Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு

Featured Replies

image_759f527d40.jpg

 

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டது.

பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, இதையடுத்து, திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவக்க முற்பட்டபோது, அவ்வேளையில், நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.

இதன்போது, பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.

இதற்கு, பாடல் ஒலிபரப்பியவர்கள், “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்து தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” என கூறி, பாடலை நிறுத்த மறுத்தனர்.

இதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. 

இதனிடையில் அவைத்தலைவர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்து முடித்துவிட்டார்.

ஆரம்பித்த கருத்து மோதல்களின் போது தியாக தீபம் திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்து வகையிலான தூசன வார்த்தை பிரயோகங்களும் இடம்பெற்றன.

நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/திலீபனின்-நினைவேந்தல்-நிகழ்வில்-முரண்பாடு/150-221839

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாளை பிரித்துக் கொண்டாடுவதுபோல இப்போது தாயகத்திலும் தமது சுயநல அரசியலுக்காக திலீபனின் நினைவு தினத்தையும் பங்குபிரிக்கின்றார்கள்.?

theeli.png

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாளை பிரித்துக் கொண்டாடுவதுபோல இப்போது தாயகத்திலும் தமது சுயநல அரசியலுக்காக திலீபனின் நினைவு தினத்தையும் பங்குபிரிக்கின்றார்கள்.?

theeli.png

இங்கு பிரித்தவர்களுக்கு அங்கு பிரிப்பதற்கும் தடையேதுமில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இங்கு பிரித்தவர்களுக்கு அங்கு பிரிப்பதற்கும் தடையேதுமில்லையே.

செய்தி தளங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விருந்து தான் போங்க இவங்களால் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இங்கு பிரித்தவர்களுக்கு அங்கு பிரிப்பதற்கும் தடையேதுமில்லையே.

 

இங்கு பிரித்தவர்கள் அனைத்துலகச் செயலகமும் தலைமைச் செயலகமும் என்று முரண்பட்டவர்கள்.  அங்கு பிரிப்பவர்கள் தமிழ் மக்களின் மீது சவாரி செய்ய முயலும் அரசியல் கட்சியினர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.