Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS

Featured Replies

வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates

2640_thumb.jpg

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

 

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்

 

 


டூயல் சிம்

நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும்.

சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மார்கஸ் பிரவுன்லீ ட்வீட்

ஐபோன் XS மேக்ஸ்:

இதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது.

ஆப்பிள் ஐபோன் XS Max


5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட்  வாட்டர் ப்ரூஃபாக இருக்கும் 

ஐபோன் XS: இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் அழகானது என்கிறார் பில்ஷில்லர்.

 

 

Iphone XS and XS max

ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் XS

அடுத்து ஐபோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.


Apple watch series 4

ஆப்பிள் வாட்ச்:

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

Apple Watch series 4

"நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாடிக்கையாளர்களை மையமாக வைத்தே அனைத்தையும் செயல்படுத்துகிறோம், ஆகவேதான் ஐஒஸ் உலகின் முன்னணி இயங்குதளமாக மட்டுமின்றி தனித்துவமாகவும் இருக்கிறது."

ஜெப் வில்லியம்ஸ் தற்பொழுது மேடையில் தோன்றி ஆப்பிள் வாட்ச்சைப் பற்றிய அறிமுக உரையை வழங்குகிறார்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

முதல் கேட்ஜெட்டாக ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. 


"ஏற்கெனவே உலக அளவில் முன்னிலையில் இருக்கும் ஆப்பிள் வாட்ச்சை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவிருக்கிறோம்."

"ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள்"

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை 
தொடங்கி வைத்தார் 


ஆப்பிள் நிகழ்ச்சி தொடங்கியது.

Apple Event 2018

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது.

புதிய ஐபோன்கள்

6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.

 

 

ஐபோன் XS விலை 999 டாலர்களில் இருந்து தொடங்குகிறது 

ஐபோன் XS Max  விலை 1099 டாலர்களில் இருந்தும், ஐபோன் XR விலை 749 டாலரில் இருந்தும் தொடங்குகிறது

 

https://www.vikatan.com/news/information-technology/136766-apple-event-2018-live-updates.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வாங்கி பாவிச்சு பாருங்கோ .....கொஞ்ச நாளையாலை புதிசாய் எதுவுமே இல்லை எண்டது தெரியும்.:grin:
ஐ போன் XS வைச்சிருக்கிறியள் எண்ட பேர் மட்டுதான் உங்களுக்கு :27_sunglasses:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

சரக்கு தீர்ந்து போச்சுங்கோ!!!

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

அதுதான் உண்மை  இதுக்கு மேல் சரக்கு கிடையாது அவர்களிடம்  பார்ப்பம் இனி நோக்கியா நானோ  சென்சார் உணரிகளுடன் வரும் போனை.

வந்து சக்சஸ் ஆனால் அடுத்து வரும் 10 வருடம்களுக்கு மேல் மறுபடியும் நோக்கியா ராச்சியம் தான் .

Black Berry New phone...?

  • தொடங்கியவர்

அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்

 
அ-அ+

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை மற்றும் விற்பனை சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #iPhoneXS #iPhoneXSMax

 
 
 
 
அதிநவீன அம்சங்களுடன் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் - விலை மற்றும் விற்பனை விவரங்கள்
 
 
 
 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று மாடல்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன், ஆப்பிள் சாதனங்களில் முதல் முறை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் 458PPI சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. 
 
201809130202362995_1_Apple-A12-Bionic._L_styvpf.jpg
 
இந்த டிஸ்ப்ளே டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 19 மற்றும் 120Hz டச்-சென்சிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி டூயல் ஸ்டான்ட்-பை இசிம் மூலம் வழங்கப்படுகிறது. எனினும் சீனாவில் மட்டும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுகிறது.
 
புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதனால் ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் கிடைக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் இருக்கிறது.
 
201809130202362995_2_iPhone-XS-iPhone-Xs-Max._L_styvpf.jpg
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
 
- ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்
- ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர், ஏ12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8
- 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,813) முதல் துவங்குகிறது. ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,001) முதல் துவங்குகிறது.
 
ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
201809130202362995_3_iPhone-XR-Blue-Offcl._L_styvpf.jpg
 
ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
 
- 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்
- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
 
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,860) முதல் துவங்குகிறது. அக்டோபர் 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் ஐபோன் XR இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. #iPhoneXS #iPhoneXSMax

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/13020236/1190985/iPhone-XS-iPhone-XS-Max-iPhone-XR-Specs-Price-Sale.vpf

  • தொடங்கியவர்

ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்: இதய துடிப்பை அறியும் வசதி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள்

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிளின் புதிய தயாரிப்புகள் அறிமுகம்

உலகம் முழுவதுமுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள், பயன்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள், வாட்சை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடக்கும் வருடாந்திர விழாவில் ஆப்பிள் நிறுவனம் தனது திறன்பேசியான ஐபோன், கையடக்ககணினியான ஐபாட், ஸ்மார்ட் வாட்சான ஆப்பிள் வாட்ச் போன்ற பல்வேறு தயாரிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூபர்டினோவில் கட்டப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் புதிய, பிரம்மாண்டமான தலைமையகத்திலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் புதன்கிழமை நள்ளிரவு வரை நடந்த இந்த வருடத்துக்கான தயாரிப்புகளின் அறிமுக கூட்டத்தில் அந்நிறுவனத்தின் புதிய ஐபோன்களான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரியான டிம் குக்கும், அணியினரும் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றின் சிறப்பம்சங்களை விளக்கினர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு புதிய தயாரிப்பு குறித்த முக்கிய தகவல்களை காண்போம்.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைAPPLE Image captionஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பிரபலமான தயாரிப்பாக பொதுவாக ஐபோன்கள் பார்க்கப்பட்டாலும், இந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்மார்ட் வாட்ச்களின் சிறப்பம்சங்களே ஆச்சர்யத்தை அளித்ததாக கருதப்படுகிறது.

40மிமீ, 44 மிமீ ஆகிய இரண்டு அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் திரை அதன் முந்தைய பதிப்புகளை விட பெரியதாகவும், எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

கடந்த மே நடந்த ஆப்பிளின் வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய இயங்குதளமான வாட்ச்ஓஎஸ் 5இல் இது இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த புதிய இயங்குதளத்தை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 (2016), ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 2 மற்றும் முந்தைய வருடம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 பயன்பாட்டாளர்களும் பெறுவார்கள்.

முந்தைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ்களில் அழைப்புக்களை செய்யும்/ ஏற்கும், குறுஞ்செய்தி செய்யும்/ பார்க்கும், மேப்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், ஒருவர் நடக்கும் தொலைவு, இதய இயக்கம், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட உடலியக்கங்களை காண முடிந்த வந்தது.

இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இல் இதுவரை மருத்துவமனைகளில் மட்டுமே காண முடிந்த ஈசிஜி எனப்படும் இதய துடிப்பலை அளவி அறிந்துகொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது இதய துடிப்பில் அசாதாரண நிகழ்வு இருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வசதியும், அவசர உதவியை அழைக்கும் தெரிவும் உள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4இன் ஜிபிஎஸ் பதிப்பு 399 டாலர்களுக்கும், எல்டிஇ பதிப்பு 499 டாலர்களுக்கும் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விற்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்

வாடிக்கையாளர்கள் திருப்தியில் உலகின் முன்னணி திறன்பேசியாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான தயாரிப்பான ஐபோனின் புதிய பதிப்புகளான ஐபோன் 10 எஸ், 10 எஸ் மாக்ஸ், 10 ஆர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பதிப்புகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான பிரத்யேக ஏ12 பயோனிக் என்றழைக்கப்படும் 7 நானோ மீட்டர் அளவே கொண்ட அதிவேக சிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பதிப்புகளை விட 50 சதவீதம் வேகமாகவும் குறைந்த பேட்டரியை பயன்படுத்தும் வகையிலு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்கலான புகைப்படங்களை கூட தெளிவாக்கி பார்க்கும் எச்டிஆர் சென்சார் (உணரி), மேம்படுத்தப்பட்ட பேஸ்ஐடி என்னும் முகத்தை பயன்படுத்தி திறன்பேசியை திறக்கும் தொழில்நுட்பம், கைப்பேசிகளில் முதல்முறையாக புகைப்படம் எடுத்தபிறகும் கூட அதன் டெப்த்தை மாற்றிக்கொள்ளும் வசதி, நீடிக்கப்பட்ட பேட்டரி திறன், ஆகுமென்டட் விளையாட்டுகள் - பயன்பாடுகள், தண்ணீர் புகா வடிவமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஐபோன்படத்தின் காப்புரிமைAPPLE

குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் இந்த மூன்று ஐபோன்களிலுமே இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இசிம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இது வடிவைக்கப்பட்டுள்ளது.

முறையே 5.8 அங்குல திரையையும், 6.5 அங்குல திரையையும் கொண்டுள்ள ஐபோன் 10 எஸ் மற்றும் ஐபோன் 10 எஸ் மாக்ஸின் பின்பக்கத்தில் 12எம்பி திறனுடைய இரண்டு கேமெராக்களும், முன்புறத்தில் 7எம்பி திறனுடைய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. கிரே, சில்வர், கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன் 10 எஸ்ஸின் தொடக்க விலை 99,000 ரூபாய் என்றும், ஐபோன் 10 எஸ் மாக்ஸின் தொடக்க விலையாக 109,900 ரூபாய் ஆகும். இவை இரண்டுமே இம்மாதம் 28ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாகிறது.

