Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் – சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம்!!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மீண்டும் – சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம்!!

 

 

61769_10151468395917429_2060002711_n.jpg

யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த சிங்­கள மகா வித்­தி­யா­ல­யத்தை மீண்­டும் ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

இது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக எதிர்­வ­ரும் 26ஆம் திகதி ஞாயிற்­றுக் கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்­பா­ணம் பழைய பூங்­கா­வில், சிங்­கள மகா­வித்­தி­யா­ல­யத்­தின் பழைய மாண­வர் மற்­றும் ஆசி­ரி­யர் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

53 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம் யாழ்ப்­பா­ணம் நக­ரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம் இருந்த இடத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் முகாம் தற்­போது அமைக்­கப்­பட்­டுள்­ளது. 1985ஆம் ஆண்டு போர் கார­ண­மாக சிங்­கள மகா­வித்­தி­யா­ல­யம் மூடப்­பட்­டது.

https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணத்தில்-மீண்டும்-சிங்­கள-மகா-வித்­தி­யா­ல­யம்.html

  • தொடங்கியவர்

ஆறு இன மாணவர்களும், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன், கல்வியை கற்றனர்…

Sinhala-maha-vithyalaya1.jpg?resize=800%

வடக்கில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மீண்டும் உருவாக்குவதற்காகவே சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென, அப்பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தனர்.

 

யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (26.08.18) நடைபெற்ற சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின்போதே, அவ்வாறு தெரிவித்தனர்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , சுமார் 30 வருடங்களின் பின்னர், பல மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஒன்று கூடிய சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், தமிழ் , சிங்களம், முஸ்லீம் , போறா , மலே மற்றும் பறங்கியர் என ஆறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளனர். இதன்போது, ஆறு இன மாணவர்களும் கல்வி பயிலும் போது, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன், கல்வியை கற்றனர்.

Sinhala-maha-vithyalaya2.jpg?resize=800%

மாணவ பருவத்தில் இருந்த போது, இன, மத வேறுபாடுகளை தோற்றுவிக்காததுடன், யார் எந்த இனத்தவர்கள் என்று தெரியாத அளவுக்கு இப்பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே, வடக்கு மாகாணத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த, சிங்கள மகா வித்தியாலயம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சிங்கள மகா வித்தியாலயத்தை மீளவும் இயக்குவதற்காக, நோக்கத்துடன் இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசியதை காணமுடியவில்லை.

Sinhala-maha-vithyalaya3.jpg?resize=800%

நல்லிணக்கத்தை உருவாக்க முதன்முதலில் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக முன்னர் இயங்கிய இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், பாடசாலை எரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வந்த போது, பாடசாலையை விட்டு வெளியேறினோம்.

மீண்டும் இப்பாடசாலையை ஆரம்பித்து எமக்குள் இருந்த ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் – சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.

வடக்கிலும் அந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தானாகவே உருவாகும் என தெரிவித்தனர்.

Sinhala-maha-vithyalaya6.jpg?resize=800%Sinhala-maha-vithyalaya5.jpg?resize=800%Sinhala-maha-vithyalaya4.jpg?resize=800%

 

http://globaltamilnews.net/2018/92838/

 

  • தொடங்கியவர்

படைத்தளமும் இயங்கவேண்டும் – சிங்கள பாடசாலையும் தொடங்க வேண்டும்…

 

 

Sinhala-maha-vithyalaya5.jpg?resize=800%

 

சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1956 ஆம் ஆண்டு தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் 1965ஆம் ஆண்டு சிங்கள மகாவித்தியாலயம் யாழில் நிறுவப்பட்டது.

அன்று முதல் 1985ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் யாழில் குறித்த பாடசாலை இயங்கி வந்துள்ளது. 1985ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலை மூடபப்ட்டது. இந்நிலையில் குறித்த பாடசாலை கட்டடத்தில் தற்போது இராணுவத்தினர் தமது 512 படைப்பிரிவின் பாரிய முகாமை அமைத்துள்ளனர்.

தற்போது மீளவும் குறித்த பாடசாலையினை ஆரம்பிக்க வேண்டும் என பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர்.

அந்நிலையில் , சிங்கள மகா வித்தியாலய கட்டத்தில் இயங்கும் இராணுவத்தினரின் 512 படைத்தளத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளீர்களா என பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போது,

இராணுவ முகாமை அகற்றும் சிந்தனை எம்மிடம் இல்லை. எமக்கு இராணுவ முகாம் அவசியம். முதற்கட்டமாக வாடகைக்கு இடத்தினை பெற்று ஆரம்ப பிரிவினை நடாத்தவே எண்ணியுள்ளோம்.

பாடசாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியுடன் பேசி இருந்தோம். அதனை கேட்டு அவர் மிகுந்த சந்தோசம் அடைந்தார். தன்னால் ஆனா உதவிகளையும் தேவைகளையும் வழங்க உடன்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக பாடசாலையை ஆரம்பித்து முன்னேற்றத்தை காட்டிய பின்னர் எமது தேவைகளை கல்வித்திணைக்களத்திடம் கோரி பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/92876/

  • கருத்துக்கள உறவுகள்

சரிதான்...

ஆனால்... வேண்டிய அளவு மாணவர்கள் இல்லாதது தான் பிரச்சனை...

பள்ளிக்கூடம் என்று யானையைக் கட்டி சும்மா தீனி போட ஏலாது...

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய சீக்கிரம் யாழிலும், "மகே அம்மே..!" என்ற குரல் ஒலிக்குமென சொல்லுங்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ராசவன்னியன் said:

கூடிய சீக்கிரம் யாழிலும், "மகே அம்மே..!" என்ற குரல் ஒலிக்குமென சொல்லுங்கள்..! :)

சில விடயங்களில், அவர்கள் விருப்பம் எப்படி இருப்பினும், யதார்த்தம் வேறு.

இவர்கள் பழைய மாணவர்கள் என்கிறார்கள். அவர்களுக்கு ஆசை இருந்தாலும்,

ஒரு நாலு, ஐந்து மாணவர்களுக்காக... பாடசாலை இயக்க முடியாது. அதன் காரணமாக யாழில் சிங்களவர்கள் குடியேத்தவும் முடியாது.

ஒரு விகாரை என்றால்... கோவில் போல... இலகு... நன்கொடைகளை வாங்கலாம்... இதுக்கு முடியாதே.. 

Edited by Nathamuni

பாடசாலையை இழக்கும் மாணவர்கள்-கொழும்பில் திடுக்கிடும் சம்பவம்| திசைகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.