின் நண்பரே அன்றி பகைவர் அல்ல ….

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின் நண்பரே அன்றி பகைவர் அல்ல எனவும் இது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுக்கொள்வது முற்றிலும் அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்காக எதனையும் செய்ய முடியாத இந்த எமனாட்சி (நல்லாட்சி) அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாக பழிவாங்கியே தனது மூன்றாவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க மைத்திரி மற்றும் ரணில் ஆகியோரின் கால்கள் நடுங்க தொடங்கியுள்ளன. எவ்வாறான அரசியல் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டாலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் மகிந்த தலைமையில் மக்கள் சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கீத் நொயார் விடுதலையாகி  சென்றாராம். விடுதலைப் பெற்றுச் செல்வது தவறா?

கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தன்னிடம் வாக்குமூலம் பெற்றமையானது முற்றிரும் பழிவாங்கும் அரசியல் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான அறியாமல், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தன்னை சந்தித்து வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது, இதனால், அரசாங்கத்தின பிரதானிகளின் தேவைக்கு அமையவே தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5 அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்த வந்திருந்தனர். மூன்று மணி நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கரு ஜயசூரிய தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினாரா என்று கேட்டனர். அவர் பேசிய பின்னர், கீத் நொயர் விடுதலை செய்யப்பட்டார என்று கேட்டனர். கரு ஜயசூரிய பேசினாரா என்பது எனக்கு நினைவில் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை பேர் பேசுகின்றனர்.

இவை அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வேலைகள். இது தான் நாட்டின் நிலைமை. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களின் தன்மை. அரசாங்கத்தின் பிரதானிகள் அறியாது சீ.ஐ.டியினர் என்னிடம் வர முடியாது. அவர்களுக்கு இப்படி நடக்காது என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

இது பழிவாங்கல். இப்படியான பழிவாங்கல்கள், மனதை நோகடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. நாங்கள் தாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது.அதிகாரிகளை விமர்சித்து பத்திரிகைகளில் ஏதாவது வெளிவந்ததா என அதிகாரிகள் என்னிடம் கேட்கின்றனர்.

இவை எந்த நாளும் நடப்பவை. கரு ஜயசூரிய தொலைபேசியில் என்னுடன் பேசிய பின்னர், கீத் நொயார் விடுதலையாகி சென்றாராம். விடுதலைப் பெற்று செல்வது தவறா?. எப்படி இருந்தாலும் இதில் நல்லதும் இருந்தது. கரு ஜயசூரிய என்னிடம் இரவு 11.20 அளவில் இதனை கூறினராம். இதன் மூலம் இரவு 10 மணிக்கு நான் உறங்க செல்வதில்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/91828/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.