ஐபோனின் சிறப்பம்சங்களை சற்றே குறைந்த விலையில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த முறை மூன்றாவதாக ஐபோன் 10 ஆர் என்ற புதிய திறன்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 6.1 அங்குல திரையை கொண்டுள்ள இது ஐபோன் 10 எஸ் பெற்றுள்ள அநேக சிறம்பம்சங்களை பெற்றுள்ளதுடன், கூடுதலாக வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, கோரல் ஆகிய நிறங்களில் அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் தொடக்க விலையாக 76,000 ரூபாய் ஆகும்.

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

மற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?படத்தின் காப்புரிமைAPPLE

ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து இயக்கங்களும் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஐபோனின் மொத்த விற்பனை 200 கோடியை தொடவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

ஐபோன் மற்றும் ஐபாடுகளின் இயங்குதளமான ஐஓஎஸ்ஸின் 12வது பதிப்பும், ஆப்பிள் டிவிஓஎஸ் 12, வாட்ச்ஓஎஸ் 12 ஆகியவை வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் கணினியான ஐமேக் மற்றும் மடிமேற்கணினியான மேக்புக்கின் மேக்ஓஎஸ் மொஜாவே என்னும் புதிய பதிப்பு வரும் 24ஆம் தேதி வெளியிடப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/science-45505652

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

Black Berry New phone...?

முதலில் பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்க போறம் என்று அறிவித்து பின்பு போன் வெளியிட்டு என்று தாங்களே  குழம்பி  நிக்கினம் .

  • தொடங்கியவர்

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks

2640_thumb.jpg
 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது.

`முரட்டு சிங்கிள்' ஐபோனில் இனி இரண்டு சிம்... அது என்ன இ-சிம்? #HowStuffWorks
 

நீண்ட காலத்துக்குப் பின் தனது ஐபோன்களில் டூயல் சிம் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் இந்த வசதியைப் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பத்தாண்டுகளுக்கும் மேல். தொடக்கத்தில் சாம்சங், நோக்கியா தொடங்கி அதன் பின்னர் சந்தையை ஆக்கிரமித்த சீன நிறுவனங்கள் வரை டூயல் சிம் மொபைல்களை வெளியிட்ட போதும் கூட ஆப்பிள் தனது முடிவிலிருந்து பின் வாங்குவதாகத் தெரியவில்லை. இதற்கு முன்பு ஒவ்வொரு வருடமும் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதியை ஆப்பிள் தரும் என உலகமே எதிர்பார்க்கும். ஆனால் அது நடக்கவே நடக்காது. ஆனால் இந்த முறை ஒரு வழியாக டூயல் சிம்மைக் கொடுத்தே விட்டது.

ஐபோன் இனிமேல் முரட்டு சிங்கிள் கிடையாது

டிம்-குக்

 

 

ஆப்பிளிடம் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு அரதப்பழசான விஷயமான இருந்தாலும் கூட அதை ஐபோனில் பயன்படுத்தி உலகத்தையே அதைப் பற்றிப் பேச வைக்கும். கடந்த வருடம் ஐபோன் X-ல் நாட்ச்சை அறிமுகப்படுத்தி அதைச் செய்தது இந்த வருடம் இ-சிம்மைப் பற்றி பேச வைத்திருக்கிறது. சாம்சங் இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் 2016-ம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. தற்பொழுது ஐபோனில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டவுடன் அது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

 

 

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு ஸ்மார்ட்போனில் டூயல் சிம் என்பது பலருக்குச் சாதாரணமான விஷயமாகத் தோன்றக்கூடும். ஆனால் ஆப்பிள் விஷயத்தில் அப்படிக் கிடையாது. எதிலுமே ஒரு புதுமையை விரும்பும் ஆப்பிள் இதிலும் அதைப் பின்பற்றியிருக்கிறது. தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் புதிய ஐபோன்களில் இருக்கும் டூயல் சிம் தொழில்நுட்பத்துக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது. வழக்கமான டூயல் சிம் ஸ்லாட்கள் இதில் இருக்காது. அதற்குப் பதிலாக ஐபோன் XS, XS Max மற்றும் ஐபோன் XR களில் டூயல் சிம் வசதியைத் தருவதற்கு இ-சிம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது ஆப்பிள். இந்த ஐபோன்களில் ஒரே ஒரு சிம் ஸ்லாட்தான் இருக்கும். அதில் வழக்கம் போல ஒரு சிம் கார்டைப் பயன்படுத்த முடியும்.

ஐபோன்

 

இ-சிம் என்றால் என்ன ? 

