Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது…

Featured Replies

வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது…

 

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலான ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

கடந்த ஆறு மாதக் காலமாக தேடப்பட்டு வந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நேற்றையதினம் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/94318/

  • தொடங்கியவர்

யாழ். குடாநாட்டை அச்சுறுத்திவந்த ஆவாக் குழு உறுப்பினர் கைது!

 

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த கைது இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை பொலிஸார் கடந்த ஆறு மாதக் காலமாக தேடி வந்த நிலையில் நேற்று சிக்கியுள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் இந்த இளைஞனுக்கு தொடர்புள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொக்குவிலில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று வருகை தந்திருந்த போது, ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்;டுள்ளனர்.

http://athavannews.com/யாழ்-மக்களை-அச்சுறுத்தி/

  • தொடங்கியவர்

யாழில், காதலியால் பொலிஸாரின் வலையில் சிக்கினார் ஆவா குழு முக்கிய உறுப்பினர்!

 

யாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

aava_group_person_arrested.jpg

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபரை கடந்த 6 மாத காலமாக பொலிஸார் தேடி வந்துள்ளனர்.

இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது கொக்குவில் பகுதியில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் ரயில்  நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நபர் வருவதை இரகசிய தகவலொன்றின் மூலம் அறிந்து கொண்ட மனிப்பாய் பொலிஸார் விரைவாக செயற்பட்டு இவரை கைது செய்ததுடன் இவரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

http://www.virakesari.lk/article/39783

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை இனிமேல், இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று இழிவுபடுத்தாதீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் நான் இப்படியான குழுக்கள் யாழ் குடாநாட்டில் இயங்குவதைப் பெரிதும் விரும்புகிறேன் அதற்கான காரணம் ஒரு வித பழிவாங்கும் மனப்பான்மைதான் குடாநாட்டில் குழுக்களும் குழுமோதல்களும் வானளாவ வளர்ச்சியுற்று, குடாநாட்டு மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க எனது வாழ்ந்த்துக்கள்.

இதற்காகப் புலம்பெயர்ந்துவாழும் தமிழுறவுகள் தங்கள் தலையாய பங்களிப்ப செய்துதவுவது அவர்களது தலையாய கடமையாகும்.

அந்த நேரத்தில் கூடிக்கும்மாளம் போட்டனீங்களெல்லோ அதுக்கு இன்னும் இருக்கு ஆப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது…

 

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலான ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

கடந்த ஆறு மாதக் காலமாக தேடப்பட்டு வந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நேற்றையதினம் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/94318/

குளோபல் தமிழ் நியூஸுக்கு எதற்கு புகழ் சூட்டுவதென்று தெரியவில்லை ........ இதெல்லாம் ஒரு புலைப்பா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.