Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

Featured Replies

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

 

 

சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவன் செய்திப் பிரிவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரையான காலப்பகுதியில் நான் சிங்களப் பிரதேசங்களில் சமஷ்டி குறித்து பேசியபோதெல்லாம் அதற்கு ஆதரவாகவே சிங்கள மக்களின் தரப்பிலிருந்து அவர்களின் கருத்துக்கள் வெளிப்பட்டிருந்தன.

சமஷ்டி முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா எனவும் கண்டியத் தலைவர்களும் இலங்கைக்கு பொருத்தமானது சமஷ்டி முறையே எனக் கூறியிருந்ததையும் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்கள மக்களிடையே எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

எனவே சிங்களவர்கள் வேண்டும் என்று கூறியிருந்த சமஷ்டி சிங்கள மக்களுக்கு எதிரானதாக இருக்காது என்ற கருத்தினை நான் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

எனவே இவ்வாறான நிலைமையில் சிங்கள மக்கள் சமஷ்டி முறைமையை ஓர் பூதாகாரமான விடயமாக எடுத்துக் கொள்வார்கள் எனவும் நான் எண்ணுகின்றேன்.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவையின் கூட்டமொன்றை நடத்துவதென்றும், இதில் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் முழுமையான வரைபை நிபுணர்கள் தயாரித்த வரைபாகச் சமர்ப்பிப்பதென்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/சமஷ்டியை-சிங்கள-மக்கள்-எ/

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி முறைமையை சிங்களமக்கள் எதிர்க்கவில்லை என்றால்.....! பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தவர்கள் யார்…?? அவர்கள் எந்தத் துருவத்தில் வாழ்கிறார்கள் ஐயா சுமந்திரனே... ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

 அய்யோ யாராவது இந்த உளறல் மன்னனிடம் இருந்து தமிழ் மக்களை காப்பற்றுங்க முதலில்  (கவுண்டன் வாய்சில் படிக்கவும் )

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

அப்படியோ விசயம்... அட கடவுளே..

இது தெரியாம, தேவை இல்லாமல் ஆயுதப் போராடடம் நடத்தி முடிச்சாசே... ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

சமஷ்டி முறைமையைச் சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அப்பிடியெண்டால் அவையள் என்னத்தை எதிர்க்கினம்? :27_sunglasses:

11 hours ago, நவீனன் said:

சமஷ்டியை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சுமந்திரன்

முழுப்போதையேறக் குடித்து தெருவில் தள்ளாடி தள்ளாடி தத்துவம் கதைக்கும் பெருங்குடிகாரர்களை சுமந்திரன் வென்றுவிட்டார்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.