ஐபோன்

embedded SIM என்பதுதான் eSIM எனச் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட நாம் இப்போது பயன்படுத்தும் சிம் கார்டின் வேலையைத்தான் பார்க்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் முற்றிலும் வேறுபட்டது. இவை சர்க்யூட் போர்டுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டே பயன்பாட்டுக்கு வரும். இ-சிம்கள் பொதுவாக 5 மி.மீ அல்லது 6 மி.மீ அளவு இருக்கும் இவை மதர்போர்டுகளில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டு விடும். அதனால் வழக்கமான சிம் கார்டுகள் போல இந்த இ-சிம்களைத் தனியாக எடுத்துப் பயன்படுத்த முடியாது. இது சிலருக்கு CDMA தொழில்நுட்பத்தை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அதற்கும் இ-சிம் தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. CDMA-வில் ஒரு தொடர்பு எண்ணைப் பதிவு செய்தால் அது நிரந்தரமானதாக இருக்கும் அதை மாற்ற முடியாது. ஆனால் இ-சிம்மில் அப்படிக் கிடையாது.

 

 

நெட்வொர்க், மற்றும் சிம் உரிமையாளரின் தகவல்களை இ-சிம்மில் பதிவு செய்துகொள்ள முடியும். இதற்காக மெஷின் டூ மெஷின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சிம்களில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை தகவல்கள் பதியப்பட்டு விட்டால் அதனை அழித்துவிட்டு மற்றொரு முறை பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலமாக அதே நம்பரை வேறொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் சிம் கார்டையும் சேர்த்து மாற்ற வேண்டியிருக்கும். ஆனால், இ-சிம்களில் அந்தப் பிரச்னை இருக்காது. இவற்றை மறுநிரலாக்கம்செய்ய முடியும். பழைய தகவல்களை அழித்துவிட்டு புதிய தகவல்களைப் பதிந்துகொள்ளலாம். இ-சிம்கள் மூலமாக வழக்கமான சிம் கார்டுகளுக்கான இடமும் குறையும் என்பதால் மொபைல் போன்களின் வடிவமைப்பும் எளிதாகும்.

இ-சிம்

இந்த இ-சிம்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை 2010-ம் ஆண்டிலேயே GSMA அமைப்பு ஆராயத் தொடங்கிவிட்டது. ஆப்பிள் கடந்த வருடம் தனது வாட்ச் சீரிஸ் 3-யில் இ-சிம் வசதியைக் கொடுத்திருந்தது. தற்பொழுது ஐபோனிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்து விட்டதால் பிற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் கவனமும் இ-சிம் மீது திரும்பியிருக்கும். எனவே ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பரவலாகும் வாய்ப்புகள் அதிகம். எப்பொழுதும் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரும் ஐபோன்கள் ஒரே மாதிரிதான் வடிவமைக்கப்படுவது வழக்கம். டூயல் சிம் என்ற ஒரு விஷயத்திற்காக அதை விட்டுக்கொடுத்திருக்கிறது ஆப்பிள். சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற இடங்களில் விற்பனைக்கு வரும் ஐபோன்களில் டூயல் சிம் வசதி இருந்தாலும் அதில் இ-சிம் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக டூயல் சிம் ஸ்லாட்டுகளே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நானோ சிம் கார்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இ-சிம் வசதியை அளிக்கின்றன. ஆப்பிள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

https://www.vikatan.com/news/information-technology/136944-how-esim-works-in-apple-iphone.html

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, lusu said:

அய் இனி ஜாலிதான் கள்ள பொண்டாட்டிக்கு ஒன்று விட்டுக்குஒன்று என்று கதைக்கலாம்

லூசு! அவிங்களும் உதேமாதிரி யோசிச்சால்????????

  • கருத்துக்கள உறவுகள்

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/16/2018 at 12:16 AM, பெருமாள் said:

லூசு இந்த வார்த்தை பிரயோகம் ஒரே இடத்தில் உபயோகித்தன் காசி ஆனந்தன் விடயத்தில் வெட்டுபடும் என்று நண்பன் சொன்னான் இன்றுவரை வெட்டுபடவில்லை வேண்டுமென்றே உபயோகித்தன் ஆனால் அதே வார்த்தையை வேறு இடத்தில் உபயோகிக்க முடியாது நடு நிலை என்பது என்ன ?

அட நீங்க வேற. அவற்ற பெயரே லூசு தான். ?

அதுபோக..

ஐபோன் என்னதான் சிறிய மாற்றங்களோடு வந்தாலும்.. விலை ஏறிர மாதிரி.. அதன் சேமிப்பிடம் ஏறுவதில்லை. போகப் போக ஐபோன் சிலோ ஆகிடும். அதனால்.. ஐபோனைப் பிடிப்பதே இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.